நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அழகான சுருள் முடி பெற எளிமையான 'டெக்னிக்'

 எளிமையான முறையில் சுருள் முடி அலங்காரம் செய்வதற்கான வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.


அசைந்தாடும் அழகான சுருள் முடியை தற்போது பல இளம் பெண்கள் விரும்புகிறார்கள். இதற்காக அழகு நிலையங்களில் பல மணி நேரம் செலவிடுவார்கள். தலைமுடியை இவ்வாறு அலங்கரிப்பதற்கு ஸ்ட்ரெயிட்னர், கேர்லர் போன்ற மின் சாதனங்கள் பயன்படுத்தப்படுகிறது.இவற்றை அடிக்கடி உபயோகிப்பதால் தலைமுடி வலுவிழக்கும். இவற்றை தவிர்த்து வீட்டிலேயே எளிமையான முறையில் சுருள் முடி அலங்காரம் செய்வதற்கான குறிப்புகள் இங்கே... 

சுருள் முடி பராமரிப்பு:

 தரமான கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துங்கள். பருத்தி துணிக்கு மாற்றாக, சாட்டின் துணியால் தயாரிக்கப்பட்ட தலையணை உறைகளைப் பயன்படுத்துங்கள். இதனால் கூந்தல் அதிக அழுத்தத்துக்கு உட்பட்டு உடைவதைத் தடுக்க முடியும். தலைமுடி வறட்சியடையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சுருள் தலைமுடிக்கு பிரஷ் உபயோகிப்பதைத் தவிர்க்கவும். பெரிய பற்கள் கொண்ட சீப்பு அல்லது கை விரல்களால் நிதானமாக சிக்கு எடுக்கவும். மரத்தால் ஆன சீப்பு பயன்படுத்துவது நல்லது.

கூந்தல் சீரம் என்றால் என்ன?

 கூந்தல் சீரம் என்பது 'சிலிக்கான்' என்ற பொருளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் திரவமாகும். இது முடியின் மீது ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கி, கூந்தலை சிக்கு இல்லாமல் ஈரப்பதத்துடன் மென்மையாக வைத்திருக்க உதவும். இதற்கு முதலில் தலைக்கு குளித்து, கூந்தலை நன்றாக உலரவைத்து சிக்கு இல்லாமல் வாரிக் கொள்ள வேண்டும். 

செய்முறை - 1 

கூந்தலில் சீரம் தடவி சற்று ஈரப்பதமாக இருக்குமாறு செய்யுங்கள். பின்பு கூந்தலை 4 பகுதிகளாகப் பிரியுங்கள். பின்னர் ஒவ்வொன்றையும் மேலும் சிறு பகுதிகளாகப் பிரித்து, மெல்லிய சடைகளாகப் பின்னி விடுங்கள். அப்படியே இரவு முழுவதும் விட்டு விடுங்கள். அடுத்த நாள் இதனை ஒவ்வொன்றாக பிரித்து விட்டால், லேசான சுருள்கள் பார்க்க அழகாக இருக்கும்.

 செய்முறை - 2 

தலையில் பெரிய 'ஹெட் பாண்ட்' போட்டுக் கொள்ளுங்கள். பிறகு சிறு சிறு பகுதியாக கூந்தலைப் பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக சுருட்டுங்கள். அவை கலைந்துவிடாதவாறு ஹேர் பின் கொண்டு பொருத்துங்கள். இந்த நிலையில் தலைமுடி சற்று ஈரப்பதமுடன் இருப்பதற்காக கூந்தல் ஸ்பிரே பயன்படுத்தலாம். மறுநாள் காலையில் ஹேர்பின்களை நீக்கிவிட்டு, லேசாக முடியை பிரஷ் செய்யுங்கள்.

 செய்முறை - 3

 நீளமான கூந்தலில் சுருள் அலங்காரம் செய்வதற்கு 'ரெடிமேட் கர்லிங் ஸ்டிக்'குகளை உபயோகிக்கலாம். தலைமுடியை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, அவற்றை கர்லிங் ஸ்டிக் வைத்து சுருட்டி வைக்கவும். இவற்றை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடலாம். மறுநாள் காலை தலைமுடியை பிரித்து விட்டு பெரிய பற்கள் கொண்ட சீப்பினால் வாரிவிடவும்.

 குறிப்பு: 

இவ்வாறு அலங்காரம் செய்யும்போது கூந்தலில் எண்ணெய் பூசக்கூடாது. தலையில் ஹேர் சீரம் தடவிக் கொண்டால், சுருள்கள் நீண்ட நேரம் இருக்கும். இவ்வாறு அலங்கரித்த சுருள் அமைப்பு 3 முதல் 4 மணி நேரம் வரை நீடிக்கும்.





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்