உதட்டு வெடிப்பு சரிசெய்ய 3 அற்புதமான குறிப்புகள்
- Get link
- X
- Other Apps
குளிர்காலத்தில் உதடு வெடிப்பு பிரச்சனையால் நீங்கள் சிரமப்பட்டால், இந்த முறைகளை பின்பற்றுவதன் மூலம் அதை சமாளிக்கலாம்.
குளிர்காலத்தில் சருமம் தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படுவதால் உதடுகளும் வெடிக்க ஆரம்பிக்கும். இந்த பருவத்தில் உதடு வெடிப்பு பிரச்சனையால் நீங்களும் சிரமப்படுகிறீர்கள் என்றால், சில எளிய வழிகளை பின்பற்றவும். இதனால் உடனடி பலன் கிடைக்கும்.
தேன்
குளிர்காலத்தில் உதடு வெடிப்பை போக்க தேனை பயன்படுத்தலாம். தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் காயம் குணப்படுத்தும் பண்புகள் உள்ளன, இது உதடு வெடிப்பு பிரச்சனையை நீக்கும்.
கிரீம்
உதடுகளில் கிரீம் தடவினால், உதடு வெடிப்பு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதால் உதடு வெடிப்பு பிரச்சனை நீங்கும். தேங்காய் எண்ணெயில் ஈரப்பதமூட்டும் தன்மை உள்ளது, இது உதடு வெடிப்பு பிரச்சனையை நீக்குகிறது. இரவில் தூங்கும் போது உதடுகளில் தேங்காய் எண்ணெயை தடவவும்.
உதடு சிவப்பாக டிப்ஸ்
காலையில் பல் விளக்குவதற்கு முன்பு டூத் பிரஷைக் கொண்டு, லேசாக உதடுகளை தடவி விட்டால் போதும். உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி வழவழப்பாக இருக்கும். மேலும் உதடு சிவப்பாக மாறும். உதடு சிவப்பாக முகத்தை தேய்க்கும்போது கடைசியாக உதடுகளில் ஒரு முறை தேய்த்தால் போதும். நல்ல தரமான லிப்ஸ்டிக், லிப் கிளாஸ் பயன்படுத்தினால் உதடுகள் நிறம் எப்போதும் மாறாமல் இருக்கும்.
ALSO READ : வீட்டிலேயே பக்க விளைவுகளை ஏற்படுத்தாத ‘முடி சாயம்’ தயாரிப்பது எப்படி?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment