நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தோல் பிரச்சனைகளுக்கு ஏற்ற காய் அது என்ன காய்?

 உணவில் முக்கியமானது காய்கறிகள். பொதுவாக, ஒருவர் வசிக்கும் தட்ப வெட்ப நிலையில் விளையும் காய் கனிகளை பயன்படுத்துவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது சத்தியமான உண்மை. 


  • சருமப் பிரச்சனைகளுக்கு அருமருந்து உணவு
  • கண் பார்வைக்கு உகந்த காய்
  • நன்மை பயக்கும் நாட்டுக்காய்

ணவில் முக்கியமானது காய்கறிகள். பொதுவாக, ஒருவர் வசிக்கும் தட்ப வெட்ப நிலையில் விளையும் காய் கனிகளை பயன்படுத்துவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது சத்தியமான உண்மை. 

நமது சுற்றுவட்டாரங்களில் சுலபமாக கிடைக்கும் காய்களிலேயே  பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. நாட்டுக் காய்கள் உடலுக்கு நன்மைகளை அள்ளி வழங்குபவை என்பதை மறந்துவிடக்கூடாது.

நமது நாட்டுக் காய்களில் முக்கியமான ஒன்று பீர்க்கங்காய். பீர்க்கங்காயில் நார்ச்சத்து மிகவும் அதிக அளவில் உள்ளது. அதுமட்டுமல்லாமல், ஏ, பி, சி என பல விட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்த சத்தான காய் பீர்க்கங்காய். 

இது நீர்க்காயாக இருப்பதால், அதாவது பீர்க்கையில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால், நோயாளிகளுக்கும், சற்று பருமனான உடல் வாகு கொண்டவர்களுக்கும் மிகவும் உகந்த காயாக இருக்கிறது.

இதில் உள்ள நார்ச்சத்தும் மாவுச்சத்தும் ரத்தத்தால் எளிதாக கிரகித்துக் கொள்ளக்கூடியது. 


பீர்க்கங்காயில் உள்ள வைட்டமின்களும், தாது உப்புக்களும் தொற்றுக் நோய் கிருமிகளால் உடல் பாதிக்கப்படாமல் பாதுகாத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

பீர்க்கங்காய் சாறு, மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பீர்க்கங்காயின் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. 

பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி லேசாக சூடுபடுத்தி, அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்.

சருமப் பிரச்சனைகளுக்கும் அருமருந்தாக விளங்குகிறது பீர்க்கை. சொறி, சிரங்கு, புண், காய்ச்சல் உள்ளவர்கள், பீர்க்கங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

புண்கள், சொறி, சிரங்கு உள்ள இடங்களில் பீர்க்கங்காய் இலையின் சாறை எடுத்துத் தடவினால் நிவாரணம் கிடைக்கும். பீர்க்கங்காயை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொள்வதால் கண்பார்வைத் திறன் மேம்படும்.

பீர்க்கங்காய் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் என்பதோடு,  வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதைத் தடுக்கும். இதனால் அல்சர் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.


ALSO READ : ஆயுளை அதிகரிக்கும் 10 நிமிட நடைப்பயிற்சி: அமெரிக்க ஆய்வாளர்களின் ஆய்வில் தெரியவந்த நல்ல செய்தி

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்