பெண்களே! சொர சொரப்பில்லாத மென்மையான கால்களை பெற வேண்டுமா? இதோ அசத்தலான டிப்ஸ்
- Get link
- X
- Other Apps
பொதுவாக நம்மில் பலருக்கு மென்மையான கால்கள் இருக்காது. பார்க்க ஒரு வித சொர சொரப்புடன் வறட்டு காணப்படும்.
இதற்காக பலர் அழகு நிலையங்களுக்கு சென்று பெடிக்கியூர் செய்வது வழக்கம்.
இதனால் பணம் தான் செலவழியுமே தவிற ஒரு நிரந்த தீர்வினை தராது. அந்தவகையில் மென்மையான பாதங்களை பெற ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
பேக்கிங் சோடா மற்றும் தண்ணீரை கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். இந்த கலவையை கால்களில் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 5 நிமிடங்கள் உலர விடவும். குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும்.
பழுப்பு சர்க்கரை - அரை கப், பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் - அரை கப், கிராம்பு எண்ணெய் - 3- 4 துளிகள் பேஸ்ட் செய்வதற்கு அனைத்து பொருள்களையும் கலந்து பாட்டிலில் வைக்கவும். பேஸ்ட்டை கால்களில் தடவி, சில நிமிடங்கள் வட்ட வடிவில் தேய்த்து சருமத்தை உரிக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடவும். வாரம் இரண்டு முறை கால்களில் உரிக்கலாம்.
புதிய கற்றாழை ஜெல்லை இலையிலிருந்து பிரித்தெடுக்கவும். இந்த ஜெல்லை கால்களில் தடவி ஓரிரு நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்யவும். சுமார் 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும்.
கடல் உப்புடன் தேங்காயெண்ணெய் கால்ந்து கெட்டியான் பேஸ்ட்டை உருவாக்கவும். பிறகு மென்மையான துணியை கொண்டு இந்த கலவையை கால்களில் மெதுவாக தேய்க்கவும். ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் கழித்து தண்ணீரில் சுத்தம் செய்யவும்.
காஃபி கொட்டை - அரை கப், நாட்டுச்சர்க்கரை - அரை கப், தேங்காயெண்ணெய் - கால் கப் அனைத்தையும் அறைவெப்பநிலையில் வைத்து கலந்து வைக்கவும். ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு கிண்ணத்தில் கலக்கவும். இதை வட்ட இயக்கத்தில் தடவி சுத்தமாக கழுவி விடவும்.
தேயிலை மர எண்ணெய் உடன் ஜோஜாபா எண்ணெய் கலக்கவும். இந்த கலவைகளை உங்கள் கால்களில் மசாஜ் செய்யவும். பிறகு சருமத்தில் 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் அலசி எடுக்கவும்.
முட்டையின் வெள்ளைக்கருவுடன் எலுமிச்சை சாறு கலக்கவும். இந்த கலவையை கால்களில் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் சுத்தம் செய்யவும். தினமும் கூட இதை செய்யலாம்.
ALSO READ : அடிக்கடி ஜலதோஷம் பாடாய் படுத்துதா? அதிலிருந்து விடுபட எளிய வழிகள்
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment