நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சப்பாத்திக்கு அருமையான சைடிஷ் முகலாய மஷ்ரூம் ....

 இதை இட்லி, தோசை, பரோட்டா, சப்பாத்தியுடன் சேர்த்து பரிமாறலாம். இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.


தேவையான பொருட்கள் 

காளான் - 300 கிராம் 

தயிர் - 200 மில்லி கிராம்

 இஞ்சி-பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

 பச்சை மிளகாய் - 2 

உலர்ந்த வெந்தய இலை (கசூரி மேத்தி) - 2 தேக்கரண்டி 

நறுக்கிய கொத்தமல்லி தழை - 200 கிராம் 

வெங்காயம் - 4 

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

 மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி 

கறி மசாலா பொடி - 1 தேக்கரண்டி

 முந்திரி பொடி - 2 தேக்கரண்டி

 உலர் தேங்காய் பொடி - 2 தேக்கரண்டி 

கசகசா - ½ தேக்கரண்டி

 தக்காளி - 2 

எண்ணெய் - 4 தேக்கரண்டி

 உப்பு - தேவையான அளவு


செய்முறை:

 2 வெங்காயத்தை பொடிதாக நறுக்கி, வெண்ணெய்யில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

 மீதம் உள்ள 2 வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும்.

 தக்காளியை விழுதாக அரைத்துக்கொள்ளவும். 

அகலமான பாத்திரத்தில் சுத்தப்படுத்திய காளான், தயிர், இஞ்சி-பூண்டு விழுது, பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய், உலர்ந்த வெந்தய இலை, கொத்தமல்லி தழை, நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறி மசாலா பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

 மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மிதமான தீயில் பொடிதாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கசகசா சேர்த்து சிறிது வதக்கவும்.

 பின்பு அதில் முந்திரி பொடி, தேங்காய் பொடி சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். 

இதனுடன் அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும். நன்றாக வதங்கியதும் அதில் ஊற வைத்த காளான் மசாலாவைக் கொட்டிக் கிளறவும். 

தண்ணீர் சேர்க்காமல் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேக விடவும். 

பின்பு சிறிது கொத்தமல்லி தழை மற்றும் முந்திரி பொடியை மேலே தூவவும்.

 இப்போது சுவையான முகலாய மஷ்ரூம் ரெடி. 

இதை இட்லி, தோசை, பரோட்டா அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து பரிமாறலாம்!





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்