Posts

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆரோக்கியமே செல்வம் என்பதை 2020 நமக்கு உணர்த்தியுள்ளது: பிரதமர் மோடி

Image
  பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை குஜராத்தின் ராஜ்காட்டில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.  பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை குஜராத்தின் ராஜ்காட்டில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் கொரோனா தொற்று நோய்க்கு ந்ட்ர்ஹிரான நடவடிக்கையில் தங்கள் உயிரைப் பணயம் வைத்த கொரோனா வீரர்களை நினைவு கூர்ந்தார். தடுப்பூசி போட்ட பிறகும் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். “ஆரோக்கியமே செல்வம் என்பதை 2020 ஆண்டு நமக்கு நன்றாகக் கற்றுக் கொடுத்தது. இது சவால்கள் நிறைந்த ஆண்டாக இருந்தது. ஆகவே, இந்த ஆண்டின் கடைசி நாள், நமக்காக, தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய கொரோனா வீரர்களை நினைவு கூறி. நான் அவர்களுக்கு தலைவணங்குகிறேன், ”என்றார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை அடுத்த ஆண்டில் செயல்படுத்த இந்தியா தயாராகி வருகிறது என்றும், இதற்கான இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் பிரதமர் மோடி (PM Narendra Modi) கூறினார். கொரோனா தடு...

ஜனவரி 2 முதல் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி ஒத்திகை: மத்திய அரசு

Image
  கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை, ஆந்திர மாநிலம் உட்பட நான்கு மாநிலங்களில் நடத்தப்பட்ட நிலையில், வரும் 2ம் தேதி நாடு முழுவதும் ஒத்திகை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, இன்று குஜராத்தில் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டி நடத்திய உரையில், தடுப்பூசி போடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன என குறிப்பிட்டார். தடுப்பூசி போடும் நடவடிக்கையில், குழப்பம் ஏதும் ஏற்படாமல் இருக்க, பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத்தில் இரண்டு நாட்கள் ஒத்திகை நடைபெற்றது.  இந்நிலையில், தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் எந்த அளவிற்கு தயார் நிலையில் உள்ளது என்பதை மறுஆய்வு செய்ய மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று ஆலோசனை நடத்தினார்.  ஆலோசனையில் பங்கேற்ற. மாநில சுகாராத் துறை செயலாளர்கள், தடுப்பூசி (Corona Vaccine) போடும் பணிகள் தொடர்பாக மாநில அரசுகள் செய்துள்ள ஏற்பாடுகள்...

தலைமுடி உதிர்வதை தடுப்பது எப்படி? நரை முடியை கருப்பாக்க என்ன வழி?

Image
ஒருவரின் தலைமுடி அவரின் அழகை மட்டுமல்லாது, உடல் நலத்தையும் வெளிப்படுத்தும் ஒன்றாக உள்ளது. தலைமுடியை எவ்வாறு பராமரித்துக் கொள்ள வேண்டும், அதிகம் வெள்ளை முடி வருவதற்கு காரணம் என்ன போன்ற பிபிசி தமிழின் கேள்விகளுக்கு பதில் தந்தார் அழகுக் கலை நிபுணர் வசுந்தரா. முன்பெல்லாம் இளநரை என்பது 15-20 வயதில் வந்த நிலை மாறி, குழந்தைகளுக்கு இளநரை வருவது அதிகரித்துள்ளது என்கிறார் அவர். தலை முடி நரைத்தல் மற்றும் உதிர்தல் ஆகியவை குறித்து அவர் கூறிய முக்கியத் தகவல்களை தொகுத்து வழங்குகிறோம். உங்கள் வாழ்வியல் மாற்றங்களும் முடியை நரைக்க வைக்கும். நரைத்த முடி என்பது நீங்கள் போதிய ஊட்டச்சத்து உள்ள உணவை உட்கொள்ளவில்லை என்பதன் அறிகுறி. விட்டமின் பி காம்ப்ளெக்ஸ் இல்லாத உணவுகளை உண்ணுதல், மரபணு என நரை முடி உண்டாகப் பல காரணங்கள் உண்டு. ஸ்ட்ரெயிட்டனிங் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தும் ரசாயனங்கள், மட்டமான மற்றும் தரமில்லாத ஷாம்பு, அதிக அளவில் பொடுகு ஆகியவையும் நரைத்த முடி வரக் காரணமாகும். வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ்தான் முடிக்கு கரு நிறத்தைத் தருகிறது. விட்டமின் பி காம்ளெக்ஸ் மற்றும் அனைத்து வகையான ஊட்டச்சத்து...

உலக நன்மைக்காக ...அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் டும்... டும்... டும்... விருந்து வைத்து கொண்டாடிய கிராம மக்கள்.!

Image
கோயம்புத்தூரில் உலக நன்மைக்காக 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான அரசமரத்திற்கும் வேப்பமரத்திற்கும் கிராம மக்கள் வெகு விமர்சையாக திருமணம் செய்து வைத்து வழிபட்டனர். பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களைத் தெய்வமாக வழிபட்டனர். அதன் வெளிப்பாடாகவே பண்டைய காலத்து மன்னர்கள் தங்கள் கோட்டையில் காவல் மரங்களை நட்டு வழிபட்டனர். இந்துக்களின் வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு என பல மரங்களுக்கு முக்கிய இடமுண்டு. கோயில்களிலும் தல விருட்சமாக மரங்கள் இன்றளவும் வழிபடப்பட்டு வருகின்றன. அனைத்து மரங்களை விடவும் அரச மரத்துக்கு சிறப்பு அதிகம். மரங்களின் அரசன் என்று போற்றப்படுகிறது. இதில் மும்மூர்த்திகளும் வாசம் செய்வதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. தேவலோகத்து மரம் என்றும் அரச மரத்தை ரிஷிகள் போற்றுவர். அரச மரமும் வேப்ப மரமும் இணைந்திருப்பது, சிவசக்தியின் வெளிப்பாடு என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள். அரசமரம் சிவபெருமான் என்றும். வேப்ப மரம் சக்தி எனப்படும் பார்வதி தேவி என்றும் பக்தர்களால் வணங்கப்படுகிறது. யாரும், அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் ஒன்றாக நட்டுவைக்க மாட்டார்கள். அவை, இயற்கையாகவே நதி...

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி

Image
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் வீரியத்துடன் வேகமாக பரவி வருவது, முதலீட்டாளர்களிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதால், இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. பங்குகளை விற்று தள்ளியதால், பிற்பகலில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1406 புள்ளிகள் சரிந்து 45 ஆயிரத்து 554 புள்ளிகளில் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 432 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 13 ஆயிரத்து 328ல் நிலை கொண்டது. வங்கி, நிதி, ஊடக துறை பங்குகளை கடும் சரிவை சந்தித்தன. கடந்த சில வாரங்களாக வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து வந்ததால், தொடர்ந்து புதிய உச்சத்தில் இருந்து வந்த நிலையில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

சபரிமலையில் மேல்சாந்தியின் 3 உதவியாளர்களுக்கு கொரோனா

Image
சபரிமலையில் மேல்சாந்தியின் உதவியாளர்களுக்கு கொரோனா உறுதியானதால், மேல்சாந்தி உட்பட 7பேர் தனிமைப்படுத்தி கொண்டனர். மகரவிளக்கு பூஜைகளுக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. முன்னதாக ஊழியர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் சபரிமலை மேல்சாந்தி ஜெயராஜின் உதவியாளர்கள் 3 பேருக்கு நேற்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மேல்சாந்தி உட்பட 7 பேர் தங்களை தானாகவே தனிமைப்படுத்திக் கொண்டனர். கோயில் நடையைத் திறந்த தந்திரி கண்டரர் ராஜீவரர், இன்று முதல் சிறப்பு பூஜைகளையும் நடத்துவார்.

ஏடன் விமான நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு

Image
ஏமன் நாட்டின் தெற்கே உள்ள ஏடன் விமான நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை. கேபினட் அமைச்சர்கள், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் விமானத்தில் வந்த போது இந்த தாக்குதல் நடைபெற்றது. அவர்கள் விமானத்திற்குள் திரும்பிச் சென்றுவிட்டதால் உயிர் தப்பினர். விமானத்தில் வந்த பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. ராணுவத்தினர் விமான நிலையத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் ஜனவரி முதல் வாரத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை.

Image
தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஜனவரி 2 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. சுகாதாரத்துறையினர், முன்களப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி அசாம், ஆந்திரா, பஞ்சாப், குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் வெற்றிகரமாக ஒத்திகை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மற்ற மாநிலங்களிலும் ஜனவரி 2 ஆம் தேதி முதல் ஒத்திகை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஜனவரி முதல் வாரத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

ஜலதோஷம்,சளி, சைனஸ் போன்றவற்றை நீக்கும் கற்பூரவல்லி

வீடியோ : ஜலதோஷம்,சளி, சைனஸ் போன்றவற்றை நீக்கும் கற்பூரவல்லி video link

இந்தியாவிலேயே மிகவும் உயரமான வானிலை மையம்: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் திறந்து வைத்தார்

Image
புதுடெல்லி :  3500 மீட்டர் உயரத்தில் லே-இல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வானிலை மையத்தை டாக்டர். ஹர்ஷ்வர்தன் திறந்து வைத்தார்.  டெல்லியில் உள்ள மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், லே-இல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வானிலை மையத்தை மத்திய புவி அறிவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர். ஹர்ஷ்வர்தன் காணொலி மூலம் திறந்து வைத்தார். லடாக்கின் துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ண மாத்தூர் இந்நிகழ்ச்சியின் கவுரவ விருந்தினராகக் கலந்து கொண்டார்.  கடல் மட்டத்திலிருந்து 3500 மீட்டர் உயரத்தில் லே-இல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வானிலை மையம், இந்தியாவிலேயே மிகவும் உயரமான வானிலை மையம் ஆகும். இதைத் திறந்து வைத்துப் பேசிய டாக்டர். ஹர்ஷ் வர்தன்,  சர்வதேசத் தரம் வாய்ந்த இந்த மையம், வானிலை தொடர்பான விஷயங்களில் லடாக் நிர்வாகம் மற்றும் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கூறினார். இதற்கிடையே, தொழில்நுட்பத் தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டுக் குழு தயாரித்த தற்சார்பு இந்தியாவுக்கான செயல்திட்டம்...

அடுத்தாண்டு கொரோனா தடுப்பூசி பிரதமர் மோடி.

Image
புதுடில்லி:  அடுத்தாண்டு முதல் உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் துவங்க உள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தடுப்பூசி குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங் முறையில் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: உடல்நலமே நமது சொத்து என்பதை 2020ம் ஆண்டு நமக்கு பாடம் கற்று கொடுத்துள்ளது. அந்த ஆண்டு, கடும் சவால் நிறைந்ததாக இருந்தது. 2020ம் ஆண்டிற்கு வழியனுப்பும் நேரத்தில், இந்த ஆண்டின் சவால்கள் மற்றும் அடுத்த ஆண்டிற்கான முக்கியத்துவத்தை நமக்கு எடுத்து காட்டியுள்ளது. ஒருவருக்கு உடலில் ஏற்படும் காயமானது, அவரின் வாழ்க்கையையும், குடும்பத்தையும் பாதிக்கிறது. தற்போது, நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அடுத்தாண்டு முதல், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் அமலுக்கு வருகிறது. உலக சுகாதாரத்தில், முக்கிய மையமாக இந்தியா மாறி வருகிறது. 2021ம் ஆண்டில், சுகாதாரத்தில், இந்தியாவன் பங்கை அதிகரிக்க வேண்டும். நமது நாட்ட...

கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கி அர்ஜண்டினா அரசு புதிய வரலாற்று சாதனை..! பெண்கள் உற்சாகக் கொண்டாட்டம்..

Image
கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய முதல் லத்தீன் அமெரிக்க நாடு என்று புதிய வரலாற்றைப் படைத்துள்ளது அர்ஜண்டினா. செனட் சபையில் நடைபெற்ற வாக்களிப்பில் 38 உறுப்பினர்கள் ஆதரவளிக்க 29 பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர். முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் பெண்ணிய உரிமை அமைப்புகள் உள்பட ஏராளமான பொதுமக்களும் பெண்களும் பச்சைக் கொடிகளுடன் திரண்டு சாலைகளில் வெற்றி ஆராவாரம் செய்தனர். கருக்கலைப்புக்கு எதிரான கட்டுப்பாடுகளால் பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த கருக்கலைப்புக்கு நீண்ட காலப் போராட்டங்களுக்குப் பிறகு சட்டப்பூர்வமான அனுமதி கிடைத்துள்ளது.

ஆசியாவின் பெரும்பணக்காரர் ஆனார் தண்ணீர் பாட்டில் நிறுவன அதிபர் சோங் சான்சன்..!

Image
சீனாவில் தண்ணீர் பாட்டில் நிறுவன அதிபரான சோங் சான்சன் முகேஷ் அம்பானியை முந்தி ஆசியாவின் பெரும் பணக்காரர் ஆகியுள்ளார். சீனாவைச் சேர்ந்த சோங் சான்சன் வாண்டாய் பயாலஜிக்கல் பார்மசி, நோங்பு ஸ்பிரிங் ஆகிய நிறுவனங்களின் அதிபர் ஆவார். இவரது நிறுவனங்கள் ஊடகம், காளான் வளர்ப்பு, நலவாழ்வு ஆகிய துறைகளிலும் காலூன்றியுள்ளன. புளூம்பெர்க் நிறுவனத்தின் கணக்குப்படி இந்த ஆண்டில் இவரின் சொத்து மதிப்பு 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 5 லட்சத்து 68 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் சொத்து மதிப்பில் இந்தியாவின் முகேஷ் அம்பானியை முந்தியுள்ள சோங் சான்சன், ஆசியாவின் பெரும்பணக்காரராக விளங்குகிறார். உலக அளவில் பதினோராவது பெரும்பணக்காரராக விளங்குகிறார். ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 5 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.

புத்தாண்டுக்கு முந்தைய நாளைச் சிறப்பிக்க டூடுல் வெளியிட்ட கூகுள்..!

Image
ஆங்கிலப் புத்தாண்டுக்கு முந்தைய நாளைச் சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டின் இறுதி நாளான இன்றிரவு 12 மணிக்குப் ஆங்கிலப் புத்தாண்டான 2021 தொடங்குகிறது. அதை நினைவூட்டும் வகையில் கூகுள் வெளியிட்டுள்ள டூடுலில் வீடு வடிவக் கடிகாரத்தில் 2020 எனக் குறிப்பிட்டுள்ளது. இரவு பன்னிரண்டு மணியைத் தொடப்போவதைக் காட்டும் வகையில் அதில் கடிகாரத்தின் முட்களும் வரையப்பட்டுள்ளன. பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகளான டோங்கா, சமோவா, கிரிபாடி ஆகியவற்றில் ஆங்கிலப் புத்தாண்டு முதலில் பிறக்கும். பசிபிக் பெருங்கடலின் நடுவில் உள்ள பேக்கர்ஸ் தீவு, அமெரிக்கன் சமோவா ஆகியவற்றில் கடைசியில் புத்தாண்டு பிறக்கிறது.

டெல்லியில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தது என மத்திய அரசு தகவல்....

Image
விவசாயிகளுடன் நடைபெற்ற 6 வது சுற்று பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் சுமார் 5 மணி நேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரத்து செய்வது, மின்சார திருத்த சட்டத்தை நிறுத்தி வைப்பது என்ற விவசாயிகளின் இரு கோரிக்கைகளை அரசு ஏற்றுள்ளது என்றார். மீதமுள்ள இரு கோரிக்கைகளில் ஒன்றான குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிப்பது குறித்து ஜனவரி 4 ஆம் தேதி நடைபெறும் 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் விவாதிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

வாகனங்களில் பாஸ்டேக் பொருத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

Image
நான்கு சக்கர வாகனங்களுக்கு ஜனவரி 1 முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த முறைக்கு மாறுவதற்கான அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் தற்போது ஃபாஸ்டேக் நடைமுறையில் இருந்தாலும், 75 முதல் 80 சதவீதம் மட்டுமே மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரொக்கமாக கட்டணம் செலுத்தி வாகனங்கள் செல்ல ஒரு வரிசை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. இதற்கும் முற்றுப்புள்ளி வைத்து 100 சதவீதம் ஃபாஸ்டேக் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்திருந்தது. தற்போது இந்த அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஃபாஸ்டேக் வரிசையில் சென்று ரொக்கமாக செலுத்த முயற்சி செய்தால் இரு மடங்காக கட்டணம் செலுத்த நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

2021 பிப்ரவரி மாதத்தில் அனைத்து கிழமைகளும் தலா 4 நாட்கள் வரும் அதிசயம்

Image
  2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அனைத்து கிழமைகளும் தலா 4 நாட்கள் வருவது அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. வாரத்தின் 7 நாட்களும் ஒவ்வொரு தினத்திற்கும் உரிய ஏழு கிரகங்களால் ஆளப்படுவதாக வான் ஜோதிடத்தில் நம்பப்படுகிறது. இந்த 7 நாட்களும் வானில் தென்படும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஏழு ஒளிதரும் பொருட்களுக்குரிய (கிழமை உடைய) நாட்களாகப் பன்னெடுங்காலமாக அறியப்படுகின்றன.  ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய கிழமைகள் 4 முறையும், சில கிழமைகள் 5 நாட்களும் வருவது வழக்கம். ஆனால் 2021 புத்தாண்டில் வருகிற பிப்ரவரி மாதம் எப்போதும் இல்லாதபடி ஒரு அதிசயமாக 7 கிழமைகளும் இந்த மாதத்தில் தலா 4 நாட்கள் வீதம் வருகிறது.  இந்த மாதத்தில் எந்த கிழமையும் 5 நாட்கள் வரவில்லை. வழக்கத்தை விட வித்தியாசமான முறையில் அனைத்து நாட்களும் தலா 4 நாட்கள் வருவதால் இதனை ஒரு அதிசய மாதமாக ஜோதிட ரீதியாகவும், நிபுணர்களாலும் பார்க்கப்படுகிறது. ALSO READ : https://tamildhamakanews.blogspot.com...

வெளிநாடு செல்லாதவருக்கும் பாதிப்பு புதிய கொரோனாவால் அமெரிக்கா அதிர்ச்சி

  வாஷிங்டன்:மரபணு உருமாற்றம் அடைந்துள்ள புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் தென்படத் துவங்கியுள்ளது. வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ளாதவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்தாண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தற்போதுதான் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுஉள்ளது. பிரிட்டன், அமெரிக்கா, கனடா, உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே இந்த தடுப்பூசி தற்போது வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் மரபணு உருமாற்றம் அடைந்துள்ள புதிய கொரோனா வைரஸ் பரவத் துவங்கியுள்ளது. இது நெதர்லாந்து சிங்கப்பூர் உள்பட பல நாடுகளுக்கு பரவியுள்ளது. 'பழைய கொரோனாவைவிட மரபணு உருமாற்றமடைந்துள்ள புதிய கொரோனா மிகவும் வேகமாக பரவக் கூடியது' என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.அதையடுத்து பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கான விமான சேவையை பல நாடுகள் ரத்து செய்துள்ளன.இந்த நிலையில் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் டென்வர் நகரை ஒட்டியுள்ள ஊரகப் பகுதியைச் சேர்ந்த 20 வயது வாலிபருக்கு புதிய மரபணு உருமாற்றமடைந்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் த...

தமிழகத்தில் பரவலாக மழை

Image
  சென்னை : காற்றின் திசைவேக மாறுபாட்டால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்ட வாரியாக மழை: சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய விட்டு விட்டு மழை பெய்தது. மயிலாடுதுறை:  மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, பூம்புகார், கொள்ளிடம், தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தின் சில இடங்களில் மிதமான மழை பெய்தது. திருச்சி  : திருச்சி மாநகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி:  கோவில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் மிதமான மழையும், தஞ்சை தர்மபுரி மற்றும் அரூர் மாவட்ட பகுதிகளில் லேசான மழையும் பெய்தது. ALSO READ : https://tamildhamakanews.blogspot.com/2020/12/blog-post_744.html LINK

“டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்” - தமிழக அரசுக்கு ஜனாதிபதி விருது வழங்கினார்

Image
  டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம் என்ற பிரிவில் தமிழக அரசுக்கு ‘டிஜிட்டல் இந்தியா-2020’ தங்க விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். சென்னை, டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம் என்ற பிரிவில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- டிஜிட்டல் இந்தியா விருதுகள், புதுமையான டிஜிட்டல் தீர்வுகளை முன்னிறுத்தி அவற்றை அனைத்து அரசாங்க நிறுவனங்களும் பின்பற்றுவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்திய தேசிய இணையத்தில் நிறுவப்பட்டுள்ளன. சுகாதாரம், தொழிலாளர், நிதி, சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடையும் பொருட்டு, விரிவான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உபயோகிப்பதில் முன்னோடி முயற்சிகளைக் கொண்டிருக்கும் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தினை, இவ்விருதுகள் கவுரவிக்கின்றன. நம்பிக்கை இணையம், செயற்கை நுண்ணறிவு, எந்திர கற்றல், பல்பொருள் இணையம், இயற்கை மொழி செயலாக்கம், குரல் பயணர் இடைமுகம், பெரிய தரவு மற்றும் பகுப்பாய்வு, மெய்நிகர் உண்மை போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களும் மதிப்பீடு செய...

Popular posts from this blog

முகத்தில் காணப்படும் அதிகபட்ச எண்ணெய்யை போக்க வேண்டுமா? இந்தவொரு பொருளை இப்படி பயன்படுத்தினாலே போதும்!

120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?