நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வெளிநாடு செல்லாதவருக்கும் பாதிப்பு புதிய கொரோனாவால் அமெரிக்கா அதிர்ச்சி

 வாஷிங்டன்:மரபணு உருமாற்றம் அடைந்துள்ள புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் தென்படத் துவங்கியுள்ளது.


வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ளாதவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்தாண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தற்போதுதான் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுஉள்ளது.

பிரிட்டன், அமெரிக்கா, கனடா, உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே இந்த தடுப்பூசி தற்போது வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் மரபணு உருமாற்றம் அடைந்துள்ள புதிய கொரோனா வைரஸ் பரவத் துவங்கியுள்ளது. இது நெதர்லாந்து சிங்கப்பூர் உள்பட பல நாடுகளுக்கு பரவியுள்ளது.

'பழைய கொரோனாவைவிட மரபணு உருமாற்றமடைந்துள்ள புதிய கொரோனா மிகவும் வேகமாக பரவக் கூடியது' என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.அதையடுத்து பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கான விமான சேவையை பல நாடுகள் ரத்து செய்துள்ளன.இந்த நிலையில் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் டென்வர் நகரை ஒட்டியுள்ள ஊரகப் பகுதியைச் சேர்ந்த 20 வயது வாலிபருக்கு புதிய மரபணு உருமாற்றமடைந்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தனிமைபடுத்தப்பட்டு அவருக்கு பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

வெளிநாட்டு பயணம் ஏதும் மேற்கொள்ளாத நிலையில் அவருக்கு புதிய வகை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் அரசு நிர்வாகம் கலக்கம் அடைந்துள்ளது.'சில மாதங்களுக்கு முன்பாகவே வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு புதிய வகை தொற்று ஏற்பட்டிருக்கலாம். அவர்கள் மூலம் இந்த நபருக்கு வைரஸ் தொற்றியிருக்கலாம்' என டாக்டர்கள் சந்தேகப்படுகின்றனர்.

அதன்படி பார்க்கையில் அமெரிக்காவில் புதிய வகை வைரஸ் பாதிப்பு ஏற்கனவே பல இடங்களுக்கு பரவியிருக்கக் கூடும் என கருதப்படுகின்றது. இதையடுத்து பரிசோதனை முறைகளை தீவிரப்படுத்த பல்வேறு மாகாணங்கள் உத்தரவிட்டுள்ளன.


ஜோ பைடன் அதிருப்தி

கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3.36 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் புதிய மரபணு உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பும் தென்பட துவங்கிஉள்ளது. தடுப்பூசி வழங்கும் பணியும் மந்தமாக நடந்து வருகின்றது.இதற்கு அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் அதிருப்தி தெரிவித்துள்ளார். 'நாம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்கள் மிகவும் கடினமான ஒன்று. இந்த நேரத்தில் அரசு நிர்வாகம் தடுப்பூசி வழங்குவதில் மிகவும் மெத்தனமாக நடந்து கொள்கிறது. நிலைமை மிகவும் மோசமடையும் சூழ்நிலையைஉருவாக்காதீர்கள்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.


ALSO READ : https://tamildhamakanews.blogspot.com/2020/12/blog-post_265.html

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!