நீங்கள் 100 வயசு வர ஆரோக்கியமா வாழ வேண்டுமா? அப்போ காலையில் இந்த உணவுகளை எடுத்துகோங்க...
- Get link
- X
- Other Apps
இன்று, நம்மில் பெரும்பாலோர் ஆரோக்கியமற்ற உணவுகளைதான் அதிகம் சாப்பிடுகிறோம்.
அவற்றை முற்றிலும் தவிர்த்து ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்தவகையில் தற்போது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உங்கள் காலை உணவில் எந்தெந்த உணவுகளை சேர்க்கலாம் என்பது பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
* நீங்கள் சோர்வாக இருந்தால் காலையில் அவித்த முட்டையை சாப்பிடலாம் அல்லது ஆம்லெட் செய்து தோசையுடன் எடுத்துக்கொள்ளலாம்.
* ஓட்ஸை காலை உணவாக எடுத்துக்கொள்வது நல்லது. இது சமைக்க எளிதாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இரும்பு, பி வைட்டமின்கள், மாங்கனீசு, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் ஆகியவற்றின் நல்ல மூலமாக ஓட்ஸ் உள்ளது.
* கீரைகள் மற்றும் பிற காய்கறிகளின் உங்களை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. இது, உங்கள் உடல் எடையை சரியாக நிர்வகிக்கவும் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழவும் உதவுகிறது.
* முழு கோதுமை டோஸ்ட் காலை உணவுக்கு ஒரு நல்ல தேர்வு. இன்னும் சுவையாக இருக்க பழங்கள் அல்லது முட்டையை வைத்து சாண்ட்விச் செய்யலாம்.
* நீங்கள் காலை உணவை சாப்பிடவில்லையென்றால், பழங்களுடன் நாளை தொடங்குங்கள். சமச்சீரான காலை உணவுக்கு, நீங்கள் அதை மற்ற உயர் புரதம் அல்லது நார்ச்சத்து உணவுகளுடன் கூட இணைத்து சாப்பிடலாம்.
* நீங்கள் சுவையாகவும் எளிதாகவும் ஏதாவது செய்ய விரும்பினால், சியா விதைகளை எந்த உணவிலும் சேர்க்கலாம். ஸ்மூத்தி, சால்ட் மற்றும் தயிர் போன்ற எந்த உணவுகளிலும், வெறும் தண்ணீரிலும் கூட சேர்த்து கொள்ளவது நல்லது.
* அவல் அரிசியை உங்களுக்கு பிடித்த சில காய்கறிகளுடன் சமைக்கலாம் மற்றும் மசாலாப் பொருட்களுடன் ஒரு நல்ல காலை உணவாக தயாரிக்கலாம்.சியாவை சேர்க்கலாம்.
ALSO READ : உடற்பயிற்சி செய்யும்போது இந்த விஷயங்களை அவசியம் செய்திடுங்க!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment