Posts

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நடுவானில் வட்டமடித்த ஏலியன்களின் பறக்கும் தட்டு? வைரல் வீடியோவால் பரபரப்பு.........

Image
 பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் மர்ம பொருள் ஒன்று வானில் வட்டமடித்ததால் பரபரப்பானது. பொதுவாக ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுகிரகவாசிகள் பறக்கும் தட்டில் பயணம் செய்வார்கள் என பரவலாக கூறப்படுவதுண்டு. வேற்று கிரகவாசிகளை பற்றி அறிந்து கொள்வதற்காகவே பல்வேறு ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. இதற்கென தனியாக ஆர்வலர்களும் இருக்கின்றனர். எனினும், இதனை மறுப்பவர்களும் உள்ளனர்.  இந்நிலையில் அவ்வப்போது வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்வதாகவும், மர்மமான பொருள் ஒன்று வானில் வட்டமடிப்பதாகவும் வீடியோக்கள் வெளியாகும். அந்த வகையில், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் 2 மணிநேரத்துக்கு வேற்றுகிரகவாசிகளின் பறக்கும் தட்டு வட்டமடித்ததாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. முக்கோண வடிவில் இருந்த அந்த பறக்கும் தட்டு, சூரிய வெளிச்சத்தின் போது தென்பட்டதாகவும் வீடியோவை எடுத்தவர்கள் தெரிவித்துள்ளனர். ALSO READ :  கற்பனைக்கும் விஞ்சிய கோழியின் செயல்... பறந்து சென்று ஆற்றை கடக்கும் வீடியோ!

மூக்கின் மீது படியும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்க வேண்டுமா? இதோ அசத்தலான டிப்ஸ்.....

Image
  பொதுவாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு மூக்கில் தான் அதிகப்படியான எண்ணெய் பசை இருக்கும். இதனால் மூக்கின் மீதும் முக்கை சுற்றிலும் கரும்புள்ளிகள், பருக்கள், அழுக்கு, போன்றவை படிந்திருப்பதை காணலாம். இதனால் ஒட்டுமொத்த முகத்தின் அழகும் சீர்குலைந்து போகும். மூக்கின் மேல் படியும் எண்ணெய் பசையை நீக்க இயற்கையாக கிடைக்கும் சில பொருட்கள் கைகொடுக்கும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம். எண்ணெய் சருமம் கொண்டவர்கள் எலுமிச்சை சாற்றை காட்டன் பஞ்சில் நனைத்து மூக்கின் மீது தடவில் 15 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவுவது நல்ல பலனைக் கொடுக்கும். சிறிதளவு தேனை மூக்கில் தடவி நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இதனை தினமும் இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இது மூக்கில் எண்ணெய் சேருவதை தடுப்பதோடு, அதை எண்ணெய் இல்லாமல் பராமரிக்க உதவுகிறது. . தயிர் உடன் சிறிதளவு தக்காளி சாறு கலந்து எண்ணெய் பசையுள்ள மூக்கின் மீது தடவுவது நல்ல பலன் கிடைக்க உதவும்.  இது சரும துளைகளில் உள்ள அழுக்கை நீக்குவதோடு, சரும புள்ளிகள் மற்றும் தழும்புகளை குறைக்க உதவுகிறது. 3 முதல் 4 டீஸ்பூன்...

உங்கள் முகம் பரு இல்லாமல் பளிங்கு மாதிரி இருக்கணுமா? இதோ சூப்பர் டிப்ஸ்....

Image
  பருக்கள் இன்றைய இளைய தலைமுறையினரின் பெரும் சவாலாக விளங்கி வருகின்றன. தோலில் உள்ள அதிகப்படியான எண்ணெய் சுரப்பால், துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகள்,பாக்டீரியா, ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், இறந்த தோலின் செல்கள் உள்ளிட்ட காரணங்களினால், பருக்கள் ஏற்படுகின்றன. பருக்கள், நமக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இதன் தீவிரம் அதிகமாகும் போது அதனை சரி செய்வது நல்லது. அந்தவகையில் பருக்களை போக்ககூடிய சில எளிய வழிமுறைகளை இங்கே பார்ப்போம்.  நல்லெண்ணெயில் 5 மிளகைத் தட்டிப் போட்டு ஊறவைத்து, அந்த எண்ணெயைப் பருக்களின் மேல் தடவி வாருங்கள். பருக்கள் மறையத் தொடங்கும். தேங்காய் எண்ணெயில் கரிசலாங்கண்ணி இலைச் சாறைச் சேர்த்து அடுப்பில் வைத்து சூடாக்கி, வெதுவெதுப்பான நிலையில் இருக்கும்போது உச்சந்தலையில் நன்கு தேய்த்து குளித்து வந்தால் தலையில் உள்ள பொடுகும் காணாமல் போகும், அதனால் ஏற்படும் பருக்களும் காணாமல் போகும். எலுமிச்சைசாறுடன் ஒரு சிட்டிகை அளவுக்கு உப்பு சேர்த்துக் கலந்து பருவின் மேல் தொட்டு மேலே வையுங்கள். உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவுங்கள். ஒரு வாரத்தில் பரு ...

கழுத்து மட்டும் குண்டா இருக்கா? இதனை எளிய முறையில் குறைக்க இதோ சில வழிகள்......

Image
  பொதுவாக வயதாகும் போது எடை அதிகரிக்க தொடங்கும் போது கழுத்து பகுதி மட்டும் கனமாக இருக்கும். இது முகத்தின் தோற்றத்தை வடிவத்தை மாற்றிவிடும்.  இளம் வயதினர்களை காட்டிலும் வயதானவர்களுக்கு கழுத்து கொழுப்பு அதிகமாக இருக்கும். இதனை ஒரு சில உணவுகள் மூலம் கூட குறைக்க முடியும்.  தற்போது அவை என்னெ்னன என்பதை பார்ப்போம். ஒரு டீஸ்பூன் க்ரீன் டீ உடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி விடவும். பிறகு வடிகட்டி தேன் சேர்த்து குடிக்கவும். அடிக்கடி இதை குடித்துவரலாம். நாள் ஒன்றுக்கு மூன்று கப் வரை குடிக்கலாம். தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் சுத்தமான தேங்காயெண்ணெய் எடுத்துகொள்ளுங்கள். தினமும் கழுத்தில் சிறிது தேங்காயெண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம். தினமும் ஒரு முறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் செய்து வந்தால் போதும். புதிதாக நறுக்கிய முலாம்பழங்கள் ஒரு கிண்ணம் நிறைய எடுத்துகொள்ளவும். தினமும் 2 அல்லது 3 கப் பழங்கள் எடுத்துகொள்ளலாம். வெதுவெதுப்பான நீரில் பாதி அளவு எலுமிச்சை சாறு பிழியவும். பிறகு நன்றாக கலந்து சிறிது தேன் சேர்க்கவும். வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு ...

ஒரே வாரத்தில் குதிகால் வெடிப்பு மறைய தூங்கும் முன் இப்படி செய்யுங்க போதும்!

Image
  எம்மில் பலர் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கு கொடுப்பது இல்லை. பாதங்களில் உள்ள குதிகால் வெடிப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.  அவற்றில் ஒன்றை பயன்படுத்துங்கள். பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.  நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி அல்லது தினமும் செய்து வந்தால், பாதங்களில் ஈரப்பசை தக்க வைக்கப்பட்டு, வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும். வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அக்கலவையில் பாதங்களை 10 நிமிடம் ஊற வைத்து, பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வர, பாதங்களில் உள்ள இறந்த தோல் வெளியேற்றப்பட்டு, பாதங்கள் மென்மையுடன் இருக்கும். நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை பாதங்களுக்கு தடவுங்கள். ...

கற்பனைக்கும் விஞ்சிய கோழியின் செயல்... பறந்து சென்று ஆற்றை கடக்கும் வீடியோ!

Image
  கோழி பறந்து சென்று ஆற்றை கடக்கும் வீடியோ இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கோழியானது கற்பனைக்கும் விஞ்சியதாக இருக்கிறது. மிகப்பெரிய ஆறு ஒன்றை இக்கரையில் இருந்து அக்கரைக்கு லாவகமாக பறந்தவாறு கடக்கிறது. சில அடி தூரம் கோழிகள் பறக்கும் என்பதை ஏற்கனவே பார்த்தவர்கள் கூட, இந்தக் கோழி ஆற்றைக் கடக்கும் வீடியோவை பார்த்தால் நிச்சயம் அசந்துபோவார்கள். ALSO READ :  பூனை குறுக்க வந்து அபசகுணம் ஆகிடுச்சு… இதுபோல இந்தியர்கள் அதிகம் கடைபிடிக்கும் மூடநம்பிக்கைகள் என்னென்ன தெரியுமா?

குழந்தைகளின் எதிர்காலத்தை கட்டமைக்கும் ‘கோடிங்’

Image
ஓவியப்பயிற்சி, நடனப்பயிற்சி, கராத்தே பயிற்சிகளை போல குழந்தைகளின் திறன் வளர்க்கும் பயிற்சி பட்டியலில் நவீன அப்டேட்டாக கோடிங் பயிற்சி இணைந்திருக்கிறது. சமீபகாலமாக பெற்றோர் மத்தியில் அதிகம் பேசப்படும், விவாதிக்கப்படும் தலைப்புகளில் ‘ கோடிங் ' தலைப்பும் ஒன்று. இன்று நிறைய குழந்தைகள், பள்ளி கல்வியோடு சேர்த்து கோடிங் கல்வியும் கற்கிறார்கள். அது அவசியமான ஒன்றா?, அது குழந்தைகளின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்கும்... போன்ற பல கேள்விகளுக்கு, பதிலளிக்கிறார் கல்பனா சேட்டு. சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவரான இவர், கடந்த 5 வருடங்களாக ஏழை குழந்தைகளுக்கு இலவச கோடிங் பயிற்சி வழங்கி வருகிறார். அவர் கோடிங் பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். குழந்தைகளுக்கு ‘கோடிங்’ கற்றுக்கொடுக்கும் மோகம் எல்லா பெற்றோர்கள் மத்தியிலும் இருக்கிறது. இது நல்லதா? நல்லதுதான். ஓவியப்பயிற்சி, நடனப்பயிற்சி, கராத்தே பயிற்சிகளை போல குழந்தைகளின் திறன் வளர்க்கும் பயிற்சி பட்டியலில் நவீன அப்டேட்டாக கோடிங் பயிற்சி இணைந்திருக்கிறது. இது மற்ற பயிற்சிகளைவிட சிறப்பானது. எந்த வயதில் கோடிங் கற்றுக்கொள்வது சிறந்தது?...

சருமத்திற்கு நலம் சேர்க்கும் ‘வைட்டமின் சி’

Image
சரும பராமரிப்புக்கு பயன்படுத்தும் பொருட்களில் வைட்டமின் சி , 10 முதல் 20 சதவீதம் வரை இருக்க வேண்டும். மேலும் அதன் பி.எச். அளவு 3.5-க்கும் குறைவாக இருக்க வேண்டும். வைட்டமின் சி, உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் நன்மை சேர்க்கக்கூடியது. சருமத்திற்கு தேவையான பராமரிப்பையும், ஊட்டச்சத்தையும் கொடுப்பதற்கு வைட்டமின் சி சிறந்த தேர்வாக அமையும். அழுக்கு, வெப்பம், நச்சுகள், மாசு போன்ற பிரச்சினைகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால் முன்கூட்டியே வயதான தோற்றத்தை அடைய நேரிடும். கரும்புள்ளிகள், சுருக்கங்கள் தோன்றும். மேலும் தோல் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். இத்தகைய பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாப்பதோடு, தேவையான பராமரிப்பையும் வழங்கக்கூடியது. வைட்டமின் சி, சரும சுருக்கங்களை மேம்படுத்துவதாக சில ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளன. தொடர்ந்து மூன்று மாதங்கள் பயன்படுத்தும்போது தோல் சுருக்கங்களில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதையும் அந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. தொடர்ந்து வைட்டமின் சி பயன்படுத்தி வந்தால் சரும தோற்றம் மேம்படும். சன்ஸ்கிரீனுடன் வைட்டமின் சியை சே...

பாதங்களில் உள்ள வெடிப்பைப் போக்கி அழகாக்க சில எளிய வழிகள்

Image
பாதங்களில் உள்ள குதிகால் வெடிப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி உங்கள் பாதங்களை அழகாக வைத்துக் கொள்ளுங்கள். பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும். நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி அல்லது தினமும் செய்து வந்தால், பாதங்களில் ஈரப்பசை தக்க வைக்கப்பட்டு, வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும். வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அக்கலவையில் பாதங்களை 10 நிமிடம் ஊற வைத்து, பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வர, பாதங்களில் உள்ள இறந்த தோல் வெளியேற்றப்பட்டு, பாதங்கள் மென்மையுடன் இருக்கும். குறிப்பாக இச்செயலை செய்த பின்னர், பாதங்கள் உலர்ந்ததும், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை பாதங்களுக்கு தடவுங்கள்...

எடையைக் குறைக்க உதவும் ‘சைவ உணவு முறை’

Image
தினமும் இயற்கை தானியங்களை, காய்கறிகளை மட்டுமே சாப்பிடுவது, பெருங்குடல் புற்றுநோய் முதல் பல்வேறு வகை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைப் பெருமளவு குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு சைவ உணவு முறை சிறந்தது. இதில் பழங்கள், காய்கறிகள், உலர்ந்த பீன்ஸ் மற்றும் பட்டாணி, தானியங்கள், விதைகள் மற்றும் கொட்டைகள் ஆகியவை உணவாக உட்கொள்ளப்படுகின்றன. சைவ உணவுகளைப் பின்பற்றுபவர்கள், தங்கள் ஊட்டச்சத்துக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பலவகையான உணவுகளை சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். புரதம், இரும்பு, கால்சியம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும். இறைச்சி, மீன் போன்றவற்றைத் தவிர்க்கும் சைவ உணவு முறையில் முட்டை, பால் மற்றும் தேன் போன்ற உணவுகள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. ‘சைவ உணவு முறை’ உடல் எடையைக் குறைக்க உதவும், இதயத்தைப் பாதுகாக்கும், சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்கும். இதில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் மலச்சிக்கல் போன்ற வயிற்றுக்கோளாறுகள் ஏற்படுவதில்லை. இந்த உணவு முறையை பின்பற்றுவதன் மூலம், அ...

நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தியானம் செய்யுங்க...

Image
ஒவ்வொரு மனிதனும் தனக்குள் உள்ள உயிர் சக்தியை, ஆத்ம சக்தியை உணர வேண்டும். அதற்கு இந்த உடலுக்குரிய மருந்து யோகாசனம், முத்திரை, மூச்சுப்பயிற்சி உள்ளத்திற்குரிய மருந்து தியானம். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கண்ணை மூடி உங்கள் உடம்பில் இயங்கும் மூச்சோட்டத்தை அமைதியாக கவனியுங்கள். மூச்சு உள்ளே வருவது, மூச்சு வெளியே வருவது, இதனை மட்டும் கூர்ந்து கவனியுங்கள். இது தியானமாக மலரும். எண்ணங்கள் ஒடுங்கும். உங்கள் உணர்வு அன்னமய கோசத்தில் இருந்து, பிராணமய கோசம், பின் மனோன்மய கோசம், பின் புத்திமய கோசம் சென்று கடைசியில் ஆனந்தமய கோசமான உயிரில் லயித்து, அந்த உயிர் சக்தி உடல் முழுக்க பரவும். ஒவ்வொரு மனிதனும் தனக்குள் உள்ள உயிர் சக்தியை, ஆத்ம சக்தியை உணர வேண்டும். அதற்கு இந்த உடலுக்குரிய மருந்து யோகாசனம், முத்திரை, மூச்சுப்பயிற்சி உள்ளத்திற்குரிய மருந்து தியானம். இந்த பயிற்சி செய்தால் நாம் சிறப்பாக, ஆரோக்கியமாக, ஆத்மானந்தமாக வாழலாம். நிறைய மனிதர்கள் தன்னை உணராமல் தனது ஆத்மசக்தியை உணராமல் அவதிப்படுகின்றனர். ஒவ்வொருவரும் தனது சக்தியை உயிர்சக்தியை உணருங்கள். Also read :  உங்கள் மீது ஈர்ப்பை அதி...

கிளப்ஹவுசில் அறிமுகமாகியுள்ள புதிய அம்சம்- இனி இதையும் செய்யலாமா!

Image
வெறும் ஆடியோ வடிவத்தில் மட்டுமே உரையாடல்களை நிகழ்த்தும் வகையில் இருந்த கிளப் ஹவுசில் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு அறிமுகமாகிய கிளப்ஹவுஸ் செயலி முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாக இருக்கிறது. மக்கள் ஆடியோ வடிவில் உரையாடுவதற்கு இந்த செயலி பெரிதும் உதவுகிறது.  வெற்று அரட்டைகளுக்கு மட்டுமில்லாமல் சினிமா, இசை, அரசியல் என்று பல்வேறு பிரிவுகளில் முக்கியமான உரையாடல்கள் கிளப் ஹவுசில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த செயலி தற்போது புதிய அம்சத்தையும் அறிமுகம் செய்துள்ளது. ‘இன் ரூம் சாட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய அம்சத்தில் பயனர்கள் குறுந்தகவல்கள் அனுப்பி ‘டெக்ஸ்ட்’ வடிவத்திலும் பேசிக்கொள்ளலாம்.  யாராவது பேசிக்கொண்டிருக்கும்போது தங்களது எண்ணங்களை மெசேஜ்ஜில் அனுப்பியும் உரையாடலாம். இதே வகையில் எமோஜிக்களையும் அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சத்தில் உரையாடல்களை பற்றிய கருத்துக்களை பதிவு செய்வதற்கும் தனியாக தரப்பட்டிருக்கும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Related Tags :  வாட்ஸ்அ...

வாட்ஸ்அப்பில் வர இருக்கும் 5 பயனுள்ள அம்சங்கள்- என்னென்ன தெரியுமா?

Image
தற்போது பீட்டா வெர்ஷனில் தரப்பட்டுள்ள இந்த அம்சங்கள் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் தரப்படும். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பிரபலமான குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது. பயனர்கள் எளிய வகையில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் அம்சம் இதில் இடம்பெற்றிருப்பதால் அனைவரும் விரும்பும் ஒன்றாக இருக்கிறது.  முதலில் குறுஞ்செய்தி வசதியுடன் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் பின்னாளில் வாய்ஸ் மெசேஜ், ஆடியோ கால்கள், வீடியோ கால்கள், ஸ்டேட்டஸ் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது. இந்நிலையில் பயனர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் 5 புதிய அம்சங்கள் வாட்ஸ்அப்பில் வரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. செர்ச் மெசேஜ் ஷார்ட்கட்:   இந்த அம்சத்தில் ஒரு நபரிடம் பேசிய உரையாடலில் இருந்தும் குறிப்பிட்ட மெசேஜ்ஜை எளிதாக தேடி எடுக்க முடியும். ஏற்கனவே இந்த அம்சம் இடம்பெற்றிருந்தாலும். தற்போது மேம்படுத்தப்பட்ட வடிவில் தரப்படவுள்ளது. இன்று முதல் சில பீட்டா டெஸ்டர்களுக்கு தரப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும். மெசேஜ் ரியாக்‌ஷன்ஸ்:  வாட்ஸ்அப் நிறுவனம் மெசேஜ்களுக்கு ரியா...

கணினி பயன்படுத்துகிறீர்களா... தீயாய் பரவும் ஆபத்து: பாதுகாப்பது எப்படி?

Image
மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் இருந்து புரோகிராம்கள், கேம்களை பதவிறக்கம் செய்வதன் மூலம் இந்த மால்வேர் பரவுகிறது. சமூக வலைதளங்களில் பயனர்களின் தகவல்களை திருடும் புதிய மால்வேர் ஒன்று மைக்ரோசாஃப்ட் ஸ்டோர் தளத்தில் இருந்து பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எலக்ட்ரான் பாட் என்று அழைக்கப்படும் இந்த மால்வேர் பயனர்களின் ஃபேஸ்புக், கூகுள், சவுண்ட்கிளவுட் மற்றும் யூடியூப் கணக்குகளில் இருந்து அவர்களுடைய தரவுகளை திருடுவதோடு மட்டும் இல்லாமல், அந்த கணக்குகளின் கட்டுப்பாடுகளையும் எடுத்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான செக்பாயிண்ட் ரிசர்ச் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மைக்ரோசாஃப்டின் அதிகாரப்பூர்வ ஸ்டோர் தளத்தில் இருந்து பரவி வரும் இந்த மால்வேர் 5000-க்கும் மேற்பட்ட கணினிகளை தாக்கியுள்ளது. இந்த மால்வேர், பயனர்களின் சமூக வலைதள கணக்குகளை கட்டுப்பாட்டில் எடுத்து, அந்த கணக்குகள் மூலம் பிறர் பக்கங்களை லைக் செய்தல், கமெண்ட் செய்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை செய்கிறது. இந்த மால்வேர் மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் இருந்து புரோகிராம்...

உங்கள் மீது ஈர்ப்பை அதிகரிக்கும் பழக்கவழக்கங்கள்

Image
உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை முக்கியமானது. அதை நீங்கள் வெளிப்படுத்தும் விதமே உங்கள் மீதான நன்மதிப்பை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆள் பாதி; ஆடை பாதி ’ எனும் பழமொழிக்கு ஏற்றவாறு, பிறரிடம் நமக்கான மதிப்பு நமது தோற்றத்தையும், பழக்கவழக்கங்களையும் பொறுத்தே அதிகரிக்கிறது. அந்தவகையில் உங்கள் மீது ஈர்ப்பை அதிகரிக்கும் சில பழக்கவழக்கங்கள் குறித்து பார்க்கலாம். ஆடையில் கவனம் செலுத்துங்கள்: அலுவலகம், நண்பர்களுடன் வெளியே செல்வது, விசேஷ காலங்கள் என அந்தந்த சூழ்நிலை மற்றும் சந்திக்கும் நபர்களுக்கு ஏற்றவாறு ஆடைகளைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் மீதான நேர்மறை எண்ணத்தை அதிகரிப்பதில் ஆடைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. எனவே அதற்காக சிறிது நேரம் ஒதுக்குவதற்கு எப்போதுமே தயங்காதீர்கள். சுத்தம்: குளிப்பது, நறுமண திரவியங்கள் உபயோகிப்பது, நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்வது, உடைக்கேற்றவாறு வசதியான, சரியான காலணிகளை தேர்ந்தெடுத்து அணிவது போன்றவை மிக முக்கியமானது. இது உங்கள் மீதான மதிப்பை அதிகரிக்கும். நட்பு வட்டத்தை பெரிதாக்குங்கள்: தொழில் சார்ந்தும், பொதுவாகவும் உங்களது நட்பு வட்ட...

பாதாம் எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்தினால் ஏற்படும் அதிசயங்கள்....

Image
பாதாம் எண்ணெய் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது. எனினும் முதல் முறை பயன்படுத்தும்போது சருமத்திற்கு ஒத்துக்கொள்கிறதா? என்று பரிசோதித்து பார்ப்பது நல்லது. பெண்கள் பலர் சரும பராமரிப்புக்காக நிறைய நேரங்களை செலவிடுகிறார்கள். மிருதுவான, பளபளப்பான சருமத்தை பெற விரும்புகிறார்கள். சருமம் எளிதில் உறிஞ்சப்படும் தன்மை கொண்டது என்றால் பாதாம் எண்ணெய் பயன்படுத்தலாம். அதில் இரண்டு வகைகள் உள்ளன. இனிப்பு பாதாம் எண்ணெய் எனப்படும் முதல் வகை சருமம் மற்றும் கூந்தலுக்கு பயன்படுத்தக்கூடியது. இரண்டாம் வகை கசப்பான பாதாம் எண்ணெய். இது வாசனை திரவிய தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக பாதாம் எண்ணெய்யில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. வைட்டமின் ஏயும் இதில் உள்ளடங்கி உள்ளது. அது முகப்பருவை கட்டுப்படுத்தும். பாதாம் எண்ணெயை முகத்திற்கு பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சருமத்தை புத்துணர்ச்சியடைய செய்யும். பாதாம் எண்ணெய் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது. எனினும் முதல் முறை பயன்படுத்தும்போது சருமத்திற்கு ஒத்துக்கொள்கிறதா? என்று பரிசோதித்த...

பூனை குறுக்க வந்து அபசகுணம் ஆகிடுச்சு… இதுபோல இந்தியர்கள் அதிகம் கடைபிடிக்கும் மூடநம்பிக்கைகள் என்னென்ன தெரியுமா?

Image
பொதுவாக கண் சிமிட்டுதல் என்பது எதேச்சையாக நடக்கக்கூடிய விஷயமாகும். ஆனால் இதனை பலர் அபசகுனமாகவும், வேறு பலர் அதிர்ஷ்டம் என்றும் கருதுகின்றனர். இந்தியா என்பது பன்முக கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களை கொண்ட தொன்மையான நாடு ஆகும். அதேபோல பல்வேறு மூடநம்பிக்கைகளும், கட்டுக்கதைகளும் இங்கு நிரம்பியிருக்கின்றன. நம் மக்கள் அதிகமாக கடைப்பிடிக்கும் சில மூடநம்பிக்கைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.. பூனை குறுக்கே வந்துருச்சு நம் நாட்டில் மிக அதிகமாக கடைபிடிக்கப்படும் அபசகுண பழக்கம் இதுதான். எங்காவது நாம் கிளம்பி சென்று கொண்டிருக்கையில், செல்லும் பாதையின் குறுக்கே பூனை ஒன்று ஓடிவிட்டால், நாம் செய்ய நினைக்கும் காரியம் நிறைவேறாது என்று பலர் நம்புவது உண்டு. சிலர் இதனால் எந்த ஒரு காரியமானாலும் பாதியில் வீடு திரும்பி விடுவது உண்டு. அதேசமயம் பூனை குறுக்கே சென்றாலும், நாம் செல்லும் முன்பாக மற்றொரு நபர் பாதையை கடந்து விட்டால் நம்மை அது பாதிக்காது என்று பலர் கருதுகின்றனர். எச்சில் துப்பி விட்டால்கூட இந்த அபசகுணம் நீங்கிவிடும் என்று சிலர் நம்புகின்றனர். உடைந்த கண்ணாடியை பார்க்காதே நம் வீட்டில் கண்...

உலகிலேயே மிகப்பெரிய டைனோசரின் புதைபடிமம் கண்டுபிடிப்பு!

Image
2017ம் ஆண்டு வடமேற்கு ஸ்காட்லாந்தில் இருந்து தொலைதூரத்தில் உள்ள ஸ்கை என்ற தீவு பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். ஜூராசிக் பார்க்’ படத்தில் வரும் ராட்சத உருவத்துடன் தோன்றும் டைனோசர்களைப் பார்த்து பிரமிக்காதவர்களே இருக்க முடியாது. படத்தில் வெறும் கிராபிக்ஸ் காட்சியாக இருந்தாலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நிலத்திலும், நீரிலும் மட்டுமல்லாது பறக்கூடிய டைனோசர் வகைகளும் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அவ்வப்போது கிடைத்து வருகின்றன. ஸ்காட்லாந்தில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வில் 170 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் புதை படிமங்கள் 2017ம் ஆண்டு கண்டறியப்பட்டது. அதன் அளவு புதைபடிமத்தின் அளவுக்கு ஜூராசிக் காலத்தில் இருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், உலகிலேயே மிகப்பெரிய டைனோசர் புதைப்படிமம் இதுவாக தான் இருக்கும் என தெரிவித்துள்ளனர். ஸ்காட்லாந்தின் தேசிய அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, 2017ம் ஆண்டு வடமேற்கு ஸ்காட்லாந்தில் இருந்து தொலைதூரத்தில் உள்ள ஸ்கை என்ற தீவு பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். எடின் பர்க்...

விந்தை மனிதர்! காதலிகள் 1000; கருத்தடை மாத்திரைகள் 69,000; தண்டனை 1075 ஆண்டுகள்!

Image
  துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள ஒரு நீதிமன்றம், இஸ்லாமியர்களின் ஒரு பிரிவின் தலைவரான அட்னான் ஒக்டருக்கு 10 வெவ்வேறு குற்றங்களுக்காக 1075 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. காதலிகளின் எண்ணிக்கை ஒன்றல்ல இரண்டல்ல; 1000 காதலிகள் வீட்டில் 69,000 கருத்தடை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன தன்னை அதிக சக்தி வாய்ந்ததாக கருதிய நபர். துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள ஒரு நீதிமன்றம், இஸ்லாமியர்களின் ஒரு பிரிவின் தலைவரான அட்னான் ஒக்டருக்கு 10 வெவ்வேறு குற்றங்களுக்காக 1075 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் அட்னான் ஒக்தார் என்பவரின் பல ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.  அட்னான் ஒக்தார் தீவிரவாதத்தைப் பற்றி மக்களுக்குப் போதிப்பதோடு, பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பெண்களுடன் அட்னான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடனமாடினார். அவர் பெண்களை 'பூனை' என்று அழைப்பார். கிரிமினல் குற்றவாளி கும்பலை உருவாக்கியது மற்றும் சிறார்களை பாலியல் ரீதியாக துஷபிரயோகம் செய்தது உட்பட பல குற்றங்களில் அவர் குற்றவாளி என்று துருக்கியின் இஸ்தான்புல் நீதிமன்றம் கண்டறிந்...

Death Lake: உலகின் மர்மமான ஏரி! இந்த ஏரியின் நீர் உயிரைக் குடிக்கும்!!

Image
  உலகின் மர்மமான ஏரியான ஃபுண்டுஜி, இந்த ஏரியின் தண்ணீரைக் குடித்தால், எமன் உயிரைக் குடித்து விடுவாராம்! உலகின் மர்மமான ஏரி உயிரைக் குடிக்கும் ஏரியின் நீர் அவிழ்க்க முடியா மர்ம முடிச்சு இந்த பூமி பல மர்மங்களைக் கொண்டுள்ளது. மலைகள், ஆறுகள், ஏரிகள் என இயற்கை தன்னுள் பல ரகசியங்களை பொதித்து வைத்துள்ளது.  மனிதர்களால் அறிய முடியாத பல விஷயங்கள் உள்ளன.  இருப்பினும், மனிதர்களின் விடா முயற்சி, இந்த மர்மங்களின் முடிச்சுக்களை அவிழ்க்க விளைகிறது.  அவற்றில் சில வெற்றியடைந்தாலும், பெரும்பாலும் ரகசியங்கள் மர்மமாகவே தொடர்கின்றன. அப்படி மர்மமாய் தொடரும் ஒரு ஏரி தென்னாப்பிரிக்காவின் ஃபுண்டுஜி.  பார்ப்பதற்கு பேரழகாய் காட்சியளிக்கும் இந்த ஏரியை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்வது நல்லது. ஏனெனில் தனது தண்ணீரை குடிப்பவர்களின் உயிரை இந்த ஏரி குடித்துவிடுமம்! தண்ணீர் தெளிவாக உள்ளது உலகில் உள்ள ஆயிரக்கணக்கான ஏரிகளில் சிலவற்றின் ரகசியங்களை  மனிதனால் இன்றுவரை அறிய முடியவில்லை. தென்னாப்பிரிக்காவின் லிம்போபோ மாநிலத்தில் உள்ள புண்டுஜி ஏரி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது, இதன் நீர் மிகவு...

Popular posts from this blog

முகத்தில் காணப்படும் அதிகபட்ச எண்ணெய்யை போக்க வேண்டுமா? இந்தவொரு பொருளை இப்படி பயன்படுத்தினாலே போதும்!

120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?