Posts

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடலில் ஏற்படும் சின்ன சின்ன நோய்களை போக்கும் பாட்டி வைத்தியம்! இதோ சில உங்களுக்காக

Image
  உடலில் உள்ள நோய்களை போக்கும் சில எளிய பாட்டி வைத்தியங்கள் சிலவற்றை தெரிந்து கொள்வோம். பித்த கோளாறினால் தலைச்சுற்று ஏற்படுவது உண்டு. சிறிது இஞ்சி. கொத்து மல்லிவிதை இரண்டையும் வைத்து மைய்ய அரைத்து, தேனில் கலந்து சாப்பிட்டால் தலைச்சுற்று நீங்கும். சீதாப்பழ விதைகளைப் பொடித்து கடலை மாவுடன் கலந்து, எலுமிச்சம் பழச்சாற்றில் குழைத்து தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து குளித்தால், தலைமுடி உதிராது. பொடுகு, ஈர்கள் அழியும். சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் பருமன் மற்றும் கொழுப்பைக் குறைக்கும், குண்டு உடம்பு வாகு கணிசமாக சீராகும். இரண்டு வெற்றிலையுடன் மூன்று ஏலக்காய் வைத்து மென்றுதின்று இரண்டு தம்ளர் சுடுநீர் பருகினால், தொடர் வாந்தி நிற்கும். கருஞ்சீரகத்தை காடிவிட்டு விழுதாக அரைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பூசி வர, கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்பட்டு, விரைவில் குணமாகும். அரசு இலைகளின் சாறுடன் மஞ்சள்தூள் கலந்து காலிலுள்ள வெடிப்புகளின் தடவி வர வெடிப்புப் புண்கள் ஆறும். துளசி இலைச்சாறுடன் தேன் சேர்த்து சாப்பிட்டுவர, சளித்தொல்லை குணமாகும். உடல் சோர்வு நீங்கும். சின்ன வெங்காயத...

உடல் எடையை குறைக்க அன்றாடம் இப்படி தான் தூங்க வேண்டுமாம்...!

Image
 உடல் எடையை குறைக்க ஆண் பெண் இருபாலரும் பலவிதமான முயற்சிகளை கையாண்டு இருப்பீர்கள்.  எடைகுறைப்பிற்கு முறையான டயட் மற்றும் உடற்பயிற்சி மட்டும் போதுமா என்றால் போதாது என்பது தான், எல்லாவற்றையும் விட முக்கியமானது முறையான தூக்கம் தான். ஒருவரின் உடல் எடை குறைப்பிற்கு உதவுவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். நமது மூளைக்கு ஊட்டச்சத்து அழிப்பது முறையான தூக்கம் தான், உடல் எடையை குறைக்க உணவு கட்டுப்படும், உடற்பயிற்சியும் எவ்வவளவு முக்கியமோ அதே அளவு முறையான தூக்கமும் முக்கியம் தான். முறையான தூக்கம் அவசியம் மேலும், தூக்கத்தை தவிர்ப்பது உடல் எடையை அதிகரிக்கவும் செய்யும். இதனால் சரியாக தூங்காமல் இருந்தால் இந்த ஹார்மோன், மன அழுத்தத்திற்கான ஹார்மோனையும், பசி உணர்வையும் ஏற்படுத்துகிறது. அடுத்ததாக, இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கிறது, இது இன்சுலின் அளவு மற்றும் உடலில் கொழுப்பு சேர்வதை அதிகரிக்கிறது. ஒருவர் சரியாக தூங்கவில்லை எனில் அவருக்கு பசியுணர்வு அதிகமாக இருக்கும், இதன் காரணத்தால் அவர் அதிகமான கலோரிகளை உட்கொள்ளுவார்கள். அந்த வகையில், ஒரு நபர் ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணிநேரம் தொட...

குண்டை தான் வாங்கி ராணுவ வீரரின் உயிரை காப்பாற்றிய ஸ்மார்ட்போன்... முதல் முறை பதிவான அரிய சம்பவம்!

Image
 ராணுவ வீரர் ஒருவரின் உயிரை ஸ்மார்ட்போன் காப்பாற்றிய சம்பவம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. ராணுவ வீரரை நோக்கி வந்த தோட்டா ஒன்று அவரது சட்டைப் பையில் வைத்திருந்த தொலைபேசியை துளைத்துள்ளது. சட்டைப் பையில் ஸ்மார்ட்போன் இருந்ததால் அந்த குண்டு அதில் பட்டு அந்த வீரர் உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது. வைரலாகும் வீடியோவில் உக்ரைன் இராணுவ வீரர் தனது சக சிப்பாயிடம் தொலைபேசியைக் காட்டி, தொலைபேசியால் தனது உயிர் காப்பாற்றப்பட்டதாகக் கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்மார்ட்போனில் ஓட்டை போடப்பட்டு அதில் தோட்டா சிக்கியிருப்பது வீடியோவில் தெளிவாக தெரிகின்றது. ALSO READ :  இவங்க தான் உலகிலேயே மிக உயரமான குடும்பம்.. கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பேமிலி!

இவங்க தான் உலகிலேயே மிக உயரமான குடும்பம்.. கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பேமிலி!

Image
நெடு, நெடுவென வளர்ந்த அமெரிக்க குடும்பம் ஒன்று, உலகிலேயே மிகவும் உயரமான குடும்பம் என கின்னஸ் சாதனை படைத்துள்ளது. உயரமாக இருப்பது என்பது சாதாரணமான விஷயம் தான், ஆனால் உலக சாதனையை உருவாக்கும் அளவுக்கு உயரமாக இருப்பது என்பதும், அதுவும் ஒட்டுமொத்த குடும்பமே ஒன்றிணைந்து இப்படியொரு சாதனையை படைப்பது என்பதும் மிகவும் வித்தியாசமான ஒன்றாக தான் இருக்கும். அப்படிப்பட்ட உலக சாதனையைத் தான் அமெரிக்காவை சேர்ந்த ஒரு பேமிலி செய்து அசத்தியுள்ளது. ட்ராப் குடும்பம், அமெரிக்காவின் மின்னசோட்டாவில் உள்ள எஸ்கோ பகுதியில் வசித்து வருகிறது. இந்த குடும்பத்தில் அப்பா ஸ்காட், அம்மா கிறிஸ்ஸி, மகள்கள் சவன்னா மற்றும் மோலி, மகன் ஆடம் என ஐந்து பேர் வசித்து வருகின்றனர். இந்த குடும்பம் தான் பலராலும் நினைத்து கூட பார்க்க முடியாத சாதனையை படைத்துள்ளது. ஏனென்றால் இவர்கள் குடும்பத்தின் ஓவர் ஆல் உயரம் ஒரு சராசரி டென்னிஸ் மைதானத்தின் நீளத்திற்கு சமமாகும். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ட்ராப்ஸ் குடும்பத்தினர் சராசரியாக 203.29 சென்டி மீட்டர், அதாவது 6 அடி 8.03 அங்குல உயரத்துடன் ட்ராப் குடும்பம் உலகிலேயே மிகவும் உ...

இந்த கிளியின் கண்ணை 15 வினாடிகள் பாருங்கள், அற்புதமான மாற்றம் தெரியும்

Image
Black and White Parrot Optical Illusion | இந்த கிளியின் கண்ணை 15 வினாடிகள் உற்றுப் பார்த்த பிறகு, படம் கருப்பு மற்றும் வெள்ளையாக மாறும். கண்கள் சரியாக உள்ளதா? இந்த புகைப்படத்தில் உள்ள ஒளியியல் மாயையைப் பார்க்கும்போது மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். யுனைடெட் கிங்டமில் உள்ள லென்ஸ்டோர் சமீபத்தில் இந்த ஆப்டிகல் மாயையை உருவாக்கி கண்ணைக் குழப்பியது! நிறம் இல்லையா? எல்லோரும் இந்த வலையில் விழுவார்கள். 15 வினாடிகள் கிளியின் கண்களை உற்றுப் பார்த்த பிறகு, படம் கருப்பு மற்றும் வெள்ளை நிறமாக மாறும். ஆனால் நம் கண்களுக்கு அது வேறு விதமாக இருக்கும். கண்ணின் இந்த மாயை என்பது படத்தின் நீலப் பகுதிகள் இளஞ்சிவப்பு நிறமாகவும், இளஞ்சிவப்பு பகுதிகள் நீலமாகவும் இருப்பதைப் போன்ற ஒரு நுட்பம். ஏனென்றால், ஆப்டிகல் மாயை என்பது எதிர்மறைப் படத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும், இது நீங்கள் பார்க்கும் வண்ணம் அசலில் இருந்து தலைகீழாக அல்லது வேறுவிதமாக மாறுகிறது. தற்போதைய இணையத்தில் ஆப்டிகல் (Optical Illusion Image) படங்கள் வைரலாக பரவி வருகிறது. நம் கண்களுக்கு இருக்கும் இரண்டு வட்டங்கள் சுழல்...

இந்த படத்தில் நீங்கள் காணும் முதல் விஷயம் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை குறிக்கும்!

Image
இந்த படத்தை வைத்து உங்களின் ஆளுமைப் பண்பை அறிந்து கொள்ளவும் முடியும். பொதுவாக நமது மூளையானது ஒரே நேரத்தில் பல வித விஷயங்களை நினைத்து கொண்டே இருக்கும். எப்படி இந்த அளவிற்கு மனித மூளை வேலை செய்கிறது என்பதை பற்றி, பல ஆய்வுகள் இன்றளவும் நடத்தப்பட்டு வருகிறது. மனித மூளையின் செயல்பாடுகளை வைத்து செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களை உருவாக்கினாலும், அவை மனித மூளை அளவிற்கு ஈடாகாது. ஏனெனில் நமது மூளையானது நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பல அதிசயங்களை உள்ளடக்கி இருக்கிறது. நமது மூளை எந்த அளவிற்கு திறனாக வேலை செய்கிறதோ அதை பொறுத்து தான் நாம் எந்த அளவிற்கு புத்திசாலியாக இருக்கிறோம் என்பதை அறிய முடியும். அந்த வகையில், இதை உணர ஏராளமான பரிசோதனைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் படத்தை காட்டி அதில் முதல் தெரியும் ஒன்றை வைத்து நமது மூளையின் செயல்திறனை அறிந்து கொள்வது. எனவே இந்த பதிவில் காட்டப்படும் படத்தில் உங்களுக்கு முதன்முதலில் தோன்ற கூடிய காட்சி எது என்பதை பற்றியும், அது அதை உணர்த்துகிறது என்பதை பற்றியும் இனி விரிவாக தெரிந்து கொள்வோம். ஒளியியல் மாயை : ஒளியியல் மாயை என்பதை ஆங்கிலத்...

குறிப்பிட்ட ஒரு பாடல் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறதா..? இதுதான் காரணம்..!

Image
நாம் ஒவ்வொரு முறையும் ஒரு இசையைக் கேட்கும்போது, மூளையின் ஆடிட்டரி கார்டெக்ஸ் (auditory cortex) எனப்படும் ஒரு பகுதி தூண்டப்படுகிறது. நம்மில் பலரும், பலமுறை இந்த அழகான அனுபவத்தில் சிக்கி இருப்போம். அதாவது அதிகாலையில் எங்கிருந்தோ நம் காதுகளுக்கு எட்டிய ஒரு பாடலை நாம் அடிக்கடி முனுமுனுத்திருப்போம். அந்த பாடல் அல்லது மெல்லிசையானது நாள் முழுவதும் நம் தலையில் ஓடிக்கொண்டே இருந்திருக்கும். நீங்கள் அலுவலகத்தில் அமர்ந்து பரபரப்பாக வேலை செய்து கொண்டு இருந்தாலும் சரி, அல்லது ஒரு பிஸியான நாளை வெற்றிகரமாக கடந்து வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தாலும் சரி, உங்களது மூளை மீண்டும் மீண்டும் அதே பாடலுக்கு நம்மை அழைத்துச் சென்று இருக்கும். இது ஏன் நடக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சரி வாருங்கள்! இந்த கேள்விக்கான அறிவியல் விளக்கத்தை பற்றி பார்ப்போம்! ஒரே பாடலை நாம் ஏன் மீண்டும் மீண்டும் முனகுகிறோம் என்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் / நிபுணர்கள் கூறும் காரணம் - காதுபுழுக்கள்! காதுப்புழுக்கள் என்பது ஒருவிதமான புழுவோ அல்லது உயிரினமோ அல்ல, அவைகள் ஒட்டுண்ணிகள் ஆகும். உங்கள் தலையில் த...

தடுமாற வைக்கும் இணையத்தால் தடம் மாறும் இளைய தலைமுறை

Image
தங்களது மகனோ அல்லது மகளோ செல்போனைக் கையாளும் போது எந்தவிதமான பக்கங்களைப் பார்க்கிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். தடுமாற வைக்கும் இணையத்தால் தடம் மாறும் இளைய தலைமுறையை மீட்டெடுக்கும் முயற்சியை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு நாட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் இளைஞர்களின் கையில் தான் இருக்கிறது என்பார்கள். ஆனால் இன்றைய இளைஞர்களின் கையில் இருப்பது செல்போனும், அதனுடன் இணைந்திருக்கும் இணையமும் என்றாகி விட்டது. இந்தநிலையில் ஆக்க சக்தியாக உருவாக்கப்பட்ட இணையம் பல இளைஞர்களுக்கு அழிவு சக்தியாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- ‘கொரோனா தொற்றின் பக்க விளைவுகளை பலரும் அனுபவித்து வருகின்றனர். அத்தகைய ஒரு விளைவாக கல்வியுடன் செல்போனும் இணைந்து விட்டது என்று சொல்லலாம். செல்போனைப் பார்க்காதே கெட்டுப் போவாய் என்று எச்சரித்த பல பெற்றோர் வேறு வழியில்லாமல் குழந்தைகளின் கையில் செல்போனைக் கொடுக்க வேண்டிய நிலையை கொரோனா உருவாக்கி விட்டது. ஆன்லைன் வகுப்புகளுக்கு முற்றுப்...

வீட்டிலேயே செய்யலாம் காஞ்சிபுரம் இட்லி

Image
காஞ்சிபுரம் இட்லியை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இதில் மிளகு, சீரகம் சேர்க்கப்படுவதால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: இட்லி (புழுங்கல்) அரிசி - 1 கப் உளுத்தம் பருப்பு - அரை கப் மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் சுக்கு பொடி - ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை தேங்காய் (பொடி பல்லு பல்லாக நறுக்கியது) - அரை கப் முந்திரி பருப்பு (சிறு சிறு துண்டுகளாக ஒடித்தது) - 1 டேபிள்ஸ்பூன் நெய் - 1 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணை - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை உப்பு - தேவைக்கேற்றவாறு செய்முறை: அரிசியையும், உளுத்தம் பருப்பையும் தனித்தனியாக தண்ணீரில் 5 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் போட்டு இட்லிக்கு அரைப்பது போல் மிருதுவாக அரைத்து, உப்பு போட்டு கலந்து, இரவு முழுவதும் புளிக்க விடவும். மறுநாள், ஒரு சிறு வாணலியில் நெய்யை விட்டு அதில் முந்திரி பருப்பு, சுக்குப் பொடி (சுக்குப்பொடி இல்லையென்றால், சிறு இஞ்சித் துண்டைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும்) இரண்டையும் போட்டு, முந்திரி சிவக்கும் வரை வறுத்து மாவில் கொட்டவும்.  ...

அசௌகரியத்தை ஏற்படுத்தும் அக்குள் கருமையை நீக்கும் எளிய வீட்டு வைத்தியம்...

Image
இன்றைய நவீன உலகில், மாடர்ன் உடை அணிந்து கொண்டு செல்லும் போது பலரும், தங்கள் அக்குள் கருமை, அக்குள் துர்நாற்றம் போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். இன்றைய நவீன உலகில், மாடர்ன் உடை அணிந்து கொண்டு செல்லும் போது பலரும், தங்கள் அக்குள் கருமை, அக்குள் துர்நாற்றம் போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். அக்குள்களில் படிந்திருக்கும் கருமையை நீக்குவது அவசியம். அக்குளை நன்கு சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இல்லை என்றால் மிகவும் கருப்பாக மாறிவிடும். கருமையான தோல் நிறம் உள்ளவர்கள், அவர்களின் தோலில் மெலனின் அல்லது மெலனோசைட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அக்குள் கருமையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.  கருமையான தோல் நிறம் உள்ளவர்கள், அவர்களின் தோலில்’ மெலனின் அல்லது மெலனோசைட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அக்குள் கருமையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என தோல் மருத்துவர் சில வழிமுறைகளை கூறுகின்றனர். சில டியோடரண்டுகள் சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம், மேலும் சருமம் கருமையாவதற்கும் வழிவகுக்கும். தோல் மருத்துவரின் கூற்றுப்படி, அக்குள் பிக்மென்டேஷனை தடுக்க, பின்வருவனவற்ற...

மெஹந்தி அலர்ஜி வந்தால் என்ன செய்ய வேண்டும்?

Image
மெஹந்தி கோன் வாங்கும் போது அதன் தயாரிப்புத் தேதியைப் பார்த்து வாங்கவும். ரெடிமேட் கோனை குறைந்தது 3 மாதங்கள் மட்டுமே வைத்திருந்து உபயோகப்படுத்த முடியும். மருதாணியை தேர்ந்தெடுப்பது முதல் மருதாணி வைப்பதால் உண்டாகிற நன்மைகள் வரை பல விஷயங்களையும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மெஹந்தி டிசைன்கள் பற்றி, ரெடிமேட் மெஹந்தி கோன் உபயோகிக்கிற போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி, மெஹந்தி அலர்ஜி வந்தால் செய்ய வேண்டிய முதலுதவி பற்றி... இன்னும் ஏராளமான மெஹந்தி தகவல்களைப் பார்க்கலாம். விதம் விதமான மெஹந்தி டிசைன்கள் குஜராத்தி மெஹந்தி டிசைன்:   நெருக்கமான கோடுகள், பூக்கள், மயில், மணப்பெண், முரசு போன்ற டிசைன்களை வரைவது. அரபிக் மெஹந்தி டிசைன்: பெரிய பூக்கள், இலை, கொடிகளை வரைவது. பாகிஸ்தானி மெஹந்தி டிசைன்: இது இந்தியன், அரபிக் டிசைன்கள் இரண்டையும் கலந்து வரைவது. இந்தோ அரபிக் மெஹந்தி டிசைன்: பட்டையான கோடுகளால் அவுட் லைன் வரைந்து, இந்தியன் டிசைன்களில் உள்ளே உள்ள இடங்களை நிரப்புவது. கிளிட்டர் மெஹந்தி: ஆஸ்துமா, வீஸிங் இருப்பவர்களுக்கு மெஹந்தி குளிர்ச்சி என்பதால், அவர்களுக்கு...

செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் காக்கும் துவையல்

Image
இரத்த அழுத்த பிரச்சனை தீர அடிக்கடி உணவில் துவரம் பருப்பை சேர்த்து கொள்வது அவசியம். துவரம் பருப்பில் உள்ள வைட்டமின் சி சத்தானது, உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. தேவையான பொருட்கள் : துவரம் பருப்பு - 50 கிராம் கடலை பருப்பு - 50 கிராம் தேங்காய் துண்டுகள் - 3 பத்தை காய்ந்த மிளகாய் - 4 பெருங்காயம் - 1 சிறிய துண்டு எண்ணெய் - அரை தேக்கரண்டி உப்பு - சுவைக்கு செய்முறை : கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்த கடலை பருப்பு, துவரம் பருப்பு, பெருங்காயம், தேங்காய் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும். அடுத்து காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து கொள்ளவும். வறுத்த பொருட்களை ஆறவைத்து கொஞ்சம் தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக அரைத்தால் பருப்பு துவையல் தயார்!!! இது கார குழம்பு வகைகளுக்கு ஏற்றதாக இருக்கும்...

உடல் எடைக் குறைப்பில் நாம் கவனிக்கத் தவறுபவை..

Image
எடைக் குறைப்புக்கான பயணத்தில் நாம் கவனிக்கத் தவறும் சில விஷயங்கள் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து முறையாக செயல்படும்போது வெற்றி எளிதில் சாத்தியமாகும். உடல் எடைக் குறைப்பு என்றவுடன் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது உடற்பயிற்சியும், உணவுக் கட்டுப்பாடும் தான். இவற்றைத் தொடர்ந்து கடைப்பிடித்தும் சிறந்த பலனைப் பெறாதபோது, சோர்ந்துபோய் முயற்சியைக் கைவிடுகிறோம். எடைக் குறைப்புக்கான பயணத்தில் நாம் கவனிக்கத் தவறும் சில விஷயங்கள் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து முறையாக செயல்படும்போது வெற்றி எளிதில் சாத்தியமாகும். அதைப்பற்றி இங்கே தெரிந்துகொள்வோம். உடல்வாகு ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். மெலிந்த உடல்வாகு, கட்டுக்கோப்பான உடல்வாகு, குண்டான உடல்வாகு என மூன்று வகையான உடல்வாகு இருக்கிறது. இதில் நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவர் என்பதை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் எடைக் குறைப்பு முயற்சியில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும். காரணம் உடல்நலப் பிரச்சினைகள், வாழ்வியல் மாற்றங்கள், ஹார்மோன் குறைபாடுகள், மரபணு, உணவு முறை, குறைந்த உடல் உழைப்பு மற்றும் மனநலப் பிரச்சினை போன்ற பல காரணங்களால் உடல் ...

முகப்பருக்களை இயற்கை முறையில் குணப்படுத்துவது எப்படி?

Image
முகப்பரு விஷயத்தில் சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை எடுக்காவிடில் முகத்தில் கரும்புள்ளிகள், ஆழமாக தழும்புகள் ஏற்பட்டு விகாரமான தோற்றத்தை ஏற்படுத்தும். பெண்களுக்கு மிகவும் எரிச்சலூட்டும் ஒரு விஷயம் முகப்பருக்கள் ஆகும். உங்களுக்கு அதில் உடன்பாடில்லை என்றால், தங்களுக்கு பிடித்த சாக்லேட் சாப்பிடுவதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிப்பவரையும், சாக்லேட் சுவைத்தப்பின் பயந்தபடியே முகத்தை பார்ப்பவரையும் கேட்டுப் பாருங்கள்! அவர்கள் பல வகையான உணவுகளை உண்ணவே அச்சப்படுவார்கள். அவை முகத்தை அழகின்றி ஆக்குவதுடன் வலியையும் தருகின்றன. பருக்களை விரட்ட அளிக்கும் டிப்ஸ்கள் இதோ: 1. ரோஸ் வாட்டர் மற்றும் ஆஸ்ட்ரிஞ்சன்ட் எண்ணெய் பசையுள்ள சருமம் உடையவர்களுக்கு அதிகம் பருக்கள் உண்டாக வாய்ப்பிருக்கிறது. அதனால் சருமத்தில் எண்ணெய் பசை ஏற்படுவதை தவிர்ப்பது அவசியம். தினசரி இருமுறையாவது முகத்தை நல்ல தரமான பேஸ் வாஷ் (Face Wash) கொண்டு கழுவ வேண்டும். முகத்திற்கு ரோஸ் வாட்டரை கீழே கூறியபடி உபயோகப்படுத்தவும்: நல்ல தரமான ரோஸ் வாட்டர் மற்றும் ஆஸ்ட்ரிஞ்சன்ட் எடுத்துக் கொள்ளவும். முகத்தில் மெதுவாக தடவவும். தினசர...

பிளாக் ஹெட்ஸ் இயற்கை முறையில் நீக்கலாம்...

Image
மூக்கை சுற்றிலும் வெள்ளை அல்லது கருமை நிற சிறிய முட்கள் பிரச்சினை உள்ளவர்கள் அதனை நீக்குவதற்கு, வீரியமிக்க ரசாயனப் பொருட்கள் கலந்த ஸ்க்ரப், கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். சிலருக்கு மூக்கை சுற்றிலும் வெள்ளை அல்லது கருமை நிறத்தில் சிறிய முள் போல ஆங்காங்கே மேலெழும்பி இருக்கும். இது முக அழகை கெடுப்பது மட்டுமின்றி, சில சமயங்களில் அரிப்பு, வீக்கம் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும். இதற்கான தீர்வை இங்கே காணலாம். எதனால் உண்டாகிறது? மூக்கை சுற்றியுள்ள சருமத் துளைகளில் தூசி மற்றும் அழுக்குகள், இறந்த செல்கள் படிவதாலும், தலையில் உள்ள பொடுகு படிவதாலும் வெண்முள் மற்றும் கருமுள் தோன்றுகின்றன. எவ்வாறு நீக்கலாம்? இந்த பிரச்சினை உள்ளவர்கள் அதனை நீக்குவதற்கு, வீரியமிக்க ரசாயனப் பொருட்கள் கலந்த ஸ்க்ரப், கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். இவற்றின் மூலம் வெண்முள் மற்றும் கருமுள் தற்காலிகமாக நீங்கும். சில நாட்களில் மீண்டும் அதே பிரச்சினை தோன்ற ஆரம்பிக்கும். இதை இயற்கையாகக் கிடைக்கும் சில எளிய பொருட்களைக் கொண்டு எவ்வாறு நீக்கலாம் என்பதை இங்கு காண்போம். தேன்: மூக்கை...

அலுவலகம் செல்லும் பெண்களுக்கான ஆடை - அலங்காரங்கள்

Image
அணியும் ஆடை, அலங்கார பொருட்களில் அழுக்கு, பிசிறு, பழமை தெரியாமல் இருப்பது நல்லது. இவையெல்லாம் சரியாக இருந்தால் வேலைகளில் முழுமையாக கவனம் செலுத்தலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் ஆடை தேர்வு விஷயத்தில் அதிக ஆர்வம் செலுத்துவார்கள். நேர்த்தியான விதத்தில் ஆடை அணிந்து செல்வது தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கும். சக ஊழியர்கள், அதிகாரிகள் மத்தியில் நல்ல மரியாதையை பெற்றுத் தரும். அலுவலகத்துக்கு எந்த மாதிரியான ஆடை அணிவது, அலங்காரம் செய்துகொள்வது என்று பார்க்கலாமா? * வீடு, வெளியிடம், ஷாப்பிங் மால் போன்றவற்றுடன் அலுவலகத்தை ஒப்பிட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள். ஆடை என்பது நேர்த்தியாய் தைக்கப்பட்டதாய் இருக்கட்டும். கசகசவென்ற டிசைன், ‘பளிச்’ நிறம் வேண்டாம். ஆடைகள் நளினமான டிசைனோடு அழகாக காட்சியளிக்கலாம். ஆனால் மற்றவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு பிரதிபலிக்கக்கூடாது. எம்பிராய்டரி போன்ற ஜிகினா வேலைப்பாடுகள் அதிகம் இல்லாமல் இருப்பதே நல்லது. * உள்ளாடை விஷயத்திலும் உரிய கவனம் செலுத்துவது அவசியம். வெளியே ‘பளிச்’சென்று தெரியும் நிறத்திலான, அலங்காரமான பட்டைகள் கொண்ட பிரா வகைகளை தவிர்க்க வேண்டு...

கோடை வெயிலில் இருந்து சருமத்தை காக்கும் இயற்கை மாய்ஸ்சுரைசர்

Image
கோடைகாலத்தில் சூரியனின் புற ஊதாக் கதிர்களால் பெருமளவு பாதிக்கப்படும் சருமத்தை காக்கும், பக்க விளைவு ஏற்படுத்தாத ‘ மாய்ஸ்சுரைசர் ’ தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம். கோடைகாலத்தில் சூரியனில் இருந்து அதிகப்படியாக வரும் புற ஊதாக் கதிர்களால் பெருமளவு பாதிக்கப்படுவது சருமம்தான். எனவே சருமத்தைக் குளிர்ச்சியாக வைப்பது முக்கியமானது. இதற்கு மாய்ஸ்சுரைசர் உதவும். ரசாயனங்கள் சேர்க்காமல் இயற்கையான பொருட்களைக் கொண்டு எண்ணெய் சருமம், வறண்ட சருமம் என அனைத்து சருமத்திற்கும் ஏற்ற வகையில், பக்க விளைவு ஏற்படுத்தாத ‘ மாய்ஸ்சுரைசர் ’ தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம். கிரீன் டீ மாய்ஸ்சுரைசர்: தேவையான பொருட்கள் கிரீன் டீ - 3 தேக்கரண்டி பாதாம் எண்ணெய் - 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் - 3 தேக்கரண்டி தேன் மெழுகு - 2 தேக்கரண்டி கிரீன் டீ எசென்ஷியல் எண்ணெய் - 1 தேக்கரண்டி செய்முறை: ஒரு சிறிய பாத்திரத்தில் பாதாம் எண்ணெய், தேன் மெழுகு இரண்டையும் கலந்து, கொதிக்கும் நீரின் மேல் வைக்கவும். தேன் மெழுகு உருகியதும் சிறிது குளிரவைத்து, கிரீன் டீ, கற்றாழை ஜெல், கிரீன் டீ எசென்ஷியல் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்...

வாயு தொல்லையால் அவதியா? அப்ப இந்த கஞ்சியை குடிங்க...

Image
வயிற்று வலி, வாயு தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த பூண்டு கஞ்சியை வாரம் இருமுறை குடித்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் பச்சரிசி - அரை கப் பூண்டு - 75 கிராம் மிளகு - அரை டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் வெந்தயம் - அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் - சிறிதளவு தண்ணீர் - தேவையான அளவு உப்பு - தேவைக்கு காய்ச்சிய பால் - 1 கப் செய்முறை அரிசியை நன்றாக கழுவி சிறிது நேரம் ஊறவைத்து நீரை வடித்து கொள்ளவும். பூண்டை தோல் உரித்து வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகு, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை போட்டு தாளித்த பின்னர் பூண்டை சேர்த்து வதக்க வேண்டும். பூண்டு நன்றாக வதங்கியதும் உப்பு மற்றும் அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6 விசில் போட்டு இறக்க வேண்டும். குக்கர் விசில் போனதும் மூடியை திறந்து சாதத்தை நன்றாக மசித்து விட்டு பால் கலந்து பரிமாறவும். சத்தான பூண்டு கஞ்சி ரெடி.

தியானத்தை எளிதாக பழக கடைபிடிக்க வேண்டிய 10 வழிமுறைகள்

Image
தியானப்பாதையில் செல்லும்போது அவர்களை வழிநடத்தவும் , கஷ்டம் வரும்போது உபதேசித்து தைரியம் கூறுவதற்கும் நிச்சயம் ஒரு குரு தேவை. தியானத்தை விரும்பும் யாவரும் கீழ்க்காணும் முறைகளை பின்பற்றி வந்தால் மிக எளிதாக பழக முடியும்.    1. நாம் வசிக்கின்ற வீட்டில் தியானம் செய்வதற்கு நல்ல வசதியான இடத்தை தேர்ந்தெடுங்கள். 2. தியானத்திற்கு பத்து நிமிடத்திற்கு முன் பேச்சை குறைத்து கொள்ளுங்கள். தியானத்தின் இடையில் தடைகள் ஏற்பட்டால் பிறர் மீது கோபம் கொள்ளாதீர்கள். தியானத்தை எப்பொழுதும் மகிழ்ச்சியாக தொடங்குங்கள். அதே போல் மகிழ்ச்சியாக முடியுங்கள். தியானம் பழக ஆரம்பித்து விட்டீர்கள் என்றால் தடங்கல்கள் நிறைய வந்து உங்களை ஈடுபடவிடாமல் தடுக்கும். 3. ஆரோக்கியமான, எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை அளவோடு மற்றும் நேரத்தோடு எடுத்துக்கொள்ளுங்கள். உடற்பயிற்சியும் அவசியம் தேவை. 4. தியானப்பாதையில் செல்லும்போது அவர்களை வழிநடத்தவும் , கஷ்டம் வரும்போது உபதேசித்து தைரியம் கூறுவதற்கும் நிச்சயம் ஒரு குரு தேவை . தியானப் பாதையில் வெற்றி பெற்ற குருவாக ஒருவர் இருக்கவேண்டும் . 5. மறதி , சோம்பல் , அதீத தூக்கம் ...

வெளிநாட்டில் மலிவு விலையில் வீடு வாங்குவதற்கு உகந்த நகரங்கள் எவை..?

Image
  வீடு வாங்க அமெரிக்கா மிகவும் மலிவான நாடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வீடு வாங்க ஆசையா, உலகில் எந்தெந்த நகரங்களில் விலை மலிவு மற்றும் அதிகம் என்று பார்க்கலாம்.  கொரோனா பெருந்தொற்று காலத்தின் போது வீட்டுமனைகள் மற்றும் புதிய வீட்டின் விலைகள் பன்மடங்கு உயர்ந்துள்ளன. ரியல் எஸ்டேட் சந்தைகள் ஏற்றம் கண்டன.  இந்த நிலையில், சர்வதேச வீட்டுச் சந்தைகள் நிலவரம் பற்றி 92 நாடுகளில் டெமோகிராபியா சர்வதேச வீட்டுவசதி ஆய்வு நடத்தப்பட்டது.  ஒரு நகரத்தில் அளிக்கப்படும் ஊதியம் மற்றும் அங்கு விற்கப்படும் விலை ஆகியவற்றை ஒப்பிட்டு, வீட்டுவசதிக்கு ஏற்ற மலிவான நகரங்கள் மற்றும் விலையுயர்ந்த நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, ஹாங்காங், அயர்லாந்து, நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள சந்தைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. 2019 உடன் ஒப்பிடும்போது 2021 இல் வாங்கவே முடியாத அளவுக்கு அதிக விலை நிலவும் வீட்டுச் சந்தைகளின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளன என்று அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆய்வில், வீடு வாங்க அமெரிக்கா மிகவும்...

Popular posts from this blog

முகத்தில் காணப்படும் அதிகபட்ச எண்ணெய்யை போக்க வேண்டுமா? இந்தவொரு பொருளை இப்படி பயன்படுத்தினாலே போதும்!

120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?