தாங்க முடியாத பொடுகு தொல்லையா? இந்த சாற்றை ஒரு துளி எடுத்து பயன்படுத்துங்க!
- Get link
- X
- Other Apps
இன்று பலரும் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்று பொடுகு தொல்லை.
இதற்காக அதிக பணம் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
உருளைக்கிழங்கின் சாறு இருந்தால் பொடுகு தொல்லையில் இருந்து விடுப்படலாம்.
உருளைக்கிழங்கில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஒரு கப் உருளைக்கிழங்கு சாற்றின் மூலம், உடலில் இழந்த வைட்டமின் சி சத்தை உடனே ஈடு செய்திடலாம்.
வைட்டமின் சி சத்தானது, உடலில் இரும்பு சத்து உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. கூந்தல் வளர்ச்சிக்கு இரும்புச்சத்து மிகவும் தேவையான ஒன்று.
அதனால் தான் கூந்தல் வளர்ச்சிக்கு உருளைக்கிழங்கு பெரிதும் பயனளிக்கிறது.
உருளைக்கிழங்கு சாறு எப்படி செய்வது?
- முதலில் 2 அல்லது 3 உருளைக்கிழங்குகளை நன்கு கழுவி எடுத்துக் கொண்டு தோல் சீவி வைத்துக் கொள்ளவும்.
- தோல் சீவிய உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- வேண்டுமென்றால், உருளைக்கிழங்கை அரைக்காமல், துருவியும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.
- இப்போது, அரைத்த உருளைக்கிழங்கு அல்லது துருவிய உருளைக்கிழங்கை ஒரு சுத்தமான துணியில் போட்டு ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ளவும்.
- இப்போது அந்த துணியில் உள்ள உருளைக்கிழங்கை பிழிந்து சாறு எடுக்கவும்.
- பொடுகு தொல்லையால் அவதிப்படுபவர்கள், உருளைக்கிழங்கு சாற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பயன்படுத்தவும்.
குறிப்பு
உருளைக்கிழங்கு சாறு தயாரித்தவுடன் உடனே பயன்படுத்திட வேண்டும்.
நீண்ட நேரத்திற்கு வைத்திருந்து உருளைக்கிழங்கு சாற்றை பயன்படுத்தவே கூடாது.
சாறு எடுப்பதற்கான உருளைக்கிழங்கை நன்கு பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
பச்சை நிற உருளைக்கிழங்கு, அடர் நிற உருளைக்கிழங்கு, முளைக்கட்டிய உருளைக்கிழங்கு ஆகியவற்றை பயன்படுத்தவே கூடாது.
also read : உணவு மூலமே எடைக் குறைப்பு சாத்தியம்!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment