நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடலில் ஏற்படும் சின்ன சின்ன நோய்களை போக்கும் பாட்டி வைத்தியம்! இதோ சில உங்களுக்காக

 உடலில் உள்ள நோய்களை போக்கும் சில எளிய பாட்டி வைத்தியங்கள் சிலவற்றை தெரிந்து கொள்வோம்.



  • பித்த கோளாறினால் தலைச்சுற்று ஏற்படுவது உண்டு. சிறிது இஞ்சி. கொத்து மல்லிவிதை இரண்டையும் வைத்து மைய்ய அரைத்து, தேனில் கலந்து சாப்பிட்டால் தலைச்சுற்று நீங்கும்.

  • சீதாப்பழ விதைகளைப் பொடித்து கடலை மாவுடன் கலந்து, எலுமிச்சம் பழச்சாற்றில் குழைத்து தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து குளித்தால், தலைமுடி உதிராது. பொடுகு, ஈர்கள் அழியும்.

  • சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் பருமன் மற்றும் கொழுப்பைக் குறைக்கும், குண்டு உடம்பு வாகு கணிசமாக சீராகும்.

  • இரண்டு வெற்றிலையுடன் மூன்று ஏலக்காய் வைத்து மென்றுதின்று இரண்டு தம்ளர் சுடுநீர் பருகினால், தொடர் வாந்தி நிற்கும்.

  • கருஞ்சீரகத்தை காடிவிட்டு விழுதாக அரைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பூசி வர, கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்பட்டு, விரைவில் குணமாகும்.

  • அரசு இலைகளின் சாறுடன் மஞ்சள்தூள் கலந்து காலிலுள்ள வெடிப்புகளின் தடவி வர வெடிப்புப் புண்கள் ஆறும்.

  • துளசி இலைச்சாறுடன் தேன் சேர்த்து சாப்பிட்டுவர, சளித்தொல்லை குணமாகும். உடல் சோர்வு நீங்கும்.

  • சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி மோரிலிட்டு சிறிது உப்பும் சேர்த்து சாப்பிட்டால், உஷ்ணம் தணிந்து உடல் குளிர்ச்சி அடையும்.

  • தூக்கமில்லாது அவதிப்படுவோர், இரவு ஒரு செவ்வாழைப்பழம் தின்று, ஒரு டம்ளர் பசும்பால் குடித்தால், நிம்மிதியான தூக்கம் வரும்.

  • சிறு குறிஞ்சான் இலைச்சாறை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு நோய் குறையும்.

  • ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால், சிறிது கடுகுடன் பசும்பால் தெளித்து விழுதாக அரைத்துப் பற்றிட, ஒற்றைத் தலைவலி குணமாகும்.

  • சிறிது சீரகத்தை மென்று தின்று, சூடான நீர் குடித்தால், வாயுத் தொல்லை நீங்கும்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்