6 வகை நோய்களை குணப்படுத்தும் அற்புத மூலிகை! இதோ...
- Get link
- X
- Other Apps
பொதுவாக எமது உடலில் ஏற்படும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் மூலிகைகளில் தீர்வு உள்ளது.
இதற்கு மூலிகைச் செடிகளின் மருத்துவக் குணங்களை தெரிந்துக் கொண்டால் மாத்திரம் போதும்.
இந்த மூலிகைகளை வைத்து எந்தவொரு பக்கவிளைவுகள் அற்றமுறையில் வைத்தியம் செய்யமுடியும்.
ஆனால் இந்த மூலிகைகள் மூலம் செய்யப்படும் வைத்தியமுறை சற்று தாமதமாகவே குணமளிக்கும் அதுவும் நிரந்தர தீர்வாகவே இருக்கும்.
அந்த வகையில் மருத்துவக்குணங்கள் மிக்க மூலிகைகளின் ஒன்றான சிவகரந்தை மூலிகை பற்றித் தெரிந்துக் கொள்வோம்.
சிவகரந்தை மூலிகை
சிவகரந்தை மூலிகை பொதுவாக கல்லீரல் நோய்கள், இருமல், மூலம், அஜீரணம், தோல் நோய்கள் மற்றும் காமாலை போன்ற நோய்களுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
சிவகரந்தைச் செடி முதல் வேர் வரையிலான பகுதிகளை எடுத்து உலர்த்தித் தூளாக்கி, இதனை குன்றிமணியுடன் சேர்த்து தேன், நாட்டுசர்க்கரை, நெய் அல்லது வெண்ணெய்யுடன் சேர்த்து காலை, மாலை இரு வேளைகளும் எடுத்துக் கொண்டால் இரத்தம் சம்பந்தபட்ட நோய்கள் குணமடையும்.
பொதுவாக இந்த மூலிகையை தனியாக பயன்படுத்துவதை தவிர்த்து எதோவொரு மூலிகையுடன் சேர்த்து பயன்படுத்தினால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும். மேலும் இந்த மூலிகை குறிப்பிட்ட ஒரு நோயை குணப்படுத்த காலவரையறை எடுத்துக் கொள்ளும்.
சிவகரந்தையின் வேர் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும். சிவக்கரந்தை போடி மஞ்சள் காமாலையை முற்றிலும் குணப்படுத்தக் கூடியது. இந்த மூலிகை செடியை பூக்கும் முன்பே கொண்டுவந்து மண்ணில்லாமல் சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி வேரோடு எல்லா பாகங்களையும் இடித்து சூரணம் செய்து ஒரு புதிய மட்கலயத்தில் இட்டு கலாயவாயை கட்டி வைத்து கொள்ள வேண்டும்.
சிவக்கரந்தை மூலிகை செடி இரத்தத்திலுள்ள மாசுக்களை நீக்கி சொறி, சிரங்கு, கரப்பான் முதலிய தோல் நோய்கள் போகும்.
கபத்தை கரைக்கும் மற்றும் நாற்பது நாட்கள் உட்கொண்டால் மேனி அழகு கூடும்.
சிவகரந்தை பொடி மஞ்சள் காமாலையை முற்றிலும் குணப்படுத்தக் கூடியது.
சிவகரந்தை பொடி சிறுநீரக நோய்களை போக்க வல்லது, உஷ்ணத்தால் ஏற்படும் வாந்தியை போக்குகிறது.
சிவகரந்தை பொடி நல்ல பசியை உண்டு பண்ணும், அத்துடன் ரத்தத்தில் உள்ள மாசுக்களை நீக்கும்.
ALSO READ : பொடுகு தொல்லையா? கவலை விடுங்க.. இதனை எளியமுறையில் போக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment