எகிப்து பிரமிடையே அளந்த “பேஸ் ஜம்பர்கள்” – த்ரில்லுனா இப்டி இருக்கணும்...
- Get link
- X
- Other Apps
சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இவர்களை புகழ்ந்து தள்ளியுள்ளனர். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவை இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
சாகச விளையாட்டு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதுவும் வானில் பறந்தபடி சாகசம் செய்வது என்றால்? சமீபத்திய தொழில்நுட்பங்கள் வான்வழி சாகசங்களுக்கு நல்ல முன்னேற்றத்தையும் புதுமையான சாகச விளையாட்டுகளையும் உருவாக்க உதவியுள்ளது என்றே கூற வேண்டும்.
ஃபிரான்ஸ் நாட்டின் தேசிய பாராக்ளைடிங் அணியில் இருந்த முன்னாள் வீரர்கள் ஃபெடெரிக் ஃப்யூகன் மற்றும் வின்செண்ட் கோட்டே ஆகியோர் சமீபத்தில் உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிட்டை விங்ஸூட் உதவியுடன் அடைந்துள்ளனர்.
எகிப்தின் பாராக்ளைடிங் பள்ளியான ஸ்கைடைவ் எகிப்து நிறுவனத்தின் உதவியுடன் இந்த அரிய சாகச சாதனையை அவர்கள் நிறைவேற்றியுள்ளனர். இதற்கு முன்பு இத்தகைய சாதனையை யாரும் புரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரமிடின் மிக அருகில் சென்று அதன் பின்னர் பாராச்சூட் உதவியுடன் கீழே இறங்கியுள்ளனர் இந்த வீரர்கள்.
சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இவர்களை புகழ்ந்து தள்ளியுள்ளனர். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவை இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
ALSO READ : ஒருவர் தலையில் மீது தலைகீழாக இன்னொருவர். படைக்கப்பட்ட சாதனை
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment