Posts

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முட்டையிடாமல் பாம்பு குட்டி போடும் அரிய காட்சி - வாயடைத்துபோன பார்வையாளர்கள்;

Image
  இந்த பறந்துவிரிந்த உலகில் அன்றாடம் ஏதாவது ஒரு வினோதமான விஷயங்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. அ ந்த வகையில் பெண் பாம்பு ஒன்று முட்டையிடாமல் குட்டியிடும் காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது., அதில், பச்சை நிறம் கொண்ட பாம்பானது பழுப்பு நிறத்தில் மற்றொரு பரிணாம வளர்ச்சியடைந்த பாம்பை பெற்றெடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. also read :  பறக்கும் மீன், நடக்கும் மீன்… இனி என்னவெல்லாம் இருக்குது இந்த உலகத்துல – ட்ரெண்டாகும் சூப்பர் வீடியோ................

முகத்தில் இருக்கும் குழிகள் என்ன செஞ்சாலும் மறைய மாட்டீங்குதா? ஒரே நாளில் போக்க இந்த ஒரு பொருள் போதும்...!

Image
  நிறைய இளம் பெண்களின் முகத்தில் இருக்கும் குழிகளை மறைப்பது பாரிய பிரச்சியையாக உருவெடுத்துள்ளது. இ தற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து கிரீம்களை பயன்படுத்துகின்றார்கள். எனினும் நல்ல மாற்றத்தினை உணர முடியாது உள்ளது. இதற்கு இயற்கை வழியில் தீர்வு இருக்கின்றது. ஒரே நாளில் நல்ல ஒரு மாற்றத்தினை உணர முடியும். முட்டை முட்டையின்  வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு பேஸ்ட்செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். கற்றாழை கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், திறந்துள்ள சருமத் துளைகள் சுருங்க ஆரம்பித்து, நாளடைவில் முகத்தில் உள்ள குழிகள் தானாக மறைந்துவிடும். வாழைப்பழம் நன்கு கனிந்த வாழைப்பழத் தோலின் உட்பகுதியால் முகத்தை மென்மையாக தேய்க்க வேண்டும். 10-15...

தாங்க முடியாத பொடுகு தொல்லையா? இந்த சாற்றை ஒரு துளி எடுத்து பயன்படுத்துங்க!

Image
  இன்று பலரும் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்று பொடுகு தொல்லை. இதற்காக அதிக பணம் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உருளைக்கிழங்கின் சாறு இருந்தால் பொடுகு தொல்லையில் இருந்து விடுப்படலாம். உ ருளைக்கிழங்கில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஒரு கப் உருளைக்கிழங்கு சாற்றின் மூலம், உடலில் இழந்த வைட்டமின் சி சத்தை உடனே ஈடு செய்திடலாம். வைட்டமின் சி சத்தானது, உடலில் இரும்பு சத்து உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. கூந்தல் வளர்ச்சிக்கு இரும்புச்சத்து மிகவும் தேவையான ஒன்று. அதனால் தான் கூந்தல் வளர்ச்சிக்கு உருளைக்கிழங்கு பெரிதும் பயனளிக்கிறது.   உருளைக்கிழங்கு சாறு எப்படி செய்வது? முதலில் 2 அல்லது 3 உருளைக்கிழங்குகளை நன்கு கழுவி எடுத்துக் கொண்டு தோல் சீவி வைத்துக் கொள்ளவும். தோல் சீவிய உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். வேண்டுமென்றால், உருளைக்கிழங்கை அரைக்காமல், துருவியும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது, அரைத்த உருளைக்கிழங்கு அல்லது துருவிய உருளைக்கிழங்கை ஒரு சுத்தமான துணியில் போட்டு ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ளவும். இப்போது அந்த து...

விமான கழிவறையில் தனிமைப்படுத்திக்கொண்ட பெண்! ஆச்சரியமூட்டும் கோவிட் சம்பவம்.....

