Posts

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உங்களுடைய பலம், பலவீனத்தை தெரிந்து கொள்ளுங்கள்...

Image
நமக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பதை விட அதைத் தெரிந்து கொண்டு செயல்படுவது நல்ல பலனைக் கொடுக்கும். பெரும்பாலான வெற்றியாளர்களிடம் உங்கள் வெற்றிக்கான ரகசியம் என்னவென்று கேட்டால் மிக எளிமையாக ‘எனக்கு எது தெரியாது, என எனக்கு தெரியும்’ என்பார்கள். ஆம் ரொம்ப ரொம்ப சாதாரண விஷயம் தான். நமக்கு எது தெரியும் என யோசிக்கும் நாம் பல நேரங்களில் நமக்கு எது தெரியாது என்பதில் கவனம் செலுத்துவதில்லை. உங்களுக்கு அவ்வளவாக அறிமுகமில்லாத அல்லது தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி உங்கள் உயரதிகாரி கேட்கிறார் என வைத்துக்கொள்வோம். பெரும்பாலானோர் தனக்கு அந்த விஷயம் பற்றி தெரியாது என தயக்கம் இல்லாமல் தைரியமாக சொல்லிவிடுவதில்லை. காரணம் நமக்கு தெரியாத விஷயங்கள் எவை என்பது நமக்கே தெரிவதில்லை. அதனால் தான் பல்வேறு சந்தர்ப்பங்களில் குழம்பி இக்கட்டான சூழ்நிலைகளில் மாட்டிக் கொள்கிறோம். இந்த இடத்தில்தான் வெற்றியாளர்களுக்கும் சாதாரணமானவர்களுக்குமான வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் தங்களுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை பற்றிய புரிதல் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அதன் மீது கவனம் செலுத்தி கற்றுக் கொள்ள...

கட்டிப்பிடித்தல்: சுகமும்.. சூடான விவாதங்களும்..

Image
கட்டிப்பிடிப்பவர்கள் அனைவரையுமே செக்ஸ் சார்ந்து பார்க்கக்கூடாது. சாதாரண கட்டிப்பிடித்தலுக்கும், செக்ஸ் எண்ணத்துடனான கட்டிப்பிடித்தலுக்கும் உள்ள வித்தியாசம் இன்னும் மக்களுக்கு தெரியவில்லை. மனித இனம் தனது உணர்வுகளை பிடித்தமானவர்களோடு பகிர்ந்துகொள்ள ஒரு வழிமுறையாக கட்டிப்பிடித்தலை கொண்டாடுகிறது. மகிழ்ச்சி, துக்கம் இந்த இரண்டிலும் இது முக்கியபங்கு வகிக்கிறது. மகிழ்ச்சியை வெளிப்படுத்த உலக தலைவர்கள் முதல் உள்ளூர் மக்கள் வரை கட்டிப்பிடித்தலை கையாண்டுகொண்டிருக்கும் நேரத்தில், இந்தியாவில் அதை பற்றிய விவாதங்களும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. பாசமான இந்த விஷயத்தை, ஆபாசமாகவும் கருதுவதுதான் விவாதத்திற்கான காரணம். பள்ளி ஒன்றில் மாணவர்கள் கலைவிழா நடந்துகொண்டிருந்தது. ஒரே பள்ளியில் பிளஸ் - ஒன் படிக்கும் மாணவியும், பிளஸ்-டூ படிக்கும் மாணவரும் வெவ்வேறு போட்டிகளில் கலந்துகொண்டார்கள். போட்டியில் கிடைத்த வெற்றி தந்த திடீர் மகிழ்ச்சியில் இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டார்கள். அதை பார்த்த ஆசிரியை ஒருவர் பள்ளி நிர்வாகத்திடம் சொல்ல, இருவரும் பள்ளியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த ...

இன்ஸ்டா, ட்விட்டரில் இருந்து வாட்ஸ்அப் வரும் புது அம்சம்

Image
வாட்ஸ்அப் செயலியில் ரியாக்ட் செய்யும் வசதி வழங்கப்பட இருக்கிறது. விரைவில் இதற்கான அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களுக்கு ரியாக்ட் செய்யும் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதனை வாட்ஸ்அப் அம்சங்களை ஆய்வு செய்யும் தனியார் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது.  முன்னதாக இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் தளங்களில் குறுந்தகவல்களுக்கு ரியாக்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியிலும் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு குறுந்தகவல்களுக்கு எமோஜி மூலம் ரியாக்ட் செய்யலாம். இது பேஸ்புக் பதிவுகளுக்கு லைக் மற்றும் இதர எமோஜி மூலம் ரியாக்ட் செய்வதை போன்றே செயல்படும். இன்ஸ்டாகிராமில் ரியாக்ட் செய்ய, குறுந்தகவலை அழுத்திப்பிடித்து பாப்-அப் ஆகும் எமோஜியில் ஒன்றை க்ளிக் செய்ய வேண்டும். வாட்ஸ்அப் செயலியிலும் புதிய அம்சம் இதேபோன்றே வழங்கப்படும் என தெரிகிறது. Also read :  மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ஆப்கான் குழந்தை - இந்த வருடத்தின் சிறந்த புகைப்படம் கொண்டாடும் நெட்டிசன்கள்

முகப்பரு வந்தால் கடைபிடிக்க வேண்டியவை

Image
சரியாக நேரத்திற்கு உணவு சாப்பிடவில்லை என்றால் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் உருவாகும். இது முகப்பரு தோன்ற வழிவகுக்கும். எனவே குறிப்பிட்ட நேரத்தில் கொஞ்சமாகவாவது உணவை எடுக்க வேண்டும். * நிறைய தண்ணீர் அருந்துதல் வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு அல்லது ஐந்து லிட்டராவது தண்ணீரை குடிக்க வேண்டும். * ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை வெறும் நீரால் முகம் கழுவுதல் வேண்டும். * முகத்தை கழுவும்போது காலை மற்றும் மாலை நேரத்தில் மட்டும் ரோஸ் வாட்டரில் முகம் கழுவினால் சருமத்தில் உண்டான சூடு குறைந்து குளிர்ச்சி கிடைக்கும். * ஜெல் பேஸ், ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்துதல் வேண்டும். * பயத்தம் பருப்பு அல்லது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் குளியல் பொடி கொண்டும் முகத்தைக் கழுவலாம். * வெயில் நேரத்தில் வெளியில் செல்லும் போது முகத்தை மூடி வெயில் நமது சருமத்தை நேரடியாகத் தாக்காதவாறு பாதுகாப்பாகச் செல்ல வேண்டும். * வெளியில் செல்லும்போது சூரிய ஒளி நேரடியாகத் தாக்காதவாறு சன் க்ரீம்களை பயன்படுத்தலாம். இது சருமத்தை சற்று பாதுகாக்கும். * கைபேசிகள் வழியாக வெளியேறும் ரேஷர் கதிர்கள் முகத்தை தாக்கும் தன்மை ...

முடக்கு வாதம், மூட்டு வலி வராமல் காக்கும் யோகா முத்திரைகள்

Image
மூட்டு வலி, முடக்கு வாதம் உள்ளவர்கள் இதில் கொடுத்துள்ள முத்திரைகளை மட்டும் பயிலுங்கள். தினமும் மூன்று வேளை சாப்பிடும் முன் பயிலுங்கள். நல்ல முன்னேற்றம் நிச்சயம் கிடைக்கும். இன்று நிறைய மனிதர்களுக்கு முடக்கு வாதம் ஏற்படுகின்றது. அதனால் ஒரு பக்க கை, கால்கள் செயலிழப்பு ஏற்பட்டு நடக்க முடியாமல், தங்களது அன்றாட கடமைகளை மற்றொருவர் உதவியால் செய்யும் நிலை ஏற்படுகின்றது. அதேபோல் மூட்டு வலி, மூட்டு வீக்கத்தாலும் நிறைய மனிதர்கள் நடக்க முடியாமல், மாடி ஏற முடியாமல் கஷ்டப்படுகின்றனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு யோகா சிகிச்சையாக நாம் பார்க்கவுள்ளோம். இதனை அனைவரும் பயிலுங்கள். இது முடக்கு வாதம், மூட்டு வலி வராமல் நம்மை காக்கும் கவசமாக அமையும். மூட்டு வலி, முடக்கு வாதம் உள்ளவர்கள் இதில் கொடுத்துள்ள முத்திரைகளை மட்டும் பயிலுங்கள். தினமும் மூன்று வேளை சாப்பிடும் முன் பயிலுங்கள். நல்ல முன்னேற்றம் நிச்சயம் கிடைக்கும். மனித உடல் மனித உடல் பல மில்லியன் செல்களால் ஆனது. ஒவ்வொரு செல்களிலும் பஞ்ச பூத தன்மைகளான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் உள்ளது. இவை அனைத்தையும் கை விரல் நுனிகள...

தங்கப் பதக்கத்தை ஆடைக்குள் மறைத்துவைத்து பாதுகாப்பு வீரர்களை ப்ராங்க் செய்த ஒலிம்பீக் வீராங்கனை -வீடியோ

Image
ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை செய்த பிராங்க் வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கனடாவைச் சேர்ந்தவர் கெல்சே மிட்செல். டோக்கியோவில் நடைபெற்ற முடிந்த ஒலிம்பிக் போட்டியில் சைக்கிள் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர். உக்ரேனைச் சேர்ந்த ஒலினா ஸ்டாரிகோவா மற்றும் ஹாங்காங்கைச் சேரந்த வாய் சே லியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். அவர், ஜப்பான் விமான நிலையத்தில் செய்த கலாட்டாவை வீடியோவை எடுத்து அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். watch video அந்த வீடியோ இணையத்தில் பலரையும் ரசிக்கவைத்துள்ளார். விமான நிலையத்தில் பயணிகளைச் சோதனை செய்யும் மெட்டல் டிடக்டருக்குள் அவர் வரும்போது பீப் என்ற ஒலி எழுந்தது. அதனையடுத்து, பாதுகாப்பு வீரர்கள் அவரை சோதனை செய்யவந்த போது அவரது ஆடைக்குள் வைத்திருந்த தங்கப் பதக்கத்தை எடுத்துக் காண்பித்து சிரித்தார். அவரது செய்கையைப் பார்த்து பாதுகாப்பு வீரர்களும் சிரித்தனர். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவர், ‘ஜப்பான் மக்கள் மிகவும் சிறப்பானவர்கள். மிகவும் அன்பானவர்கள், உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்கள், நேர்மறை எண்ண...

ரூ.25 லட்சம் மதிப்புள்ள உணவின் மீது இருமிய பெண் - அடுத்து நடந்த பரிதாபம்?

Image
பென்சில்வேனியாவில் உள்ள ஒரு பெண், கோவிட் -19 வழிகாட்டுதல்களைக் கடைபிடிக்க மறுத்த காரணத்திற்காக கடினமான தண்டனையை அனுபவித்து வருகிறார். கொரோனா தொற்றுநோய் பாதிப்பு இன்னும் உலகளவில் பரவி வருவதால், பாதுகாப்பு என்பது இன்னும் அச்சுறுத்தலாகவே உள்ளது. மேலும் உலகம் மீண்டும் வைரஸின் கோபத்தையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளின் உச்சத்தையும் சந்திக்க நேரிடும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே மக்கள் முகக்கவசம் அணிந்து, கைகளை அடிக்கடி கழுவுவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா வைரஸ் இல்லை என்று சொல்லும் ஒருசில எதிர்ப்பாளர்கள் கோவிட் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் மருத்துவ நிபுணர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளனர். இந்த கோவிட் எதிர்ப்பாளர்கள் தனிமைப்படுத்தல் மற்றும் சமூக தொலைதூர விதிகளை மீறி, அவர்களைச் சுற்றியுள்ள மக்களின் உயிரைப் பணயம் வைத்து வருகின்றனர். பல தனிநபர்கள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அல்ல என்பதை நிரூபிக்கும் முயற்சியில் சில அதிர்ச்சியூட்டும் செயல்களையும் செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க கொரோனாவால் உலகம் முழுவதும் கடந்த 18 மாத...

அழகைக் கூட்ட பின்பக்க அறுவைச் சிகிச்சை: உட்கார முடியாமல் அவதிப்படும் 24 வயது மாடல்

Image
அமெரிக்க மாடல் அழகைக் கூட்ட செய்துகொண்ட அறுவை சிகிச்சையால் உட்கார முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நவீன மருத்துவ உலகில் எதுவும் சாத்தியம் என்ற நிலை உள்ளது. இருப்பினும், இந்த அளவுக்கு மருத்துவ உலகம் வளர்ந்துவிட்டபோது தவறான சிகிச்சை நடைபெறுவது என்பதும் அதிக அளவில் இருந்துவருகிறது. ஆண்டுக்கு ஆயிரக்கணக்கானோருக்கு தவறான சிகிச்சையளிக்கப்பட்டு நோயாளி பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 24 வயது மாடல் காசுமி ஸ்குரிட்ஸ்(புனைப் பெயர்), தன்னை உடல் பருமானக இருப்பதாக கருதியுள்ளார். அதனால், அவர் டயட் மூலம் உடலைக் குறைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால், அதனால் அவருக்கு பலன் கிடைக்கவில்லை. அவரது உடல் பருமன் குறையவில்லை. அதனால், அறுவைச் சிகிச்சை மூலம் மார்பு பகுதி மற்றும் பின்பகுதியை குறைப்பதற்கான சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். அதற்காக 14 லட்ச ரூபாய் வரை செலவு செய்துள்ளார். ஆனால், அறுவைச் சிகிச்சை அவர் நினைத்தபடி வெற்றிகரமாக நிறைவடையவில்லை. அறுவைச் சிகிச்சைக்கு பிறகு அவரது உடல் அவர் விரும்பிய அழகைப் பெற்றாலும் அவரால் முன்பைப் ப...

உடல் எடை குறைப்பு: கட்டுக்கதைகளும்... உண்மைகளும்...

Image
உடல் எடை குறைக்க நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் சலிப்பாகவும் தண்டனையாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறீர்களா? உங்களுக்கான கட்டுரைதான் இது. முதலில், உடல் எடை குறைக்க நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் சலிப்பாகவும் தண்டனையாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது, முதலில் உடலில் உள்ள கலோரிகளை குறைக்காவிட்டால் பின்வரும் வழிகள் பலனளிக்காது: - வெதுவெது நீரில் எலுமிச்சை, தேன் கலந்து குடிப்பது - ஆப்பிள் சிடர் வினிகர் - சத்தான ஷேக்ஸ் - டீடாக்ஸ் டீ மற்றும் ஸ்மூதீஸ் முதலில், நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். உடல் எடையை குறைப்பது என்பது உங்கள் உடலை வருத்திக்கொண்டு, சாப்பிடாமல் இருந்துதான் உடல் எடையை குறைக்க முடியும் என்பது கட்டுக்கதை. முறையான உணவும் உடற்பயிற்சிகளுமே உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்கும். உடல் எடை குறைக்கும்போது உணவில் பின்வருவனவற்றை தாராளமாக சேர்த்து கொள்ளலாம். - அரிசி (சரியான அளவு- இரவிலும் கூட சாப்பிடலாம்) - ரொட்டி (ஆட்டா வகையாகதான் இருக்க வேண்டும் என்பதில்லை) - தோசை - உருளைக்கிழங்கு - தேநீ...

மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ஆப்கான் குழந்தை - இந்த வருடத்தின் சிறந்த புகைப்படம் கொண்டாடும் நெட்டிசன்கள்

Image
ஆப்கானில் இருந்து அகதிகளாக பெல்ஜியம் சென்ற ஒரு குடும்பத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆப்கானில் இருந்து விமானம் மூலம் பெல்ஜியத்தில் தரையிறங்கிய மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானை 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தாலிபான் அமைப்பு கைப்பற்றியுள்ளது. தாலிபான்களுக்கு அஞ்சி அந்நாட்டை விட்டு அகதிகளாக வெளிநாடுகளில் மக்கள் தஞ்சமடைந்து வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு காபூல் விமானநிலையம் தொடர்பாக வெளியான வீடியோக்கள் அதிர்ச்சி ரகங்களாக இருந்தது. விமான நிலையத்தில் விலைவாசிகள் விண்ணை எட்டுகின்றனர். ஏதோ நம்பிக்கையில் பசியோடும் பட்டினியோடும் அங்கு பொதுமக்கள் காத்துக்கிடக்கின்றனர். ஆப்கானில் இருந்து அகதிகளாக பெல்ஜியம் சென்ற ஒரு குடும்பத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பெல்ஜியம் மிலிட்டரி விமான நிலையத்தில் தரையிறங்கிய ஆப்கான் குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் நடந்து செல்கின்றனர். தாய், தந்தை,சகோதரி ஆகியோர் முன்னால் நடந்து செல்ல சிறுமி ஒருவர் அவர்களின் பின்னால் உற்சாகமாக துள்ளிக்குதித்து ஓ...

கிரீன்லாந்துக்கு வடக்கே உலகின் வடகோடி தீவு: வடதுருவம் அருகே கண்டுபிடித்த டென்மார்க் - சுவிட்சர்லாந்து அறிவியல் ஆய்வுக்குழு

Image
கிரீன்லாந்தின் கடற்கரையிலிருந்து வடக்கே, உலகின் வடகோடியில் இருக்கும் தீவு என்று தாங்கள் நம்பும் தீவு ஒன்றை அதிர்ஷ்டவசமாகக் கண்டுபிடித்துள்ளதாக அறிவியலாளர்கள் குழு ஒன்று தெரிவித்துள்ளது. இதுவரை உலகிலேயே மிகவும் வட கோடியில் இருக்கும் தீவு என்று நம்பப்பட்ட ஊடாக் தீவில் மாதிரிகளை சேகரிப்பதற்காக, ஜூலை மாதம் அறிவியலாளர்கள் இந்தத் தீவைச் சென்றடைந்தனர். ஊடாக் தீவு 1978இல் கண்டறியப்பட்டது. ஆனால் அந்தத் தீவுக்குச் சென்று திரும்பிய பின்பு தாங்கள் எங்கு இருக்கிறோம் என்பதை அறிய ஆர்டிக் தீவுகளின் நிலையை பதிவு செய்வதற்கான பொறுப்பில் உள்ள டென்மார்க் அதிகாரி ஒருவரிடம் தொடர்பு கொண்டபோது அவர்கள் சென்ற தீவு, ஊடாக் தீவிலிருந்து மேலும் 800 மீட்டர் வடக்கே இருப்பது தெரியவந்தது. 60 X 30 மீட்டர் அளவுள்ள இந்தத் தீவுதான் வட துருவத்துக்கு மிகவும் அருகிலுள்ள நிலப்பகுதி என்று அவர்கள் கூறுகிறார்கள். கிரீன்லாந்து டென்மார்க்கின் கட்டுபாட்டில் உள்ள சுயாதீன ஆர்டிக் பிரதேசமாகும். "நான் ஒருங்கிணைக்கும் டென்மார்க் - சுவிட்சர்லாந்து கூட்டு அறிவியல் ஆராய்ச்சியின் போது இந்தத் தீவு கண்டறியப்பட்டது," என்று ...

குக்கரில் சப்பாத்தி; 2 நிமிடத்தில் ரெடி… இந்த வீடியோவை பார்த்தீர்களா?

Image
பிரபலமான உணவாக வலம் வரும் சப்பாத்தியை ஒருவர் 2 நிமிடத்திலேயே பிரஷர் குக்கரில் தயார் செய்து அசத்தியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சமீப காலமாக ‘சப்பாத்தி’ தவிர்க்க முடியாத உணவுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இதற்கு காரணமாக சப்பாத்தியில் உள்ள ஊட்டச்சத்துக்களை குறிப்பிடலாம். சப்பாத்தியில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன. மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்காக வைத்திருக்க இவை உதவுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. கோதுமை மாவினால் தயார் செய்யப்படும் இந்த சப்பாத்தி செய்ய நமக்கு பல வழிகள் உள்ளன. மேலும் சரியான சுற்று மற்றும் பஞ்சுபோன்ற சப்பாத்தியை உருவாக்குவதற்கும் ஒரு சிறந்த வழி உள்ளது. இந்த சிறந்த வழிகளுள் ஒன்று தான் பிரஷர் குக்கரில் சப்பாத்தியை தயார் செய்வது. 2 நிமிடத்தில் ஒருவர் பிரஷர் குக்கரில் சப்பாத்தி தயார் செய்து நமக்கு வியப்பூட்டுகிறார். தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், மூன்று சப்பாத்திகள் உருட்டல் பலகை அல்லது சக்லா பெலனில் உருட்டப்பட்டு பின்னர் பிரஷர் குக்கருக்...

இரவு சாப்பிடும் முன்பு இதைச் செய்யுங்க… சிம்பிளான இம்யூனிட்டி சூப்!

Image
மஞ்சள் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் போன்ற மருத்துவ மதிப்புக்காக பொக்கிஷ பண்புகளைக் கொண்டுள்ளது. நம்முடை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் முக்கியத்துவத்தை கொரோனா தொற்று நம் அனைவருக்கும் உணர்த்தியுள்ளது என்றால் நிச்சயம் மிகையாகாது. நோய் எதிர்ப்பு சக்தி என்பது நோயை உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிரான உடலின் முதல் இயற்கை பாதுகாப்பு ஆகும். வலுவான நோய் எதிர்ப்பு சக்தி நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகளை கணிசமாகக் குறைக்கிறது. இந்த நேரத்தில், நம்மில் பலர் நமது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடற்திறனை அதிகரிக்க பல்வேறு விஷயங்களை முயற்சிக்கும்போது, ​​நாங்களும் எங்களுடைய இணைய பக்கத்தில் அன்றாட சில நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை பரிந்துரை செய்து வருகிறோம். அந்தவகையில் இன்று சுலபமாக தயாரிக்கக்கூடிய மற்றும் சுவையாக இருக்கும் சூப் ஒன்றின் எளிமையான செய்முறையை இங்கு வழங்கியுள்ளோம். இந்த அற்புதமான மஞ்சள் கலந்த சூப்பை ஊட்டச்சத்து நிபுணர் முன்முன் கணேரிவால் பரிந்துரை செய்துள்ளார். மஞ்சள் அழற்சி எதிர்ப்பு, பாக்டீர...

இரவு சாப்பிடும் முன்பு இதைச் செய்யுங்க… சிம்பிளான இம்யூனிட்டி சூப்!

Image
மஞ்சள் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் போன்ற மருத்துவ மதிப்புக்காக பொக்கிஷ பண்புகளைக் கொண்டுள்ளது. நம்முடை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் முக்கியத்துவத்தை கொரோனா தொற்று நம் அனைவருக்கும் உணர்த்தியுள்ளது என்றால் நிச்சயம் மிகையாகாது. நோய் எதிர்ப்பு சக்தி என்பது நோயை உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிரான உடலின் முதல் இயற்கை பாதுகாப்பு ஆகும். வலுவான நோய் எதிர்ப்பு சக்தி நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகளை கணிசமாகக் குறைக்கிறது. இந்த நேரத்தில், நம்மில் பலர் நமது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடற்திறனை அதிகரிக்க பல்வேறு விஷயங்களை முயற்சிக்கும்போது, ​​நாங்களும் எங்களுடைய இணைய பக்கத்தில் அன்றாட சில நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை பரிந்துரை செய்து வருகிறோம். அந்தவகையில் இன்று சுலபமாக தயாரிக்கக்கூடிய மற்றும் சுவையாக இருக்கும் சூப் ஒன்றின் எளிமையான செய்முறையை இங்கு வழங்கியுள்ளோம். இந்த அற்புதமான மஞ்சள் கலந்த சூப்பை ஊட்டச்சத்து நிபுணர் முன்முன் கணேரிவால் பரிந்துரை செய்துள்ளார். மஞ்சள் அழற்சி எதிர்ப்பு, பாக்டீர...

முகத்தில் இருக்கும் கருமை நீங்க இவற்றை செய்து வந்தால் போதும். முகம் பள பளப்பாக மாறும்.

Image
முதலில் கோடைக்காலத்தில் மட்டும்தான் வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும். ஆனால் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் எப்போதும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதனால் சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே செல்கிறது.  எந்த அளவிற்கு சருமத்தின் நிறத்தை பராமரித்து வைத்திருக்கிறார்களோ அவற்றிற்கெல்லாம் பலன் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இப்பொழுதெல்லாம் பெண்களைப் போன்று ஆண்களும் சரும நிறத்தை பராமரிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். முகத்தின் கருமை நீங்க சில பயனுள்ள குறிப்புகளை பற்றி இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். குறிப்பு 1: இரண்டு ஸ்பூன் கருப்பு உளுந்து அல்லது வெள்ளை உளுந்து இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, அதனுடன் 4 ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவேண்டும். பிறகு ஊறிய உளுத்தம்பருப்பை மிக்ஸியில் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து, 20 நிமிடம் அப்படியே காய விட வேண்டும். சிறிது நேரத்தில் முகத்தில் பூச...

விடுமுறையில் ரூ.2.9 கோடி சம்பாதித்த 12 வயது சிறுவன்: அப்படி என்ன தொழில் செய்தார்?

Image
லண்டனைச் சேர்ந்த 12 வயது சிறுவன், தன் பள்ளி விடுமுறையின் போது சுமார் 2,90,000 பவுண்டு ஸ்டெர்லிங் சம்பாதித்துள்ளார். பிக்ஸலேடட் படங்கள் என்கிற ஒருவகையான கலை வேலைப்பாடு மூலம் வித்தியாசமான திமிங்கலங்களையும், என்.எஃப்.டி என்றழைக்கப்படும் 'நான் ஃபங்கிபில் டோக்கன்களையும்' விற்று இவ்வளவு பணத்தை சம்பாதித்து இருக்கிறார் அந்த சிறுவன். என்.எஃப்.டி-க்கள் ஒரு வகை டிஜிட்டல் சொத்து. அது எத்தனை அரிதாக இருக்கிறதோ அவ்வளவு அதிக விலை கிடைக்கும். உதாரணமாக என்பிஏ டாப் ஷாட் எனப்படும் டிஜிட்டல் படங்களைக் கூறலாம் என்கிறது பிசினஸ் இன்சைடர் வலைதளம். என்.எஃப்.டி-க்களுடன், கலை படைப்புகளுக்கும் உரிமை கொண்டாட அதை டோக்கனைஸ் செய்து உரிமை சான்றிதழ்களைப் பெறலாம். அந்த சான்றிதழ்களை வாங்கவோ விற்கவோ முடியும். வாங்குபவருக்கு உண்மையான கலைப்படைப்பையோ அல்லது அதன் பதிப்புரிமையையோ பொதுவாக கொடுப்பதில்லை. பென்யமின் அகமது, தான் ஈட்டும் பணத்தை எதிரியம், கிரிப்டோ கரன்சி வடிவில் வைத்துள்ளார். அவருக்கு ஒருபோதும் பாரம்பரிய வங்கிகளில் வங்கிக் கணக்கு இருந்ததில்லை. மிகுந்த பெருமை பென்யமினின் வகுப்பு தோழர்கள்...

நான்கு கால்கள் கொண்ட திமிங்கலம் எங்கு எப்போது வாழ்ந்தது? - Amphibious Phiomicetus Anubis எனும் புதிய உயிரினம் கண்டுபிடிப்பு

Image
நான்கு கால்களைக் கொண்ட திமிங்கல புதிய உயிரினத்தை எகிப்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கின்றனர். அது சுமார் கடந்த 43 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆம்ஃபிபியஸ் ஃபியோமெசிடஸ் அனுபிஸ் (amphibious Phiomicetus anubis) என்கிற உயிரினத்தின் புதை படிமங்கள் எகிப்து நாட்டின் மேற்குப் பகுதியில் இருக்கும் பாலைவனத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த உயிரினத்தின் தலை அனுபிஸ் உயிரினத்தை ஒத்து இருக்கிறது. அந்த உயிரினத்துக்கு எகிப்தின் பழங்கால குள்ளநரி தலை கொண்ட மரண கடவுளைத் தொடர்ந்து அந்த உயிரினத்துக்கு அப்பெயர் வைக்கப்பட்டது. தற்போது இருக்கும் திமிங்கலங்களின் மூதாதையர்கள், மான் போன்ற பாலூட்டிகளில் இருந்து வந்தவை. இந்த உயிரினங்கள் கடந்த 10 மில்லியன் ஆண்டுகளில் நிலத்தில் வாழ்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தோரோயாமாக 600 கிலோ எடை மற்றும் கிட்டத்தட்ட மூன்று மீட்டர் (10 அடி) நீளம் கொண்ட ஃபியோமெசிடஸ் அனுபிஸ் உயிரினம் தன் இரையை வேட்டையாட வலுவான தாடைகளைப் பெற்றிருந்தது என 'தி ப்ரொசீடிங் ஆஃப் தி ராயல் சொசைட்டி பி' என்கிற சஞ்சிகையில் கடந்த புதன்கிழமை பிரசுரிக்கப்பட்டு ...

கூந்தல் சொல்லும் ஆரோக்கிய ரகசியம்

Image
தலை சீவும்போது முடிகள் அதிகமாக உதிர்ந்தால் மன அழுத்தம், காய்ச்சல், நீரிழிவு போன்ற பாதிப்புகள் இருக்கலாம். சிலவகை மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் பக்கவிளைவுகள் தோன்றி அதனாலும் முடிகள் உதிரக்கூடும். கூந்தலின் தோற்றப்பொலிவு, அதன் மிருதுத் தன்மை, அடர்த்தி போன்றவற்றை கொண்டே உடல் ஆரோக்கியத்தையும் மதிப்பீடு செய்துவிடலாம். கண்ணாடி முன்பு சில நிமிடங்கள் நின்று தலைமுடியை பரிசோதித்தாலே சிலவிதமான நோய்பாதிப்புக்கான அறிகுறிகளை கண்டறிந்துவிடலாம். * தலைமுடிக்கு ‘ஹேர் டை’ பூசினாலோ, குளோரின் கலந்த நீரில் நீச்சல் அடித்தாலோ கூந்தல் உலர்ந்துவிடக்கூடும். முடி வறட்சி, பொலிவின்றி மெலிந்து காணப்படுவது போன்ற பல்வேறு சிக்கல்களை உருவாக்கும். * வறண்ட சருமம், தோல் அழற்சி, தலையில் அரிப்பு போன்றவை காரணமாக பொடுகு தொல்லை தோன்றும். மன அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, நரம்பியல் கோளாறு போன்றவைகளாலும் பொடுகு ஏற்படும். * தலை சீவும்போது முடிகள் அதிகமாக உதிர்ந்தால் மன அழுத்தம், காய்ச்சல், நீரிழிவு போன்ற பாதிப்புகள் இருக்கலாம். சிலவகை மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் பக்கவிளைவுகள் தோன்றி அதனா...

குழந்தைகள் காலைப் பொழுதை எப்படித் தொடங்கலாம்?

Image
வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய பிரெஷ் ஜூஸ், சத்துமாவுக் கஞ்சி, கூழ், காய்கறி சூப், உளுந்தங் கஞ்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம். அந்த நாளை நல்ல உணவோடு தொடங்கும் வாய்ப்பு இது. குழந்தைகள் காலைப்பொழுதை எப்படி தொடங்கினால், அன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும் என்பதை இந்த தொகுப்பு விளக்குகிறது. * காலையில் புன்னகையோடு எழுந்திருங்கள். நம்பிக்கை எண்ணத்துடன் எழுந்திருங்கள். காலைச் சூரியனுக்கு, ‘குட் மார்னிங்’ வைக்கலாம். கண்களுக்கு நல்லது. வைட்டமின்-டி சத்தும் கிடைக்கும். * மிதமான இளஞ்சூடான நீரை அருந்துங்கள். * காலையில் வீசும் இளங்காற்றை ஐந்து நிமிடங்கள் சுவாசிக்க வேண்டும். நடைப்பயிற்சி செய்வது நல்லது. * வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய பிரெஷ் ஜூஸ், சத்துமாவுக் கஞ்சி, கூழ், காய்கறி சூப், உளுந்தங் கஞ்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம். அந்த நாளை நல்ல உணவோடு தொடங்கும் வாய்ப்பு இது. * பத்து நிமிடங்களாவது தியானம், யோகா போன்ற பயிற்சிகளைச் செய்யலாம். அல்லது கண்களை மூடி வெறும் சுவாசத்தை மட்டும்கூட கவனிக்கலாம். * கோடை காலத்தில் குளிர்ந்த நீரிலும், மழை மற்றும் பனிக்காலத்தில் வெந்நீரிலும் குளிப்பது நல்லது. இதன...

உடல் பருமனை குறைக்க உதவும் காய்கறி, பழங்கள்

Image
உணவை பொறுத்தவரை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அதிக மாவுச்சத்து, கொழுப்பு, எண்ணெய் உள்ள உணவு வகைகள், பானங்களை தவிர்க்க வேண்டும். உடல் பருமன் காரணமாக உடலில் ஏற்படும் பாதிப்புகள் பல. அவற்றுள் முக்கியமானவை:- டைப்-2 சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, மூச்சுத்திணறல், மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு வலி, குதிகால் வலி, மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய், பித்தப்பை கற்கள், குடலிறக்கம், குறட்டை, ‘ஸ்லீப் ஏப்னியா’ எனும் உறக்க சுவாசதடை, மலச்சிக்கல், மலட்டுத்தன்மை, மாதவிலக்கு பிரச்சினைகள், சினைப்பை நீர்க்கட்டி, மூலநோய், மனச்சோர்வு. எனவே உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகிய இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்தினால் உடல் எடையைக் குறைப்பது எளிது. உணவை பொறுத்தவரை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அதிக மாவுச்சத்து, கொழுப்பு, எண்ணெய் உள்ள உணவு வகைகள், பானங்களை தவிர்க்க வேண்டும். கொழுப்புள்ள உணவை தேவைக்கு மேல் சாப்பிட நேர்ந்தால், உடனுக்குடன் வேலையோ-உடற்பயிற்சியோ செய்து அதை ஜீரணிக்க வைத்துவிட வேண்டும். உண்ணும் உணவுக்கேற்ப நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என ஏதாவது ஒரு பயிற்சியை மேற்கொண்டு, உட...

Popular posts from this blog

முகத்தில் காணப்படும் அதிகபட்ச எண்ணெய்யை போக்க வேண்டுமா? இந்தவொரு பொருளை இப்படி பயன்படுத்தினாலே போதும்!

120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?