நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

“வாங்க.. தங்கி வியாபாரம் பண்ணுங்க.. பணம் நாங்க தர்றோம்..” வெளிநாட்டுகாரர்களுக்கு அழைப்பு விடுக்கும் இத்தாலி அரசு....

 அந்த நகரிலேயே வணிகம் செய்பவர்களுக்கு 30 ஆயிரம் யூரோ அதாவது சுமார் ரூ. 25 லட்சம் அளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .


இத்தாலியில் குறிப்பிட்ட ஒரு நகரில் தங்கி வியாபாரம் செய்தால் ரூ. 25 லட்சம் அளிப்பதாக நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

அரசு அறிவித்துள்ள சலுகை விவரம்

இயற்கை எழில் கொஞ்சும் பிரெசிசி (Presicce) என்று பெயர் கொண்ட நகரில், பல வீடுகள் காலியாகவே உள்ளன.

1991ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளில் வசிக்காமல் மக்கள் வெவ்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர்.

குறிப்பிட்ட பிரெசிசி நகரில் வசித்து, அந்த நகரிலேயே வணிகம் செய்பவர்களுக்கு 30 ஆயிரம் யூரோ அதாவது சுமார் ரூ. 25 லட்சம் அளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நகரில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளதே இந்த அதிரடி சலுகைக்கு காரணமாக கூறப்படுகிறது.

அழகிய கடற்கரைகளை கொண்ட நகரத்தில் தங்குவதற்கு என்னென்ன நிபந்தனைகள் விதிக்கலாம் என்பது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது.





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்