பெண்களுக்கு பிடித்த கதர் சில்க் புடவைகள் - இதன் தனி சிறப்பு என்ன தெரியுமா?
- Get link
- X
- Other Apps
புடவைகள் என்றாலே பல வகைகள் உள்ளது. அதிலும் கதர் சில்க் புடவைகளைப் போலவே செமி காதி சில்க் புடவைகளும் பெண்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற புடவைகள் என்று சொல்லலாம்.
இந்த புடவைகளில் பல்லு மிகவும் குறைவாக அதாவது ஷார்ட்டாக இருப்பது போல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பல்லுவின் ஓரங்களில் சுங்கங்கள்ச்தொங்குவது போல் தயாரித்தி-ருக்கிறார்கள்.
பின் உடல் பாகம் முழுவதும் மஞ்சள், பச்சை, நீலம் அல்லது சிவப்பு என ஏதாவது ஒரு நிறத்தில் இருக்க அதற்கு காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் பூப்போட்ட பார்டர்கள் மற்றும் பல்லுவானது அமைந்து பூப்போட்ட பிளவுஸ் துணியும் இணைக்கப்பட்டு வந்திருப்பது காண்பவர்களை கவர்ந்து இழுக்கின்றது.
இத்தனை டிசைன்களுடன் வரும் மென்மையான காதி சில்க் புடவைகள் அழகோ அழகு என்று சொல்லும் அளவுக்கு அவ்வளவு அழகாக இருக்கின்றன. இந்தப் புடவைகள் அலுவலகப் பயன்பாடு மற்றும் தினசரி உபயோகத்திற்கும் அருமையாக ஈடு கொடுக்கக் கூடியவை.
மேலும், சேலையில் ஒருபுறம் சிறிய பார்டரும் மறுபுறம் பெரிய பார்டரும் இருப்பதுபோல் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த புடவைகளின் பல்லுவானது இக்கத் டிசைன்களை அருமையாக காட்டும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறிய விழாக்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு அணிந்து செல்வது போல் இருக்கும் இந்த புடவைகளின் விலை ஆயிரம் ரூபாய்க்குள் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
இந்த புடவைகள் பெண்களிடையே அதிக வரவேற்பை பெற்று இருக்கிறது. பேப்பர் சில்க் புடவைகளுடன் போட்டி போடும் விதத்தில் மிகவும் மெல்லியதாகவும் உடுத்த இலகுவாகவும் உள்ளன.
மற்ற புடவைகளில் வரும் டிசைன்கள் மற்றும் பிரிண்டுகள் இது போன்ற கதர் புடவைகளிலும் வருவது கூடுதல் சிறப்பு. எம்பிராய்டரி போலவே பிரிண்டுகளானது இந்த புடவைகளில் வரும்பொழுது அவை பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளன.
also read : மிளகாய் ஐஸ்கிரீம் முதல் ஓரியோ பக்கோடா வரை… 2021ஐ கலக்கிய விநோத உணவுகள்.......
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment