நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உங்கள் முகம் பரு இல்லாமல் பளிங்கு மாதிரி இருக்கணுமா? இதோ சூப்பர் டிப்ஸ்....

 பருக்கள் இன்றைய இளைய தலைமுறையினரின் பெரும் சவாலாக விளங்கி வருகின்றன.


தோலில் உள்ள அதிகப்படியான எண்ணெய் சுரப்பால், துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகள்,பாக்டீரியா, ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், இறந்த தோலின் செல்கள் உள்ளிட்ட காரணங்களினால், பருக்கள் ஏற்படுகின்றன.

பருக்கள், நமக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இதன் தீவிரம் அதிகமாகும் போது அதனை சரி செய்வது நல்லது. அந்தவகையில் பருக்களை போக்ககூடிய சில எளிய வழிமுறைகளை இங்கே பார்ப்போம். 


  • நல்லெண்ணெயில் 5 மிளகைத் தட்டிப் போட்டு ஊறவைத்து, அந்த எண்ணெயைப் பருக்களின் மேல் தடவி வாருங்கள். பருக்கள் மறையத் தொடங்கும்.

  • தேங்காய் எண்ணெயில் கரிசலாங்கண்ணி இலைச் சாறைச் சேர்த்து அடுப்பில் வைத்து சூடாக்கி, வெதுவெதுப்பான நிலையில் இருக்கும்போது உச்சந்தலையில் நன்கு தேய்த்து குளித்து வந்தால் தலையில் உள்ள பொடுகும் காணாமல் போகும், அதனால் ஏற்படும் பருக்களும் காணாமல் போகும்.

  • எலுமிச்சைசாறுடன் ஒரு சிட்டிகை அளவுக்கு உப்பு சேர்த்துக் கலந்து பருவின் மேல் தொட்டு மேலே வையுங்கள். உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவுங்கள். ஒரு வாரத்தில் பரு இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

  • ரோஸ்வாட்டரை ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு, இரவு தூங்கும்முன் முகத்தை நன்கு சுத்தம் செய்துவிட்டு, முகத்தில் ஸ்பிரே செய்து கொண்டு படுக்கலாம். இது சருமத்தைக் குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு, பருக்கள் வராமலும் பார்த்துக் கொள்ளும்.

  • ஊறவைத்த பாதாம் பருப்பு எடுத்து அதனுடன் பால் சேர்த்து பேஸ்ட் போல செய்து பருக்களின் மேல் தடவினாலும் பருக்கள் வேகமாக மறையும்.

  • ஐஸ் கட்டிகளுக்காக தண்ணீரை பிரிட்ஜில் வைக்கும்போது அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். அது இன்னும் கூடுதல் நன்மைகளைச் செய்யும்.

  • வெள்ளரி சாறு ஒரு ஸ்பூன் எடுத்து அதோடு அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் உலரவிட்டு பின் கழுவ பருக்கள் வேகமாக மறையும். முகமும் மாசுக்கள் குறைந்து பளிச்சென்று மாறிவிடும்.

  • மஞ்சள் சிறிது எடுத்து அதை தண்ணீர் அல்லது தேங்காய் எண்ணெயில் குழைத்து இரவு தூங்கும்போது பருக்களின் மேல் வைத்துக் கொண்டு படுக்க வேண்டும். காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள். ஓரிரு நாட்களில் பருக்கள் மறையும்.

  • உருளைக் கிழங்கு ஜூஸை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் உலரவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவுங்கள். முகம் பளிச்சென மாறும்.   




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!