நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உங்க முகம் பிரகாசமாக ஜொலிக்கனுமா? இதை மறக்கமால் பண்ணுங்க போதும்...

 பொதுவாக வெயிற்காலங்களில் பலருக்கு முகம் பிரகாசமிழந்து பொலிவின்றி காணப்படும். இதற்கு சூரியகதிர்களே காரணம்.

இழந்துபோன பொலிவை மீண்டும் திருப்பி எடுக்க ஏராளமான வழிகள் உள்ளன. அதில் இயற்கை வழிகளே சிறந்தது.

அந்தவகையில் முகத்தினை பொலிவாக மாற்ற ஒரு சில இயற்கை வழிகளை பார்ப்போம்.

* பச்சை பாலை பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் காய வைத்து கழுவலாம். இதனால் முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகள் நீங்கி, மென்மையாக இருக்கும். தினமும் இதை செய்யலாம்.

* 5 அல்லது 6 பாதாமை எடுத்து அரைத்து முகத்திற்கு பேக் போடலாம். இது முகத்தை பளபளவென்று வைப்பதோடு, பேசியல் செய்தது போன்று ஜொலிக்கும்.

* பால் சூடுபடுத்தும் போது மேலே ஆடைக் கட்டும். அதை எடுத்து நன்கு ஆரவிட்டு முகத்தில் பூசி மசாஜ் செய்யலாம். இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, முகம் பிரகாசமாக இருக்கும்.

* ஒரு கிண்ணத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து ஆவி(வேது) பிடிக்கலாம். மாதம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் படியும் அழுக்குகள் நீங்கும். முகப்பரு அதிகம் இருப்பவர்கள் வெந்நீரில் ஒரு கைப்பிடி துளசி மற்றும் வேப்பிலை போட்டு வேது பிடிக்கலாம்.

* பழத்த பப்பாளி பழத்தை கூழாக்கி ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசலாம் அல்லது வாழைப்பழ கூழையும் உபயோகிக்கலாம். இது இயற்கை ப்ரூட் பேசியல்.   



ALSO READ : முகம் மேடு பள்ளமா குழி விழுந்து அசிங்கமா இருக்கா? இதை போடுங்க மாயமாக மறைந்து போகும்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்