நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காய்கறிகளும்... அதில் உள்ள வைட்டமின்களும்...

 ஒவ்வொரு காய்கறிகளிலும் உள்ள வைட்டமின்கள் வெவ்வேறு நன்மைகளை தருகிறது. அதில் சில காய்கறிகளின் பயனை காணலாம்.

உணவில் காய்கறிகளை சேர்த்து கொள்வது உடலுக்கு பல்வேறு வகைகளில் பலன் தருகிறது. ஒவ்வொரு காய்கறிகளிலும் உள்ள வைட்டமின்கள் வெவ்வேறு நன்மைகளை தருகிறது. இதில் பெரும் பாலானவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்களே அதிகம்.

 அதில் சில காய்கறிகளின் பயனை காணலாம்.

 முருங்கைக்காய்:- 

ஆண்களின் விந்துவை விருத்தி செய்யும். பெண்களின் உதிரப்போக்கை கட்டுப்படுத்தும். 

சுரைக்காய்:- 

உடல் சோர்வை நீக்கும். வயிற்றில் கொழுப்பை கரைக்கும்.

 உருளைக்கிழங்கு:- 

மலச்சிக்கலை போக்கும்.

 வாழைத்தண்டு:- 

சிறுநீர் பாதையில் கல் அகற்றும். 

வாழைப்பூ:- 

மலச்சிக்கலை போக்கும். 

வாழைக்காய்:- 

ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும். 

குடை மிளகாய்:- 

அஜீரணத்தை போக்கும். 

சவ்சவ்:- 

எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும்.

 வெண்டைக்காய்:- 

மூளைவளர்ச்சியை அதிகப்படுத்தும். 

கோவைக்காய்:- 

வாய், நாக்கு புண்களை குணப்படுத்தும்.

 சேப்பங்கிழங்கு:- 

எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும்.

 எனவேதான், உணவே மருந்து என நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



ALSO READ : பப்பாளியை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை வெறும் வயிற்றில் குடிங்க! இந்த அற்புத நன்மைகள் கிடைக்கும்....

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!