நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சாலையில் வெடித்து சிதறிய 50 டன் எடையுள்ள திமிங்கிலம்; எங்கும் ரத்த வெள்ளம்..!!!

 உலகில் நடக்கும் சில அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், விசித்திரமான சம்பவங்கள், பல நூற்றாண்டுகள் நினைவில் நிற்கும். 18 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், சாலையில் ரத்த வெள்ளம் ஏற்படும் வகையிலான  சம்பவம் நடந்தது.


லகில் நடக்கும் சில அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், விசித்திரமான சம்பவங்கள், பல நூற்றாண்டுகள் நினைவில் நிற்கும். 18 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், சாலையில் ரத்த வெள்ளம் ஏற்படும் வகையிலான  சம்பவம் நடந்தது. 18 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் ( ஜனவரி 26), பல நூற்றாண்டுகளாக நினைவில் இருக்கும் வகையில், தைவானில் ஒரு சம்பவத்தில் சாலை வழியாக சென்றவர்கள் மீது திமிங்கலத்தின் ரத்தம் மற்றும் உள் உறுப்புகள் விழுந்ததால் பீதியில் அலறிக் கொண்டு ஓடினர்.

சாலையில் வெடித்து சிதறிய திமிங்கலம் 

டெய்லி ஸ்டார் பத்திரிக்கையில், இது குறித்த செய்தி வெளியாகியுள்ளது. 18 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் கொண்டு செல்லப்பட்ட  திமிங்கலத்தில் உடல்  வெடித்து சிதறியதால், பீதி அடைந்த பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் அலறிக் கொண்டே ஓடினர். சாலையில் எங்கும், ரத்தம், உடல் உறுப்புகள், இறைச்சி ஆகியவை சிதறிக் கிடந்தது. 50 ஆயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் வெடித்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

ஒரு திகில் படம் போல் இருந்த காட்சிகள்

தென்மேற்கு தைவானின் பரபரப்பான தெருக்களில் திமிங்கலத்தின் சடலம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அது வெடித்தபோது, ​​நகரம் ஒரு திகில் திரைப்படத்தின் காட்சியைப் போன்று, சாலை ஒரு இரத்தக்களரி ஆனது. ஜனவரி 26, 2004 அன்று பயங்கர வெடிப்பு நேர்ந்தது. 50 டன் எடையுள்ள திமிங்கலம் ஒரு பெரிய லாரியின் பின்புறத்தில் ஒரு ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

வாயு அழுத்தம் காரணமாக வெடிப்பு ஏற்பட்ட என்கின்றனர் வல்லுநர்கள். ஆச்சரியப்படும் விதமாக, இந்த வகை வெடிப்பு என்பது திமிங்கலங்களில் மிகவும் பொதுவான நிகழ்வாகும் என அவர்கள் கூறுகின்றனர், இது பாலூட்டியின் இறந்த உடல் சிதையும் போது, உள்ளே உருவாகும் வாயுக்களின் அழுத்தத்தால், உடல் வெடிக்கிறது என்கின்றனர்.

தைவானில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய திமிங்கலம் இதுவாகும்.  தைவானில் உள்ள தேசிய செங் குங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வாங் சியென்-பிங் கூறுகையில், திமிங்கலம் 50 டன் எடையும் 17 மீட்டர் நீளமும் கொண்டதாக இருந்தது; தைவானில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப் பெரிய திமிங்கலம் இதுவாகும் என்றார்.


ALSO READ : மம்மியின் வயிற்றில் சிதையாத ‘கரு’; ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!