தினமும் ரூ.1க்கு தங்கம் வாங்கலாம்! எப்படி தெரியுமா?
- Get link
- X
- Other Apps
இன்று எதற்கெடுத்தாலும் நாம் பயன்படுத்தும் UPIல் மிக முக்கியமானது GPay.
உங்களது போனில் GPay இருந்தால் மட்டும் போது, மிக எளிதாக பொருட்களை வாங்கவும் முடியும், கிட்டத்தட்ட எல்லா வேலைகளையும் இதிலேயே செய்து கொள்ளலாம்.
மொபைல் ரீசார்ஜ், டிஸ் டீவி ரீசார்ஜ், கரண்ட் பில் என அனைத்தையும் இதிலேயே கட்டிவிடலாம்.
இந்த பதிவில் GPayல் தங்கம் வாங்குவது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
தங்கம் வாங்குவது எப்படி?
* Google Pay ஆப்ஸைத் திறக்கவும்.
* New Payment என்பதை ஓபன் செய்யவும்.
* அதில் தேடலுக்கான பகுதியில் Gold Locker என டைப் செய்துவிட்டு என்டர் தட்டவும்.
* Gold Locker ஓபன் ஆனதும், Buy என்ற ஆப்ஷன் காட்டப்படும். அதில் காட்டப்படும் விலை 5 நிமிடங்களுக்கு அப்படியே இருக்கும்.
* நீங்கள் வாங்க விரும்பும் தங்கத்திற்கான தொகையை உள்ளீடு செய்து டிக் மார்க்கை அழுத்தவும்.
* அவ்வளவு தான் விற்பனை முடிவாகிவிட்டது, தங்கம் உங்களது லாக்கரில் இருக்கும்.
குறிப்பு
ஒருநாளில் நீங்கள் வாங்கக்கூடிய தங்கத்தின் வரம்பாக 50,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தங்கம் வாங்க குறைந்தபட்ச தொகை 1 ரூபாய் ஆகும், ஒருவேளை தங்கம் வாங்கும் போது Payment தோல்வியடைந்தால் மூன்று நாட்களில் உங்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணம் திருப்பி வழங்கப்படும்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment