நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வைரஸ் போல இரண்டு கைகளாலும் எழுதும் மாணவர்கள் - அதிசய பள்ளி பற்றிய ஆச்சரியத் தகவல்கள்!

 வீணா வதினி பள்ளியில் மொத்தமாக 150 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே ஒரே சமயத்தில் இரண்டு கைகளையும் உபயோகித்து வேகமாக எழுத பழகிக்கொண்டுள்ளனர். சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இந்த மாணவர்களால் இந்தி, ஆங்கிலம், உருது, சமஸ்கிருதம், அரபு மற்றும் ரோமன் என ஆறு மொழிகளால் எழுத முடியும்.


நண்பன் படத்தில் வரும் வைரஸ் (சத்யராஜ்) போல இரண்டு கைகளாளும் எழுதும் திறமைப்படைத்தவர்கள் யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? உண்மையில் அப்படி ஒரு பள்ளியே இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

மத்தியபிரதேசம் மாநிலம் சிங்ரௌலி மாவட்டத்தில் இருக்கிறது வீணா வதினி பள்ளி. இந்த பள்ளியில் உள்ள குழந்தைகள் தான் இரண்டு கைகளாலும் எழுதும் வினோத திறமையைக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களின் பள்ளி நோட்டு புத்தகங்களில் எழுத இரண்டு கைகளையும் உபயொகிப்பதனை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதனால் தேர்வுகளில் கூட அவர்களால் விரைவாக எழுத முடிகிறது.

வீணா வதினி பள்ளியில் மொத்தமாக 150 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே ஒரே சமயத்தில் இரண்டு கைகளையும் உபயோகித்து வேகமாக எழுத பழகிக்கொண்டுள்ளனர். இவர்கள் 3 மணிநேர தேர்வை ஒன்றரை மணிநேரத்தில் எழுதி முடிக்கும் திறன் கொண்டவர்களாக உள்ளனர். சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இந்த மாணவர்களால் இந்தி, ஆங்கிலம், உருது, சமஸ்கிருதம், அரபு மற்றும் ரோமன் என ஆறு மொழிகளால் எழுத முடியும்.


இரண்டு கைகளால் எழுதுவது எப்படி சாத்தியமானது?

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருக்கும் பிபி ஷர்மா தான் மாணவர்களிடம் இந்த திறமை வளர காரணமாக இருந்திருக்கிறார்.

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் இதுபோல இரண்டு கைகளாலும் எழுதும் திறனைப் பெற்றிருந்தார் என்பதைக் கேள்விப்பட்ட ஷர்மா தனது மாணவர்களுக்கும் இதனைப் பழக்கி உள்ளார்.


மாணவர்களுக்கு இந்த பழக்கம் படிப்படியாக கற்றுக்கொடுக்கப்படுகிறது. பள்ளியில் சேரும் குழந்தை முதலில் ஒரு கையில் எழுத கற்றுக்கொள்கிறார். அடுத்த மாதத்தில் மற்றொரு கையிலும் எழுத கற்றுக்கொள்கிறார். தொடர்ந்து இரண்டு கைகளாலும் எழுத ஆரம்பித்துவிடுகிறார்.

45 நிமிட வகுப்பில் 15 நிமிடம் இரண்டு கைகளாலும் எழுத கற்றுக்கொடுக்கிறார் பிபி ஷர்மா.

இரு கைகளாலும் எழுதுவதன் நன்மைகள் என்ன?

இரண்டு கைகளாகலும் எழுதும் மாணவர்களுக்கு இரண்டு புற மூளையும் சிறப்பாக செயல்படும். இதனால் சிந்தனையும் நினைவாற்றலும் வளரும் எனக் கூறுகின்றனர்.

இது மாதிரியான இரு கைகளாலும் எழுதும் திறமை 1% மனிதர்களுக்கு மட்டுமே இருக்கிறது என்று ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜேந்திர பிரசாத் மட்டுமல்லாமல் லியோனார்டோ டா வின்சி, பென்சமின் பிராங்க்ளின், நிக்கோலா டெஸ்லா மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற பிரபல அறிஞர்களும் இரு கைகளாலும் எழுதும் திறன் கொண்டவர்கள்.



ALSO READ : தினமும் ரூ.1க்கு தங்கம் வாங்கலாம்! எப்படி தெரியுமா?



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்