Posts

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்த குளிர்காலத்தில் நீங்கள் மாய்ஸ்சுரைசரை ஏன் தவற விடக்கூடாது என்பதற்கான காரணங்கள்..! மிஸ் பண்ணாம படிங்க..

Image
  குளித்த பிறகு நீங்கள் கட்டாயம் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். இதேபோல, இரவில் தூங்கச் செல்லும் முன்பாகவும் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது நல்லதுதான். குளிர் காலத்தில் நம் சருமம் வறண்டு திட்டு, திட்டுக்களாக காட்சியளிப்பதை பார்த்துள்ளீர்களா? இதை தவிர்க்க வேண்டும் என்றால் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. உங்கள் சருமத்தை பாதிக்கக் கூடிய ஆபத்து மிகுந்த ரசாயனங்கள், தூசுகள் மற்றும் நச்சுக்களில் இருந்து பாதுகாக்கும் அரணாக இது செயல்படுகிறது.குறிப்பாக குளிர் காலங்களில், வெதுவெதுப்பான தண்ணீரில் நீங்கள் குளிக்கும்போது உங்கள் உடலுக்கு அது இதமாக இருந்தாலும், சருமத்திற்கு வறட்சியை ஏற்படுத்தி விடுகிறது. ஆகவே கட்டாயம் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும்.இதன் மூலமாக உங்கள் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம். பருக்கள் வராது :  நம் சருமத்தில் உள்ள துளைகளானது தூசு மற்றும் துரும்புகளை உறிஞ்சிக் கொள்வதன் காரணமாக பருக்கள் உண்டாகின்றன. இதை மாய்ஸ்சுரைசர் எப்படி தடுக்கும் என்று கேட்கிறீர்களா? உங்கள் சருமத்திற்கு மேலான லேயர் ஒன்றை இது உருவா...

உலகின் விலை உயர்ந்த மருந்து... விலையோ ரூ.28.58 கோடி - இந்த மருந்து எந்த நோய்க்கு தெரியுமா?

Image
 ஹீமோபிலியா உள்ளவர்களுக்கு அவர்களின் இரத்தத்தில் இருக்க வேண்டிய அளவு உறைதல் காரணிகள் இருக்காது. இதனால் எங்கேயும் காயம் பட்டால் சீக்கிரம் ரத்தம் உறையாது. அதிக ரத்தப்போக்கு இருக்கும். இன்றைய காலத்தில் மற்ற மருந்து மாத்திரைகளின் விலை விண்ணைத்தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. நோய்களின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க அதன் மருந்துகளின் தேவையும் தயாரிப்பும் அதிகரித்து வருகிறது. இந்த உலகத்தின் மிக விலை உயர்ந்த மருந்து குறித்து தான் சொல்லப் போகிறோம். அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் சிஎஸ்எல் பெஹ்ரிங்ஸ் ஹெம்ஜெனிக்ஸ் -ஹீமோபிலியா B மரபணு சிகிச்சைக்கு $3.5 மில்லியன் மதிப்பிலான மருந்து சிகிச்சைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். இது உலகின் மிக விலையுயர்ந்த மருந்து ஆகும். இந்த மருந்தின் விலை இந்திய ரூபாயில் சுமார் 28.58 கோடிகள் (28,58,48,675.00). இவ்வளவு விலை உயர்ந்த மருந்து தரும் அளவுக்கு ஹீமோபிலியா B என்ன நோய் என்று தானே யோசிக்கிறீர்கள் ஹீமோபிலியா என்றால் … தேசிய சுகாதார அமைப்பின் கூற்றுப்படி படி, ஹீமோபிலியா என்பது இரத்தம் உறையும் திறனை பாதிக்கும் ஒரு அரிய வகை நோய். இது பொதுவாக பரம்பரையாக வரக்கூடிய தன்மை கொ...

என்னை தூக்கி குப்பையில் வீசாதீங்க ப்ளீஸ்! கறிவேப்பிலை சொல்லும் ஆரோக்கிய ரகசியம்......

Image
 சாப்பாடு தட்டில் இருந்து வயிற்றுக்குள் செல்லாமல் ஓரங்கட்டப்பட்டு குப்பைத் தொட்டிக்குள் செல்லும் பொருளாக கறிவேப்பிலை உள்ளது! வயது வித்தியாசம் இன்றி பலரும் கருவேப்பிலையை சாப்பிடாமல் தவிர்க்கிறோம். கறிவேப்பிலைக்கு கறிவேம்பு, கறியபிலை போன்ற பெயர்களும் உள்ளன. வெறும் வாசனைக்காக மட்டும் கறிவேப்பிலையை சமையலில் சேர்ப்பதில்லை! அதிலிருக்கும் மருத்துவக் குணங்கள் அதன் அதற்கு முக்கிய காரணம் என்பது உங்களுக்கு தெரியுமா?  ரத்தக்குறைவு நோயைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகிறது. நிறைய பழங்களோடு சேர்த்து, கறிவேப்பிலை பொடியையும் சேர்த்துக் கொண்டால் குறைந்திருக்கும் ரத்த உற்பத்தி விரைவாக அதிகரிக்கும். கறிவேப்பிலையை அடிக்கடி பயன்படுத்தினால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேராது. தலைமுடி தலைமுடி வளர்ச்சிக்கு சிறந்த உணவுப் பொருள் கறிவேப்பிலை. முடி வளர்ச்சிக்கு மட்டுமல்லாது பள்ளிப் பருவத்திலேயே உண்டாகும் இளநரைக்கும் கறிவேப்பிலை சிறந்தது. உணவு வகைகளில் சேர்க்கப்படும் கறிவேப்பிலைகளை, உணவோடு சேர்த்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அதன் சாரம் செரிமானத் தொந்தரவுகளை சரிசெய்து செரிமான பாதையை மேம்படுத்தும். சர்க்கர...

இனி தேங்காய் மட்டையை தூக்கி வீசாதீங்க! இதில் பல நன்மைகள் ஒளிந்துள்ளதாம்.. கட்டாயம் தெரிஞ்சிகோங்க....

Image
 தென்னை மரத்தை கற்பக விருட்சம் என்று கூறுவர். ஏனெனில் தென்னையின் அனைத்து பகுதிகளும் பயன்மிக்கவை. அதிலும் தேங்காய் மட்டையின் பண்புகள் சிலருக்கு மட்டுமே தெரியிருக்கும். தேங்காயை சாப்பிட்ட பிறகு, மக்கள் அதன் மட்டையை தூக்கி எறிந்துவிடுவதை நாம் அடிக்கடி காணலாம். உண்மையில் இது பல நன்மைகளை தருகின்றது. இதைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் பல பிரச்சனைகளைத் தீர்க்கலாம். எனவே தேங்காய் மட்டையை எப்படி பயன்படுத்தினால் நன்மையை பெறலாம் என்பதை பார்ப்போம்.   * தேங்காய் மட்டையால் காயத்தின் வீக்கத்தையும் நீக்கலாம். தேங்காய் மட்டையை அரைத்து மஞ்சளுடன் கலந்து எரியும் இடத்தில் தடவி வந்தால் வீக்கம் குறையும்.  * தேங்காய் மட்டையைப் பயன்படுத்தி பற்களின் மஞ்சள் நிறத்தையும் நீக்கலாம். இதற்கு தேங்காய் முடியை எரித்து பொடியாக்க வேண்டும். இந்த பொடியில் சோடா கலந்து பல்லில் லேசாக மசாஜ் செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.   * தேங்காய் மட்டையை கடாயில் சூடாக்கி அரைக்கவும். இந்த பொடியை தேங்காய் எண்ணெயில் கலக்கவும். இதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து அலசவும், இதனால் முடி கருமையாக மாறும். ...

தினம் ஒரு துண்டு சீஸ் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றதா?

Image
 பொதுவாக குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பொருள் தான் சீஸ். இது பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஆரோக்கியமான உணவுப் பொருளாக கருதப்படுகின்றது. இருப்பினும் இதில் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பு இருப்பதால் சீஸ் ஆரோக்கியமற்றது என்று பலராலும் நம்பப்படுவதனால் இதனை பலரும் தவிர்த்து வருகிறார்கள். ஆனால் சீஸில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு பல ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையது என்று ஆய்வுகள் கூறுகின்றன. தற்போது அதன் ஆரோக்கிய நன்மைகளை என்ன என்று பார்க்கலாம்.  * சீஸ் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும். இதனை தினமும் 1/2 அவுன்ஸ் சிறிய அளவு சீஸ் சாப்பிடுவது மாரடைப்பு அபாயத்தை 13 சதவீதம் குறைக்கும் என்று சொல்லப்படுகின்றது.  * சீஸில் உள்ள குறுகிய சங்கிலி நிறைவுற்ற கொழுப்புகள் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கவும் செய்யும். மேலும், சீஸில் உள்ள கால்சியம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கவும், இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கவும் செய்யும். * சீஸில் உள்ள கால்சியத்தின் காரணமாக அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். * சீஸில் நல்ல கொழுப்பு உள்ளதால் அதனை சரியான அளவில் தினந்தோறும் எடுத...

“வாங்க.. தங்கி வியாபாரம் பண்ணுங்க.. பணம் நாங்க தர்றோம்..” வெளிநாட்டுகாரர்களுக்கு அழைப்பு விடுக்கும் இத்தாலி அரசு....

Image
 அந்த நகரிலேயே வணிகம் செய்பவர்களுக்கு 30 ஆயிரம் யூரோ அதாவது சுமார் ரூ. 25 லட்சம் அளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இத்தாலியில் குறிப்பிட்ட ஒரு நகரில் தங்கி வியாபாரம் செய்தால் ரூ. 25 லட்சம் அளிப்பதாக நகர நிர்வாகம் அறிவித்துள்ளது. அரசு அறிவித்துள்ள சலுகை விவரம் இயற்கை எழில் கொஞ்சும் பிரெசிசி (Presicce) என்று பெயர் கொண்ட நகரில், பல வீடுகள் காலியாகவே உள்ளன. 1991ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளில் வசிக்காமல் மக்கள் வெவ்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். குறிப்பிட்ட பிரெசிசி நகரில் வசித்து, அந்த நகரிலேயே வணிகம் செய்பவர்களுக்கு 30 ஆயிரம் யூரோ அதாவது சுமார் ரூ. 25 லட்சம் அளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நகரில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளதே இந்த அதிரடி சலுகைக்கு காரணமாக கூறப்படுகிறது. அழகிய கடற்கரைகளை கொண்ட நகரத்தில் தங்குவதற்கு என்னென்ன நிபந்தனைகள் விதிக்கலாம் என்பது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது. ALSO READ :  அடேங்கப்பா..290 அடியா! உலகின் மிக உயரமான மரத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

அடேங்கப்பா..290 அடியா! உலகின் மிக உயரமான மரத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

Image
 பிரேசில் அமேசான் காட்டில் உள்ள 290 அடி உலகின் மிக உயரமான மரத்தை விஞ்ஞானிகள் நேரில் சென்று கண்டடைந்தனர். டிஸ்கவரி சேனலின் தமிழ் டப்பிங் மூலமாக 'அமேசான் காடுகளில் உள்ள அரிய வகை உயிரினம் இது, அரிய வகை மூலிகை இது' என்ற வாக்கிய பிரயோகங்களை நாம் ஜாலியாக பயன்படுத்தி வருகிறோம்.ஆனால் விஞ்ஞானிகள் தற்போது உண்மையாகவே அமேசான் காடுகளில் அரிய வகை மரத்தை நேரில் சென்று கண்டுபிடித்துள்ளனர். தென்னமெரிக்கக் கண்டத்தில் தான் இந்த அமேசான் மழைக் காடுகள் உள்ளன. உலகின் மிக அடர்த்தியான இயற்கை உயிரோட்டம் மிக்க இந்த காடுகளில் தான் அரிய வகை மரங்கள் காணப்படுகின்றன. அப்படி தான், பிரேசில் நாட்டில் வடக்குப் பகுதியில் உள்ள இரடாபுரி நதி இயற்கை வன காப்பகத்தில் 290 அடி உயரம் கொண்ட உலகின் மிகப் பெரிய மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தை ஏஞ்சலிம் வெர்மெலோ 'Angelim Vermelho' என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். மரத்தின் அறிவியல் பெயர் Dinizia excelsa . இந்த மரம் 88.5 மீட்டர் அதாவது 290 அடி உயரமும், 9.9 மீட்டர் (32 அடி) சுற்றளவும் கொண்டது. தோராயமாகப் பார்த்தால் 25 மாடி கட்டத்தின் உயரம் இந்த மரத்திற்கு உள்ள...

குளிர்கால பிரச்னைகளை தவிர்க்க உதவும் டிரை ஃப்ரூட்ஸ்..!

Image
 அதிக சத்துகளைத் தரவல்ல உலர் பழங்களை (Dry fruits) வேலைக்கு செல்வோர் ஒரு சிறிய பாக்ஸில் எடுத்துச்சென்று அலுவலக நேரத்தில் சாப்பிடலாம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களைப் போலவே, உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களும் ட்ரை ஃப்ரூட்களை (Dry fruits) எடுத்துக்கொள்ளலாம். மேலும் இவை குளிர் காலத்தில் உங்கள் உடலை வெது வெதுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் அனைத்தையும் செய்கிறது. ஒவ்வொரு வேளைக்கும் ஒரு வகை என தினமும் ட்ரை ஃப்ரூட்ஸை (Dry fruits) இந்த குளிர்காலத்தில் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள். இது போன்ற உலர் பழங்களை சாப்பிட்டுவந்தால், பல நோய்களின் வரவைக் கட்டுப்படுத்தி உங்களால் ஆரோக்கியத்துடன் வாழமுடியும். ட்ரை ஃப்ரூட்ஸை காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பாலுடன் சேர்த்தோ, தண்ணீரில் ஊறவைத்தோ சாப்பிடலாம். அல்லது காலை உணவு, அலுவலக இடைவேளை நேரங்கள், மாலை 5-6 மணிக்குள் சிற்றுண்டியாகச் சாப்பிடலாம். உலர்ந்த பழங்கள், எண்ணெயில் வறுத்த உணவுகளுக்கு ஆரோக்கியமான மாற்றாகும். அவை உங்களுக்கு மனநிறைவின் உணர்வைத் தருகின்றன, மேலும் அவை சிறந்த சிற்றுண்டி உணவாகும். இந்த ட்ரை ஃப்ரூட்ஸ்களில் முக்கியமான ...

அடிக்கடி வரும் ஏப்பத்தை நிறுத்த சில வழிமுறைகள் .......

Image
 இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கும் அமிலத்தன்மையைக் குறைக்கக் கூடிய கீரை வகைகள், இஞ்சி, சோம்பு, சீரகம் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அடிக்கடி வரும் ஏப்பத்தைத் தடுக்க முடியும். ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் உணவுடன் சேர்த்து சிறிது காற்றையும் விழுங்குகிறோம். அந்தக் காற்றை இரைப்பை வெளியேற்றும் போது தான் 'ஏப்பம்' உண்டாகிறது. ஒரு நாளில் ஒருமுறை ஏப்பம் வருவது இயல்புதான். ஆனால், அடிக்கடி வரும் ஏப்பம், அருகில் இருப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும்.  இந்தப் பிரச்சினையை வீட்டுச் சமையல் அறையில் உள்ள பொருட்களின் மூலம் எளிதாகத் தீர்க்க முடியும். அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.  வேகமாகச் சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது, கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களைப் பருகுவது போன்ற பல காரணங்களால் ஏப்பம் வரும். இரவில் தாமதமாகச் சாப்பிடும்போதும், மசாலா சேர்த்த உணவுகளை அதிகமாக உண்ணும்போதும் இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரிக்கும்.  இதனால் நெஞ்செரிச்சலுடன் புளிப்பான ஏப்பம் உண்டாகும். சாப்பிட்டவுடன் படுத்தால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு ஏப்பம் வரும். அடிக்கடி, அதிக சத்தத்துடனும், ஒ...

அழகான சுருள் முடி பெற எளிமையான 'டெக்னிக்'

Image
 எளிமையான முறையில் சுருள் முடி அலங்காரம் செய்வதற்கான வழிமுறைகள் பற்றி பார்ப்போம். அசைந்தாடும் அழகான சுருள் முடியை தற்போது பல இளம் பெண்கள் விரும்புகிறார்கள். இதற்காக அழகு நிலையங்களில் பல மணி நேரம் செலவிடுவார்கள். தலைமுடியை இவ்வாறு அலங்கரிப்பதற்கு ஸ்ட்ரெயிட்னர், கேர்லர் போன்ற மின் சாதனங்கள் பயன்படுத்தப்படுகிறது.இவற்றை அடிக்கடி உபயோகிப்பதால் தலைமுடி வலுவிழக்கும். இவற்றை தவிர்த்து வீட்டிலேயே எளிமையான முறையில் சுருள் முடி அலங்காரம் செய்வதற்கான குறிப்புகள் இங்கே...  சுருள் முடி பராமரிப்பு:  தரமான கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துங்கள். பருத்தி துணிக்கு மாற்றாக, சாட்டின் துணியால் தயாரிக்கப்பட்ட தலையணை உறைகளைப் பயன்படுத்துங்கள். இதனால் கூந்தல் அதிக அழுத்தத்துக்கு உட்பட்டு உடைவதைத் தடுக்க முடியும். தலைமுடி வறட்சியடையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சுருள் தலைமுடிக்கு பிரஷ் உபயோகிப்பதைத் தவிர்க்கவும். பெரிய பற்கள் கொண்ட சீப்பு அல்லது கை விரல்களால் நிதானமாக சிக்கு எடுக்கவும். மரத்தால் ஆன சீப்பு பயன்படுத்துவது நல்லது. கூந்தல் சீரம் என்றால் என்ன?  கூந்தல் சீரம் என்பது 'சிலிக்கா...

வைரஸ் போல இரண்டு கைகளாலும் எழுதும் மாணவர்கள் - அதிசய பள்ளி பற்றிய ஆச்சரியத் தகவல்கள்!

Image
 வீணா வதினி பள்ளியில் மொத்தமாக 150 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே ஒரே சமயத்தில் இரண்டு கைகளையும் உபயோகித்து வேகமாக எழுத பழகிக்கொண்டுள்ளனர். சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இந்த மாணவர்களால் இந்தி, ஆங்கிலம், உருது, சமஸ்கிருதம், அரபு மற்றும் ரோமன் என ஆறு மொழிகளால் எழுத முடியும். நண்பன் படத்தில் வரும் வைரஸ் (சத்யராஜ்) போல இரண்டு கைகளாளும் எழுதும் திறமைப்படைத்தவர்கள் யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? உண்மையில் அப்படி ஒரு பள்ளியே இருக்கிறது என்றால் நம்புவீர்களா? மத்தியபிரதேசம் மாநிலம் சிங்ரௌலி மாவட்டத்தில் இருக்கிறது வீணா வதினி பள்ளி. இந்த பள்ளியில் உள்ள குழந்தைகள் தான் இரண்டு கைகளாலும் எழுதும் வினோத திறமையைக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் பள்ளி நோட்டு புத்தகங்களில் எழுத இரண்டு கைகளையும் உபயொகிப்பதனை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதனால் தேர்வுகளில் கூட அவர்களால் விரைவாக எழுத முடிகிறது. வீணா வதினி பள்ளியில் மொத்தமாக 150 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே ஒரே சமயத்தில் இரண்டு கைகளையும் உபயோகித்து வேகமாக எழுத பழகிக்கொண்டுள்ளனர். இவர்கள் 3 மணிநேர தேர்வை ஒன்றரை மணிந...

ரத்தம் எப்படி வகைப்படுத்தப்படுகிறது?

