நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆரோக்கியமே செல்வம் என்பதை 2020 நமக்கு உணர்த்தியுள்ளது: பிரதமர் மோடி

 


பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை குஜராத்தின் ராஜ்காட்டில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். 


பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை குஜராத்தின் ராஜ்காட்டில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் கொரோனா தொற்று நோய்க்கு ந்ட்ர்ஹிரான நடவடிக்கையில் தங்கள் உயிரைப் பணயம் வைத்த கொரோனா வீரர்களை நினைவு கூர்ந்தார்.


தடுப்பூசி போட்ட பிறகும் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


“ஆரோக்கியமே செல்வம் என்பதை 2020 ஆண்டு நமக்கு நன்றாகக் கற்றுக் கொடுத்தது. இது சவால்கள் நிறைந்த ஆண்டாக இருந்தது. ஆகவே, இந்த ஆண்டின் கடைசி நாள், நமக்காக, தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய கொரோனா வீரர்களை நினைவு கூறி. நான் அவர்களுக்கு தலைவணங்குகிறேன், ”என்றார்.


உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை அடுத்த ஆண்டில் செயல்படுத்த இந்தியா தயாராகி வருகிறது என்றும், இதற்கான இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் பிரதமர் மோடி (PM Narendra Modi) கூறினார்.

கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) நாட்டின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  சுய லாபத்திற்காக பல தரப்பினர் பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர். மக்கள் அதனை நம்பாமல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றார்.


“தடுப்பூசி பணி தொடங்க உள்ள நிலையில் இந்தியாவில் தினசரி பதிவாகும் புதிய தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த புத்தாண்டு 2021 நம்பிக்கை கொடுத்துள்ளது, ”என்று மோடி மேலும் கூறினார்.


உலக சுகாதாரத்தின் அமைப்பின் மையமாக இந்தியா மாறிவிட்டது என்று மோடி கூறினார். "இந்தியாவில் மருத்துவக் கல்வியை மேம்படுத்த குறிக்கோளுடன் அரசு பணியாற்றி வருகிறது. தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்ட பின்னர், சுகாதாரக் கல்வியின் தரம் மற்றும் அளவும் மேம்படும், ”என்று அவர் மேலும் கூறினார்.

குஜராத்தில் (Gujarat) உள்ள ராஜ்காட்டில் அமைய உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனைத் திட்டத்திற்காக 201 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொட்ட மதிப்பு ரூ.1195 கோடி. இந்த மருத்துவமனையின் பணிகள் 2022-ஆம் ஆண்டு மத்தியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 750 படுக்கைகளைக் கொண்ட இந்த நவீன மருத்துவமனையில், ஆயுஷ் அமைச்சகத்திற்கான கட்டிடமும் அமைக்கப்படும். இந்த மருத்துவமனையிஒல் 125 எம்பிபிஎஸ் இடங்களும், செவிலியர் படிப்புக்கான 60 இடங்களும் இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ALSO READ | 

கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கி அர்ஜண்டினா அரசு புதிய வரலாற்று சாதனை..! பெண்கள் உற்சாகக் கொண்டாட்டம்..

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!