நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகின் விலை உயர்ந்த மருந்து... விலையோ ரூ.28.58 கோடி - இந்த மருந்து எந்த நோய்க்கு தெரியுமா?

 ஹீமோபிலியா உள்ளவர்களுக்கு அவர்களின் இரத்தத்தில் இருக்க வேண்டிய அளவு உறைதல் காரணிகள் இருக்காது. இதனால் எங்கேயும் காயம் பட்டால் சீக்கிரம் ரத்தம் உறையாது. அதிக ரத்தப்போக்கு இருக்கும்.


இன்றைய காலத்தில் மற்ற மருந்து மாத்திரைகளின் விலை விண்ணைத்தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. நோய்களின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க அதன் மருந்துகளின் தேவையும் தயாரிப்பும் அதிகரித்து வருகிறது. இந்த உலகத்தின் மிக விலை உயர்ந்த மருந்து குறித்து தான் சொல்லப் போகிறோம்.

அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் சிஎஸ்எல் பெஹ்ரிங்ஸ் ஹெம்ஜெனிக்ஸ் -ஹீமோபிலியா B மரபணு சிகிச்சைக்கு $3.5 மில்லியன் மதிப்பிலான மருந்து சிகிச்சைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். இது உலகின் மிக விலையுயர்ந்த மருந்து ஆகும். இந்த மருந்தின் விலை இந்திய ரூபாயில் சுமார் 28.58 கோடிகள் (28,58,48,675.00).

இவ்வளவு விலை உயர்ந்த மருந்து தரும் அளவுக்கு ஹீமோபிலியா B என்ன நோய் என்று தானே யோசிக்கிறீர்கள்

ஹீமோபிலியா என்றால் …

தேசிய சுகாதார அமைப்பின் கூற்றுப்படி படி, ஹீமோபிலியா என்பது இரத்தம் உறையும் திறனை பாதிக்கும் ஒரு அரிய வகை நோய். இது பொதுவாக பரம்பரையாக வரக்கூடிய தன்மை கொண்டது. இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள் தான் என்று ஒரு அறிக்கை சொல்கிறது.

ஹீமோபிலியா உள்ளவர்களுக்கு அவர்களின் இரத்தத்தில் இருக்க வேண்டிய அளவு உறைதல் காரணிகள் இருக்காது. இதனால் எங்கேயும் காயம் பட்டால் சீக்கிரம் ரத்தம் உறையாது. அதிக ரத்தப்போக்கு இருக்கும்.ஹீமோபிலியா பி 40,000 பேரில் ஒருவரை பாதிக்கிறது.

புதிய மருந்தைப் பற்றிய ஐந்து தகவல்கள் இங்கே:

1. கல்லீரலுக்குள் ஹெம்ஜெனிக்ஸ் மருந்து சென்று ஒரு மரபணுவை செலுத்தும். இந்த மரபணு தூண்டப்பட்டு ரத்தம் உறையத் தேவையான காரணி IX புரதத்தை உருவாக்கும்.

2. ஒரு ஆய்வில், சிகிச்சையின் மருந்தின் ஒற்றை டோஸ் ஒரு வருடத்தில் எதிர்பார்க்கப்படும் இரத்தப்போக்கு நிகழ்வுகளின் எண்ணிக்கையை 54% குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

3. இந்த நோயைக் கட்டுப்படுத்த தற்போது பயன்படுத்தும் அதிக நேரம் எடுக்கும் காரணி IX புரத உட்செலுத்தல் இருந்து 94% நோயாளிகளை விடுவிக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

4. 2020 இல் ஹெம்ஜெனிக்ஸ்க்கான வணிகமயமாக்கல் உரிமைகளை CSL பெஹ்ரிங்கிற்கு விற்ற uniQure NV ஆல், மாசசூசெட்ஸின் லெக்சிங்டனில் மரபணு சிகிச்சை மருந்து தயாரிக்கப்படுகிறது.

5. இந்த விலையுயர்ந்த மருந்து சிகிச்சையில் முழு வெற்றி பெறுமா என்பதைப் பற்றிப் பேசுகையில், தற்போது உள்ள மருந்துகளை விட இது மேம்பட்டதாக இருப்பதால் நோயாளிகள் தொடர்ந்து இரத்தப்போக்கு பயத்தில் இருக்கும் நிலையில் இந்த மருந்து அவர்களை நிச்சயம் ஓரளவு காக்கும் என்று நம்பப்படுகிறது.

முன்னதாக 2019 ஆம் ஆண்டில், குழந்தைகளுக்கான நோவார்டிஸ் ஏஜியின் சோல்ஜென்ஸ்மா ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபியுடன் அங்கீகரிக்கப்பட்ட மருந்து  $2.1 மில்லியன் விலை கொண்டதாக இருந்தது . இரத்தக் கோளாறு பீட்டா தலசீமியா க்கு Bluebird Bio Inc-ன் Zynteglo  மருந்து இந்த ஆண்டு $2.8 மில்லியன் என்ற அதிக விலை கொண்டதாக இருந்தது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்