நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்தியாவிலேயே மிகவும் உயரமான வானிலை மையம்: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் திறந்து வைத்தார்


புதுடெல்லி : 

3500 மீட்டர் உயரத்தில் லே-இல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வானிலை மையத்தை டாக்டர். ஹர்ஷ்வர்தன் திறந்து வைத்தார். 

டெல்லியில் உள்ள மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், லே-இல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வானிலை மையத்தை மத்திய புவி அறிவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர். ஹர்ஷ்வர்தன் காணொலி மூலம் திறந்து வைத்தார். லடாக்கின் துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ண மாத்தூர் இந்நிகழ்ச்சியின் கவுரவ விருந்தினராகக் கலந்து கொண்டார். 

கடல் மட்டத்திலிருந்து 3500 மீட்டர் உயரத்தில் லே-இல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வானிலை மையம், இந்தியாவிலேயே மிகவும் உயரமான வானிலை மையம் ஆகும். இதைத் திறந்து வைத்துப் பேசிய டாக்டர். ஹர்ஷ் வர்தன், 

சர்வதேசத் தரம் வாய்ந்த இந்த மையம், வானிலை தொடர்பான விஷயங்களில் லடாக் நிர்வாகம் மற்றும் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கூறினார். இதற்கிடையே, தொழில்நுட்பத் தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டுக் குழு தயாரித்த தற்சார்பு இந்தியாவுக்கான செயல்திட்டம் என்னும் அறிக்கையை டாக்டர். ஹர்ஷ் வர்தன் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியம், கோவிட் பெருந்தொற்றின் போது நம்முடன் உறுதியுடன் நின்றதாகக் கூறினார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்