நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கழுத்து மட்டும் குண்டா இருக்கா? இதனை எளிய முறையில் குறைக்க இதோ சில வழிகள்......

 பொதுவாக வயதாகும் போது எடை அதிகரிக்க தொடங்கும் போது கழுத்து பகுதி மட்டும் கனமாக இருக்கும். இது முகத்தின் தோற்றத்தை வடிவத்தை மாற்றிவிடும். 


இளம் வயதினர்களை காட்டிலும் வயதானவர்களுக்கு கழுத்து கொழுப்பு அதிகமாக இருக்கும்.

இதனை ஒரு சில உணவுகள் மூலம் கூட குறைக்க முடியும்.  தற்போது அவை என்னெ்னன என்பதை பார்ப்போம்.

  • ஒரு டீஸ்பூன் க்ரீன் டீ உடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி விடவும். பிறகு வடிகட்டி தேன் சேர்த்து குடிக்கவும். அடிக்கடி இதை குடித்துவரலாம். நாள் ஒன்றுக்கு மூன்று கப் வரை குடிக்கலாம்.

  • தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் சுத்தமான தேங்காயெண்ணெய் எடுத்துகொள்ளுங்கள். தினமும் கழுத்தில் சிறிது தேங்காயெண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம். தினமும் ஒரு முறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் செய்து வந்தால் போதும்.

  • புதிதாக நறுக்கிய முலாம்பழங்கள் ஒரு கிண்ணம் நிறைய எடுத்துகொள்ளவும். தினமும் 2 அல்லது 3 கப் பழங்கள் எடுத்துகொள்ளலாம்.

  • வெதுவெதுப்பான நீரில் பாதி அளவு எலுமிச்சை சாறு பிழியவும். பிறகு நன்றாக கலந்து சிறிது தேன் சேர்க்கவும். வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு காலை வேளையில் குடித்து வந்தால் போதுமானது.

  • பாதி குடைமிளகாயை வெட்டி சாலட் அல்லது உணவில் சேர்த்து சமைக்கலாம். தினமும் சேர்க்க வேண்டும்.

  • ஆளிவிதைகளை பொடித்து ஒரு டம்ளர் வெந்நீரில் சேர்த்து குடிக்கவும். தேவையெனில் தேன் சேர்க்கலாம். ஆளி விதையை பொடித்து சால்ட் மீது தூவியும் சேர்க்கலாம். தினமும் எடுக்க வேண்டும். காலை வேளையில் எடுப்பது நல்லது.

  • நடுத்தர அளவில் ஒரு கேரட் எடுத்து இரண்டு கேரட்டாக மெல்லியதாக நறுக்கவும். அதை அப்படியே சாப்பிடலாம். அல்லது பிடித்த சாலட்டில் சேர்க்கவும். இதை சாறாக்கியும் குடிக்கலாம். என்றாலும் அப்படியே எடுத்துகொள்வதுதான் நல்லது. தினமும் கேரட் எடுத்துகொள்ளலாம்

  • சூரியகாந்தி விதைகள் தினசரி 1 டீஸ்பூன் அளவு எடுத்துகொள்ள வேண்டும். சாலட்டில் தூவி சாப்பிடலாம். அல்லது அப்படியேவும் எடுக்கலாம்.

  • கற்றாழை மடல்களிலிருந்து உள்ளிருக்கும் ஜெல் போன்ற பகுதியை சுத்தம் செய்து விடவும். நீருடன் சேர்ந்து அடித்து சிறிது உப்பு சேர்த்து குடிக்கலாம். தினம் 1 அல்லது 2 கப் வரை குடிக்கலாம்.   




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!