இந்த படத்தை வைத்து உங்களின் ஆளுமைப் பண்பை அறிந்து கொள்ளவும் முடியும்.
பொதுவாக நமது மூளையானது ஒரே நேரத்தில் பல வித விஷயங்களை நினைத்து கொண்டே இருக்கும். எப்படி இந்த அளவிற்கு மனித மூளை வேலை செய்கிறது என்பதை பற்றி, பல ஆய்வுகள் இன்றளவும் நடத்தப்பட்டு வருகிறது. மனித மூளையின் செயல்பாடுகளை வைத்து செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களை உருவாக்கினாலும், அவை மனித மூளை அளவிற்கு ஈடாகாது. ஏனெனில் நமது மூளையானது நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பல அதிசயங்களை உள்ளடக்கி இருக்கிறது.
நமது மூளை எந்த அளவிற்கு திறனாக வேலை செய்கிறதோ அதை பொறுத்து தான் நாம் எந்த அளவிற்கு புத்திசாலியாக இருக்கிறோம் என்பதை அறிய முடியும். அந்த வகையில், இதை உணர ஏராளமான பரிசோதனைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் படத்தை காட்டி அதில் முதல் தெரியும் ஒன்றை வைத்து நமது மூளையின் செயல்திறனை அறிந்து கொள்வது. எனவே இந்த பதிவில் காட்டப்படும் படத்தில் உங்களுக்கு முதன்முதலில் தோன்ற கூடிய காட்சி எது என்பதை பற்றியும், அது அதை உணர்த்துகிறது என்பதை பற்றியும் இனி விரிவாக தெரிந்து கொள்வோம்.
ஒளியியல் மாயை :
ஒளியியல் மாயை என்பதை ஆங்கிலத்தில் ஆப்டிகல் இலுஷன் என்பார்கள். இதை வைத்து உங்களின் ஆளுமைப் பண்பை அறிந்து கொள்ளவும் முடியும். அதே போன்று உங்கள் காதல் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையும் இதனால் உணர முடியும். எனவே இந்த படத்தை ஒரு முறை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். இதில் உங்களுக்கு முதியவரின் முகத்தை முதலில் தோன்றினால், பெரிய விஷயங்களை நீங்கள் ஒருபோதும் இழக்க மாட்டீர்கள் என்று பொருள். மேலும் சாதாரண காதல் பிரச்சனைகளை கண்டு துவண்டு போக மாட்டீர்கள். அதற்கு பதிலாக, உறவுகளுக்கு மிகவும் தேவைப்படும் நேரம், ஆற்றல் மற்றும் முயற்சியை செலவிடும் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புவீர்கள்.
குதிரை சவாரி செய்யும் மனிதனை நீங்கள் முதலில் கண்டால், உங்களை அடக்குவது மிகவும் கடினம் என்று பொருள். இந்த போன்றவர்கள் தங்களின் துணையை குறைவாக ஏமாற்றுவார்கள். இவர்கள் தங்கள் துணையுடன் இருந்தாலும் கூட, தனது கனவுகளில் உள்ள நபரை அடிக்கடி தேடுவார்கள். உங்கள் துணை உங்கள்மீது அன்பாக இருந்தாலும் அவரை விட சிறப்பான ஒருவரை நீங்கள் எப்போதும் தேடுவீர்கள். இது தான் உங்களின் இயல்பாக இருக்கும்.
ஆற்றங்கரையில் படுத்திருக்கும் பெண் :
ஒரு பெண் ஆற்றின் ஓரத்தில் படுத்திருப்பதை போன்று உங்களுக்கு முதலில் தோன்றினால், நீங்கள் விட்டுக்கொடுக்கும் குணத்தை கொண்டவர். நீங்கள் உங்களின் காதலைத் தொடர விரும்புபவராக இருப்பீர்கள். ஆனால் அது சரியாக செல்லவில்லை என்பது பற்றியும், உங்களுக்கு பிடித்தது போன்று இல்லை என்பது பற்றி கண்டு கொள்ளாதவராக இருப்பீர்கள். அதே போன்று அந்த காதல் மலரவில்லை என்றால், அதை விட்டுவிடுவார்கள்.
ஆற்றின் மீது கல் வளைவு :
நீங்கள் முதலில் கல் வளைவைக் இந்த படத்தில் கவனித்திருந்தால், நீங்கள் சாகசத்தை விரும்புபவர் என்று அர்த்தம். நீங்கள் சாகசக்காரர் என்பதால், அந்த உணர்வை உங்களிடமிருந்து பறித்துவிடுவதற்காக உங்களின் உறவுகள் முயற்சிப்பார்கள். இதுகுறித்த பயம் உங்களுக்கு இருக்க கூடும். இருப்பினும், உங்களிடம் உள்ள அதே அளவிலான சாகச குணம் உங்களுக்கான ஒரு துணையை தேடி கண்டுபிடிக்க முயற்சிக்கும். இது தான் உங்களின் குணமாக இருக்கும்.
Comments
Post a Comment