Posts

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சரும பராமரிப்பில் புதிய ட்ரெண்டாகி வரும் மைக்ரோபயோம் ஸ்கின்கேர் பற்றி தெரியுமா..? விளக்கம் இதோ...

Image
 நீரேற்றம் மற்றும் ஒளிரும் நிறத்திற்காக சருமத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவும் அதன் பண்புகளுக்காகவும் microbiome சரும பராமரிப்பு பிரபலமாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மாசு மருவற்ற, பருக்கள் இல்லாத தெளிவான சருமத்தை பெற வேண்டும் என்பதே நம் அனைவரின் ஆசையாக உள்ளது. நம் சருமம் ஆரோக்கியத்தை பராமரிக்க பல டிப்ஸ்கள், பல வழிமுறைகளை மாற்றி நாம் தினமும் கேள்விப்படுகிறோம். ஆனால் ஸ்கின் மைக்ரோபயோம் (Skin microbiome) தோல் பராமரிப்பு பற்றி நீங்கள் கேள்விபட்டுள்ளீர்களா.? இதுவரை கேள்விப்பட்டதில்லை என்றால் இங்கே இந்த சரும பராமரிப்பு பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மைக்ரோபயோம் ஸ்கின் கேர் ட்ரெண்ட் என்பது புதுமையான, அறிவியல் ஃபார்முலாக்களின் உதவியுடன் தோல் ஆரோக்கியத்தில் சமநிலையை மீட்டெடுக்க மற்றும் பராமரிக்க உதவுகிறது. மைக்ரோபயோம் முழுமையான தோல் பராமரிப்புக்கான சிறந்த ரகசியமாக இருக்கிறது. ஸ்கின் மைக்ரோபயோம் மற்றும் நானோடெக்னாலாஜி அழகு மற்றும் ஒப்பனைத் தொழிலில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. குடலை போலவே நம் சருமமும் சொந்த தனித்துவமான அமைப்பைக் கொண்டுள்ளது. பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்க...

உடம்பு வலியை போக்க உடலில் தண்ணீரை பாய்ச்சு அடிக்கும் டெக்னிக்.. டிரெண்டாகும் ஹைட்ரோ தெரபி...

Image
 நீச்சல் குளத்தில் செய்யப்படும் உடற்பயிற்சி தான் ஹைட்ரோதெரபி. குளத்தின் ஆழம் தோள்களுக்கும் இடுப்புக்கும் இடையில் அமைந்துள்ளது போன்று மேற்கொள்ளப்படும். இன்றைய பரபரப்பான சூழல், மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள் அனைத்தும் நம்மை நோயாளியாக மாற்றுவதற்கு ஒரு காரணியாக அமைகின்றன. அதில் முக்கியமான உடல்நல பிரச்சனைகளில் ஒன்று தான் மூட்டு வலி. முன்பெல்லாம் வயதான காலத்தில் தான் மூட்டு வலிப்பிரச்சனையால் பாதிக்கப்படுவோம். ஆனால் இன்றைக்கு இளம் தலைமுறையினர் உள்பட பெண்கள் அனைவரும் மூட்டு வலி பிரச்சனைக்கு சிகிச்சை பெற்றுவருவது வாடிக்கையாகிவிட்டது. தோள்பட்டை, கை மூட்டு, கை மணிக்கட்டு, கால் மூட்டு, இடுப்பு மூட்டு என பல்வேறு மூட்டு வலி பிரச்சனைகள் ஏற்படும் நிலையில், ஹைட்ரோதெரபி எனப்படும் நீர் சிகிச்சை இதற்கு நல்ல தீர்வாக அமையும் என்கின்றனர் மருத்துவர்கள்.. அது என்ன நீர் சிகிச்சை? எப்படி மூட்டு வலிக்குத் தீர்வு காண முடியும் என்பது? குறித்து குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.. ஹைட்ரோதெரபி என்றால் என்ன? நீச்சல் குளத்தில் செய்யப்படும் உடற்பயிற்சி தான் ஹைட்ரோதெரபி. குளத்தின் ஆழம் தோள்களுக்கும் இடுப்புக்கும் இடையி...

காலைப் பொழுதை ஒரு கப் காஃபியோட தொடங்குங்க..சுவையான, மணமான ஃபில்டர் காஃபியின் சீக்ரெட் ரெசிபி!

Image
 காஃபி சுவையாக இல்லையே என்று வருத்தப்படுபவர்களுக்கு, பில்டர் காபி தயார் செய்வது எப்படி என்பதை பற்றி இங்கே பார்க்கலாம். ஒரு கப் காஃபி! காலையில் எழுந்தவுடன் பலருக்கும் உடனடித் தேவை இது தான். விதவிதமா, வகை வகையா எத்தனையோ வகையான காபி இருக்கு! எஸ்ப்ரெஸ்ஸோ, மோக்கா, லாட்டே, கப்புச்சினோ என்று சர்வதேச காபி வகைகள் நம் நாட்டில் கிடைத்தாலும் நம்முடைய பாரம்பரியமான டிகிரி காஃபி என்று கூறப்படும் ஃபில்டர் காஃபிக்கு மகத்துவம் என்றுமே குறையாது. காலையில் எழுந்தவுடன் காபி குடித்தால்தான் எனக்கு வேலையே ஓடும் என்று கூறும் லட்சக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். காஃபியின் மணமே நாடி நரம்புகளில் ஊறி எனர்ஜியை கொடுக்கும்! அந்த நாட்களில் காபி கொட்டைகளை வீட்டிலேயே பதமாக வறுத்து அரைத்து, துணியில் வடிகட்டி காப்பி சாப்பிடும் பழக்கம் உள்ளது. ஆனால், காலம் மாற மாற, காபி தயாரிக்கும் பழக்கமும் மாறி விட்டது. சூடான தண்ணீரில் அல்லது சூடான பாலில் கலந்தாலே காஃபி தயார் என்று இன்ஸ்டன்ட் காபியில் பல விதமான பிராண்டுகள் உள்ளன. இருப்பினும், ஃபில்டர் காபிக்கு உரிய சுவையும் மணமும் தனி.நல்ல ஸ்ட்ராங்கான டிகாஷனில் அதிக அளவு அதிகமாக சர்க்க...

நீங்கள் 100 வயசு வர ஆரோக்கியமா வாழ வேண்டுமா? அப்போ காலையில் இந்த உணவுகளை எடுத்துகோங்க...

Image
 இன்று, நம்மில் பெரும்பாலோர் ஆரோக்கியமற்ற உணவுகளைதான் அதிகம் சாப்பிடுகிறோம். அவற்றை முற்றிலும் தவிர்த்து ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தவகையில் தற்போது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உங்கள் காலை உணவில் எந்தெந்த உணவுகளை சேர்க்கலாம் என்பது பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.   * நீங்கள் சோர்வாக இருந்தால் காலையில் அவித்த முட்டையை சாப்பிடலாம் அல்லது ஆம்லெட் செய்து தோசையுடன் எடுத்துக்கொள்ளலாம். * ஓட்ஸை காலை உணவாக எடுத்துக்கொள்வது நல்லது. இது சமைக்க எளிதாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இரும்பு, பி வைட்டமின்கள், மாங்கனீசு, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் ஆகியவற்றின் நல்ல மூலமாக ஓட்ஸ் உள்ளது. * கீரைகள் மற்றும் பிற காய்கறிகளின் உங்களை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. இது, உங்கள் உடல் எடையை சரியாக நிர்வகிக்கவும் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழவும் உதவுகிறது. * முழு கோதுமை டோஸ்ட் காலை உணவுக்கு ஒரு நல்ல தேர்வு. இன்னும் சுவையாக இருக்க பழங்கள் அல்லது முட்டையை வைத்து சாண்ட்விச் செய்யலாம். * நீங்கள் காலை உணவை சாப்பிடவில்லையென்றால், பழங்களுட...

அடிக்கடி தலைவலி வருதா? இந்த பாட்டி வைத்தியம் செய்தால் உடனே பறந்து போய்டுமாம்...

Image
 தலைவலி ஏற்பட்டால் எந்தவொரு வேலையையும் செய்ய முடியாது. இப்படி தலைவலி வரும் போதெல்லாம் சிலர் மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவார்கள். ஆனால் இப்படி அடிக்கடி சாப்பிட்டால் பின்னாளில் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். மேலும் சிலர் தைலம் தேய்த்து கொண்டே இருப்பார்கள். தலைவலி குணமாக எளிதான பாட்டி வைத்தியங்கள் இருக்கின்றன. கொதிக்கும் தண்ணீரில் காபி கொட்டையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைவலி பறந்து போகும். வெற்றிலை சாறு எடுத்து அதில் கற்பூரம் போட்டு நன்றாக குழைத்து நெற்றியில் பூசவும் தலைவலி குணமாகும். கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி குடித்தால், சூட்டினால் ஏற்படும் தலைவலி குணமாகும். கிராம்பை எடுத்து சிறிது தண்ணீரில் போட்டு ஊற வைத்து பின்பு, மை போன்று அரைத்து நெற்றியில் பூசினால் தலைவலி குணமாகும் தலைவலி குறைய கடுகுத்தூள், அரசி மாவு இவற்றை சரிப்பாதி எடுத்து ஒரு களிபோல் கிளறி அதை நெற்றியில் பற்று போடலாம். டீ அல்லது காபியில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குணமாகும்.  ALSO READ :  உங்க முகம் பிரகாச...

சுவையான சீப்பு சீடை தயாரிப்பு: தீபாவளி ஸ்பெஷல்....

Image
  நமது வீடுகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன சுவிட்ஸ் செய்யலாம் என்று குழப்பத்தில் இருப்போம். அந்த வகையில் மிக இலகுவாகவும், சுவையாகவும் செய்யக்கூடிய சீப்பு சீடை எவ்வாறு செய்யலாம் தொடர்பில் தெரிந்துக் கொள்வோம். தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 2 கப் உளுத்தம் மாவு - அரை கப் கடலை மாவு - அரை கப் கெட்டியான தேங்காய் பால் - அரை கப் வெண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு சுடுநீர் - தேவையான அளவு தயாரிப்பு முறை ஒரு வட்ட வடிவ கோப்பையில் அரிசி மாவு, உளுத்தம் மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து, அத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து கையால் பிசைந்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் தேங்காய் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு முறுக்கு அச்சை எடுத்துக் கொண்டு, தட்டையாக சீப்பு போன்று இருக்கும் அச்சை எடுத்து பொருத்தி, பின் அதில் மாவை வைத்து, ஒரு தட்டில் நேராக ஒரு கோடு போன்று பிழிய வேண்டும். பின் கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி, பின் அதனை உருட்டிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்...

சூடான சாதத்திற்கு சூப்பரான செட்டிநாடு மட்டன் உப்பு கறி!

Image
  பொதுவாக தமது வீடுகளில் ஞாயிறு தினங்களில் மதிய உணவிற்கு சாதத்துடன் என்ன சேர்க்கலாம் என சிலர் குழப்பங்கள் இருப்போம். இது போன்று குழப்பங்களிலுள்ள போது சூடான சாதத்துடன் சூப்பரான செட்டிநாடு மட்டன் உப்பு கறி சேர்த்துக் கொள்ளலாம். அந்த வகையில் மட்டன் உப்பு கறி எவ்வாறு செய்யலாம் குறித்து தெரிந்துக் கொள்வோம். தேவையான பொருட்கள்: எலும்பில்லாத மட்டன் - 300 கிராம் சின்ன வெங்காயம் - 20 பூண்டு - 20 பற்கள் இஞ்சி - 1 இன்ச் குண்டு வரமிளகாய் - 10 தக்காளி - 1 எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் தயாரிப்பு முறை முதலில் கறிக்கு தேவையான காய்கறிகளான வெங்காயம், தக்காளி, இஞ்சி போன்றவற்றை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். இதனுடன் பூண்டையும் தட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர், குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, இஞ்சி, பூண்டு, பாதி வெங்காயம், பாதி மிளகாய் போன்றவற்றை ஒன்றாக சேர்த்து சிறிது நேரம் வதங்க விட வேண்டும். பொன்னிறமாக வதங்கிய பிறகு சுத்தபடுத்திய மட்டன் துண்டுகளை அதனுடன் சேர்த்து, அதோடு, தக்காளி, மஞ்சள் தூள் ம...

இப்படி மாவு அரைத்தால் தோசை, இட்லி, ஆப்பம் மூன்றையும் பஞ்சு போல் சுடலாம்...!

Image
 இட்லி , தோசை , ஆப்பம் என்பது நம் இல்லங்களில் தவிர்க்க முடியாத காலை உணவு. இந்த உணவுகளுக்கு தனியாக மாவு அரைக்க வேண்டாம். சிம்பிள் ட்ரிக்ஸாக மாவை இப்படி அரைத்துப் பாருங்கள். இட்லி சுடுவதில் நீங்கள்தான் கில்லி...!   தேவையான பொருட்கள் இட்லி அரிசி - 5 கப் உளுந்து - 1 கப் வெள்ளை அவல் - கால் கப் வெந்தயம் - 1 ஸ்பூன் உப்பு - 3 ஸ்பூன் செய்முறை அரிசி , உளுந்து , அவல் மூன்றையும் ஒரே கப்பில் அளவு எடுக்க வேண்டும். அரிசியை தனி பாத்திரத்திலும், அவல், உளுந்து வெந்தயம் மூன்றையும் ஒரு பாத்திரத்திலும் ஊற வைக்க வேண்டும். நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தேவைப்பட்டால் இரண்டு ஸ்பூன் ஜவ்வரிசியும் கலந்துகொள்ளலாம். முதலில் ஊற வைத்த உளுந்துக் கலவையை அரைக்கவும். உளுந்து கெட்டியாக பஞ்சு போல் உப்பி வரும். அவ்வாறு வந்தால் அரைத்துவிட்டதென அர்த்தம். அதை தனியாக பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுத்ததாக அரிசியை கொட்டி அரைக்கவும், அரிசி முற்றிலும் நைஸ் பதத்திற்கு அரைக்கக் கூடாது. சற்று மொறமொறப்பாக அரைக்க வேண்டும். அரைக்கும் போதே அதில் மூன்று ஸ்பூன் உப்பு சேர்க்கவும். அதோடு அரைத்த உளுந்தையும் கொட...

உடற்பயிற்சி செய்யும்போது இந்த விஷயங்களை அவசியம் செய்திடுங்க!

Image
 பொதுவாக ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி முக்கியமானதாக கருதப்படுகிறது. அனைவரும் தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். அதிலும் உடற்பயிற்சிகளை செய்யும் முன் ஒரு சில விஷயங்களை கடைபிடிப்பது அவசியமாகும். தற்போது அவற்றை பார்ப்போம்.  * ஏரோபிக்ஸ் பயிற்சிகள், உடல் வலிமையை அதிகரிக்கச் செய்யும் பயிற்சிகள் என வெவ்வேறு பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். * உடற்பயிற்சிக்கும் போதிய நேரம் ஒதுக்க வேண்டும். உடற்பயிற்சிக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கினால், மற்ற விஷயங்களுக்கு தானாகவே நேரம் கிடைத்துவிடும். ஏனெனில் உடற்பயிற்சி செய்வதால் மந்த உணர்வு நீங்கும். எந்த வேலையையும் சுறுசுறுப்பாக செய்து விட முடியும்.  * நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக உடற்பயிற்சி செய்வது கூடுதல் நன்மைகளை தரும். உடற்பயிற்சி செய்வதை குறிக்கோளாக கடைப்பிடிக்க தொடங்கிவிடுவீர்கள். அவர்களுடன் சேர்ந்து புதிய உடற் பயிற்சிகளையும் முயற்சிக்க பழகிவிடுவீர்கள். * உடற்பயிற்சி செய்யதொடங்கும்போது, உணவிலும் கவனம் செலுத்துங்கள். பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் சமச்சீரான உணவை உண...

உங்க முகம் பிரகாசமாக ஜொலிக்கனுமா? இதை மறக்கமால் பண்ணுங்க போதும்...

Image
 பொதுவாக வெயிற்காலங்களில் பலருக்கு முகம் பிரகாசமிழந்து பொலிவின்றி காணப்படும். இதற்கு சூரியகதிர்களே காரணம். இழந்துபோன பொலிவை மீண்டும் திருப்பி எடுக்க ஏராளமான வழிகள் உள்ளன. அதில் இயற்கை வழிகளே சிறந்தது. அந்தவகையில் முகத்தினை பொலிவாக மாற்ற ஒரு சில இயற்கை வழிகளை பார்ப்போம். * பச்சை பாலை பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் காய வைத்து கழுவலாம். இதனால் முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகள் நீங்கி, மென்மையாக இருக்கும். தினமும் இதை செய்யலாம். * 5 அல்லது 6 பாதாமை எடுத்து அரைத்து முகத்திற்கு பேக் போடலாம். இது முகத்தை பளபளவென்று வைப்பதோடு, பேசியல் செய்தது போன்று ஜொலிக்கும். * பால் சூடுபடுத்தும் போது மேலே ஆடைக் கட்டும். அதை எடுத்து நன்கு ஆரவிட்டு முகத்தில் பூசி மசாஜ் செய்யலாம். இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, முகம் பிரகாசமாக இருக்கும். * ஒரு கிண்ணத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து ஆவி(வேது) பிடிக்கலாம். மாதம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் படியும் அழுக்குகள் நீங்கும். முகப்பரு அதிகம் இருப்பவர்கள் வெந்நீரில் ஒரு கைப்பிடி துளசி மற்றும் வேப்பிலை போட்டு வேது பிடிக்கலாம். * பழத்த பப்பாளி பழத்தை கூழா...

மஞ்சள் கலந்த தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால் கிடைக்கும் மருத்துவ பயன்கள் பற்றி தெரியுமா.?

Image
 வயிற்றில் அல்சர் அல்லது வேறு உடல் நலப்பிரச்சனைகள் நமக்கு ஏற்படுகிறது என்றால் நமக்கு வாய் புண் பிரச்சனைத் தான் முதலில் ஆரம்பிக்கும். இதற்கு எத்தனை மருத்துக்கள் சாப்பிட்டாலும் உடனே சரியாகிவிடாது. மஞ்சளில் உள்ள ஆண்டிமைக்ரோபியல், அழற்சி எதிர்ப்பு பண்புகள், கிருமி நாசினிகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. மஞ்சள் என்றாலே மங்களரமானப் பொருள் என்று தான் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வரும். அதற்கேற்றால் போல் தான் மஞ்சளும் நாம் சமைக்கு உணவுப்பொருள்களுக்கு நிறத்தை வழங்குவதோடு, உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கிறது. அழகு, ஆரோக்கியம், ஆன்மீகம் என இந்த மூன்றில் இருந்தும் மஞ்சளை ஒருபோதும் யாராலும் பிரிக்க முடியாது. குறிப்பாக வீட்டில் லேசாக அடிபட்டவுடன் பெண்கள் முதலில் தேர்வு செய்யும் மருந்துகளில் ஒன்று தான் மஞ்சள். இதில் உள்ள ஆண்டிமைக்ரோபியல், அழற்சி எதிர்ப்புகள், கிருமிநாசினிகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் என ஏராளாமான ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதோடு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியையும் நமக்கு அளிக்கிறது. அதிலும் மஞ்சள் ...

கைக்குள் ஒரு நண்பன்.. சொன்னதெல்லாம் கேட்கும்! அசத்தல் அம்சங்களுடன் கூகுள் அசிஸ்டெண்ட்!

Image
 ஆண்ட்ராய்டு-பவர்ட் டிவைஸ்களில் சிறந்த காலிங் மற்றும் டெக்ஸ்ட்டிங் அனுபவத்தை  கூகுள் சமீபத்தில் பிக்சல் 7 சீரிஸின் அதிகாரப்பூர்வ அறிமுகத்தின் போது, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஹோம் ஆட்டோமேஷன் டிவைஸ்களில் இருக்கும் கூகுள் அசிஸ்டென்ட் அம்சத்தில் வர உள்ள சில புதிய அப்டேட்கள் பற்றியும் அறிவிப்பையும் நிறுவனம் வெளியிட்டது. Google Assistant- ல் வரவிருக்கும் புதிய அம்சங்கள் கூகுள் முன்பை விட யூஸர் ஃபிரெண்ட்லியாக இருக்கும் என்று கூகுள் கூறி இருக்கிறது. அலாரங்களை செட் செய்வது அல்லது மியூசிக்கை ப்ளே செய்வது போன்ற பல டாஸ்க்குகளை செய்ய உங்கள் Android போன் மூலம் Google Assistant- ஐ பயன்படுத்தலாம். மேலும் இந்த அம்சம் இது சில வீட்டு ஆட்டோமேஷன் டிவைஸ்களை கூட கையாள உதவுகிறது. ஐபோனின் Siri- யை போலவே, கூகுள் அசிஸ்டென்ட்டிடம் யூஸர்கள் பொதுவான கேள்விகளைக் கேட்கலாம். உங்கள் டிவைஸ்கள் மற்றும் ஸ்மார்ட் ஹோம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த, காலண்டர்கள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களிலிருந்து தகவலை அக்சஸ் செய்ய, உங்கள் க்ரோம்கேஸ்ட் அல்லது பிற இணக்கமான டிவைஸ்களில் கன்டென்டை பிளே செய்ய என பல வகைகளில் ...

இனி பாஸ்வோர்ட் இல்லாமல் உள்நுழையலாம்: கூகுளின் புதிய அம்சம் அறிமுகம்!

Image
 கடவுச் சாவியை உருவாக்கும்போது, ​​தொடர்புடைய பொது விசை மட்டுமே ஆன்லைன் சேவையால் சேமிக்கப்படும். அதே நேரத்தில் கிரிப்டோகிராஃபிக் பிரைவேட் கீ பயனரின் சாதனங்களில் மட்டுமே இருக்கும். ஆண்ட்ராய்டு மற்றும் கூகுள் குரோம் பயனர்களுக்கு தங்கள் கணக்குகளுக்கு தனிப்பட்ட கடவுச்சொற்கள் (Password) இல்லாமல் வெவ்வேறு சேவைகளில் உள்நுழைவதற்கான புதிய அம்சத்தை கூகுள் வெளியிட்டுள்ளது. பாஸ் கீ என்றால் என்ன? 'பாஸ்கி'(passkey) எனப்படும் புதிய அம்சம் கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்கும் மற்றும் பாரம்பரிய இரு வழி அங்கீகார முறைக்கு எளிதான மாற்றாக மாறும் என்று கூகுள் கூறியுள்ளது. பாஸ் கீ என்பது உலகளாவிய வலை கூட்டமைப்பு (W3C) மற்றும் FIDO அலையன்ஸ் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது. இது பயனர்களுக்கான கடவுச்சொல் இல்லாத உள்நுழைவு விருப்பமாகும். இதன்மூலம் எந்த ஒரு இணையதளம் அல்லது பயன்பாட்டை அணுகவும் கடவுச்சொல்லிற்குப் பதிலாக, பயனர்கள் PINகள் அல்லது பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை நிரூபிக்கும் விருப்பத்தைப் பெறுவார்கள். கூகுளின் கூற்றுப்படி , கடவுச் சாவியை உருவாக்கும்போது, ​​தொடர்புடைய பொது விசை மட...

வீட்டிலேயே மொறு மொறுன்னு மிக்சர் தயார் செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து அசத்துங்கள்...

Image
  ஒரு பாக்கெட் சேமியாவை வைத்து மொறு மொறுன்னு மிக்சர் செய்து அசத்தலாம். அவை எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.  தேவையான பொருட்கள் சேமியா -1 கப் அளவு உப்பு - 1/2 ஸ்பூன் எண்ணெய் - 1 ஸ்பூன் அரிசி மாவு – 1/4 கப் கான்பிளவர் மாவு – 1/4 கப் கோதுமை மாவு – 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்  பூண்டு பல் – 10 கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் வேர்கடலை – 3 டேபிள்ஸ்பூன் முந்திரி பருப்பு – 10 கருவேப்பிலை – 2 கொத்து செய்முறை முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 5 கப் அளவு தண்ணீரை ஊற்றி, உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாக கொதிக்க வையுங்கள். பாயாசம் செய்யக்கூடிய தடிமனான சேமியாவை 1 கப் அளவு எடுத்து 90 சதவீகிதம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். சேமியா வெந்தவுடன் அதை அப்படியே ஒரு சல்லடையில் ஊற்றி, வடிகட்டி விடுங்கள். சேமியா குழையாது உதிரி உதிரியாக இருக்க வேண்டும். பிறகு, ஒரு அகலமான பவுலில், அரிசி மாவு, கான் பிளவர் மாவு, கோதுமை மாவு, மிளகாய்த்தூள் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இதில், வேகவைத்த ஆற வைத்திருக்கும் சேமியாவை தண்ணீர் இல்லாமல் கொட்டி உங்கள் கையை கொண்டு உதிரி உதிரியாக பிச...

முகம் மேடு பள்ளமா குழி விழுந்து அசிங்கமா இருக்கா? இதை போடுங்க மாயமாக மறைந்து போகும்!

Image
 உடல் ஆரோக்கியத்தை போல சரும ஆரோக்கியத்திலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். இது உங்கள் அழகோடு ஆரோக்கியமும் சம்பந்தப்பட்டதாக உள்ளது. உங்கள் சருமம் பிரகாசமாக ஜொலிக்க வீட்டிலேயே முயற்சி செய்யக்கூடிய சில எளிய ஹேக்குகள் உள்ளன. அவற்றை பற்றி  விரிவாக காணலாம். எலுமிச்சை சாறு மற்றும் தேன் எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட் ஆகும். இது சூரிய ஒளியை அகற்ற உதவுகிறது. இதற்கு புதிய எலுமிச்சை சாறு எடுத்து ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்க்கவும். இறந்த செல்களை அகற்ற, நீங்கள் சிறிது சர்க்கரையைச் சேர்த்து, உங்கள் சருமத்தை மெதுவாக ஸ்க்ரப் செய்யலாம். 20-30 நிமிடங்கள் உலர வைத்து கழுவவும். காபி தூள், கொக்கோ பவுடர் மற்றும் தயிர் ஒரு பௌலில் காபித் தூள் மற்றும் கொக்கோ பவுடரை சரிசம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் தேவையான அளவு தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 25-30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை போட்டு வந்தால், சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மேம்படும், சருமத் துளைகள் இறுக்கமடையும் மற்றும் சருமம...

6 வகை நோய்களை குணப்படுத்தும் அற்புத மூலிகை! இதோ...

Image
 பொதுவாக எமது உடலில் ஏற்படும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் மூலிகைகளில் தீர்வு உள்ளது. இதற்கு மூலிகைச் செடிகளின் மருத்துவக் குணங்களை தெரிந்துக் கொண்டால் மாத்திரம் போதும். இந்த மூலிகைகளை வைத்து எந்தவொரு பக்கவிளைவுகள் அற்றமுறையில் வைத்தியம் செய்யமுடியும். ஆனால் இந்த மூலிகைகள் மூலம் செய்யப்படும் வைத்தியமுறை சற்று தாமதமாகவே குணமளிக்கும் அதுவும் நிரந்தர தீர்வாகவே இருக்கும். அந்த வகையில் மருத்துவக்குணங்கள் மிக்க மூலிகைகளின் ஒன்றான சிவகரந்தை மூலிகை பற்றித் தெரிந்துக் கொள்வோம். சிவகரந்தை மூலிகை  சிவகரந்தை மூலிகை பொதுவாக கல்லீரல் நோய்கள், இருமல், மூலம், அஜீரணம், தோல் நோய்கள் மற்றும் காமாலை போன்ற நோய்களுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. சிவகரந்தைச் செடி முதல் வேர் வரையிலான பகுதிகளை எடுத்து உலர்த்தித் தூளாக்கி, இதனை குன்றிமணியுடன் சேர்த்து தேன், நாட்டுசர்க்கரை, நெய் அல்லது வெண்ணெய்யுடன் சேர்த்து காலை, மாலை இரு வேளைகளும் எடுத்துக் கொண்டால் இரத்தம் சம்பந்தபட்ட நோய்கள் குணமடையும். பொதுவாக இந்த மூலிகையை தனியாக பயன்படுத்துவதை தவிர்த்து எதோவொரு மூலிகையுடன் சேர்த்து பயன்படுத்தினால் பலன் இரட்டிப்ப...

ரிச் சுவையில் முட்டை சப்பாத்தி ரோல் சாப்பிட்டு இருக்கிங்களா? இதோ அருமையான ரெசிபி...

Image
  சூப்பரான முட்டை சப்பாத்தி ரோல்10 நிமிடத்தில் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் முட்டை - 1 சப்பாத்தி - 6 பெரிய வெங்காயம் - 3 பச்சை மிளகாய் - 1 கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை   வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி 2 நிமிடம் கிளறி உதிரியாக வந்ததும் இறக்கி வைக்கவும். அடுத்து செய்து வைத்துள்ள சப்பாத்தியில் இந்த முட்டை பொரியலை நடுவில் சிறிது வைத்து சுருட்டவும். இப்போது சுவையான முட்டை ரோல் ரெடி. குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ALSO READ :  சைவ லக்சா லீமக் ....

ஸ்மார்ட்போனை தொடர்ந்து பயன்படுத்தினாலும் 2 நாளைக்கு பேட்டரி தீராமல் இருக்க இதை செய்தால் போதும்...

Image
 ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் மேலோங்கும் இந்த டிஜிட்டல் யுகத்திலும் கூட "மொபைல் பேட்டரி சீக்கிரமாக தீர்ந்து போகும்" பிரச்சனையை பலரும் சந்திக்கின்றனர். நீங்க தொடர்ந்து போனை நோண்டினாலும் பேட்டரி 2 ,3 நாளுக்கு தீராமல் இருக்க என்ன செய்யலாம்? போனின் பேட்டரி வேகமாக 'ட்ரை' ஆவதற்கு மிகவும் வெளிப்படையான காரணங்களில் ஒன்று - அதிகப்படியான டிஸ்பிளே ப்ரைட்னஸ்! ஆகவே ப்ரைட்னஸை குறைத்து வைத்து போனை இயக்கினால் பேட்டரியை மிச்சப்படுத்தலாம். நீங்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும் கூட சில ஆப்கள், பேக்கிரவுண்டில் வேலை செய்துகொண்டே தான் இருக்கும்! எடுத்துக்காட்டிற்கு விபிஎன், ஆன்டி-வைரஸ், ஹெல்த் மற்றும் காலெண்டர். இதன்மூலம் விரைவில் பேட்டரி டவுன் ஆகும். இரவு நேரங்களில் கூட மொபைல் டேட்டாவை அல்லது வைஃபை கனெக்க்ஷனை ஆப் / டிஸ்கனெக்ட் செய்யாமல்.. 24 மணி நேரமும் ஆன்லைனில் / இண்டர்நெட்டில் இருக்கும் வழக்கத்தை பலரும் கொண்டுள்ளோம். இதை மாற்றி கொண்டால் பேட்டரி சிறிது தப்பிக்கும். சில நேரங்களில், இது உங்கள் போனின் பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போவதற்கு பின்னால் ஆப்களோ அல்லது செட்டிங்ஸோ இருக்காது; அந்த...

பொடுகு தொல்லையா? கவலை விடுங்க.. இதனை எளியமுறையில் போக்க சூப்பர் டிப்ஸ் இதோ!

Image
 பொதுவாக இன்றைய காலத்தில் கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக அரிப்பு ஏற்படும். தலை பொடுகு மிகவும் எரிச்சலூட்டும் முடி பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கிறது. பொடுகு தொல்லை பல்வேறு காரணங்கள் வருகின்றன. குறிப்பாக ஊட்டச்சத்துக் குறைபாடு முதல் நம்முடைய உடலில் உள்ள சில நோய் அறிகுறிகள், நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள் கலந்த பொருட்கள் என முடியில் பொடுகு வர காரணங்கள் கூறப்படுகின்றது. இதனை எளியமுறையில் போக்கலாம். தற்போது இதனை போக்கும் சூப்பர் டிப்ஸ் ஒன்றை பார்ப்போம்.       முல்தானி மட்டிகளை வாங்கவும். ஒரு பாத்திரத்தில் 2-3 டீஸ்பூன் முல்தானி மட்டியை எடுத்துக் கொள்ளவும். முல்தானி மிட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் செய்து கொள்ளவும். நீங்கள் அதிகமாக தண்ணீர் சேர்க்க வேண்டாம் என்பதை உறுதிப்படுத்தவும்.ஏனெனில், அதிகமாக தண்ணீர் சேர்த்தால், பயன்படுத்த கடினமாக இருக்கும். மேலும், எந்த கட்டிகளும் இல்லாமல், மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும்.   இப்போது, இந்த பேஸ்ட்டை உங்கள் உச்சந்தலையிலும், முடி முழுவதும் தடவ வேண்டும். நீங்க...

இறந்தவர்களை உயிருடன் கொண்டுவரும் முயற்சி., மனித உடல்களை பதப்படுத்திவைக்கும் அமெரிக்க நிறுவனம்!

Image
 இதுவரை 199 மனித தலைகள் மற்றும் உடல்களை உறையவைத்து பதப்படுத்தி வைத்துள்ளனர். எதிர்காலத்தில் என்றோ ஒருநாள் புத்துயிர் பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் கிரையோபிசர்வ் முறையில் உடல்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ஸ்காட்ஸ்டேலில் உள்ள Alcor Life Extension Foundation எனும் என்ஜிஓ நிறுவனம், திரவ நைட்ரஜனால் நிரப்பப்பட்ட தொட்டிகளுக்குள் 199 மனிதர்களின் உடல்கள் மற்றும் தலைகளை பதப்படுத்தி வைத்துள்ளது. பதப்படுத்தப்பட்ட உடல்களின் உயிரிமயாளர்கள், எதிர்காலத்தில் விஞ்ஞானம் இன்றைய திறனைத் தாண்டி முன்னேறியிருக்கும் போது புத்துயிர் பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் கிரையோபிசர்வ் (cryopreserve) என்ற இந்த முறையை தேர்வு செய்துள்ளனர். Cryopreservation என்பது திரவ நைட்ரோஜன் (Liquid Nitrogen) நிரப்பப்பட்ட தொட்டிகளில் மனித உடல்களை உறையவைத்து பதப்படுத்தும் தொழில்நுட்பம் ஆகும். பதப்படுத்தப்பட்டுள்ள மனித உடல்களில் பெரும்பாலானவை கடுமையான புற்றுநோய் அல்லது சிகிச்சைவழி தீர்க்கமுடியாத பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் என்று Alcor Life Extension Foundation கூறுகிறது. 2 ...

Popular posts from this blog

முகத்தில் காணப்படும் அதிகபட்ச எண்ணெய்யை போக்க வேண்டுமா? இந்தவொரு பொருளை இப்படி பயன்படுத்தினாலே போதும்!

120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?