நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Unique Invitation: வழக்கறிஞரின் அரசியலமைப்பு கருப்பொருள் திருமண அழைப்பிதழ்

 இதுவொரு புதுவித திருமண அழைப்பிதழ்... திருமணத்திற்கு அழைப்பதற்கு சட்ட ஆவணம் போல் அழைப்பிதழை வடிவமைத்த வழக்கறிஞர்...


தங்களது வித்தியாசமான செயல்களால் பலரும் மக்களைக் கவர்கின்றனர். இது வழக்கறிஞர் ஒருவரின் வித்தியாசமான ஆனால் ரசிக்க வைக்கும் திருமண உத்தி. இதை அனைவரும் பாராட்டுகின்றனர்.

மணமகன் வழக்கறிஞர் அஜய் சர்மா, உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிகிறார். இவர், ஹரித்வாரில் உதவி பேராசிரியையாக பணியாற்றிய பூஜா சர்மாவை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருக்கிறார்.

கவுகாத்தியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜய் சர்மாவின் புதுவிதமான திருமண அட்டை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தனித்துவமான திருமண அழைப்பிதழ் ஒரு சட்ட ஆவணத்தைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, சமூக ஊடகங்களில் (Social Media) பலரின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

வித்தியாசமான அழைப்பிதழில் அதிக கவனத்தை ஈர்த்துள்ள திருமணம் நவம்பர் 28 ஆம் தேதி அதாவது இன்று நடைபெற உள்ளது.

வைரலான திருமண அழைப்பிதழில், மணமகள் பூஜா சர்மா மற்றும் மணமகன் வழக்கறிஞர் அஜய் சர்மா ஆகியோரின் பெயர்கள் சமத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எழுதப்பட்டுள்ளது. திருமண அழைப்பிதழில், இந்திய திருமணங்களை நிர்வகிக்கும் சட்டங்கள் மற்றும் உரிமைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது..

"திருமண உரிமை என்பது இந்திய அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் வாழ்வதற்கான உரிமையின் ஒரு அங்கமாகும். எனவே, இந்த அடிப்படை உரிமையை (Fundamental Right) நவம்பர் 28, 2021 ஞாயிற்றுக்கிழமையன்று இருவரும் பயன்படுத்த தேவையான சட்ட அனுமதி பெறு0 நிகழ்வு நடைபெறவிருக்கிறது" என்று திருமண அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"வழக்கறிஞர்கள் திருமணம் செய்து கொள்ளும்போது, ​​​​அவர்கள் 'ஆம்' என்று சொல்ல மாட்டார்கள், அவர்கள் - 'விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்' என்று அவர்கள் கூறுகிறார்கள்," என்று தனித்துவமான அழைப்பிதழ் கூறுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றின் (Coronavirus Pandamic) காரணமாக, நண்பர்கள் மற்றும் சட்டத் துறையை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வயது வந்த இருவர் திருமண பந்தத்தில் ஒன்றிணைவதை அங்கீகரிக்கும் சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றி திருமண அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ALSO READ : பேடிஎம் நிறுவன வருவாய் இத்தனை கோடிகளா?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!