Posts

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தலையில்லாம உயிருடன் இருக்க முடியுமா? முடியும் என்று சொல்லும் நம்ம வீட்டு செல்லம்

Image
  ஒரு உயிரினம் தலை இல்லாமல் வாழ முடியும்! ஆனால் எப்படி சுவாசிக்கும்? கரப்பான் பூச்சி ஒரு வாரம் வரை தலையில்லாமல் உயிர் வாழும் கரப்பான் பூச்சி தாகத்தால் இறக்கிறது இயற்கையின் அதிசயத்திற்கு பின்னால் உள்ள அறிவியல் தலை இல்லாமல் வாழ்வதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.   ஆனால், தலை இல்லாமல் சுமார் ஒரு வார காலம் வாழக்கூடிய உயிரினம் பூமியில் இருப்பது உண்மைதான். இந்த உயிரினத்தின் பெயர் கரப்பான் பூச்சி.  இந்த உயிரினத்தின் உடல் அமைப்பு தலை இல்லாமல் ஒரு வாரம் வாழும்படி அமைந்துள்ளது. கரப்பான் பூச்சிகள் தலை இல்லாமல் ஒரு வாரம் வரை வாழக்கூடியவை.  உண்மையில், இயற்கையின் இந்த அதிசயத்திற்கு பின்னால் அறிவியல் உள்ளது. கரப்பான் பூச்சியின் உடல் ஒரு சிறப்பு அமைப்பு கொண்டது கரப்பான் பூச்சியை வடிகால் அருகிலோ, சமையலறையிலோ, குளியலறையிலோ ஒரு முறையாவது பார்த்திருப்பீர்கள், அது தலை இல்லாமல் ஒரு வாரம் வாழலாம் என்று நினைத்திருக்கிறீர்களா? இது கரப்பான் பூச்சியின் உடலின் சிறப்பு அமைப்பு காரணமாகும். தலை இல்லாமல் சுவாசிக்க முடியும் கரப்பான் பூச்சி தலை இல்லாமல் ஒரு வாரம் உயிர் வாழ்வதற்குக் க...

சைக்கிளில் சாகசம் செய்யும் பலே இளைஞர்!

Image
  சைக்கிளில் சாகசம் செய்யும் ஒருவரின் வீடியோ டுவிட்டரில் வைரலாகியுள்ளது. சைக்கிளில் சாகசம் செய்யும் ஒருவரின் வீடியோ வைரல். தலையில் மூட்டையுடன் தடுமாறாமல் ஒரு பயணம். கிராமங்களில் வயல் வரப்புகளில் துள்ளி திரியும் ஹீரோயின்களை நாம் ரசித்திருப்போம். பிழைப்பிற்காக வயலுக்கு அடுக்குப் பானைகளில் சோறு கொண்டு செல்லும் பாட்டிகளை நாம் பார்த்திருப்போம். மறுபுறம் நகரங்களில் சர்கஸ் நடத்தப்படும்போது அதில் ஜோக்கர்கள் சைகிள் ஓட்டி பார்த்திருப்போம், கிளி சைகிள் ஓட்டி கூட பார்த்திருப்போம். அதேபோல நம் தெருக்களில் சிறுவர்கள் கைகளைவிட்டு சைகிள் ஓட்டுவதையும் பார்த்திருப்போம்... ஆனால் இங்கு ஒருவர் தலை மீது அவரது உருவத்தைக் காட்டிலும் மிகப் பெரிய மூட்டை ஒன்றை வைத்துக்கொண்டு இரு கைகளையும் மூட்டையை பிடித்தவாறு செல்கிறார். அதும் நீண்ட தூரம் செல்கிறார். நடந்து அல்ல, சைகிளை மிதித்து. அதிவேகமாக செல்லும் அவரது சைகிள் வளைவுகளில் அருமையாக திரும்புகிறது, கைகளின் உதவி இல்லாமல். சற்றும் பிசுறுதட்டாமல் வளைந்து வளைந்து செல்லும் அவரது சைக்கிள் உண்மையிலேயே ஆச்சரியப்படவைக்கிறது. இவரது இந்த சாகசத்தை பின்னால் வந்த காரில் அமர்ந...

முடி உதிர்தலை கட்டுப்படுத்த வேண்டுமா, அருமையான வீட்டு வைத்தியம் இதோ....

Image
  முடி உதிர்தலால் நீங்கள் சோர்வாக இருந்தால், உங்களுக்காக ஒரு இயற்கை வழி உள்ளது, இதன் மூலம் நீங்கள் இந்த வகையான பிரச்சனையிலிருந்து விடுபடலாம். முடி உதிர்தலில் நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்களா இந்த இயற்கை முறையை முயற்சிக்க வேண்டும் பொடுகு பிரச்சனைக்கு தீர்வு மாசு, மன அழுத்தம் அல்லது மோசமான வாழ்க்கை முறை போன்றவை முடி உதிர்வதற்கு காரணமாக இருக்கலாம். இது தவிர, நீண்டகால நோய், உடல் மற்றும் மன அழுத்தம், மருந்துகளின் பக்க விளைவுகள் அல்லது ஊட்டச்சத்து குறைபாடு போன்றவையும் முடி உதிர்வை ஏற்படுத்தும்.   இன்றைய காலத்தில் சிறு வயதிலேயே முடி உதிர ஆரம்பித்துவிடுகிறது. அதுமட்டுமின்றி பொடுகு பிரச்சனையும் தற்போது சர்வ சாதாரணமாகி வருகிறது. அனைத்து விதமான வைத்தியம் செய்தும், முடி உதிர்தலுடன் பொடுகு பிரச்சனையும் தீரவில்லை என்றால், உங்களுக்காக ஒரு இயற்கை வழி உள்ளது, இதன் மூலம் நீங்கள் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். முடி பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபடக்கூடிய இயற்கையான வழி எது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த காரணங்களால் முடி உதிர்கிறது முடி கொட்டுவதற்கு எந்த ஒரு காரணமும் இல...

பறவைகளின் 11 மாடி ‘அபார்மெண்ட்’; நீச்சல் குளமும் அதில் உண்டு..!!

Image
  மக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு என்பது அனைவருக்கு தெரிந்த விஷயம். ஆனால் இங்கே ஒரு பறவைக்கான குடியிருப்பு கட்டப்பட்டிருப்பது உங்களுக்கு ஆச்சர்யத்தை கொடுக்கும். பெருகிவரும் மக்கள்தொகையால், பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளும், உயரமான கட்டிடங்களும்  பொதுவான காட்சியாக மாறிப் போன நிலை தான் உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியேறி இரண்டு அல்லது மூன்று BHK குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.  இப்போது மனிதர்களுக்கு மட்டுமல்ல, பறவைகளுக்கும் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இதைக் கேட்டால் நமக்கு வியப்பாக இருக்கிறது இல்லையா.... ஆம், ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில்  பறவைகளுக்கான குடியிருப்பு ஒன்று காணப்பட்டது. பறவைகளுக்காக  கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில், பறவைகள் உண்ண உறங்க வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் உள்ளே இருக்கும் நீச்சல் குளத்தில் குளிக்கவும் முடியும். 11 மாடி ரெடிமேட் அபார்ட்மெண்ட் ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் இப்படி ஒரு தனித்துவமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வைரலாகி...

தொப்பையை வேகமாக குறைக்க இந்த பானங்களை ட்ரை பண்ணுங்க

Image
  நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினால், இந்த ஆரோக்கியமான பானங்களை வீட்டிலேயே செய்து குடிங்க கட்டாயம் நல்ல முடிவினை நீங்கள் காண்பீர்கள். தொப்பை கொழுப்பை குறைக்க மூலிகை பானம் அதிகரிக்கும் எடையை இப்படி குறைக்கலாம் 3 வகையான பானங்கள் குடிக்கவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உருவ அமைப்பையே மாற்றி விடும் ஒரு பிரச்சனையாக தொப்பை உருவெடுத்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பள்ளி செல்லும் சிறுவன் கூட தொப்பையுடன் இருப்பதை காண முடிகிறது. இதற்கு காரணம்  உணவு பழக்கத்தில் தொடங்கி, வாழ்க்கை முறையே மாறி இருப்பது தான். தொப்பை என்றால் அழகு சார்ந்த பிரச்னையாக மட்டுமே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது ஆரோக்கியம் சார்ந்த பல பிரச்சனைகளின் ஆதாரமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சில ஆரோக்கியமான உணவுகள் மூலம் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைப்பதற்கான பாதையில், நம்முடைய உணவு மற்றும் பான பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.  நீங்கள் ஒரு நல்ல பானத்துடன் உங்கள் நாளைத் தொடங்கும் போது உங்கள் கொழுப்பைக் குறைக்கும் வாய்ப்பை அதிக...

‘சூப்பர் மேன்’ ஆக இருக்க தினமும் டயட்டில் ‘இதை’ சேர்த்துகோங்க..!!

Image
  குடும்பத்தின் பாரத்தை சுமக்க  ஓய்வில்லாமல் ஓடும் ஆண்கள், பல சமயங்களில் தங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளாமல் புறக்கணிக்கின்றனர்.  ஆண்கள் ஆரோக்கியத்துற்கு தேவையான உணவு தினசரி உணவில் முழு கவனம் செலுத்த வேண்டும் பல நோய்களின் ஆபத்து தவிர்க்கப்படும். ஓட்டப்பந்தயமாக மாற போயுள்ள வாழ்க்கையில், ஆண்களின் தோள்களில் பொறுப்புகள் மிக அதிகமாக உள்ளன. அந்த ஓட்டத்தில் பல நேரங்களில் அவர்களால் தங்களை சரியாக கவனித்துக் கொள்ள முடியவில்லை. இது அவர்களின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது. தற்போதைய காலகட்டத்தில், ஆண்கள் தங்கள் அன்றாட உணவில் முழு கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் அவர்களின் உடல் உள்ளே இருந்து வலுவாக இருக்கும் என்பதோடு, குடும்ப பொறுப்புகள், அலுவலக் பொறுப்புகள் இரண்டையும் சரி வர கையாள இயலும். ஆண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், பச்சை இலைக் காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். ஆண்கள் ஆரோக்கியத்திற்கு கீரையை அதிகம் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இந்த காய்கறியில் இருந்து உடலுக்கு பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்பதோடு, ஆண்கள் சூப்பர் மேனாக திகழ இ...

பால் குடிப்பதால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்குமா

Image
  உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்க ஆரம்பித்தால், வரும் காலங்களில் பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது பால் குடிக்கலாமா? ஆய்வில் தெரியவந்ததை தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்க ஆரம்பித்தால், வரும் காலங்களில் பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இந்த ஆபத்தை முதலில் உணர்ந்து உணவுப் பழக்கத்தில் உடனடியாக மாற்றங்களைச் செய்வது நல்லது. இப்போது மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது பால் குடிப்பதை நிறுத்த வேண்டுமா என்பது தான். கொலஸ்ட்ரால் பற்றிய கட்டுக்கதைகள் கொலஸ்ட்ரால் பற்றி பல கட்டுக்கதைகள் உள்ளன, அவை உடைப்பது மிகவும் முக்கியம். கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது பலர் பால் பொருட்களிலிருந்து விலகி இருக்கிறார்கள், இது கவனக்குறைவாக இருந்தாலும், பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். கொழுப்பு அதிகரிக்கும் போது பால் குடிக்கலாமா வேண்டாமா என்பதை பார்ப்போம். கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க வேண்ட...

உங்களுடைய உதடு கருப்பாக உள்ளதா? இதனை எளிய முறையில் போக்க இதோ சில டிப்ஸ்!

