நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பறக்கும் மீன், நடக்கும் மீன்… இனி என்னவெல்லாம் இருக்குது இந்த உலகத்துல – ட்ரெண்டாகும் சூப்பர் வீடியோ................

 கடலின் தரைப்பகுதியில் நடக்கும் வகையில் உடலின் முன்பகுதியில் தகவமைப்பைப் பெற்றுள்ளது இந்த மீன் என்பதால் இதற்கு பிங்க் ஹேன்ஃபிஷ் (pink handfish) என்று பெயரிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.


மிக சமீபத்தில் கடலின் அடி ஆழத்தில் தலை மட்டும் மிகவும் ட்ரான்ஸ்பெரன்ண்டாக இருக்கும் மீனின் வீடியோ ஒன்று வைரலானது. தற்போது அதே வகையில் ஆச்சரியம் தரும் நடக்கும் இளஞ்சிவப்பு மீனின் வீடியோ வைரலாகி வருகிறது.

சிஸ்ரோ எனப்படும் Commonwealth Scientific and Industrial Research Organisation (CSIRO) நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றில் 1999ம் ஆண்டுக்கு பிறகு நடக்கும் இளஞ்சிவப்பு மீன் தஸ்மானியன் பகுதியில் பார்வையில் தென்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. அதாவது 22 ஆண்டுகளாக இந்த மீன்கள் என்ன ஆனது என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

கடலின் தரைப்பகுதியில் நடக்கும் வகையில் உடலின் முன்பகுதியில் தகவமைப்பைப் பெற்றுள்ளது இந்த மீன் என்பதால் இதற்கு பிங்க் ஹேன்ஃபிஷ் (pink handfish) என்று பெயரிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த மீன் ஆங்க்லெர் மீன் குடும்பத்தை சேர்ந்தது. அழிவின் விளிம்பில் இந்த மீன் வகை இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

பிப்ரவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள கடல் ஆராய்ச்சியாளர்கள் அண்டர்வட்டர் கேமராக்களை தஸ்மான் ஃப்ராக்சர் மெரைன் பார்க்கில் பொருத்தினார்கள். இந்த ஆண்டின் பிற்பாதியில் அந்த கேமராவின் காட்சிகளை பெற்று பார்வையிட்ட போது பிங்க் ஹேண்ட்ஃபிஷ் அதில் பதிவாகியிருந்தது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆழமான கடல் பகுதியிலேயே வாழும் என்று நம்பப்பட்ட இந்த மீன் வெறும் 150 ஆடி ஆழத்திலேயே கண்டறியப்பட்டது மேலும் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலிய கடல் பகுதியில், நீருக்கு அடியே பூமி ஓட்டில் ஏற்பட்டிருக்கும் பிளவின் காரணமாக அந்த கடல் பூங்காவிற்கு ஃப்ராக்சர் மெரைன் பார்க் என்று பெயரிட்டுள்ளனர். இந்த பிளவின் வழியே கடலுக்குள் 4000 மீட்டர் ஆழம் வரை ஆராய்ச்சியாளர்களால் ஆய்வுகளை மேற்கொள்ள இயலும்.


ALSO READ : ஒருவர் தலையில் மீது தலைகீழாக இன்னொருவர். படைக்கப்பட்ட சாதனை

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!