நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தினம் ஒரு துண்டு சீஸ் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றதா?

 பொதுவாக குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பொருள் தான் சீஸ்.

இது பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஆரோக்கியமான உணவுப் பொருளாக கருதப்படுகின்றது.

இருப்பினும் இதில் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பு இருப்பதால் சீஸ் ஆரோக்கியமற்றது என்று பலராலும் நம்பப்படுவதனால் இதனை பலரும் தவிர்த்து வருகிறார்கள்.

ஆனால் சீஸில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு பல ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையது என்று ஆய்வுகள் கூறுகின்றன. தற்போது அதன் ஆரோக்கிய நன்மைகளை என்ன என்று பார்க்கலாம். 


* சீஸ் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும். இதனை தினமும் 1/2 அவுன்ஸ் சிறிய அளவு சீஸ் சாப்பிடுவது மாரடைப்பு அபாயத்தை 13 சதவீதம் குறைக்கும் என்று சொல்லப்படுகின்றது. 

* சீஸில் உள்ள குறுகிய சங்கிலி நிறைவுற்ற கொழுப்புகள் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கவும் செய்யும். மேலும், சீஸில் உள்ள கால்சியம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கவும், இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கவும் செய்யும்.

* சீஸில் உள்ள கால்சியத்தின் காரணமாக அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

* சீஸில் நல்ல கொழுப்பு உள்ளதால் அதனை சரியான அளவில் தினந்தோறும் எடுத்துக் கொள்வது நல்லது. அதேபோல், வெண்ணெயை விட சீஸில் கால்சியத்தின் அளவு அதிகமாக உள்ளது.

* தினமும் ஒரு கப் ரிக்கோட்டா சீஸ் சாப்பிடுவது தசை வளர்ச்சி மற்றும் உடல் வலிமையை அதிகரிக்க செய்கிறது. 




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்