நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காலைப் பொழுதை ஒரு கப் காஃபியோட தொடங்குங்க..சுவையான, மணமான ஃபில்டர் காஃபியின் சீக்ரெட் ரெசிபி!

 காஃபி சுவையாக இல்லையே என்று வருத்தப்படுபவர்களுக்கு, பில்டர் காபி தயார் செய்வது எப்படி என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.


ஒரு கப் காஃபி! காலையில் எழுந்தவுடன் பலருக்கும் உடனடித் தேவை இது தான். விதவிதமா, வகை வகையா எத்தனையோ வகையான காபி இருக்கு! எஸ்ப்ரெஸ்ஸோ, மோக்கா, லாட்டே, கப்புச்சினோ என்று சர்வதேச காபி வகைகள் நம் நாட்டில் கிடைத்தாலும் நம்முடைய பாரம்பரியமான டிகிரி காஃபி என்று கூறப்படும் ஃபில்டர் காஃபிக்கு மகத்துவம் என்றுமே குறையாது.

காலையில் எழுந்தவுடன் காபி குடித்தால்தான் எனக்கு வேலையே ஓடும் என்று கூறும் லட்சக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். காஃபியின் மணமே நாடி நரம்புகளில் ஊறி எனர்ஜியை கொடுக்கும்! அந்த நாட்களில் காபி கொட்டைகளை வீட்டிலேயே பதமாக வறுத்து அரைத்து, துணியில் வடிகட்டி காப்பி சாப்பிடும் பழக்கம் உள்ளது. ஆனால், காலம் மாற மாற, காபி தயாரிக்கும் பழக்கமும் மாறி விட்டது.

சூடான தண்ணீரில் அல்லது சூடான பாலில் கலந்தாலே காஃபி தயார் என்று இன்ஸ்டன்ட் காபியில் பல விதமான பிராண்டுகள் உள்ளன. இருப்பினும், ஃபில்டர் காபிக்கு உரிய சுவையும் மணமும் தனி.நல்ல ஸ்ட்ராங்கான டிகாஷனில் அதிக அளவு அதிகமாக சர்க்கரை போடாமல், திட்டமாக பாலூற்றி, சுடச்சுட பித்தளை டபரா டம்ளரில் பரிமாறப்படும் ஃபில்டர் காபியின் சுவைக்கு ஈடு இணையே கிடையாது! இப்போது கூட, இன்ஸ்டன்ட் காபி பழக்கம் இல்லை.

எந்த காபிப்பொடி வாங்கினாலுமே எனக்கு சரியாக பில்டர் டிகாஷன் தயார் செய்ய முடியவில்லை, காஃபி சுவையாக இல்லையே என்று வருத்தப்படுபவர்களுக்கு, பில்டர் காபி தயார் செய்வது எப்படி என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

ஃபில்டர் காஃபி ரெசிப்பி:

பொதுவாக காபி பொடி தயாரிக்கும் பொழுது, முழுக்க முழுக்க காபி கொட்டைகளை வறுத்து அரைத்து பொடி செய்தால் காபி சுவையாக இருக்காது. இதற்கு சிக்கிரியும் சேர்த்துக் கொள்ள வேண்டும். காபி பொடி 80% சதவீதம் என்றால் சிக்கிரி 20% இருப்பது சரியான கலவை.

சுவையான ஃபில்டர் காபிக்கு அடிப்படை தேவை நல்ல காபி ஃபில்டர். வடிக்கட்டி மட்டும் இருந்தால் ஃபில்டர் காபி சுவையாக இருக்காது.


உங்களிடம் காபி தயாரிப்பதற்கான ஃபில்டர் இருந்தால் பின்வரும் முறையைப் பின்பற்றலாம். காபி ஃபில்டரின் மேல் பகுதியை லேசாக சூடாக்கிக்கொண்டு அதில் சிறிது சர்க்கரையை தூவுங்கள். அதன் பிறகு தேவையான அளவு பில்டர் காபி பொடியை சேர்த்து, ஸ்பூன் வைத்து அதை நன்றாக அழுத்த வேண்டும். காஃபி பொடி ஃபில்டரில் தளர்வாக இருக்கக் கூடாது. அதற்கு மேல் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து, நன்றாக கொதிக்கும் தண்ணீரை ஊற்றுங்கள். 10 – 15 நிமிடங்கள் வரை காத்திருந்தால் சுவையான டிகாஷன் தயார். சர்க்கரை சேர்ப்பது காபி டிகாஷன் கெட்டியாக கிடைப்பதற்கு உதவும்.

உங்களிடம் காபி பில்டர் இல்லை என்றால் நீங்கள் சாதாரண வடிகட்டியில் பில்டர் பேப்பரை வைத்து பயன்படுத்தலாம். காபி பொடியை பில்டர் பேப்பர் மீது போட்டு, ஸ்பூன் வைத்து நன்றாக ப்ரஸ் செய்யுங்கள். அதற்கு பிறகு, அதில் கொதிக்கும் நீரை ஊற்றி 10 நிமிடங்கள் காத்திருந்தால் பில்டர் பேப்பர் வழியாக காப்பி இறங்கி டிகாஷன் கிடைத்துவிடும்.


காஃபி நல்ல ஸ்ட்ராங்காக வேண்டுமென்றால், 25% டிகாஷன் மற்றும் 75% பால் என்ற அளவில் கலக்க வேண்டும்.

பால் நன்றாக சூடாக இருக்க வேண்டும். டம்பளர் அல்லது கப்பில் முதலில் டிக்காஷனை ஊற்றி, சர்க்கரை சேர்த்து, பின்பு நல்ல சூடாக இருக்கும் பாலை ஊற்ற வேண்டும். பாலில் டிக்காஷனை சேர்க்கக் கூடாது. ஃபில்டர் காஃபி லேசான கசப்புச் சுவையோடு இருந்தால் அருமையாக இருக்கும். எனவே, ஒரு டம்பளர் காஃபிக்கு ஒரு ஸ்பூன் சர்க்கரை சரியாக இருக்கும். அதிக சர்க்கரை சேர்த்தும் குடிக்கலாம்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!