முதலில் கோடைக்காலத்தில் மட்டும்தான் வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும். ஆனால் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் எப்போதும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதனால் சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே செல்கிறது.
எந்த அளவிற்கு சருமத்தின் நிறத்தை பராமரித்து வைத்திருக்கிறார்களோ அவற்றிற்கெல்லாம் பலன் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இப்பொழுதெல்லாம் பெண்களைப் போன்று ஆண்களும் சரும நிறத்தை பராமரிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். முகத்தின் கருமை நீங்க சில பயனுள்ள குறிப்புகளை பற்றி இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
குறிப்பு 1:
இரண்டு ஸ்பூன் கருப்பு உளுந்து அல்லது வெள்ளை உளுந்து இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, அதனுடன் 4 ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவேண்டும். பிறகு ஊறிய உளுத்தம்பருப்பை மிக்ஸியில் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதனை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து, 20 நிமிடம் அப்படியே காய விட வேண்டும். சிறிது நேரத்தில் முகத்தில் பூசிய உளுத்தம் மாவு காய்ந்து முகம் நன்றாக இறுகி விடும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதனால் முகத்தில் இருக்கும் கருமை நிறம் நீங்கி, முகம் பளபளப்பாக மாறுவதுடன் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் முகப்பருக்களினால் உண்டான தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.
குறிப்பு 2:
ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு வாழைப்பழம் அதனுடன் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் பால் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை முகத்தில் பூசி 5 நிமிடத்திற்கு மசாஜ் செய்து பிறகு பதினைந்து நிமிடங்கள் அப்படியே காய விடவேண்டும். பிறகு குளிர்ந்த நீரை வைத்து முகத்தை கழுவ வேண்டும். முகம் நல்ல பொலிவுடன் மிருதுவாக இருக்கும். இவ்வாறு தினமும் 2 முறை செய்து வந்தால் ஒரே வாரத்தில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
குறிப்பு 3:
வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்தவுடன் ஒரு ஸ்பூன் சோடா மாவினை எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து நன்றாக குழைத்துக்கொண்டு, அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து, அதன் பின் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதனை வழக்கமாக வைத்துக் கொண்டால் முகத்தில் இருக்கும் கருமை நிறம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும.
இரண்டு ஸ்பூன் ஓட்ஸை மிக்ஸியில் சேர்த்து நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் தக்காளி சாறு சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு கரைத்துக் கொண்டு, அதனை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு மூன்று முறையாவது செய்துவர வேண்டும். இதனால் முகத்தில் உள்ள கருமை நிறம் மறைந்து முகம் நல்ல பொலிவுடன் இருக்கும்.
Comments
Post a Comment