Image
 இதுவரை நான்கு அடிப்படை ரத்த குரூப்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஏ பி பாஸிட்டிவ் ரத்த வகை 3.4% பேருக்கும் உள்ளது. நமது ரத்தத்தில் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், ரத்த தட்டுகள், பிளாஸ்மா ஆகியவை உள்ளன. ரத்தத்திலுள்ள ஆன்டிஜென்கள் அடிப்படையில் ரத்தவகை பிரிக்கப்படுகிறது. இதுவரை நான்கு அடிப்படை ரத்த குரூப்கள் கண்டறியப்பட்டுள்ளன.  'ஏ' குரூப்பில் சிவப்பணுக்களில் ஏ புரதமும், பிளாஸ்மாவில் பி ஆன்டிபாடியும் (antibody) இருக்கும். 'பி' குரூப்பில் மேற்சொன் னது மாறி இருக்கும். 'ஏ,பி' குரூப்பில் சிவப்பணுக்களில் 'ஏ,பி புரதம்' இரு அணுக்களிலும் உண்டு; ஆனால் பிளாஸ்மாவில் ஏ அல்லது பி இருக்கும்.  'ஓ' குரூப்பில் ஏ அல்லது பி புரதம் சிவப்பணுக்களிலும், பிளாஸ்மாவில் இரு ஆன்டிபாடிகளும் இருக்கும். இதில் கூடுதலாக உள்ள புரதத்தை (Rh) வைத்து ரத்தவகை பாசிட்டிவ், நெகட்டிவ் என பிரிக்கிறார்கள்.  ஏ பி நெகட்டிவ் மிகவும் அரிய ரத்த வகை. உலகில் ஏ பி நெகட்டிவ் 0.6 சதவிகிதம் பேருக்கு மட்டுமே (தோராயமாக 167 பேரில் ஒருவருக்கு) உள்ளது. ஏ பி பாஸிட்டிவ் ரத்த வகை 3.4% பேருக்கும் உள்ளது. இந்தியாவில் சத்தீ...

சப்பாத்திக்கு அருமையான சைடிஷ் முகலாய மஷ்ரூம் ....

Image
 இதை இட்லி, தோசை, பரோட்டா, சப்பாத்தியுடன் சேர்த்து பரிமாறலாம். இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். தேவையான பொருட்கள்  காளான் - 300 கிராம்  தயிர் - 200 மில்லி கிராம்  இஞ்சி-பூண்டு விழுது - 2 தேக்கரண்டி  பச்சை மிளகாய் - 2  உலர்ந்த வெந்தய இலை (கசூரி மேத்தி) - 2 தேக்கரண்டி  நறுக்கிய கொத்தமல்லி தழை - 200 கிராம்  வெங்காயம் - 4  மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி  மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி  கறி மசாலா பொடி - 1 தேக்கரண்டி  முந்திரி பொடி - 2 தேக்கரண்டி  உலர் தேங்காய் பொடி - 2 தேக்கரண்டி  கசகசா - ½ தேக்கரண்டி  தக்காளி - 2  எண்ணெய் - 4 தேக்கரண்டி  உப்பு - தேவையான அளவு செய்முறை:  2 வெங்காயத்தை பொடிதாக நறுக்கி, வெண்ணெய்யில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.  மீதம் உள்ள 2 வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும்.  தக்காளியை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.  அகலமான பாத்திரத்தில் சுத்தப்படுத்திய காளான், தயிர், இஞ்சி-பூண்டு விழுது, பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய், உலர்ந்த வெந்தய இலை, கொத்தமல்லி தழை, நற...

சிறு குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் '10 உணவுகள்'

Image
 கால்சியம் மற்றும் புரதத்திற்கு ஒரு சிறந்த ஆதாரமாக தயிர் உள்ளது. அக்ரூட் பருப்புகள் சிறந்த புரத சிற்றுண்டி ஆகும். சிறு குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் 10 உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.  1. பழங்கள் :  பழங்களில் குழந்தைகளுக்கான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் பழங்களில் நார்ச்சத்துகளும் இருக் கின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு ஸ்ட்ராபெர்ரி, முலாம்பழம், கிவிப்பழம் மற்றும் ஆரஞ்சு போன்றவை மிகவும் சிறந்த பழங்களாகும்.  2. பால் :  பால் பொருட்களில் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. பாலிலுள்ள கால்சியம், குழந்தைகளின் எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக வைத்திருக்கவும், அதே நேரத்தில் புரதம், மூளைத் திசுக்களை உருவாக்கவும் உதவுகிறது.  3. தயிர் :  கால்சியம் மற்றும் புரதத்திற்கு ஒரு சிறந்த ஆதாரமாக தயிர் உள்ளது. இந்த தயிர், குழந்தைகளுக்கு வலுவான எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக பெரிதும் உதவுகிறது.  4. முட்டை :  முட்டையில் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், முட்ைடயில் கால்சியம் மற்றும் அவற்றை உடலில் உற...

சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையான கோவக்காய் பொரியல்.......

Image
 கோவக்காயில் பல சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. இதய நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க கோவக்காய்களை அதிகம் சாப்பிட வேண்டும். தேவையான பொருட்கள்   கோவக்காய் - 300 கிராம்  பச்சை மிளகாய் - 4  வெங்காயம் - 2 கடலை பருப்பு - 1 தேக்கரண்டி  உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி  கடுகு - 1/2 தேக்கரண்டி  பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி  மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி  மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி  தனியா தூள் - 1 தேக்கரண்டி  கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு செய்முறை:  வெங்காயம், ப.மிளகாய், கோவக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.  கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும், அதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.  வெங்காயம் நன்றாக வதங்கியதும் கோவைக்காயை சேர்த்து வதக்கவும்.  அடுப்பை மிதமான தீயில் மூடி போட்டு 15 நிமிடம் வேகவிடவும்.  காய் பாதி வெந்த பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விடவும்.  கடைசியா...

காய்கறிகளும்... அதில் உள்ள வைட்டமின்களும்...

Image
 ஒவ்வொரு காய்கறிகளிலும் உள்ள வைட்டமின்கள் வெவ்வேறு நன்மைகளை தருகிறது. அதில் சில காய்கறிகளின் பயனை காணலாம். உணவில் காய்கறிகளை சேர்த்து கொள்வது உடலுக்கு பல்வேறு வகைகளில் பலன் தருகிறது. ஒவ்வொரு காய்கறிகளிலும் உள்ள வைட்டமின்கள் வெவ்வேறு நன்மைகளை தருகிறது. இதில் பெரும் பாலானவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்களே அதிகம்.  அதில் சில காய்கறிகளின் பயனை காணலாம்.  முருங்கைக்காய்:-  ஆண்களின் விந்துவை விருத்தி செய்யும். பெண்களின் உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.  சுரைக்காய்:-  உடல் சோர்வை நீக்கும். வயிற்றில் கொழுப்பை கரைக்கும்.  உருளைக்கிழங்கு:-  மலச்சிக்கலை போக்கும்.  வாழைத்தண்டு:-  சிறுநீர் பாதையில் கல் அகற்றும்.  வாழைப்பூ:-  மலச்சிக்கலை போக்கும்.  வாழைக்காய்:-  ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்.  குடை மிளகாய்:-  அஜீரணத்தை போக்கும்.  சவ்சவ்:-  எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும்.   வெண்டைக்காய்:-  மூளைவளர்ச்சியை அதிகப்படுத்தும்.  கோவைக்காய்:-  வாய், நாக்கு புண்களை குணப்படுத்தும்.  சேப...

தினமும் ரூ.1க்கு தங்கம் வாங்கலாம்! எப்படி தெரியுமா?

Image
 இன்று எதற்கெடுத்தாலும் நாம் பயன்படுத்தும் UPIல் மிக முக்கியமானது GPay. உங்களது போனில் GPay இருந்தால் மட்டும் போது, மிக எளிதாக பொருட்களை வாங்கவும் முடியும், கிட்டத்தட்ட எல்லா வேலைகளையும் இதிலேயே செய்து கொள்ளலாம். மொபைல் ரீசார்ஜ், டிஸ் டீவி ரீசார்ஜ், கரண்ட் பில் என அனைத்தையும் இதிலேயே கட்டிவிடலாம். இந்த பதிவில் GPayல் தங்கம் வாங்குவது எப்படி என தெரிந்து கொள்ளலாம். தங்கம் வாங்குவது எப்படி? * Google Pay ஆப்ஸைத் திறக்கவும். * New Payment என்பதை ஓபன் செய்யவும். * அதில் தேடலுக்கான பகுதியில் Gold Locker என டைப் செய்துவிட்டு என்டர் தட்டவும். * Gold Locker ஓபன் ஆனதும், Buy என்ற ஆப்ஷன் காட்டப்படும். அதில் காட்டப்படும் விலை 5 நிமிடங்களுக்கு அப்படியே இருக்கும். * நீங்கள் வாங்க விரும்பும் தங்கத்திற்கான தொகையை உள்ளீடு செய்து டிக் மார்க்கை அழுத்தவும். * அவ்வளவு தான் விற்பனை முடிவாகிவிட்டது, தங்கம் உங்களது லாக்கரில் இருக்கும். குறிப்பு ஒருநாளில் நீங்கள் வாங்கக்கூடிய தங்கத்தின் வரம்பாக 50,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கம் வாங்க குறைந்தபட்ச தொகை 1 ரூபாய் ஆகும், ஒருவேளை தங்கம் வாங்கும் போது P...

பழுத்த வாழைப்பழம் இருக்கா? நாவில் கரையும் அல்வா செய்து சாப்பிடுங்க......

Image
 பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று வாழைப்பழம். வாழைப்பழத்தில் செவ்வாழை, ரஸ்தாலி, நாட்டு வாழைப்பழம், பச்சை வாழைப்பழம், மலைவாழை என பல வகைகள் உண்டு. 7000 ஆண்டுகளுக்கு முன் பயிரிடப்பட்ட பழமான வாழைப்பழத்தில், பொட்டாசியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. இதுதவிர வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, இரும்புச்சத்து, மெக்னீசியம், சோடியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இந்த பதிவில் பழுத்த வாழைப்பழத்தை கொண்டு சுவையான அல்வா செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள் பழுத்த வாழைப்பழம்- 5 நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம்- ஒரு கப் நெய்- 5 முதல் 6 டீஸ்பூன் முந்திரி, உலர் திராட்சை- தேவையான அளவு செய்முறை முதலில் வாழைப்பழங்களின் தோலை உரித்துவிட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அடுத்ததாக கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நெய்யை ஊற்றவும், நெய் உருகியதும் உலர் திராட்சை, முந்திரி சேர்த்து வறுக்கவும், இதனை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கொண...

பப்பாளியை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை வெறும் வயிற்றில் குடிங்க! இந்த அற்புத நன்மைகள் கிடைக்கும்....

Image
 நாம் விரும்பி உண்ணும் பழங்களில் பப்பாளியும் ஒன்றாகும். இந்த பழத்தில் இதய நலன், ஜீரண மண்டலம், புற்றுநோய் எதிர்ப்பு பண்பு என பலவிதமான ஆரோக்கிய கூறுகள் உள்ளன. பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட பப்பாளியை தண்ணீரில் போட்டு வெறும் வயிற்றில் குடித்தால் பல நன்மைகள் உடலுக்கு வந்து சேர்கின்றது. அவை என்னென்ன என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.  எப்படி எடுத்து கொள்ளலாம்?     ஒரு முழு பப்பாளி பழத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள். பின் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். கொதித்த பப்பாளி பழம் மற்றும் தண்ணீரை குளிர வைத்து விட்டு தண்ணீர் போல குடிக்கலாம்.   ​எப்போது குடிக்கலாம்?  காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பப்பாளி பழம் கொதிக்க வைத்த நீரை குடிப்பதால் உங்களது குடலை அது சுத்தப்படுத்தும். மேலும், குடலில் உள்ள நச்சுத்தன்மைகளையும் அது நீக்கிவிடும். இந்த தண்ணீரை ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம்.   நன்மை  பப்பாளியை சூடுபடுத்தி அந்த தண்ணீரை குடிக்கும்போது கிடைக்கும் லைகோபேன் பலவிதமான புற்றுநோய்களில் இருந்...

குழந்தைகள் விரும்பும் பன்னீர் ஆம்லெட்.......

Image
 பன்னீரில் உள்ள அதிகளவு கால்சியம் எலும்புகளை வலுவாக்க உதவும். சிறு வயதிலே மூட்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பன்னீர் சிறந்த தீர்வு. தேவையான பொருட்கள்   முட்டை - 5  பன்னீர் - அரை கப்  பச்சை மிளகாய் - 4  மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்  உப்பு - தேவைகேற்ப  எண்ணெய் - தேவைகேற்ப செய்முறை  பன்னீரை துருவிக்கொள்ளவும்.  ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.  ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீர், ப.மிளகாய், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.  இதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.  தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அடித்து வைத்த முட்டையை ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.  இப்போது சூப்பரான பன்னீர் ஆம்லெட் ரெடி. ALSO READ :   சத்து நிறைந்த கோதுமை வெங்காய தோசை......

Popular posts from this blog

முகத்தில் காணப்படும் அதிகபட்ச எண்ணெய்யை போக்க வேண்டுமா? இந்தவொரு பொருளை இப்படி பயன்படுத்தினாலே போதும்!

120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?