நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தமிழகத்தில் பரவலாக மழை

 


சென்னை : காற்றின் திசைவேக மாறுபாட்டால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மாவட்ட வாரியாக மழை:


சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய விட்டு விட்டு மழை பெய்தது.


மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, பூம்புகார், கொள்ளிடம், தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

விழுப்புரம் மாவட்டத்தின் சில இடங்களில் மிதமான மழை பெய்தது.


திருச்சி : திருச்சி மாநகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

தூத்துக்குடி: கோவில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் மிதமான மழையும், தஞ்சை தர்மபுரி மற்றும் அரூர் மாவட்ட பகுதிகளில் லேசான மழையும் பெய்தது.


ALSO READ : https://tamildhamakanews.blogspot.com/2020/12/blog-post_744.html


LINK

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்