நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஸ்மார்ட்போனை தொடர்ந்து பயன்படுத்தினாலும் 2 நாளைக்கு பேட்டரி தீராமல் இருக்க இதை செய்தால் போதும்...

 ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் மேலோங்கும் இந்த டிஜிட்டல் யுகத்திலும் கூட "மொபைல் பேட்டரி சீக்கிரமாக தீர்ந்து போகும்" பிரச்சனையை பலரும் சந்திக்கின்றனர்.

நீங்க தொடர்ந்து போனை நோண்டினாலும் பேட்டரி 2 ,3 நாளுக்கு தீராமல் இருக்க என்ன செய்யலாம்?

போனின் பேட்டரி வேகமாக 'ட்ரை' ஆவதற்கு மிகவும் வெளிப்படையான காரணங்களில் ஒன்று - அதிகப்படியான டிஸ்பிளே ப்ரைட்னஸ்! ஆகவே ப்ரைட்னஸை குறைத்து வைத்து போனை இயக்கினால் பேட்டரியை மிச்சப்படுத்தலாம்.

நீங்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும் கூட சில ஆப்கள், பேக்கிரவுண்டில் வேலை செய்துகொண்டே தான் இருக்கும்! எடுத்துக்காட்டிற்கு விபிஎன், ஆன்டி-வைரஸ், ஹெல்த் மற்றும் காலெண்டர். இதன்மூலம் விரைவில் பேட்டரி டவுன் ஆகும்.

இரவு நேரங்களில் கூட மொபைல் டேட்டாவை அல்லது வைஃபை கனெக்க்ஷனை ஆப் / டிஸ்கனெக்ட் செய்யாமல்.. 24 மணி நேரமும் ஆன்லைனில் / இண்டர்நெட்டில் இருக்கும் வழக்கத்தை பலரும் கொண்டுள்ளோம். இதை மாற்றி கொண்டால் பேட்டரி சிறிது தப்பிக்கும்.

சில நேரங்களில், இது உங்கள் போனின் பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போவதற்கு பின்னால் ஆப்களோ அல்லது செட்டிங்ஸோ இருக்காது; அந்த போனின் பேட்டரியே முக்கிய காரணமாக இருக்கலாம்! அதாவது உங்கள் மொபைலின் பேட்டரி பழையதாகி இருக்கலாம். 


ALSO READ : இது குப்பை இல்லை ஹேண்ட் பேக்! பேஷன் ஷோவை ஆச்சரியப்படுத்திய லேஸ் பாக்கெட் கைப்பை!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!