Posts

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

WhatsApp-ல் வரவுள்ள 5 புதிய அம்சங்கள்!

Image
  WhatsApp நிறுவனம் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல சுவாரஸ்யமான அம்சங்களை உருவாக்கி வருகிறது. மெ சேஜிங் செயலியான WhatsApp, பயனர்கள் கடைசியாகப் பார்த்த நேரத்தை (last seen), சுயவிவரப் படங்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களிடமிருந்து மறைக்க அனுமதிக்கிறது. அதேபோல், பயனர்களின் விருப்ப அடிப்படையில் Delete Message for Everyone என்ற அம்சத்திற்கான கால வரம்பை நீட்டிக்கவும், மொபைல் பயனர்களுக்கான ஸ்டிக்கர் தயாரிக்கும் அம்சத்தை (custom sticker maker) வெளியிடும் முயற்சியில் WhatsApp செயல்பட்டு வருகிறது. இதுபோன்று, பெரும்பாலான அம்சங்கள் தற்போது உருவாக்கத்தில் உள்ளன. எனவே, வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கும் அம்சங்களை பார்ப்போம். அனைவருக்கும் செய்தியை நீக்கு (Delete Message for everyone) Delete Message for everyone அம்சத்தின் கால வரம்பை நீட்டிக்க WhatsApp செயல்படுவதாக கூறப்படுகிறது. தற்போது, ​​பயனர்கள் செய்தியை அனுப்பிய ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நீக்க முடியும், ஆனால் இப்போது வாட்ஸ்அப் ஒரு வாரத்திற்குப் பிறகு செய்தியை நீக்குவதற்கான சாத்தியத்தை சோதித்து வருகிறது. செய்திகளை நீக்கும்...

கொரியப் பெண்கள் எப்போதும் அழகாக இருக்க காரணம் என்ன தெரியுமா?

Image
 பொதுவாக கொரியப் பெண்களை பார்க்கும் போது எல்லாருக்கும் ஒருவித பொறாமை காணப்படும். அதற்கு காரணம் அவர்களின் சரும அழகு தான். வ யதானால் கூட சரும அழகை பராமரிப்பதில் கொரியப் பெண்களுக்கு ஈடு இணை யாரும் கிடையாது. பார்ப்பதற்கு அவர்களது முகம், சருமம் கண்ணாடி போல் பளபளக்கும். இது எளிதில் யாரையும் கவர்ந்து விடும். இதற்கு காரணம் அவர்கள் தங்கள் சரும அழகை மேம்படுத்த இயற்கை முறை டிப்ஸ்களை பின்பற்றுவது தான். ஒவ்வொரு கொரிய பெண்ணும் சரும அழகுக்கென்றே நிறைய அழகு பராமரிப்புகளையும் பாரம்பரிய முறைகளையும் பின்பற்றி வருகிறார்கள். தற்போது அவை என்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம். கொரிய பெண்கள் தினமும் முகத்தை ஃபார்ம் க்ளீன்சர் கொண்டு முகத்தை கழுவுகின்றனர். இது முகத்தில் உள்ள தூசிகள், அழுக்குகள், வியர்வை போன்றவற்றை போக்க பயன்படுகிறது. இதை அவர்கள் தினசரி தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.  கொரியப் பெண்கள் தங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க ஸ்க்ரப்பை பயன்படுத்துகின்றனர்.இதன் மூலம் சருமத்தை புதுப்பிக்க முடியும். இதனால் உங்க சருமம் பட்டு போன்ற தன்மையை அடையும் என்கிறார்கள்.  கொரியப் பெண்களின் அழக...

பெண்களே! சொர சொரப்பில்லாத மென்மையான கால்களை பெற வேண்டுமா? இதோ அசத்தலான டிப்ஸ்

Image
பொதுவாக நம்மில் பலருக்கு மென்மையான கால்கள் இருக்காது. பார்க்க ஒரு வித சொர சொரப்புடன் வறட்டு காணப்படும். இ தற்காக பலர் அழகு நிலையங்களுக்கு சென்று பெடிக்கியூர் செய்வது வழக்கம். இதனால் பணம் தான் செலவழியுமே தவிற ஒரு நிரந்த தீர்வினை தராது. அந்தவகையில் மென்மையான பாதங்களை பெற ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம். பேக்கிங் சோடா மற்றும் தண்ணீரை கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். இந்த கலவையை கால்களில் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 5 நிமிடங்கள் உலர விடவும். குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். பழுப்பு சர்க்கரை - அரை கப்,  பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் - அரை கப், கிராம்பு எண்ணெய் - 3- 4 துளிகள் பேஸ்ட் செய்வதற்கு அனைத்து பொருள்களையும் கலந்து பாட்டிலில் வைக்கவும். பேஸ்ட்டை கால்களில் தடவி, சில நிமிடங்கள் வட்ட வடிவில் தேய்த்து சருமத்தை உரிக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடவும். வாரம் இரண்டு முறை கால்களில் உரிக்கலாம்.   புதிய கற்றாழை ஜெல்லை இலையிலிருந்து பிரித்தெடுக்கவும். இந்த ஜெல்லை கால்களில் தடவி ஓரிரு நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்யவும். சு...

அடிக்கடி ஜலதோஷம் பாடாய் படுத்துதா? அதிலிருந்து விடுபட எளிய வழிகள்

Image
  மழை காலம், வெயில் காலம் என எல்லா காலத்திலும் சிலருக்கு அடிக்கடி ஜலதோஷம் பாடாய் படுத்தும். ஜ லதோஷம் வந்தாலே சிலர் ஆண்டிபயாடிக் மாத்திரகளை தேடுவார்கள். ஆனால் இது உடல்நலத்திற்கு நல்லதல்ல, ஜலதோஷத்தில் இருந்து விடுபட இயற்கை வழிகள் உள்ளது.  ஜலதோஷ நேரத்தில் மிளகு ரசம் ஒரு கப் குடித்து வரலாம். தினமும் சூடான ரசம் ஒரு கப் குடிப்பது நல்லது. பூண்டு , இஞ்சி, மீன் உணவு முதலியவை மூக்கு அடைப்பை அகற்றி விடும். அசைவ உணவுக் காரர்கள் மூக்கு அடைப்பை எளிதில் சரி செய்து கொள்ளலாம். மிளகு , வெள்ளைப்பூண்டு சேர்த்த தயாரித்த கோழியில் சூப் செய்து ஒரு கப் வாரம் இருமுறை அருந்தினால் ஜலதோஷமும், சைனஸும் கட்டுப்பாட்டில் இருக்கும். தினமும் வெந்நீர் அல்லது நீராவிக் குளியல் நல்லது. சுட வைத்த குடிநீர் மூலமும் மூக்கடைப்பு, ஜலதோஷத்தை தவிர்க்க முடியும். தொடர்ச்சியாக இப்படி ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வந்தால் ஜலதோஷத்துக்கு குட்பை சொல்லி விடலாம்.   ALSO READ :  இனி பால் குடித்து எடையை குறையுங்கள்! யாரெல்லாம் தினமும் குடிக்கலாம் தெரியுமா?

அடிபம்பினை அடித்து கொம்பினால் முட்டி தாகம் தீர்த்த எருமை மாடு! இதயத்தை உருக்கும் காட்சி

Image
  எருமை மாடு தாகம் தீர்க்க அடிபம்பினை அடித்து தண்ணீர் அருந்தும் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.   ஐபிஎஸ் அதிகாரியான டிபன்ஷு கப்ரா ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் எருமை மாடுகள் கூட்டமாக நிற்கையில் ஒன்று மட்டும் தாகத்தை தணிக்க அருகில் இருக்கும் அடிபம்பை தனது கொம்பினால் முட்டி போராடி நீரினை அருந்தி வருகின்றது. பின்னர் அருகில் இருக்கும் மற்றொரு மாடும் தாகம் தீர்த்துக் கொள்கின்றது.  ALSO READ :  ஸ்மார்ட் போனை வாங்கி பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கி குரங்கு.... மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கும் காட்சி

இனி பால் குடித்து எடையை குறையுங்கள்! யாரெல்லாம் தினமும் குடிக்கலாம் தெரியுமா?

Image
  பால் குடித்தால் எடை அதிகரிக்கும் என்பது பலரின் பொதுவான கருத்தாக உள்ளது. பால் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்காது, உண்மையில், அது சில நேரங்களில் உடல் எடையை குறைக்க உதவும். பால் ஆரோக்கியமான உணவாகும். இது உயர்தர புரதத்தை அதிக அளவில் கொண்டுள்ளது. இது தசையை உருவாக்குவதற்கும், தசை வளர்ச்சிக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. மேலும் இதில் துத்தநாகம், மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் எலும்புகளை வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. 250 மிலி பாலில் 8 கிராம் புரதம் மற்றும் 125 மி.கி கால்சியம் உள்ளது. எனவே நீங்கள் உணவு கட்டுப்பாட்டிலிருந்தாலும் கூட குறைந்த அளவில் பால் உட்கொள்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. கால்சியத்தை உட்கொள்வது உடல் பருமன், வளர்சிதை மாற்ற நோய்க்குறி, டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கான அபாயத்தையும் குறைக்கிறது. நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் எனில் உங்கள் உணவில் இருந்து பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளை தவிர்க்...

ஸ்மார்ட் போனை வாங்கி பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கி குரங்கு.... மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கும் காட்சி

Image
  குரங்குகள் சில கூட்டமாக மொபைல் போனை ஆச்சர்யமாக பார்த்துக்கொள்ளும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த காணொளியை வெளியிட்டுள்ளார். அதில் 3 குரங்குகள் ஒன்றாக அமர்ந்து கொண்டு மனிதரின் கையில் இருக்கும் ஸ்மார்ட் போனின் தொடுதிரையை என்ன இது ஒன்றும் புரியவில்லை இதனை கையில் வைத்துக் கொண்டு அனைவரும் சுற்றுகின்றனர் என்பது போல் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றது. இதனை தற்போது இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர். ALSO READ :  ’மிராக்கிள் மைக்’ தலையில்லாமல் 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த சேவல்

Unique Invitation: வழக்கறிஞரின் அரசியலமைப்பு கருப்பொருள் திருமண அழைப்பிதழ்

Image
  இதுவொரு புதுவித திருமண அழைப்பிதழ்... திருமணத்திற்கு அழைப்பதற்கு சட்ட ஆவணம் போல் அழைப்பிதழை வடிவமைத்த வழக்கறிஞர்... தங்களது வித்தியாசமான செயல்களால் பலரும் மக்களைக் கவர்கின்றனர். இது வழக்கறிஞர் ஒருவரின் வித்தியாசமான ஆனால் ரசிக்க வைக்கும் திருமண உத்தி. இதை அனைவரும் பாராட்டுகின்றனர். மணமகன் வழக்கறிஞர் அஜய் சர்மா, உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிகிறார். இவர், ஹரித்வாரில் உதவி பேராசிரியையாக பணியாற்றிய பூஜா சர்மாவை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருக்கிறார். கவுகாத்தியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜய் சர்மாவின் புதுவிதமான திருமண அட்டை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தனித்துவமான திருமண அழைப்பிதழ் ஒரு சட்ட ஆவணத்தைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, சமூக ஊடகங்களில் (Social Media) பலரின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. வித்தியாசமான அழைப்பிதழில் அதிக கவனத்தை ஈர்த்துள்ள திருமணம் நவம்பர் 28 ஆம் தேதி அதாவது இன்று நடைபெற உள்ளது. வைரலான திருமண அழைப்பிதழில், மணமகள் பூஜா சர்மா மற்றும் மணமகன் வழக்கறிஞர் அஜய் சர்மா ஆகியோரின் பெயர்கள் சமத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எழுதப்பட்டுள்ளது. திருமண அழைப்ப...

’மிராக்கிள் மைக்’ தலையில்லாமல் 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த சேவல்

Image
  அமெரிக்காவில் தலைவெட்டப்பட்ட சேவல் ஒன்று, முண்டமாக 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.  அமெரிக்காவில் தலைவெட்டப்பட்ட சேவல் ஒன்று, முண்டமாக 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. இந்த சேவலின் பெயர் மைக் என்பதால் ’மிராக்கிள் மைக்’ என்ற அழைக்கப்படுகிறது. இந்த சேவலின் நினைவாக, அமெரிக்காவில் ஆண்டுதோறும் ’ஹெட்லெஸ் சிக்கன்’ திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. இந்த செய்தி உங்களுக்கு வியப்பாக தோன்றலாம். ஆனால், உண்மை, அதிசயம். தலையில்லாமல் எப்படி வாழ முடியும்? என நீங்கள் யோசிக்கலாம். ஆனால், அப்படியான ஒரு அதிசய சேவல் 18 மாதங்கள் உயிருடன் இருந்துள்ளது. சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கொலராடோ பகுதியில் ப்ரூட்டா என்ற இடத்தில் லாய்ட் ஓல்சென் மற்றும் கிளாரா தம்பதியினர் பண்ணை ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இறைச்சி வியாபாரமும் செய்து கொண்டிருந்த அவர்கள், ஒரு நாளில் 40 முதல் 50 கோழிகளின் தலையை முதலில் வெட்டியுள்ளனர். அப்போது, அனைத்துக் கோழிகளும் இறந்துவிட, ஒரே ஒரு கோழி மட்டும் உயிருடன் இருந்துள்ளது. அந்த சேவலும் சிறிது நேரத்தில் இறந்துவி...

2022-ஆம் ஆண்டு உலகில் என்ன நடக்கும்? பாபா வாங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்பு

Image
2022-ஆம் ஆண்டு என்ன நடக்கும் என்பதை பாபா வாங்கா கணித்துள்ளது தற்போது வெளியாகியுள்ளது. பல்கேரியாவைச் சேர்ந்தவர் Baba Vanga. 1991-ல் பிறந்த இவர் தன்னுடைய 12 வயதில் அங்கு ஏற்பட்ட சூறாவளி ஒன்றில் சிக்கி கண்பார்வையை இழந்தார். இருப்பினும், தனக்கு கடவுள் எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை கொடுத்திருப்பதாக கூறி வந்தார். இதையடுத்து இவர் கடந்த 1996-ஆம் ஆண்டு தன்னுடைய 84 வயதில் உயிரிழந்தார். இவர் உயிரிழப்பதற்கு முன்பு, வரும் ஆண்டுகளில் என்னென்ன நடக்கும் என்பதை கணித்துள்ள இவர், 5079 -ஆம் ஆண்டு உலகம் முடிவுக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார். இவருடைய கணிப்புகள் சுமார் 80 சதவீதத்திற்கு மேல் உலகில், நடந்துள்ளதால் இவருடைய கணிப்புகள் உலக மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், இவர் 2022-ஆம் ஆண்டு உலகில் என்ன நடக்கும் என்பதை கணித்துள்ளார். அதில், நிச்சயமாக இந்த ஆண்டு ஒரு உண்மையான போர் வெடிக்கும். ஆசிய தலைவர் ஒருவர் அவருடைய தலைவர் அதிகாரத்தில் இருந்து தூக்கிவீசப்படுவார். அவரது நாடு ஆயுத மோதலின் களமாக மாறும். இதற்கு ஐரோப்பா அணுவாயுத தாக்குதலின் மூலம் பதிலளிக்கும். வானிலை மற...

பேடிஎம் நிறுவன வருவாய் இத்தனை கோடிகளா?

Image
இந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பேடிஎம் நிறுவன வருவாய் அறிக்கை வெளியாகி இருக்கிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டு வரும் பேடிஎம் நிறுவனம் இண்டர்நெட் மூலம் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பும் வசதி, விமான டிக்கெட், ரெயில் டிக்கெட், பஸ் டிக்கெட் போன்றவற்றுக்கு கட்டணம் செலுத்தும் வசதி, செல்போன், டி.டி.ஹெச். போன்ற சேவைகளை ரீசார்ஜ் செய்யும் வசதிகளை வழங்கி வருகிறது. பேடிஎம் நிறுவனம் 2021-2022 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டு உள்ளது. பேடிஎம் நிறுவனத்துக்கு இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் 64 சதவீதம் வருவாய் உயர்ந்து இருக்கிறது. இதன் மூலம் ரூ.1,090 கோடி வருவாய் கிடைத்துள்ளது. யு.பி.ஐ. அல்லாத பண பரிவர்த்தனை சேவை இந்த காலாண்டில் 54 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. நிதி சேவை மற்றும் இதர வருவாய் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. பரிவர்த்தனை மற்றும் நிதியில் சேவைப்பிரிவு மூலம் வருமானம் 69 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து ரூ.842.60 கோடியாக உயர்ந்துள்ளது.  இதேபோன்று வர்த்தகம் உள்ளிட்ட வேறு சேவைப்பிரிவு வருமானம் 47 சதவீதம் வள...

வருத்தம் தரும் வறுத்த உணவுகள்

Image
வறுத்த உணவுகளே ஒரு சுமை என்றால், அதிக அளவில் சாப்பிடுவது இன்னொரு சுமையாகி உறுப்புகளை 'ஓவர் டைம்' வேலை செய்ய வைக்கிறது. இன்று காலத்தில் வறுத்த உணவுகளை சாப்பிடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் ஏற்படும் ஆபத்துக்களை அவர்கள் சிந்திப்பதில்லை. இதுமட்டுமின்றி பீட்சா மற்றும் துரித உணவு வகைகளை சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுவை தெரிய வேண்டும் என்பதற்காக, இந்த உணவுகளில் அளவுக்கு அதிகமாக எண்ணெய் மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. நாக்கின் சுவையை மட்டும் மதித்து தொடர்ந்து இதனையே பழக்கமாக்கி விடுகின்றனர். சுவையான உணவு சாப்பிட தூண்டும், சந்தோஷம் கொடுக்கும் என்பதால் அனைவரும் அதனையே நாடுகிறோம். உணவில் எண்ணெய் பயன்பாடு அதிகமானால் ஆபத்தை நீங்களே வரவேற்பதாக அர்த்தம். உணவுகளை வறுத்து தயார் செய்ய தொடங்கும் போதே உடல் வருந்த தொடங்கி விடும். உணவுகளை தீயில் அதிக நேரம் சூடாக்கி எண்ணெய் சேர்த்து மசாலா பொருட்களை அள்ளித்தெளிக்கும் போது நாக்கில் எச்சில் ஊற தொடங்கி விடும். கண்டிப்பாக சுவையும் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த வகை உணவுகளை த...

வைட்டமின்-டி’வை பெறுவதற்கு என்னவெல்லாம் செய்யலாம்

Image
மற்ற வைட்டமின்களை பொறுத்தவரை நமது வழக்கமான உணவு பொருட்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். வைட்டமின்-டியைப் பொறுத்தவரை இது கொஞ்சம் சிக்கல்தான். உயிர்ச்சத்துகளில் வைட்டமின்-டி முக்கியமானது. அதேநேரம் அதிக கவனம் செலுத்தப்படாத வைட்டமின்களில் ‘டி'யும் ஒன்று. வைட்டமின்-டி என்பது எலும்புக்கும் பற்களுக்கும் அவசியம். நமது உடலுக்குள் நடக்கும் முக்கியமான பல உயிர் வேதியியல் செயல்பாடுகளுக்கும், இந்த வைட்டமின் மிகவும் அடிப்படையானது. வைட்டமின்-டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோஸிஸ், ரிக்கட்ஸ், இதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஜலதோஷத்தை விரட்டுவதிலும் மன அழுத்தத்தை சமாளிப்பதிலும் வைட்டமின்-டி உதவுவதாக கூறப்படுகிறது. மற்ற வைட்டமின்களை பொறுத்தவரை நமது வழக்கமான உணவு பொருட்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். வைட்டமின்-டியைப் பொறுத்தவரை இது கொஞ்சம் சிக்கல்தான். இதை பெறுவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம். நமது வாழ்க்கை முறை என்பது பெரும்பாலும் நான்கு சுவர்களுக்குள் அமைந்துவிட்டது. வீட்டுக்கு அல்லது அலுவலகத்துக்கு வெளியே ஒரு 20 முதல் 25 நிமிடங்கள் நம் கை மீது வெய...

இரவு தூக்கத்தைத் தொலைப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

Image
நள்ளிரவைத் தாண்டியும், இன்றைய இளைஞர்களின் கை விரல்கள் இயங்குவதை நிறுத்திய பாடில்லை. இரவில் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, பகலில் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்பது சரியானது அல்ல. நள்ளிரவைத் தாண்டியும், இன்றைய இளைஞர்களின் கை விரல்கள் இயங்குவதை நிறுத்திய பாடில்லை. காரணம்... வாட்ஸ் அப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்கள். இரவு 2 மணிக்கு மேல் தூங்கி, காலையில் தாமதமாக எழுந்து மனதையும், உடலையும் கெடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். இரவு தூக்கத்தைத் தொலைப்பதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். சராசரியாக மனிதனுக்கு 6 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். தூங்குவதற்கு சரியான நேரம், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தான். ஏனெனில், அப்போதுதான் ‘மெலட்டோனின்’ என்ற ஹார்மோன் சரியாக சுரக்கும். வெளிச்சமே இல்லாத இரவில் தூங்கி வெளிச்சம் வந்தவுடன், எழுந்துவிட வேண்டும். அப்போதுதான், நமது உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைத்து, ஆரோக்கியம் மேம்படும். சிலர், வேலை காரணமாக நள்ளிரவு 12 மணிக்கு மேல் தூங்க வேண்டிய சூழல் வரலாம். அவர்களும் இந்த 6-8 மணி நேர தூக்கத்தைக் கட்டாயம் பி...

துரித உணவை மறப்போம்... பழங்களை கொண்டாடுவோம்

Image
தற்போதைய பெருந்தொற்று காலங்களில் பழங்களில் உள்ள சத்துக்கள் என்ன என்று தேடி தேடி படித்து அதை நாடி ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். தொழிலில் வெற்றி பெறுவதற்கு மனிதனின் உடல் ஆரோக்கியம் என்பது தான் சக்கரம் போன்றது. சக்கரம் சரியாக இல்லையென்றால் வண்டி ஓடாது என்பது ஏற்ப, உடல் நலன் பாதிப்பு ஏற்பட்டால் தொழிலிலும் கவனம் செலுத்த முடியாது. அதிலும் தற்போது பெருந்தொற்று காலம் என்பதால், உடல் ஆராக்கியத்தில் நாம் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும். துரிதமாக வளரும் இந்த உலகில் துரித உணவான பீட்சா, பர்கர் யுகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அதனால் தான் உடலில் எதிர்ப்பு சக்திகள் குறைந்து கொரோனா என்னும் கொடிய அரக்கனின் பிடிக்குள் அகப்பட்டு வருகிறோம். உணவு, மருந்தாக செயல்பட்டு, ஊட்டச்சத்துக்களையும் அள்ளித்தரும் பழங்களை நம்மில் பலர் மறந்து விட்டனர். அதனால் தான் நம் ‘பழ’ந்தமிழர்கள் பழங்களை கொண்டாடினார்கள். ஆனால், பழங்களை தினசரி உணவில் எடுத்து கொள்வதையே, நம் சந்ததியினர் பலர் மறந்துவிட்டார்கள். அதனால் தான் தற்போதைய பெருந்தொற்று காலங்களில் பழங்களில் உள்ள சத்துக்கள் என்ன என்று தேடி தேடி படித்து அதை நாடி ஓட...

சளியை போக்கும் வெற்றிலை சட்னி....

Image
இட்லி தோசையுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். கால்சியம் சத்து நிறைந்த வெற்றிலை நம் முன்னோர்கள் தினமும் பயன்படுத்தினார்கள். திருமண வீடுகளில் விருந்து உண்ட உடன் வெற்றிலை போடுவது வழக்கம். ஆனால் காலப்போக்கில் அது காணாமல் போனது என்றாலும் . ஜீரணம் ஆகாது சமயத்தில் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு நீங்கும்.இப்பொழுது நாம் சளித்தொல்லை கால்சியம் சத்து ஜீரணம் ஆகிய அனைத்திற்கும் உதவக்கூடிய இந்த வெற்றிலையை வைத்து ஒரு அற்புதமான சட்னி எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க... தேவையான பொருட்கள் வெற்றிலை - 5 மிளகு - 1/2ஸ்பூன் சீரகம் - 1/2ஸ்பூன் பூண்டு - 2 பல் மிளகாய் - 4 பொரிகடலை - 3ஸ்பூன் தேங்காய் - ஒரு மூடி உப்பு - தேவையான அளவு நல்ல எண்ணெய் - 2ஸ்பூன் புளி - 1துண்டு கடுகு - 1/2ஸ்பூன் உளுந்து - 1/4ஸ்பூன் செய்முறை வாணலியில் மிளகு, சீரகம் இட்டு வறுத்து கொள்ளவும். மிக்ஸியில் வறுத்த மிளகு சீரகம், தேங்காய், பொரிகடலை, வெற்றிலை, மிளகாய், உப்பு, பூண்டு சேர்த்து நன்கு அரைக்கவும் பின் வாணலியில் ...

பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் முல்தானி மெட்டி மாஸ்க்

Image
முல்தானி மெட்டியை வீட்டில் உள்ள சில பொருட்களுடன் சேர்த்து மாஸ்க் போட்டு வந்தால், சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகள் வராமலும் தடுக்கலாம். அழகை அதிகரிக்க உதவும் ஓர் அற்புதமான அழகுப் பொருள் தான் முல்தானி மெட்டி. இதைக் கொண்டு ஒருவர் தங்கள் சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகள் வராலும் தடுக்கலாம். ஏனெனில் முல்தானி மெட்டியில் சரும பிரச்சனைகளைப் போக்கும் பண்புகள் ஏராளமாக நிறைந்துள்ளது. பெரும்பாலான அழகு நிலையங்களில் கூட சரும நிறத்தை அதிகரிப்பதற்கு முல்தானி மெட்டி ஃபேஸ் பேக் தான் பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை அழகு நிலையங்களுக்குச் சென்று போடுவதற்கு பதிலாக, அந்த பொடியை வீட்டில் உள்ள சில பொருட்களுடன் சேர்த்து மாஸ்க் போட்டு வந்தால், சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகள் வராமலும் தடுக்கலாம். * ஒரு சிறிய பௌலில் முல்தானி மெட்டி பொடியைப் போட்டு, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவுங்கள். ...

இளமை கொலுவிருக்க.. இதழ்கள் விரியட்டும்..

Image
உண்மையான வயதை மறைக்க முடியாது என்பது நிஜமாக இருந்தாலும் உடலைப் பேணுவதிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தினால் பெரும்பாலானவர்களால் இளமையை தக்கவைத்துக்கொள்ள முடியும். முதுமை தெரியாத அளவுக்கு இளமையோடு வாழவேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால், சிலர் மட்டுமே வெகுகாலமாக இளமையுடன் தோன்றுகிறார்கள். பலர் இளம் வயதிலேயே முதிய தோற்றத்துடன் வலம் வருவதையும் காணமுடிகிறது. உண்மையான வயதை மறைக்க முடியாது என்பது நிஜமாக இருந்தாலும் உடலைப் பேணுவதிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தினால் பெரும்பாலானவர்களால் இளமையை தக்கவைத்துக்கொள்ள முடியும். சமச்சீரான சத்துணவை போதுமான அளவில் தினமும் உட்கொண்டால் இளமையை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்போது, ஆரோக்கியத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும். அப்போது நோய்கள் ஏற்படாது. உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்வது இளமையின் முதல் படி என்பதை உணரவேண்டும். ஒருவர் இளமையோடு இருக்கிறார் என்பதை அவரது சருமம்தான் முதலில் அடையாளம் காட்டுகிறது. சருமத்தில் இளமையை பொலிவூட்டவேண்டும் ...

பூண்டு தரும் ஆச்சரியமான அழகு ரகசியங்கள்

Image
பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம். சமையலில் பிரதானமாக இடம் பிடிக்கும் பூண்டுவை கொண்டு அழகையும் மேம்படுத்தலாம். பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம். 1. முகப்பருவுக்கு பூண்டு சிறந்த நிவாரணம் அளிக்கும். பூண்டுவை தோல் நீக்கி நன்றாக நசுக்கி சாறாக்கவும். முகப்பரு இருக்கும் இடங்களில் பூண்டு சாறுவை தேய்த்துவிட்டு ஐந்து நிமிடம் கழித்து கழுவிவிடலாம். முகத்தில் சிவப்பு நிறத்தில் திட்டுகள், வீக்கம் இருந்தாலும் பூண்டுச் சாறை பயன்படுத்தலாம். 2. சிலருக்கு முகத்தில் புள்ளிகளும், திட்டுகளும் காணப்படும். ஒரு பூண்டுவை தோல் நீக்கி அதனுடன் பாதி தக்காளி பழத்தை சேர்த்து விழுதாக அரைத்து முகத்தில் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிவிடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் முகம் பிரகாசத்துடன் காட்சியளிக்கும். 3. பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் படர்ந்திருக்கும் தழும்புகளை நீக்குவதற்கும் பூண்டை பயன்படுத்தலாம...

கயிறால் கட்டப்பட்ட உடல்.. 800 ஆண்டுகள் பழமையான மம்மி கண்டுபிடிப்பு! தொடரும் ஆய்வு!

Image
மம்மியுடன் இரும்புப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பீங்கான் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. பெரு நாட்டின் மத்திய கடற்கரைப் பகுதியில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி ஒன்றை அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  தென் அமெரிக்காவின் கடற்கரைக்கும் மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் தோன்றி மறைந்த நாகரீக சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடையதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். லிமா பகுதியில் கண்டறியப்பட்ட இந்த மம்மியின் பாலினத்தின் அடையாளம் காணப்படவில்லை என தொல்பொருள் ஆய்வாளர் பீட்டர் வான் டேலன் லூனா தெரிவித்தார். பெரு நாட்டின் தலைநகரமும் லிமாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள கல்லறையில் இந்த மம்மி கண்டறியப்பட்டுள்ளது. மம்மியுடன் இரும்புப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பீங்கான் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. உள்ளூர் இறுதி சடங்குகளுக்கு ஏற்ப உடல் கயிறால் கட்டப்பட்டு, முகத்தை மூடியவாறு இந்த உடல் வைக்கப்பட்டுள்ளது.      பெரு நாடுகளில் வாழ்ந்த சின்சொரோ மக்கள்:   எகிப்திய மம்மிகளே பொதுவாக அறியப்பட்டாலும், சடலப்பதனிடல் தொ...

Popular posts from this blog

முகத்தில் காணப்படும் அதிகபட்ச எண்ணெய்யை போக்க வேண்டுமா? இந்தவொரு பொருளை இப்படி பயன்படுத்தினாலே போதும்!

120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?