நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அடிக்கடி சிக்கன் சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! சுவையோடு ஆரோக்கியம்...

 சிக்கன் சூப் ருசிப்பது என்றால் பலருக்கும் அலாதி பிரியம் இருக்கும்..! சிக்கன் சூப் நினைவாற்றலை அதிகரிப்பதோடு உடலுக்கும் உற்சாகம் தரும் என்று கூறியுள்ளது ஒரு ஆய்வு முடிவு.


காய்ச்சல்

மழைகாலத்தில் பலரும் சளி, காய்ச்சலால் அவதிப்படுவர், அந்த சமயத்தில் சிக்கன் சூப் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். விரைவாக சளியை அகற்றும், உடல் வலியை போக்கவும் உதவி புரியும்

மிளகு கொஞ்சம் தூக்கலாக சேர்த்து மூக்கு மற்றும் கண்களில் நீர் வழிய பருகும் சிக்கன் சூப் மூக்கடைப்பை நீக்கி சுவாசத்தை சீராக்கிவிடும்.


புரத சத்து

புரத சத்து நிறைந்த சிக்கன் சூப் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை அளித்து சோர்வை நீக்கும்.

சிக்கன் சூப், உருளைக்கிழங்கு மசியல், பாலாடைக்கட்டியுடன் மக்ரோனி போன்றவை நலமளிக்கும் உணவுகள். தனிமையால் ஏற்படும் வெறுப்பை, விரக்தியை அவை போக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இந்த உணவுகள் ஒருவேளை ரத்த நாளங்களுக்கு நன்மை பயப்பதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், சலிப்பான உணர்வுகளைத் தணிய வைக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.  



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்