Image
  நடுவானில் விமானத்தில் பறந்துகொண்டிருந்த நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட பெண் ஒருவர், அடுத்த சில மணிநேரங்களுக்கு விமான கழிவறையில் சுய தனிமைப்படுத்திக்கொண்டார். ம ரிசா ஃபோட்டியோ (Marisa Fotieo) எனும் அப்பெண், டிசம்பர் 19 அன்று சிகாகோவிலிருந்து ஐஸ்லாந்தின் ரெய்காவிக் நகருக்கு IcelandAir விமானத்தில் சென்றுகொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. மரிசா தனது சகோதரர் மற்றும் தந்தையுடன் தனது இறுதி இலக்கான சுவிட்சர்லாந்திற்குச் சென்று கொண்டிருந்தார். மரிசா, விமானத்தில் ஏறுவதற்கு முன், 2 பிசிஆர் சோதனைகள் மற்றும் சுமார் 5 ரேபிட் டெஸ்டுகள் எடுத்துள்ளார், அனால் அவை அனைத்தும் எதிர்மறையாக வந்தன. ஆனால் விமானத்தில் ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் கழித்து, அவருக்கு தொண்டை வலி ஏற்பட்டது. சிகாகோவில் ஆசிரியராக இருக்கும் மரிசா ஃபோட்டியோ, முழுமையாக தடுப்பூசி போட்டு, பூஸ்டர் தடுப்பூசியையும் பெற்றவர். இந்த நிலையில் அவர், தொடர்ந்து அசாதாரணமாக உணர்ந்ததால், விமானத்திலேயே மற்றோரு முறை சோதனை செய்துள்ளார். ஆனால் இந்தமுறை அவருக்கு தொற்று இருப்பதாக சோதனை முடிவுகள் நேர்மறையாக வந்தது. விமான கழிவறையில் இந்த சோ...

பெண்களுக்கு பிடித்த கதர் சில்க் புடவைகள் - இதன் தனி சிறப்பு என்ன தெரியுமா?

Image
  புடவைகள் என்றாலே பல வகைகள் உள்ளது. அதிலும் கதர் சில்க் புடவைகளைப் போலவே செமி காதி சில்க் புடவைகளும் பெண்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற புடவைகள் என்று சொல்லலாம். க தி சில்க் புடவைகள் என்று சொல்லும் அளவுக்கு அத்தனை டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் அணிவதற்கு மிகவும் வசதியாக வந்திருப்பவை இவ்வகை புடவைகள் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த புடவைகளில் பல்லு மிகவும் குறைவாக அதாவது ஷார்ட்டாக இருப்பது போல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பல்லுவின் ஓரங்களில் சுங்கங்கள்ச்தொங்குவது போல் தயாரித்தி-ருக்கிறார்கள். பின் உடல் பாகம் முழுவதும் மஞ்சள், பச்சை, நீலம் அல்லது சிவப்பு என ஏதாவது ஒரு நிறத்தில் இருக்க அதற்கு காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் பூப்போட்ட பார்டர்கள் மற்றும் பல்லுவானது அமைந்து பூப்போட்ட பிளவுஸ் துணியும் இணைக்கப்பட்டு வந்திருப்பது காண்பவர்களை கவர்ந்து இழுக்கின்றது. இத்தனை டிசைன்களுடன் வரும் மென்மையான காதி சில்க் புடவைகள் அழகோ அழகு என்று சொல்லும் அளவுக்கு அவ்வளவு அழகாக இருக்கின்றன. இந்தப் புடவைகள் அலுவலகப் பயன்பாடு மற்றும் தினசரி உபயோகத்திற்கும் அருமையாக ஈடு கொடுக்கக் கூடியவை. மேலும், சேலையில் ஒருபு...

உடற்பயிற்சியும்.. வியர்வையும்..

Image
உடலில் ஏற்படும் மாற்றங்களை சரியாக கவனத்தில் கொள்ளாவிட்டால் வெப்ப பக்கவாதம், குமட்டல், தலைவலி போன்ற பாதிப்புகளும் உண்டாகும். உடற்பயிற்சி செய்யும்போது வழக்கத்தை விட வியர்வை அதிகமாக வெளியேறும். அதனால் உடலில் நீர்ச்சத்தின் அளவு குறையும். வியர்வையின் வழியாக எலக்ட்ரோலைட்டுகள், சோடியம் போன்றவையும் வெளியேறும் என்பதால் போதுமான அளவு தண்ணீர் குடித்தால் மட்டும் போதாது. எலக்ட்ரோலைட்டுகள்தான் உடலில் உள்ள திரவங்களை சமநிலைப்படுத்துகிறது. பொட்டாசியம், சோடியம், குளோரைடு, பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவை எலக்ட்ரோலைட்டுகளில் உள்ளடங்கி இருக்கும். எலக்ட்ரோலைட்டுகளில் ஏற்றத்தாழ்வு நிகழும்போது தசை பிடிப்பு, உடல் பலவீனம், பக்கவாதம், இதயம் சார்ந்த நோய் பாதிப்புகள் ஏற்படும். இதயம் செயலிழந்து மரணம் கூட ஏற்படக்கூடும். நீண்ட நேரம் வெயிலில் நின்று உடற்பயிற்சி செய்தால் உடல் வெப்ப அழுத்தத்திற்கு உள்ளாகும். உடலில் ஏற்படும் மாற்றங்களை சரியாக கவனத்தில் கொள்ளாவிட்டால் வெப்ப பக்கவாதம், குமட்டல், தலைவலி போன்ற பாதிப்புகளும் உண்டாகும். உடற்பயிற்சிக்கான நேரம்:  கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்வதற்க...

சீனாவின் ஷாங்காய் நகரில் உலகின் மிக நீள மெட்ரோ ரெயில் பாதை திறப்பு

Image
ஷாங்காய் நகரில் மட்டுமே 508 மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளன. ஷாங்காயைத் தொடர்ந்து பீஜிங் இரண்டாவது பெரிய சுரங்க ரெயில்பாதையை கொண்டுள்ளது. ஷாங்காய் : உலகின் மிக நீளமான மெட்ரோ ரெயில் பாதை சீனாவின் ஷாங்காய் நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. லைன் 14 மற்றும் லைன் 18 என்னும் இந்த 2 வழித்தடங்கள் என்ஜின் டிரைவர் இன்றி இயக்கும் ரெயில்கள் ஓடும் தடங்கள் ஆகும். இது எனக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று ஒரு பயணி தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. புதிய மெட்ரோ ரெயில் பாதைகள் திறப்பு விழாவுடன் ஷாங்காய் சுரங்கப்பாதை 831 கி.மீ. நீளத்துக்கு விரிவடைந்துள்ளது. இந்த தடத்தில் தானியங்கி அல்லது என்ஜின் டிரைவர் இன்றி இயக்கும் மெட்ரோ ரெயில் பாதைகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ஷாங்காய் நகரில் மட்டுமே 508 மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளன. ஷாங்காயைத் தொடர்ந்து பீஜிங் இரண்டாவது பெரிய சுரங்க ரெயில்பாதையை கொண்டுள்ளது. இதன் நீளம் 780 கி.மீ. ஆகும். உலகின் 3-வது நீள மெட்ரோ ரெயில் நெட்வொர்க் என டெல்லி சமீபத்தில் தர வரிசைப்படுத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது. Also read :  எகிப்து பிரமிடையே அளந்த “பேஸ் ஜம்பர்...

ஒமைக்ரானை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருள்- அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Image
ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களை வீழ்த்த உதவும் நோய் எதிர்ப்பு பொருளை அமெரிக்க விஞ்ஞானிகள் அடையாளம் கண்டு அசத்தி உள்ளனர். வாஷிங்டன்: தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 24-ந் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், 1 மாத காலத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் கடந்த 2-ந் தேதி நுழைந்து வேகமாக பல மாநிலங்களிலும் கால் பதித்து வருகிறது. இந்த ஒமைக்ரான் வைரசில், கொரோனாவின் பிற எந்த உருமாறிய வைரசிலும் காணப்படாத அளவுக்கு அதன் ஸ்பைக் புரதத்தில் 37 பிறழ்வுகள் (உருமாற்றங்கள்) இருப்பதும், இந்த ஸ்பைக் புரதத்தைப் பயன்படுத்தித்தான் ஒமைக்ரான் மனித உடல் செல்களுக்குள் நுழைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒமைக்ரான் வைரஸ் தடுப்பூசிகளுக்கு தப்பும் தன்மையைக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறி வந்தனர். இந்த நிலையில், ஒமைக்ரான் வைரசை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருளை (ஆன்டிபாடி) அமெரிக்க விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். ஒமைக்ரானை மட்டுமல்லாது உருமாறிய பிற வைரஸ்களை தடுப்பதற்கும் இந்த நோய் எதிர்ப்பு பொருள் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகி...

இனி மேப்ஸ் தேவையில்லை.. அருகிலுள்ள உணவகங்கள், கடைகளைத் தேட வாட்ஸ்அப் போதும்!

Image
  இந்த அம்சம், வணிக டைரக்டரியை ஏற்கனவே பயன்படுத்தக்கூடிய நபர்களுக்கு எதிர்கால புதுப்பிப்பில் கிடைக்கும். உடனடி செய்தியிடல் தளமான வாட்ஸ்அப், அருகிலுள்ள வணிகங்களைத் தேட பயனர்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சாவ் பாலோவில் சிலருக்கு இந்த அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் மேலும் பலருக்கு வெளியிடப்படும் என்று வாட்ஸ்அப் டிராக்கர், WABetaInfo தெரிவித்துள்ளது. WABetaInfo-ன்படி, இந்த புதிய அம்சம் iOS மற்றும் Android பயனர்களுக்குக் கிடைக்கும். வாட்ஸ்அப் பயனர்கள் ஹோட்டல்கள், உணவகங்கள், மளிகை அல்லது துணிக்கடைகள் அல்லது அருகிலுள்ள எந்த வணிகத்தையும் தேட முடியும். “வாட்ஸ்அப்பில் எதையாவது தேடும்போது, ‘அருகில் உள்ள வணிகங்கள்’ என்ற புதிய பிரிவு இருக்கும்: நீங்கள் அதன் வகையைத் தேர்ந்தெடுக்கும்போது, வணிகக் கணக்குகளின் முடிவுகள் உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் வடிகட்டப்படும்” என்று WABetaInfo குறிப்பிட்டுள்ளது. இந்த அம்சம், வணிக டைரக்டரியை ஏற்கனவே பயன்படுத்தக்கூடிய நபர்களுக்கு எதிர்கால புதுப்பிப்பில் கிடைக்கும். இதற்கிடையில், ஆண்ட்ராய்டு சாதனங்...

எகிப்து பிரமிடையே அளந்த “பேஸ் ஜம்பர்கள்” – த்ரில்லுனா இப்டி இருக்கணும்...

Image
  சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இவர்களை புகழ்ந்து தள்ளியுள்ளனர். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவை இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். சா கச விளையாட்டு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதுவும் வானில் பறந்தபடி சாகசம் செய்வது என்றால்? சமீபத்திய தொழில்நுட்பங்கள் வான்வழி சாகசங்களுக்கு நல்ல முன்னேற்றத்தையும் புதுமையான சாகச விளையாட்டுகளையும் உருவாக்க உதவியுள்ளது என்றே கூற வேண்டும். ஃபிரான்ஸ் நாட்டின் தேசிய பாராக்ளைடிங் அணியில் இருந்த முன்னாள் வீரர்கள் ஃபெடெரிக் ஃப்யூகன் மற்றும் வின்செண்ட் கோட்டே ஆகியோர் சமீபத்தில் உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிட்டை விங்ஸூட் உதவியுடன் அடைந்துள்ளனர். எகிப்தின் பாராக்ளைடிங் பள்ளியான ஸ்கைடைவ் எகிப்து நிறுவனத்தின் உதவியுடன் இந்த அரிய சாகச சாதனையை அவர்கள் நிறைவேற்றியுள்ளனர். இதற்கு முன்பு இத்தகைய சாதனையை யாரும் புரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரமிடின் மிக அருகில் சென்று அதன் பின்னர் பாராச்சூட் உதவியுடன் கீழே இறங்கியுள்ளனர் இந்த வீரர்கள். சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இவர்களை புகழ்ந்து தள்ளியுள்ளனர...

பறக்கும் மீன், நடக்கும் மீன்… இனி என்னவெல்லாம் இருக்குது இந்த உலகத்துல – ட்ரெண்டாகும் சூப்பர் வீடியோ................

Image
  கடலின் தரைப்பகுதியில் நடக்கும் வகையில் உடலின் முன்பகுதியில் தகவமைப்பைப் பெற்றுள்ளது இந்த மீன் என்பதால் இதற்கு பிங்க் ஹேன்ஃபிஷ் (pink handfish) என்று பெயரிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். மி க சமீபத்தில் கடலின் அடி ஆழத்தில் தலை மட்டும் மிகவும் ட்ரான்ஸ்பெரன்ண்டாக இருக்கும் மீனின் வீடியோ ஒன்று வைரலானது. தற்போது அதே வகையில் ஆச்சரியம் தரும் நடக்கும் இளஞ்சிவப்பு மீனின் வீடியோ வைரலாகி வருகிறது. சிஸ்ரோ எனப்படும் Commonwealth Scientific and Industrial Research Organisation (CSIRO) நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றில் 1999ம் ஆண்டுக்கு பிறகு நடக்கும் இளஞ்சிவப்பு மீன் தஸ்மானியன் பகுதியில் பார்வையில் தென்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. அதாவது 22 ஆண்டுகளாக இந்த மீன்கள் என்ன ஆனது என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. கடலின் தரைப்பகுதியில் நடக்கும் வகையில் உடலின் முன்பகுதியில் தகவமைப்பைப் பெற்றுள்ளது இந்த மீன் என்பதால் இதற்கு பிங்க் ஹேன்ஃபிஷ் (pink handfish) என்று பெயரிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த மீன் ஆங்க்லெர் மீன் குடும்பத்தை சேர்ந்தது. அழிவின் விளிம்பில் இந்த மீன் வகை இருப்பதாகவும...

மிளகாய் ஐஸ்கிரீம் முதல் ஓரியோ பக்கோடா வரை… 2021ஐ கலக்கிய விநோத உணவுகள்.......

Image
  ரசகுல்லா சாட், மிளகாய் ஐஸ்கிரீம்,மேகி மில்க் ஷேக் என பல வித்தியாசமான உணவுகள் இந்தாண்டில் அறிமுகமாகியுள்ளன.  வித்தியாசமான உணவுகளுக்கு பஞ்சம் இல்லாத ஆண்டாக 2021 மாறிவிட்டது. கொரோனாவால் வீட்டில் முடங்கிய பலரும், தங்களது திறமைகளை உணவில் களமிறக்க தொடங்கினர். யோசித்துக்கூட பார்க்க முடியாத பல வகையான காம்பினேஷன்களை அறிமுகப்படுத்தி, இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளனர். இந்த வீடியோக்களை பார்த்து எப்படி டா இத சாப்பீடுறாங்க என பலர் நினைத்தாலும், அதனை முயற்சி செய்து வீடியோ போட்ட கூட்டமும் உள்ளது. ஹோட்டல், துரித உணவுகளை நடத்தி வருவோரும் தொழில் போட்டி காரணமாக தங்கள் படைப்புகளில் வித்தியாசத்தை புகுத்தி வருகிறார்கள். இதை பார்க்கும் போது, இந்த உணவில் இதை சேர்க்கலாமா என வாடிக்கையாளர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு ஆகிறது. அப்படி, சமூக வலைதளத்தில் ஹிட் அடித்த விநோத உணவுகளை இச்செய்தி தொகுப்பில் பாருங்கள் ஃபேன்டா மேகி மேகிக்கு இந்தியாவில் எப்போதும் தனி மவுசு உண்டு. இன்ஸ்டான்ட் நூடுல்ஸ் மீதான காதலால், அதில் புதுமையை புகுத்துகிறேன் என்ற பெயரில் பல விநோத காம்பினேஷன்களை இணையத்தில் இந்தாண்டு பார்த்த...

Popular posts from this blog

முகத்தில் காணப்படும் அதிகபட்ச எண்ணெய்யை போக்க வேண்டுமா? இந்தவொரு பொருளை இப்படி பயன்படுத்தினாலே போதும்!

120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?