Posts

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஸ்மார்ட்போனில் வரும் விளம்பரங்களால் தொல்லையா? தடுக்க சூப்பர் ஐடியா இதோ.......

Image
  இன்றைய டிஜிட்டல் உலகில், பெரும்பாலும் விளம்பரங்கள் ஒளிப்பரப்படுவதால் பயனாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்க்கொள்கிறார்கள். அ திலும், மொபைல் போன்களில் வரும் விளம்பரங்கள் தான் பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது. விளம்பரங்களை தடுக்க சில என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி இங்கே பார்ப்போம். உங்கள் போனில் முதலில் Settings ஐ திறக்கவும். அடுத்து ‘Apps & Notifications,’ என்பதற்குச் சென்று, 'Advanced' என்பதைத் கிளிக் செய்யவும். அதன் பின்னர் ''சிறப்பு பயன்பாட்டு அணுகல்'' (Special App Access) என்பதைத் திறக்கவும். விளம்பரங்களைக் காட்ட அனுமதி உள்ள அனைத்து செயலிகளின் பட்டியலையும் காண்பீர்கள். அங்கே நீங்கள் சந்தேகிக்கும் அல்லது விளம்பரங்களை காட்டும் செயலிகளை ஒவ்வொன்றாக தேர்வு செய்யவும். ஒரு செயலியை தேர்வு செய்து உள்நுழைந்தவுடன் “Allow display over other apps” என்பதை அணைத்து (OFF) வைக்கவும். அவ்வளவுதான் இப்போது பெரிய விளம்பரங்களை உங்கள் போனில் தோன்றுவதை தடுக்க முடியும். ஆனால், ஆப்களில் தோன்றும் விளம்பரங்களை தடுக்க நீங்கள் அந்த ஆப்பில் permission-க்கு சென்று தேவையற்றதை ஆப் செய்து வைக்...

1000 பேரை மயக்கிய குட்டி தேவதையின் அழகிய ரியாக்‌ஷன்! கோடி கொடுத்தாலும் கிடைக்காத வரம்....

Image
  சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுமி கேமராவை பார்த்த உடனே வெட்கத்தில் கீழே குனியும் அழகிய காட்சி ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது. கு ழந்தைகளின் ரியாக்‌ஷன் எப்போதும் அழகுதான். சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. பள்ளியில் சிறுமிகள் வரிசையாக உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதில் சிறுமி ஒருவர் உணவருந்தி கொண்டிருக்கையில் அவள் அருகில் சென்று யாரோ வீடியோ எடுக்கின்றார்.   அதனைப் பார்த்தவுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுமி உடனே வெட்கத்தில் கீழே குனிந்துகொள்கின்றாள். இந்த வீடியோ இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கிறது. ALSO READ :  உலகின் பணக்கார குழந்தை: 9 வயதில் தனி ஜெட் விமானத்தில் பறக்கும் சிறுவன்

உலகின் பணக்கார குழந்தை: 9 வயதில் தனி ஜெட் விமானத்தில் பறக்கும் சிறுவன்

Image
 உலகின் பணக்கார குழந்தையாக நைஜீரியாவைச் சேர்ந்த மோம்பா ஜுனியர் என்ற 9 வயது சிறுவனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நை ஜீரியாவின் லாகோஸைச் சேர்ந்த மோம்பா ஜூனியர், இஸ்மாலியா முஸ்தபா, முகமது அவல் முஸ்தபா ஆகியோரின் மகன் ஆவார். ஆறு வயது முதல் மாளிகைக்கு அதிபதியான இந்த சிறுவன், தனது ஆடம்பர வாழ்க்கை முறையால் உலகின் கோடீஸ்வர குழந்தை என்று அழைக்கப்படுகின்றார். Mompha ஒரு தனியார் ஜெட் விமானத்தில் உலகம் முழுவதும் பயணிக்கிறார். பல ஆடம்பரமான கார்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றார். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 29,800 பின்தொடர்கின்றனர். குறித்த சிறுவனின் புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகின்றது. ALSO READ :  பானிபூரியில் சட்னி, ஐஸ்கிரீம் ஊற்றி சாப்பிடும் வைரல் வீடியோ!

பானிபூரியில் சட்னி, ஐஸ்கிரீம் ஊற்றி சாப்பிடும் வைரல் வீடியோ!

Image
  பானிபூரியில் ஐஸ்க்ரீம் சேர்த்து செய்த புதுமையான உணவு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   ரோட்டுக்கடையில் கிடைக்கும் பானி பூரிக்கு தான் அதிக ருசி இருக்கும். பானி பூரிகளை வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். கு ழந்தைகள், பெண்கள், ஆண்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் பானிபூரி என்றால் அலாதி பிரியம், பலரும் இதற்கு அடிமையாகி இருக்கிறார்கள்.  அதிலும் ஹோட்டல்களில் கிடைக்கும் பானி பூரியை விட, ரோட்டுக்கடையில் கிடைக்கும் பானி பூரிக்கு தான் அதிக ருசி இருக்கும். அதிலும் வெங்காயம், மிக்ச்சர் போன்ற டாப்பிங்க்ஸை சேர்த்து சுட சுட சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும்.  தற்போது விதவிதமாக கிடைக்கும் பானி பூரிகளை  வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர்.  இவற்றை அந்தந்த ஊர்களுக்கு ஏற்ப பானி பூரி, பட்டாச்சே, புக்சா என ஒவ்வொரு இந்திய மாநிலத்திலும் பானிபூரிக்கு பெயர் உள்ளது.  இப்போதெல்லாம் இணையத்தில் அதிகமாக விதவிதமான உணவு வீடியோக்கள் மக்களை கவர்கிறது.  அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே வினோதமான உணவு...

உதட்டு வெடிப்பு சரிசெய்ய 3 அற்புதமான குறிப்புகள்

Image
  குளிர்காலத்தில் உதடு வெடிப்பு பிரச்சனையால் நீங்கள் சிரமப்பட்டால், இந்த முறைகளை பின்பற்றுவதன் மூலம் அதை சமாளிக்கலாம். தேன் பயன்படுத்தவும். தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவவும். கிரீம் தடவுவதும் பலன் தரும்.. கு ளிர்காலத்தில் சருமம் தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படுவதால் உதடுகளும் வெடிக்க ஆரம்பிக்கும். இந்த பருவத்தில் உதடு வெடிப்பு பிரச்சனையால் நீங்களும் சிரமப்படுகிறீர்கள் என்றால், சில எளிய வழிகளை பின்பற்றவும். இதனால் உடனடி பலன் கிடைக்கும். தேன் குளிர்காலத்தில்  உதடு வெடிப்பை போக்க தேனை பயன்படுத்தலாம். தேனில்  பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் காயம் குணப்படுத்தும் பண்புகள் உள்ளன, இது உதடு வெடிப்பு பிரச்சனையை நீக்கும். கிரீம் உதடுகளில் கிரீம் தடவினால், உதடு வெடிப்பு பிரச்சனையில் இருந்து விடுபடலாம். தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதால் உதடு வெடிப்பு பிரச்சனை நீங்கும். தேங்காய் எண்ணெயில் ஈரப்பதமூட்டும் தன்மை உள்ளது, இது உதடு வெடிப்பு பிரச்சனையை நீக்குகிறது. இரவில் தூங்கும் போது உதடுகளில் தேங்காய் எண்ணெயை தடவவும். உதடு சிவப்பாக டிப்ஸ்  காலையில் பல் விளக்குவதற்கு முன...

உணவே மருந்து; ஒற்றை தலைவலிக்கு தீர்வாகும் உணவுகள்!

Image
  நரம்பியல் பிரச்சினை இதற்கு முக்கிய காரணம் என கூறப்படும் நிலையில், ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு, தலைவலியுடம் கூடவே, வாந்தியும், சத்தம் அல்லது வெளிச்சத்தை தாங்க இயலாத உணர்வு ஆகியவை ஏற்படும். மெக்னீசியம் நிறைந்த உணவு ஒற்றைத் தலைவலியைக் குறைக்க உதவுகிறது. வயிற்று பிரச்சனையையும் போக்கும் மற்றொரு முக்கிய பானம் மூலிகை தேநீர். நீரிழப்பு முக்கிய காரணமாக அமைகிறது. ஒ ற்றைத் தலைவலி என்பது மிகவும் பொதுவான தலைவலி வகைகளில் ஒன்றாகும். நரம்பியல் பிரச்சினை இதற்கு முக்கிய காரணம் என கூறப்படும் நிலையில், ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு, தலைவலியுடம் கூடவே, வாந்தியும், சத்தம் அல்லது வெளிச்சத்தை தாங்க இயலாத உணர்வு ஆகியவை ஏற்படும்.  ஒற்றைத் தலைவலி என்பது பல மணிநேரங்கள் முதல் பல நாட்கள் வரை நீடித்து அன்றாட வாழ்க்கை பணிகளை பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஒற்றைத் தலைவலிக்கு ஒரே தீர்வு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்து கொள்வது தான். ஒற்றைத் தலைவலியை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். சில உணவுகள் ஒற்றை தலைவலியை க...

வீட்டிலேயே பக்க விளைவுகளை ஏற்படுத்தாத ‘முடி சாயம்’ தயாரிப்பது எப்படி?

Image
கூந்தலை பாதிக்காமல் இயற்கை முறையிலேயே, எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாத வண்ணம் ‘ முடி சாயம் ’ தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம். வயதாகும்போது மட்டுமே ‘நரை’ ஏற்படும் என்ற நிலையைத் தாண்டி, இன்று மாறி வரும் உணவு பழக்கவழக்கங்களால் இளம் வயதிலேயே முடிகள் நரைக்கத் தொடங்குகின்றன. இவற்றைத் தற்காலிகமாக கருப்பாக்குவதற்காக பயன்படுத்தும் செயற்கை ரசாயனங்கள் கலக்கப்பட்ட சாயங்கள், உடனடியாக நிறத்தை மாற்றும். அதன்கூடவே பக்க விளைவுகளை ஏற்படுத்தி, முடியின் வேர்க்கால்களைப் பாதித்து, முடி உதிர்வையும் அதிகமாக்கும். இந்த ரசாயனங்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதனைத் தவிர்ப்பதற்கு இயற்கை முறையிலேயே, எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாத வண்ணம் ‘ முடி சாயம் ’ தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம். இயற்கை சாயம்: இரண்டு அல்லது மூன்று கொட்டாங்குச்சிகளை அடுப்பில் எரித்து, அதன் மூலம் கிடைக்கும் கரியுடன், செக்கில் ஆட்டிய சுத்தமானத் தேங்காய் எண்ணெய்யைத் தேவையான அளவு சேர்த்துக் கலக்க வேண்டும். பின்பு, அதை அரை மணி நேரம் வெயிலில் வைக்க வேண்டும். தலைக்கு குளித்தவுடன் இந்தச்...

குழந்தைகளின் உடல் பருமன் குறித்து கவலைப்படும் பெற்றோரா? இனி கவலையே வேண்டாம்

Image
  இன்றளவில் குழந்தை பருவத்தில் உடல் எடை பிரச்சனையை எதிர்கொள்வோரின் எண்ணிக்கை உலகளவில் வெகுவாக அதிகரித்து வருகிறது. இ தனை கவனத்தில் எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் நீரிழிவு நோய், உயர் இரத்தஅழுத்த பிரச்சனை, அதிக கொழுப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். குழந்தைகளின் உடல் பருமனை குறைக்க ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.  இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிடுவது அனைத்து வயதினருக்கும் கேடானதாகும். குழந்தைகளுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பதின்ம வயதுள்ளவர்கள் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தி வரும் நிலையில், இரவில் தாமதமாக உறங்கி வருகின்றனர். இதனால் உடல் பருமன் ஏற்படும். இரவில் உறங்கும் போதுதான் வளர்சிதை மாற்றம் ஏற்படும். இரவில் 7.30 மணிக்கு சாப்பிட வேண்டும்.  குழந்தைகளுக்கு நீர்ச்சத்துள்ள உணவுகளை வழங்குதல் மூலமாக அவர்களின் உடலில் நீர்சத்து இருக்கும். பகல் வேளைகளில் குளிர்பானம் குடிப்பதை தவிர்த்து, இயற்கை பழச்சாறு போன்றவை வழங்கலாம். வானவில் உணவு என்ற முறையில், பலவண்ணம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும். தினமும் பச்சைகாய்கறி சாப்பிடலாம்....

சரும வறட்சியைத் தடுக்கும் வழிகள்

Image
  குளித்து முடித்தவுடன் சருமத்தில் மாஸ்சுரைசர் பூசுவதன் மூலம் சரும வறட்சியைத் தடுக்கலாம். கு ளிர் காலங்களில் காற்றின் ஈரப்பதம் குறைந்து, வறண்ட காற்று வீசும். இதன் காரணமாக சருமம் உலர்ந்து வறட்சி அடையும். நாம் வழக்கமாக பின்பற்றும் சரும பராமரிப்பு முறைகள், இந்த காலநிலைக்கு பயன்படாது. எனவே பனிக்காலத்துக்கு ஏற்ற சரும பராமரிப்பு முறைகளை பின்பற்றினால் மட்டுமே, சரும வறட்சி ஏற்படாமல் தடுக்க முடியும். இதற்கு எத்தகைய முறைகளை கையாள வேண்டும் என்று தெரிந்துகொள்வோம். குளிக்கும் தண்ணீர் மிதமான சூடுள்ளதாக இருக்க வேண்டும். அதிக சூடுள்ள நீரில் குளிப்பதன் மூலம், இயற்கையாக சருமத்தில் இருக்கும் எண்ணெய்ப்பசை நீங்கி விடும். இதன் காரணமாக சருமம் வறட்சி அடையும். அதிக நேரம் தண்ணீரில் நனைந்து குளிக்காமல், 10 முதல் 15 நிமிடங்கள் வரை குளிக்கலாம்.  அடர்த்தியான குளியல் சோப் பயன்படுத்தாமல், மென்மையான சோப் பயன்படுத்திக் குளிப்பது நல்லது. குளித்தவுடன் சருமத்தை அழுத்தித் துடைக்காமல், பருத்தியால் தயாரிக்கப்பட்ட துண்டைக்கொண்டு மென்மையாக ஒற்றி எடுக்க வேண்டும். குளித்து முடித்தவுடன் சருமத்தில் மாஸ்சுரைசர் பூசுவதன் மூ...

பனிக்கால உதடுகள் பராமரிப்பு

Image
  குளிர் காலம் ஆரம்பித்ததும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். அடிக்கடி உதடுகளை நாவினால் எச்சில்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும். ப னிக்காலத்தில் அதிகமாக பாதிக்கப்படுவது உதடுகள்தான். உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் இல்லை. எனவே, ஈரப்பதத்தை தக்க வைக்க முடியாமல் உடனே வறண்டு போகும் தன்மை கொண்டது. சிலருக்கு உதடுகளில் வெடிப்பு, தோல் உரிதல் மற்றும் உதடுகளைச் சுற்றி புண் ஏற்படுதல் போன்ற பிரச்சினைகள் வரலாம். இதனை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை இங்கு காண்போம். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாதபோது உதடுகள் வறண்டு போகும். இதனை தவிர்ப்பதற்கு சிலர் வேதிப்பொருட்கள் கலந்த லிப் பாமை பயன்படுத்துவதுண்டு. இது தற்காலிக ஈரப்பதத்தை கொடுப்பது மட்டுமல்லாமல், அதனை பயன்படுத்தாத நேரங்களில் அதிகப்படியான வறட்சியை ஏற்படுத்தும். குளிர் காலம் ஆரம்பித்ததும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். அடிக்கடி உதடுகளை நாவினால் எச்சில்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும். மேலும் உதடுகள் வறட்சியடைவதை தவிர்க்க, வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளவும். பிராக்கோலி, வெள்ளரி, கோதுமை, கீரை வ...

எடை குறைப்புக்கு தயாராகி விட்டீர்களா?

Image
  புத்தாண்டு சபதமாக உடல் எடையை குறைப்பதற்கு முயற்சிப்பவர்கள் உடற்பயிற்சி மட்டுமின்றி உணவு பழக்கத்திலும் சில விஷயங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். 1. புரதம்: அன்றாட உணவில் புரதத்தின் முக்கியத்துவம் சில சமயங்களில் குறைத்து மதிப்பிடப்படுகிறது. சாப்பிடும் தட்டில் கால் பங்கு புரதம் இருக்க வேண்டும். சைவ உணவு உண்பவர்கள் டோபு, பீன்ஸ், கொண்டைக்கடலை மற்றும் நட்ஸ் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றுள் புரதம் நிறைவாகவே உள்ளது. அசைவ உணவு பிரியர்கள் கோழி, கடல் உணவு மற்றும் பால் உணவுகளை சாப்பிடலாம். கூடுமானவரை பதப்படுத்தப்பட்ட இறைச்சியை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு நாளும் 50 கிராம் முதல் 70 கிராம் வரை புரதம் உடலுக்கு கிடைக்க வேண்டும். 2. கொழுப்பு: கொழுப்பு எப்போதும் மோசமானது அல்ல. ஒவ்வொரு நாளும் சாப்பிடும் உணவில் ஆரோக்கியமான கொழுப்புகளை சேர்த்துக்கொள்வது நல்லது. ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி நல்ல கொழுப்பு இடம்பிடித்தாலே போதுமானது. தாவர எண்ணெய்கள், நட்ஸ்கள், மீன் ஆகியவை நல்ல கொழுப்பின் சிறந்த ஆதாரங்களாக கருதப்படுகின்றன. மேலும் கேக்குகள், பன்றி இறைச்சி, சாசேஜ்கள் மற்றும் பீட்சா போன்ற டிரான்...

சூரிய ஒளியும்... இரவு தூக்கமும்..!

Image
  உடல் மற்றும் மன நலனுக்கு இரவு தூக்கம் முக்கியம். அது மட்டுமின்றி மனநிலையிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். ஆழ்ந்த தூக்கம் மூளைக்கு போதுமான ஓய்வு அளிக்க வித்திடும். அதனால்தான் தூங்கி எழுந்ததும் புத்துணர்ச்சியையும், மனஅமைதியையும் உணர்கிறீர்கள். இ தற்கு எதிர்மாறாக தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொண்டால் காலையில் எழும்போதே சோர்வும் குடிகொண்டுவிடும். கூடவே ஒருவித எரிச்சல் உணர்வும் எட்டிப்பார்க்கும். இன்றைய நவீன வாழ்க்கையில் மன அழுத்தமும், பதற்றமும் பொதுவான விஷயங்களாகி விட்டன. மேலும் தூக்கம் தொடர்பான தொந்தரவுகளும் அதிகரித்துள்ளன. சிலர் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் மாத்திரை உட்கொள்கிறார்கள். அது தூக்கத்தை வரவழைப்பது போல் தோன்றலாம். அதனால் பக்கவிளைவுகள் இல்லாமல் இல்லை. இயற்கையான வழிமுறையில் தூங்கி எழுவதுதான் ஆரோக்கியமானது. பகல் நேரத்தில் சூரிய ஒளி படும் பகுதியில் அதிக நேரத்தை செலவிடுவது இரவில் சிறந்த தூக்கத்திற்கு உதவும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சூரிய ஒளிக்கும், தூக்கத்தின் தரத்துக்கும் இடையேயான தொடர்பை மையப்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. அலுவலகத்தில் பண...

விந்தணு தானம் குறித்து ‘அறியாத’ தகவல்கள்..!!!

Image
  விந்தணு தானம் என்பது குழந்தையில்லாத தம்பதிகளின்  குழந்தை கனவை நனவாக்கும் பெரிய நம்பிக்கையாக உள்ளது.  விந்து தானம் செய்வதன் மூலம் சம்பாதிக்கலாம் தேவையை விட சப்ளை குறைவாக உள்ளது விந்தணு தானம் மூலம் பிறக்கும் குழந்தையின் மீது உரிமை இல்லை Sperm Donation:    வி ந்து தானம் அல்லது விந்து கொடை மூலம் குழந்தை கனவு நனவாகி பல குடும்பங்களின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வருகிறது.  உலகில் மில்லியன் கணக்கான தம்பதிகள் இந்த நாட்களில் தவறான வாழ்க்கை முறை  மற்றும் உணவு முறை மாற்றங்கள் காரணமாக கருத்தரிக்க முடியாமல்  சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.  அத்தகைய தம்பதிகளுக்கு, IVF மட்டுமே பெற்றோராக மாறுவதற்கான ஒரே வழி. இதற்கு அவர்களுக்கு விந்தணு தானம் செய்பவர் தேவை. இந்த தேவை அதிகமாக இருக்கும் நிலையில், சப்ளை மிகவும் குறைவாக உள்ளது. விந்தணு தானம் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் முடியும்.  IVF தொழில்நுட்பத்துடன் கருவுறுதல் சிகிச்சைக்கு விந்தணு தானம் மிகவும் முக்கியமானது. இந்த குழந்தை இல்லாத தம்பதியினரோ அல்லது தனித்து வாழும் பெண்ணோ தனக்கென ஒரு குழந்தை வேண்டும் என ...

மக்கள் அதிகம் வாங்கும் மருந்துகளின் விலை குறைகிறது

Image
  அத்தியாவசிய மருந்துகள் விலையைக் குறைக்க மத்திய அரசு முடிவு! பொதுமக்களின் பட்ஜெட்டில் கணிசமான மாற்றம் வரும். மருந்துகளின் விலை குறைகிறது மக்கள் அதிகம் வாங்கும் மருந்துகளின் விலை குறைக்கப்படும் பரிசீலனையில் மருந்துகளின் விலை ம க்களால் அதிகம் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையை குறைக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. சர்க்கரை நோய் மற்றும்  தொற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் மருந்துகள்  உட்பட மக்கள் அதிகம் வாங்கும் விலை உயர்ந்த மருந்துகளின் விலையை குறைக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. அதாவது மக்கள் அதிகம் பயன்படுத்தும் மற்றும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மருந்துகளின் விலை குறைக்கப்படும். இதய பிரச்சனைகள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ரத்த அழுத்தக் குறைவு, வைரஸ் தொற்று உட்பட அதிகம் பாதிக்கக்கூடிய நோய்களுக்கான மருந்துவிலை இனி குறையலாம். மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் மருந்துகள், தேசிய அளவிலான அத்தியாவசிய மருந்துகளாக (essential drug list india) மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.  இந்த பட்டியலில் உள்ள மருந்துகளின் விலையை, என்.பி.பி.ஏ (National Phar...

தோல் பிரச்சனைகளுக்கு ஏற்ற காய் அது என்ன காய்?

Image
  உணவில் முக்கியமானது காய்கறிகள். பொதுவாக, ஒருவர் வசிக்கும் தட்ப வெட்ப நிலையில் விளையும் காய் கனிகளை பயன்படுத்துவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது சத்தியமான உண்மை.  சருமப் பிரச்சனைகளுக்கு அருமருந்து உணவு கண் பார்வைக்கு உகந்த காய் நன்மை பயக்கும் நாட்டுக்காய் உ ணவில் முக்கியமானது காய்கறிகள். பொதுவாக, ஒருவர் வசிக்கும் தட்ப வெட்ப நிலையில் விளையும் காய் கனிகளை பயன்படுத்துவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது சத்தியமான உண்மை.  நமது சுற்றுவட்டாரங்களில் சுலபமாக கிடைக்கும் காய்களிலேயே  பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. நாட்டுக் காய்கள் உடலுக்கு நன்மைகளை அள்ளி வழங்குபவை என்பதை மறந்துவிடக்கூடாது. நமது நாட்டுக் காய்களில் முக்கியமான ஒன்று பீர்க்கங்காய். பீர்க்கங்காயில் நார்ச்சத்து மிகவும் அதிக அளவில் உள்ளது. அதுமட்டுமல்லாமல், ஏ, பி, சி என பல விட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்த சத்தான காய் பீர்க்கங்காய்.  இது நீர்க்காயாக இருப்பதால், அதாவது பீர்க்கையில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால், நோயாளிகளுக்கும், சற்று பருமனான உடல் வாகு கொண்டவர்களுக்கும் மிகவ...

'இது என்னோட ஏரியா'; அன்னப் பறவையின் அட்டகாசம்..!!!

Image
  பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் தனியாக பிரித்து எடுக்கும் அதிசய சக்தி அன்னப் பறவை க்கு உண்டு என புராண நூல்களில் கூறப்பட்டுள்ளதை நாம் அனைவரும் படித்திருப்போம். ச மூக வலைதள உலகில் வேடிக்கைக்கும், சந்தோஷத்திற்கும், வியப்பிற்கும் பஞ்சமே இல்லை. தினம் தினம் பலர்  வேடிக்கையான வீடியோக்களை வெளியிட்டு சமூக ஊடக பயனர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்கள்.  மகிழ்ச்சியாக இருப்பதையும், சிரிப்பதையும் யார் தான் விரும்ப மாட்டேர்கள். இந்த ஒரு ஒரு சிறிய வீடியோ கிளிப்பைப் பார்த்தால்,  சிரிக்காதவர்கள் இருக்க முடியாது. இந்த வேடிக்கையான வீடியோக்கள் மக்களை சிரிக்க வைக்கும் நோக்கத்திற்காக மட்டுமே பகிரப்படுகின்றன. அப்படி ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.  பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் தனியாக பிரித்து எடுக்கும் அதிசய சக்தி அன்னப் பறவைக்கு உண்டு என புராண நூல்களில் கூறப்பட்டுள்ளதை நாம் அனைவரும் படித்திருப்போம். இந்த வைரல் வீடியோவில் அன்னம் ஒரு சிறுவனை தாக்கும் வேடிக்கையான  விடியோவில் காணலாம்.  திடீரென தண்ணீரில் குதித்த சிறுவனைப...

சாலையில் வெடித்து சிதறிய 50 டன் எடையுள்ள திமிங்கிலம்; எங்கும் ரத்த வெள்ளம்..!!!

Image
  உலகில் நடக்கும் சில அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், விசித்திரமான சம்பவங்கள், பல நூற்றாண்டுகள் நினைவில் நிற்கும். 18 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், சாலையில் ரத்த வெள்ளம் ஏற்படும் வகையிலான  சம்பவம் நடந்தது. உ லகில் நடக்கும் சில அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், விசித்திரமான சம்பவங்கள், பல நூற்றாண்டுகள் நினைவில் நிற்கும். 18 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், சாலையில் ரத்த வெள்ளம் ஏற்படும் வகையிலான  சம்பவம் நடந்தது. 18 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் ( ஜனவரி 26), பல நூற்றாண்டுகளாக நினைவில் இருக்கும் வகையில், தைவானில் ஒரு சம்பவத்தில் சாலை வழியாக சென்றவர்கள் மீது திமிங்கலத்தின் ரத்தம் மற்றும் உள் உறுப்புகள் விழுந்ததால் பீதியில் அலறிக் கொண்டு ஓடினர். சாலையில் வெடித்து சிதறிய திமிங்கலம்  டெய்லி ஸ்டார் பத்திரிக்கையில், இது குறித்த செய்தி வெளியாகியுள்ளது. 18 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் கொண்டு செல்லப்பட்ட  திமிங்கலத்தில் உடல்  வெடித்து சிதறியதால், பீதி அடைந்த பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் அலறிக் கொண்டே ஓடினர். சாலையில் எங்கும், ரத்தம், உடல் உறுப்புகள், இறைச்சி ...

மம்மியின் வயிற்றில் சிதையாத ‘கரு’; ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!

Image
  மம்மி (Mummy) என்பது தற்செயலாகவோ, இயற்கையாகவோ அல்லது திட்டமிட்டோ காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும். எகிப்து நாட்டில் ஆயிரக்கணக்கான மம்மிகள் பார்க்கலாம்.  இறந்த உடல்களை மம்மியாக மாற்றுவதற்கு அதிக அமிலமும் மிகக் குறைந்த ஆக்ஸிஜனும் தேவை. ஆராய்ச்சியாளர்கள் பல கேள்விகளுக்கான பதில்களைத் தேடுகிறார்கள். மம்மிக்கு 'மர்ம பெண்மணி' என்று பெயரிட்டுள்ளனர். மம்மி (Mummy) என்பது தற்செயலாகவோ, இயற்கையாகவோ அல்லது திட்டமிட்டோ காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும். எகிப்து நாட்டில் ஆயிரக்கணக்கான மம்மிகள் பார்க்கலாம். அங்கு பிரமிடுகளில், பூமியின் என மம்மிகள் ஆங்காங்கே புதைத்து வைக்கப்பட்டு உள்ளன.  எகிப்தில், ஆரம்பகால, கி.மு. 3500 க்கும் முன்னால்,  புதைக்கப்பட்ட உடல்கள் சுற்றுச்சூழலின் காரணமாக இயற்கையாக மம்மிக்களாக உருவாகின. இயற்கையாக சடலங்கள் பதப்படுத்தப்பட்டது போல் ஆன நிலை எகிப்திய கலாச்சாரத்திலும், மதத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எகிப்தின் இரண்டாவது வம்சக் காலகட்டத்தில் (கிமு. 2800 வது ஆண்டு முதல்) இறந்தவர்களின் உடல்களை பதப்படுத...

Popular posts from this blog

முகத்தில் காணப்படும் அதிகபட்ச எண்ணெய்யை போக்க வேண்டுமா? இந்தவொரு பொருளை இப்படி பயன்படுத்தினாலே போதும்!

120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?