நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகின் பணக்கார குழந்தை: 9 வயதில் தனி ஜெட் விமானத்தில் பறக்கும் சிறுவன்

 உலகின் பணக்கார குழந்தையாக நைஜீரியாவைச் சேர்ந்த மோம்பா ஜுனியர் என்ற 9 வயது சிறுவனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


நைஜீரியாவின் லாகோஸைச் சேர்ந்த மோம்பா ஜூனியர், இஸ்மாலியா முஸ்தபா, முகமது அவல் முஸ்தபா ஆகியோரின் மகன் ஆவார்.

ஆறு வயது முதல் மாளிகைக்கு அதிபதியான இந்த சிறுவன், தனது ஆடம்பர வாழ்க்கை முறையால் உலகின் கோடீஸ்வர குழந்தை என்று அழைக்கப்படுகின்றார்.


Mompha ஒரு தனியார் ஜெட் விமானத்தில் உலகம் முழுவதும் பயணிக்கிறார். பல ஆடம்பரமான கார்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றார். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 29,800 பின்தொடர்கின்றனர். குறித்த சிறுவனின் புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகின்றது.






ALSO READ : பானிபூரியில் சட்னி, ஐஸ்கிரீம் ஊற்றி சாப்பிடும் வைரல் வீடியோ!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!