நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அடிக்கடி ஜலதோஷம் பாடாய் படுத்துதா? அதிலிருந்து விடுபட எளிய வழிகள்

 மழை காலம், வெயில் காலம் என எல்லா காலத்திலும் சிலருக்கு அடிக்கடி ஜலதோஷம் பாடாய் படுத்தும்.



லதோஷம் வந்தாலே சிலர் ஆண்டிபயாடிக் மாத்திரகளை தேடுவார்கள். ஆனால் இது உடல்நலத்திற்கு நல்லதல்ல, ஜலதோஷத்தில் இருந்து விடுபட இயற்கை வழிகள் உள்ளது. 

ஜலதோஷ நேரத்தில் மிளகு ரசம் ஒரு கப் குடித்து வரலாம். தினமும் சூடான ரசம் ஒரு கப் குடிப்பது நல்லது.

பூண்டு , இஞ்சி, மீன் உணவு முதலியவை மூக்கு அடைப்பை அகற்றி விடும்.

அசைவ உணவுக் காரர்கள் மூக்கு அடைப்பை எளிதில் சரி செய்து கொள்ளலாம். மிளகு , வெள்ளைப்பூண்டு சேர்த்த தயாரித்த கோழியில் சூப் செய்து ஒரு கப் வாரம் இருமுறை அருந்தினால் ஜலதோஷமும், சைனஸும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

தினமும் வெந்நீர் அல்லது நீராவிக் குளியல் நல்லது. சுட வைத்த குடிநீர் மூலமும் மூக்கடைப்பு, ஜலதோஷத்தை தவிர்க்க முடியும்.

தொடர்ச்சியாக இப்படி ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வந்தால் ஜலதோஷத்துக்கு குட்பை சொல்லி விடலாம்.


 

ALSO READ : இனி பால் குடித்து எடையை குறையுங்கள்! யாரெல்லாம் தினமும் குடிக்கலாம் தெரியுமா?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்