நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சளியை போக்கும் வெற்றிலை சட்னி....

இட்லி தோசையுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
கால்சியம் சத்து நிறைந்த வெற்றிலை நம் முன்னோர்கள் தினமும் பயன்படுத்தினார்கள். திருமண வீடுகளில் விருந்து உண்ட உடன் வெற்றிலை போடுவது வழக்கம். ஆனால் காலப்போக்கில் அது காணாமல் போனது என்றாலும் . ஜீரணம் ஆகாது சமயத்தில் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு நீங்கும்.இப்பொழுது நாம் சளித்தொல்லை கால்சியம் சத்து ஜீரணம் ஆகிய அனைத்திற்கும் உதவக்கூடிய இந்த வெற்றிலையை வைத்து ஒரு அற்புதமான சட்னி எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

தேவையான பொருட்கள்

வெற்றிலை - 5

மிளகு - 1/2ஸ்பூன்

சீரகம் - 1/2ஸ்பூன்

பூண்டு - 2 பல்

மிளகாய் - 4

பொரிகடலை - 3ஸ்பூன்

தேங்காய் - ஒரு மூடி

உப்பு - தேவையான அளவு

நல்ல எண்ணெய் - 2ஸ்பூன்

புளி - 1துண்டு

கடுகு - 1/2ஸ்பூன்

உளுந்து - 1/4ஸ்பூன்

செய்முறை

வாணலியில் மிளகு, சீரகம் இட்டு வறுத்து கொள்ளவும். மிக்ஸியில் வறுத்த மிளகு சீரகம், தேங்காய், பொரிகடலை, வெற்றிலை, மிளகாய், உப்பு, பூண்டு சேர்த்து நன்கு அரைக்கவும்

பின் வாணலியில் எண்ணெய் இட்டு கடுகு உளுந்து தாளித்து சேர்த்து கொள்ளவும். வெற்றிலை சட்னி தயார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்