நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கைக்குள் ஒரு நண்பன்.. சொன்னதெல்லாம் கேட்கும்! அசத்தல் அம்சங்களுடன் கூகுள் அசிஸ்டெண்ட்!

 ஆண்ட்ராய்டு-பவர்ட் டிவைஸ்களில் சிறந்த காலிங் மற்றும் டெக்ஸ்ட்டிங் அனுபவத்தை  கூகுள்


சமீபத்தில் பிக்சல் 7 சீரிஸின் அதிகாரப்பூர்வ அறிமுகத்தின் போது, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஹோம் ஆட்டோமேஷன் டிவைஸ்களில் இருக்கும் கூகுள் அசிஸ்டென்ட் அம்சத்தில் வர உள்ள சில புதிய அப்டேட்கள் பற்றியும் அறிவிப்பையும் நிறுவனம் வெளியிட்டது.

Google Assistant-ல் வரவிருக்கும் புதிய அம்சங்கள் கூகுள் முன்பை விட யூஸர் ஃபிரெண்ட்லியாக இருக்கும் என்று கூகுள் கூறி இருக்கிறது.

அலாரங்களை செட் செய்வது அல்லது மியூசிக்கை ப்ளே செய்வது போன்ற பல டாஸ்க்குகளை செய்ய உங்கள் Android போன் மூலம் Google Assistant-ஐ பயன்படுத்தலாம். மேலும் இந்த அம்சம் இது சில வீட்டு ஆட்டோமேஷன் டிவைஸ்களை கூட கையாள உதவுகிறது.


ஐபோனின்Siri-யை போலவே, கூகுள் அசிஸ்டென்ட்டிடம் யூஸர்கள் பொதுவான கேள்விகளைக் கேட்கலாம். உங்கள் டிவைஸ்கள் மற்றும் ஸ்மார்ட் ஹோம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த, காலண்டர்கள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களிலிருந்து தகவலை அக்சஸ் செய்ய, உங்கள் க்ரோம்கேஸ்ட் அல்லது பிற இணக்கமான டிவைஸ்களில் கன்டென்டை பிளே செய்ய என பல வகைகளில் யூஸர்களுக்கு உதவுகிறது கூகுள் அசிஸ்டென்ட்.

கூகுள் அசிஸ்டென்ட்டில் வர உள்ள புதிய அம்சங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்...

அசிஸ்டென்ட் வாய்ஸ் டைப்பிங்:

கூகுள் அசிஸ்டென்ட் வாய்ஸ் டைப்பிங் அம்சமானது சாதாரணமாக கீபோர்டை பயன்படுத்தி டைப் செய்வவதை விட 2.5 மடங்கு ஸ்பீடாக வேலை செய்யும் என்று கூகுள் தெரிவித்து உள்ளது. இந்த ஸ்பீட் இன்கிரீஸ் ஆங்கில மொழிக்கு மட்டுமல்ல, ஸ்பானிஷ், இத்தாலியன் மற்றும் பிரெஞ்சு மொழிகளுக்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த அசிஸ்டென்ட் வாய்ஸ் டைப்பிங் நீங்கள் டைப் செய்ய நினைக்கும் மெசேஜ்களுக்கு தொடர்புடைய emoji-களைப் பரிந்துரைக்கும். இந்த அம்சம் மூலம் மெசேஜ்களை ஸ்பீடாக டைப் செய்ய, கரெக்ஷன் செய்ய மற்றும் அனுப்ப யூஸர்களை எளிதாக அனுமதிக்கும்.

மேம்படுத்தப்பட்ட காலிங் மற்றும் மெசேஜிங் ஆப்ஷன்ஸ்:

ஆண்ட்ராய்டு-பவர்ட் டிவைஸ்களில் சிறந்த காலிங் மற்றும் டெக்ஸ்ட்டிங் அனுபவத்தை கூகுள் புதிய அம்சம் மூலம் உருவாக்குகிறது. பிக்சல் யூஸர்கள் கால் ஸ்கிரீனிங், டைரக்ட் மை கால், வாய்ஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்ஷன் மற்றும் "Quick Phrases" போன்ற அம்சங்களை அனுபவித்து மகிழ்ந்துள்ளனர், இது ஒவ்வொரு முறையும் "ஹே கூகுள்" என்று சொல்ல அவசியமின்றி சில பணிகளில் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ உதவியை வழங்குகிறது.

இருப்பினும் பிக்சல் 7 டிவைஸில் அசிஸ்டன்ட்டிற்கான புதிய அப்டேட்கள் மூலம், யூஸர் ஃபோன் அழைப்பை எடுக்க தயாராக இல்லாதபோதும் அதை நிராகரிக்க விரும்பும் போதும் இப்போது "Silence" என்று சொல்லலாம். கூடுதலாக பிக்சல் 7-ல் உள்ள ரெக்கார்டர் ஆப்-ல், ஒவ்வொரு வார்த்தைகளையும் தனித்தனியாக வேறுபடுத்த ஸ்பீக்கர் லேபிள்கள் விரைவில் சேர்க்கப்படும் என தெரிகிறது.

- கால் ஸ்கிரீன் அம்சம் தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க உதவுகிறது மற்றும் கடந்த ஆண்டு யூஸர்களுக்கு வந்த 600 மில்லியன் கால்ஸ்களை கையாண்டுள்ளது.

- Direct My Call அம்சம் இப்போது கால் மெனு ஆப்ஷன்களை காண்பிக்கும், எனவே lengthy recorded menu-விற்காக காத்திருக்காமல், உங்களுக்கு தேவையானதை பெற காத்திருக்க தேவையில்லை.

- வாய்ஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்ஷன் Google-ன் Messages app-ல் ஆடியோ மெசேஜ்களை எளிதாக கேட்க யூஸர்களுக்கு உதவுகிறது.

புதிய பிக்சல் டிவைஸ்களில்...

கூகுள் அசிஸ்டண்ட் மூலம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பிக்சல் வாட்சில் யூஸர்கள் தங்கள் வாய்ஸை புதிய வழிகளில் பயன்படுத்தலாம். எப்படி என்றால் மெசேஜை அனுப்ப, டைமரை செட் செய்ய, கனெக்டட் ஹோம் டிவைஸ்களை கன்ட்ரோல் செய்ய என பயன்படுத்தலாம்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!