மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
- Get link
- X
- Other Apps
இந்த மட்டன் குடல் குழம்பு இட்லி மற்றும் தோசைக்கு நல்ல சைடிஸாக இருக்கும்.
மட்டன் என்றாலே அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகதான் இருக்கும். அதிலும் குடல் குழம்பு என்றால் செல்லவே வேண்டாம். தென் மாவட்டங்களில் சிறப்பான இந்த மட்டன் குடல் குழம்பை சென்னையில் போட்டி குழம்பு எனவும் அழைக்கின்றனர்.
தேவையான பொருள்கள்:
வெங்காயம், தக்காளி, தேங்காய், கசகசா, இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, சோம்பு, மிளகாய்த்தூள் தேவையான அளவு,
மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு, கொத்தமல்லி, புதினா என அனைத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்து வைக்க வேண்டியவை:
துருவிய தேங்காயுடன் சோம்பு, பூண்டு மற்றும் கசகசாவை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
செய்முறை:
1. முதலில் ஆட்டுக்குடலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதனை சுத்தம் செய்யும் போது வெந்நீரில் மஞ்சள் பொடியை போட்டு நன்றாக கழுவி எடுக்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள குடல் வாடை போகும்.
2. அதன்பின் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். குக்கரில் கொஞ்சம் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, மஞ்சள் தூள் சிறிது போட்டு குடலுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.
3. அதனைத் தொடர்ந்து அடுப்பில் வேறோரு பாத்திரத்தை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளித்த பின் நறுக்கின வெங்காயதை போட்டு வதக்க வேண்டும். அடுத்ததாக இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
4. அதன்பிறகு மிளகாய் தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். அத்துடன் வேக வைத்த குடலை போட்டு நன்றாக கிளற வேண்டும். நன்றாக கொதி வரும்போது அதில் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்க்க வேண்டும். சுமார் 10 நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
5. நன்கு கொதித்த பிறகு குடல் வாசனையுடன் எண்ணெய் பிரிந்து மசாலாவாக இருக்கும். கொத்தமல்லி, புதினா தழை தூவி இறக்கி பரிமாறலாம்.
ALSO READ : அடிக்கடி சிக்கன் சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! சுவையோடு ஆரோக்கியம்...
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment