நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகிலேயே மிகப்பெரிய டைனோசரின் புதைபடிமம் கண்டுபிடிப்பு!

2017ம் ஆண்டு வடமேற்கு ஸ்காட்லாந்தில் இருந்து தொலைதூரத்தில் உள்ள ஸ்கை என்ற தீவு பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர்.
ஜூராசிக் பார்க்’ படத்தில் வரும் ராட்சத உருவத்துடன் தோன்றும் டைனோசர்களைப் பார்த்து பிரமிக்காதவர்களே இருக்க முடியாது. படத்தில் வெறும் கிராபிக்ஸ் காட்சியாக இருந்தாலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நிலத்திலும், நீரிலும் மட்டுமல்லாது பறக்கூடிய டைனோசர் வகைகளும் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அவ்வப்போது கிடைத்து வருகின்றன.

ஸ்காட்லாந்தில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வில் 170 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் புதை படிமங்கள் 2017ம் ஆண்டு கண்டறியப்பட்டது. அதன் அளவு புதைபடிமத்தின் அளவுக்கு ஜூராசிக் காலத்தில் இருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், உலகிலேயே மிகப்பெரிய டைனோசர் புதைப்படிமம் இதுவாக தான் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

ஸ்காட்லாந்தின் தேசிய அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, 2017ம் ஆண்டு வடமேற்கு ஸ்காட்லாந்தில் இருந்து தொலைதூரத்தில் உள்ள ஸ்கை என்ற தீவு பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். எடின் பர்க் பல்கலைக்கழகத்தில் PhD மாணவியான அமெலியா பென்னி என்பவரால் அங்கிருந்த பாறைகளில் படிமம் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது ஸ்காட்லாந்தின் தேசிய அருட்காசியகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வரும் அந்த புதைப்படிமம் மீது விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜுராசிக் டெரோசர் எனப்படும் மிகப்பெரிய பறக்கும் ஊர்வனத்தின் புதைப்படிவம், ஸ்கை தீவில் உள்ள பாறையில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. ஜூராசிக் வாழ்ந்த அதே காலக்கட்டத்தில் டெரோசர்கள் வாழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் படி, ஸ்காட்லாந்தின் மத்திய பகுதியில் கண்டறியப்பட்டுள்ள எலும்புக்கூடு புதிய டைனோசர் இனம் வாழ்ந்ததை உறுதி செய்துள்ளது. ஜார்க் ஸ்கை-ஆன்-ஆச் எனப்படும் இறக்கைகள் கொண்ட ஊர்வன இனத்தைச் சேர்ந்தது என்றும், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவத்தின் இறக்கைகள் 2.5 மீட்டருக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் டெரோசர் எலும்புகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் அது முழுமையாக வளர்ச்சி அடையாத இளம் குட்டி என்பது தெரியவந்துள்ளது.

எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் செய்திக்குறிப்பின் படி, டெரோசரின் மண்டை ஓட்டின் CT ஸ்கேன்கள் பெரிய பார்வை மடல்களை வெளிப்படுத்தியதாகக் குறிப்பிடுகிறது, இது டெரோசருக்கு நல்ல கண்பார்வை இருந்திருக்கும் என்பதைக் குறிக்கிறது. ஆய்வின் முதன்மை ஆசிரியரும் பிஎச்.டி மாணவியுமான நடாலியா ஜாகில்ஸ்கா கூறுகையில், "பேலியோண்டாலஜி ஏன் வியக்க வைக்கும் என்பதற்கு டியர்க் ஒரு அருமையான உதாரணம். இத்தகைய தரத்தில் பாதுகாக்கப்படும் டெரோசர்கள் மிகவும் அரிதானவை மற்றும் பொதுவாக பிரேசில் மற்றும் சீனாவில் உள்ள பாறை அமைப்புகளில் மட்டுமே தென்படுபவை என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டெரோசர்கள் மெல்லிய எலும்பு சுவர்களைக் கொண்ட வெற்று எலும்புகளைக் கொண்டிருந்ததும், அவற்றின் எச்சங்கள் நம்பமுடியாத அளவிற்கு உடையக்கூடியதாகவும், மில்லியன் கணக்கான ஆண்டுகளாகப் பாதுகாக்கத் தகுதியற்றதாகவும் இருந்ததையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஸ்காட்லாந்து தொல்லியல் ஆராய்ச்சியாளர்களின் இந்த வியத்தகு கண்டுபிப்பு டைனோசர் பற்றி நமது பிரம்மாண்டத்தை மற்றொரு கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்