Image
 பொதுவாக ஒருவரின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் உதடு முக்கிய பங்கு வகிக்கிறது. மரபியல் காரணம் ரத்தசோகை அதிகமாக காபி, டீ குடிப்பது ஈட்டிங் டிஸ்ஆர்டர் லிப் மேக்கப்பை முறைப்படி நீக்காதது போதிய நீர்ச்சத்து, அலர்ஜி, சூரிய கதிர்களின் தாக்கம் விட்டமின் குறைபாடு அதிகமான இரும்புச்சத்து உடலில் இருப்பது, மருந்துகள் ஹார்மோன் பிரச்னை உதடு பராமரிப்பின்மை ஆகிய காரணங்களால் உதடு கருப்பாகிறது. இதனை நீக்க அதிக செலவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம். தேவையானவை பொடித்த சர்க்கரை – 1/2 ஸ்பூன் மஞ்சள் பொடி – 1/2 ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு – 1/4 ஸ்பூன் தேன் – 1/4 ஸ்பூன் செய்முறை   முதலில் மேல் சொன்ன பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து ஒரு ஸ்பூனை வைத்து கலந்து பேஸ்ட் போல தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணியாக இதை தயார் செய்ய வேண்டாம். தேவைப்பட்டால் லெமன் ஜூஸை கொஞ்சம் குறைத்துக் கொண்டாலும் பரவாயில்லை.   இந்த பேஸ்ட்டை முதலில் உங்களது விரல்களால் தொட்டு, உங்களுடைய உதட்டை கொஞ்சம் அழுத்தம் கொடுத்து ஸ்கரப் செய்து மசாஜ் செய்யவே...

கல்லீரலை பலப்படுத்தும் அதிமதுரம் டீ! எப்படி செய்யலாம்?

Image
 அதிமதுரம் ஒரு சிறந்த மருத்துவ குணங்கள் வாய்ந்த பொருளாகும். இந்த அதிமதுரம் வேர் இனிப்பு சுவையுடையது, நல்ல வாசனையாக இருக்கும், இந்த அதிமதுர வேர் நல்ல குளிர்ச்சி தன்மையுடையது. இந்த அதிமதுரம் ஆயுர்வேதம் மற்றும் உலகில் உள்ள அனைத்து மருத்துவ முறைகளுக்கும் பயன்படுத்த கூடிய ஒரு சிறந்த மூலிகை செடியாகும். இதில் டீ போட்டு குடிப்பது நன்மையை தரும். தற்போது இந்த டீயை எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம். தேவையான பொருட்கள்  அதிமதுரம் தூள் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1 டம்ளர் நாட்டு சர்க்கரை - தேவைக்கு செய்முறை அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும். அதனுள் அதிமதுரம் தூளை தூவி இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். கொதிக்க தொடங்கியதும் நாட்டு சர்க்கரையை கொட்ட வேண்டும். அது கரைந்ததும் இறக்கி வடிகட்டி பருகலாம். இது தொண்டை வலி மற்றும் புண்ணை ஆற்ற உதவும். சளியையும் போக்கும்.  ALSO READ :  70 வகை சத்து, ஏகப்பட்ட பிரச்னைக்கு தீர்வு… தேன் இப்படி சாப்பிடுங்க!

இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் உடலின் முக்கிய உறுப்புகள் காலி! கவனம் தேவை

Image
  உடலில் உள்ள முக்கிய உறுப்புகளுக்கு சில உணவுகள் ஆகவே ஆகாது. அது போன்ற உணவுகளை தவிர்ப்பது நலம் பெயர்க்கும். நுரையீரல் ப்ரோக்கோலி ஒரு ஆரோக்கியமற்ற உணவு அல்ல., அதில் பல சத்துக்கள் உள்ளது. ஆனால் இதை அதிகம் சாப்பிடுவதால் உடலில் வாயு உண்டாகும். அதிகப்படியான வாயு உங்கள் நுரையீரலை அதிக வேலை செய்ய வழிவகுக்காது. பதப்படுத்தப்பட்ட இறைச்சி என்பது உண்மையில் சுவையை மேம்படுத்தவும், உணவு கெடாமல் இருக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் பொதுவாக நைட்ரைட்டுகள் சேர்க்கப்படுகின்றன. இந்த இறைச்சிகளின் பிரச்சனை என்னவென்றால், அவை உடலை ஒரு அழற்சி எதிர்வினைக்கு அனுப்புகின்றன.இது நுரையீரல் அமைப்புக்கு அழுத்தம் கொடுத்து அதன் செயல்பாட்டை குறைக்கும். இதயம் சிவப்பு இறைச்சி உணவுகளான மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை தவிர்க்குமாறு பல மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். சிவப்பு இறைச்சியில் இருக்கும் கார்னைடைன் எனும் மூலப்பொருள் இதயத்தை பாதிக்கும் Trimethylamine-N-oxide (TMAO) -ஐ உருவாக்குகிறது. பீட்சாவில் நிறைய கிரீஸ், சோடியம் மற்றும் கலோரிகள் உள்ளன, இது இதயத்திற்கு மிகவும் ஆபத்தானது. மேல...

பட்டுப்புடவையை நீண்ட நாட்கள் பாதுகாக்க செய்ய வேண்டிவை

Image
பட்டுச்சோலைகளை தோய்ப்பது, காய வைப்பது, மடிப்பது என்று ஒவ்வொன்றையும் கவனமாக கருத்தோடு செய்தால் தான் பல வருடங்களுக்கு அச்சேலைகளை புதியது போல் பாதுகாத்து வைத்துக் கொள்ள முடியும். ஆசையாய் பார்த்து பார்த்து அதிக விலை கொடுத்து பட்டு சேலைகளை வாங்குகிறோம். திருமணம் போன்ற விசேஷங்களுக்குத்தான் அச்சேலைகளை நாம் உடுத்துகிறோம். எனவேதான் பட்டுச்சேலைகளை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகவே இருக்க வேண்டும். பட்டுச்சேலை பராமரிப்பது என்பதே ஒரு கலைதான். அவற்றை தோய்ப்பது, காய வைப்பது, மடிப்பது என்று ஒவ்வொன்றையும் கவனமாக கருத்தோடு செய்தால் தான் பல வருடங்களுக்கு அச்சேலைகளை புதியதுபோல் பாதுகாத்து வைத்துக் கொள்ள முடியும். புடவையை அப்படியே மடித்து வைக்காமல் ஒரு காட்டன் துணியில் சுற்றி வைக்க வேண்டும். புடவையை கடையில் போட்டு கொடுக்கும் அட்டை பெட்டியில் வைத்திருக்கக்கூடாது. அதேபோல் ஹேங்கர்களில் தொங்க விடவும் கூடாது. அப்படி செய்தால் நாளாவட்டத்தில் இழைகள் விலகி துணி பாழாகி விடும். நீண்ட காலங்களுக்கு அடிக்கடி உபயோகிக்காமல் வைத்திருக்கும் புடவைகளை ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது வெயிலில் கொஞ்ச நேர...

பேன் தொல்லையா? அப்ப இத செய்யுங்க...

Image
பேன்கள் நமது உச்சந்தலையில் எரிச்சலையும் நமைச்சலையும் ஏற்படுத்துகிறது. இரவுநேரங்களில் தூக்கமின்மைக்கு பேன்கள் கூட ஒரு காரணமாக இருக்க முடியும். பேன்கள் தலை, முடி, முதுகு மற்றும் கழுத்து மீது ஊர்ந்து, நமது ரத்தத்தை உறிஞ்சுகின்றன. பேன்களின் முட்டைகள் நிட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன, இது முடியுடன் ஒட்டிக்கொள்கிறது, மேலும் இது அரிப்பை ஏற்படுத்துகிறது. ஒருவரின் தலை தொடர்பிலிருந்து மற்றொருவருக்கு பேன்கள் உருவாகின்றன. பேனால் குதிக்கவோ அல்லது பறக்கவோ முடியாது. ஆனால் முடியின் வழியாக பேன் மற்றொருவருக்கு பரவுகிறது. பேன்கள் கருப்பு, பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். தலையில் பேன் என்பது கெட்ட மற்றும் சுகாதாரமின்மை பிரச்சினை அல்ல. பேன்கள் நமது உச்சந்தலையில் எரிச்சலையும் நமைச்சலையும் ஏற்படுத்துகிறது. பேன் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஒருவர், தலையை அடிக்கடி சொறிந்து கொண்டிருப்பார். பேன் இரவில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும். மேலும் இரவுநேரங்களில் தூக்கமின்மைக்கு பேன்கள் கூட ஒரு காரணமாக இருக்க முடியும். 3 வகை பேன்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சீப்புகள், கேப்ஸ், தூரிகைகள் போன்ற கூந்...

முடிவு எடுத்த பின்பு கவலை வேண்டாம்…

Image
தெளிவாக சிந்தித்து எடுக்கப்படும் முடிவுகள், ஒருவரது வாழ்வில் வெற்றிக்கான திருப்புமுனைகளை ஏற்படுத்துகின்றன. அத்தகைய முடிவை எடுக்கும்போது நேர்மறையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்களை சந்திக்க நேரிடலாம். ஒவ்வொரு முடிவிலும், புதியவற்றுக்கான தொடக்கம் இருக்கும். அந்த வகையில், நாம் எடுக்கும் எந்த முடிவும், புதிய செயல் அல்லது நிகழ்வின் ஆரம்பமாக அமையும். எடுக்கும் முடிவுகளின் மூலம் நிகழவிருக்கும் நன்மை-தீமைகளைப் பற்றிய பயம், நம்மை முடிவு எடுக்க விடாமல் தடுக்கும். வாழ்வில் தனிப்பட்ட முறையிலோ, தொழில் ரீதியாகவோ, சமூகம் சார்ந்தோ முடிவுகளை எடுக்கும்போது, அவற்றால் கிடைக்கும் நல்ல பலன்களை மட்டும் கருத்தில்கொள்ள வேண்டும். தெளிவாக சிந்தித்து எடுக்கப்படும் முடிவுகள், ஒருவரது வாழ்வில் வெற்றிக்கான திருப்புமுனைகளை ஏற்படுத்துகின்றன. அத்தகைய முடிவை எடுக்கும்போது நேர்மறையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்களை சந்திக்க நேரிடலாம். அவற்றை எண்ணி கவலை கொள்ளாமல் தொடர்ந்து பயணிக்கும்போது நேரம், சூழ்நிலை மற்றும் எண்ண ஓட்டங்களின் மாற்றத்தால் புதிய பாதை உண்டாகும். அப்பாதையானது நம் வெற்றிக்கு வழிவகுக்கும். எனவே ச...

நம்பரை சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்வது எப்படி?

Image
  ஒருவரது மொபைல் நம்பரை நமது மொபைலில் சேவ் செய்யாமலேயே நம்முடைய வாட்ஸ்அப்பில் இருந்து அவருக்கு மெசேஜ் அனுப்பலாம்.     வாட்ஸ்அப் பயனர்கள் எண்ணைச் சேமிக்காமல் செய்திகளை அனுப்பலாம். சேமிக்கப்படாத நம்பரை தொடர்பு கொள்ள நேரடி வழிகள் இல்லை. குறுக்குவழியை பயன்படுத்தியே இவ்வாறு தொடர்பு கொள்ள முடியும். வாட்ஸ்அப் ஒரு பிரபலமான சேட்டிங் செயலியாகும், இது மெசேஜ்களை எளிதாக அனுப்ப பயன்படுவதோடு புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள் மற்றும் முக்கியமான ஃபைல்கள் போன்றவற்றை அனுப்ப பயன்படுகிறது,  மேலும் இது மில்லியன் கணக்கான பயனர்களால் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்படுகிறது.  சில சமயங்களில் வாட்ஸ்அப்பில் தெரியாத நபரை தொடர்பு கொள்ள வேண்டிய நேரம் வரும்.  பொதுவாக ஒருவரது மொபைல் நம்பரை வாட்ஸ்அப்பில் சேவ் செய்தால் நம்மால் அவருக்கு மெசேஜ் செய்யமுடியும். ஒரு சிலரை ஒரு சிறிய வேலைக்காக வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ள நேரிடும்போது, அவர்களின் எண்ணை மொபைலில் சேமிக்காமல் மெசேஜ் செய்யமுடியாது, இது சில சமயங்களில் எரிச்சலடைய செய்யும்.  மேலும் தெரியாத...

இன்ஸ்டாகிராமில் இனி இப்படியும் ரிப்ளை செய்யலாம்..ட்ரை பண்ணி பாருங்க!

Image
  இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இனி படங்கள் அல்லது வாய்ஸ் மெசேஜ் மூலம் பதிலளிக்கும் அம்சத்தை இன்ஸ்டாகிராம் வழங்கியுள்ளது.   இன்ஸ்டாகிராம் தற்போது மிகவும் பிரசிதி பெற்று உள்ளது. பேஸ்புக் நிறுவனம் இதனை சொந்தமாக்கி உள்ளது. பயனர்களுக்கு புதிய அப்டேட்களை வழங்குகிறது. இன்ஸ்டாகிராம் போன்ற பல சமூக வலைத்தளங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு அப்டேட்டுகளை வழங்கிக்கொண்டே இருக்கிறது.  அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ்களுக்கு வித்தியாசமான முறையில் பதிலளிக்கும் அம்சத்தை வழங்கியுள்ளது.  மெட்டாவிற்கு சொந்தமான இந்த தளமானது பதிலளிப்பதை இரண்டு வழிகளில் செய்ய அனுமதிக்கிறது அதில் ஒருமுறை படங்களை பயன்படுத்தி பதிலளிக்கலாம்,  இரண்டாவது முறையானது வாய்ஸ் மெசேஜ் மூலம் பதிலளிக்கலாம்.  இந்த அம்சமானது ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் என அனைவருக்கும் செயல்படும்.  மேலும் இந்த அம்சங்கள் தற்போது சோதனையில் இருப்பதாகவும், விரைவில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த செய்தியினை சாஃப்ட்வேர் டெவலப்பர் அலெஸாண்ட்ரோ பலுஸி என்பவர் பகிர்ந்துள்ளார்...

கொலஸ்ட்ரால் அதிகமானால், இந்த 3 பாகங்களில் மாற்றம் தெரியும்: எச்சரிக்கை தேவை

Image
  High Cholesterol Symptoms: கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, ​​உடலின் மூன்று பாகங்களில் மாற்றங்கள் ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கண்கள், காதுகள் மற்றும் தோல் ஆகியவை இதில் அடங்கும். அதிக கொலஸ்ட்ரால் அறிகுறிகள். இந்த மாற்றங்கள் உடலில் ஏற்படும். அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தாகலாம். இ ந்நாட்களில் கொலஸ்ட்ரால் பிரச்சனை அனைவருக்கும் உள்ள பிரச்சனையாக உள்ளது. மோசமான வாழ்க்கை முறையால் கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாகிறது.  கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த அனைத்து வகையான முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன. ஆனால் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது சிலருக்குத்தான் தெரிகின்றது. கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் உடலின் 3 பாகங்களில் மாற்றங்கள் காணப்படுகின்றன என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியமாகும்.  கொலஸ்ட்ரால் இரண்டு வகைப்படும் தோலில் வரும் மாற்றங்கள் அதிகரிப்பது கொலஸ்ட்ராலின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக நம்பப்படுகிறது. கொலஸ்ட்ரால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்தத்தை கொண்டு செல்லும் வேலையை செய்கிறது. கொலஸ்ட்ரால் இரண்டு வகைப்படும். குறைந்த அடர்த்தி கொழுப்புப்புர...

உடல் எடையை குறைக்கணுமா? இந்த பழங்களை சாப்பிட்டால் போதும்

Image
 சில பழங்களின் உதவியுடன் எளிதாக உடல் எடையை குறைக்க முடியும். உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.  இந்த பழங்கள் எடை குறைக்க உதவும். இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். உடனடியாக எடை குறையும். பழங்களை சாப்பிடுவது எப்போதும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். பழங்கள் உடலுக்குத்  தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன. பழங்களிலிருந்து நமக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துகள் காரணமாக நம் உடலில் எப்போதும் புத்துணர்ச்சி இருக்கிறது.  சில பழங்கள் நமது உடல் எடை குறைப்புக்கும் காரணமாக உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? எடை குறைப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் சில பழங்களை தங்களின் சிறந்த நண்பர்களாக்கிக் கொள்வது நல்லது. இவற்றின் உதவியுடன் எளிதாக உடல் எடையை குறைக்க முடியும். உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.  உடல் எடை குறைப்பு:  பம்பளிமாஸ் பழம் எடை குறைக்க உதவும் முதலில் ஆரஞ்சு பழம் போல் இருக்கும் பம்பளிமாஸ் பழம் பற்றி பார்க்கலாம். ஆரோக்கிய நிபுணர்களின் படி, பம்பளிமாஸ் பழம் சாப்பிடுவது உங்கள் எடையைக் குறைக்...

பெண்களின் 40 வயதும்... 40 பழக்கங்களும்..

Image
40 வயதுக்கு பிறகு பெண்களின் உடல் எடை இயல்பாகவே அதிகரிக்கக்கூடும். எளிமையான 40 பழக்க வழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் 40 வயதிலும் உடல் எடையை சீராக பராமரிக்கலாம். 40 வயதுக்கு பிறகு பெண்களின் உடல் எடை இயல்பாகவே அதிகரிக்கக்கூடும். ஹார்மோன் செயல்பாடுகள், உணவுப் பழக்கங்கள், தூக்கம், உடல் இயக்க செயல்பாடுகள் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களே அதற்கு காரணமாக அமையும். குறிப்பாக வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் உடல் எடை குறைப்பை கடினமானதாகவும், சவாலானதாகவும் ஆக்கிவிடும். எளிமையான 40 பழக்க வழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் 40 வயதிலும் உடல் எடையை சீராக பராமரிக்கலாம். 1. சாப்பிடும் உணவில் காய்கறிகள் அவசியம் இடம்பெற்றிருக்க வேண்டும். ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கக்கூடிய அத்தியா வசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காய்கறிகளில் உள்ளன. 2. பெர்ரி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற குறைந்த கலோரி கொண்ட பழங்களை உட்கொள்ளலாம். சிற்றுண்டி யிலும் சேர்த்துக்கொள்ளலாம். தினமும் 4-5 பழங்கள் சாப்பிட வேண்டும். பழ ஜூஸும் பருகலாம். 3. காலை உணவை தவிர்க்காதீர்கள். அது நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட உதவும். ஓட்ஸுடன் நட...

குழந்தைகளுக்கு பிடித்த உணவு எது?

Image
நொறுக்குத்தீனி, கடைகளில் விற்பனைக்கு இருக்கும் சுகாதாரமற்ற, தரம் இல்லாத பண்டங்களில் இருந்து குழந்தைகளை மீட்டெடுப்பது எப்படி என்று பெற்றோர்கள், கூடுதல் அக்கறையுடன் சிந்தித்து, செயல்பட வேண்டியிருக்கிறது. குழந்தைகளின் படிப்பில் அக்கறையுள்ள பெற்றோர், அவர்களது முக்கியப்பருவமான பள்ளி வயதில் உடல்நலனில் கண்டிப்பான அக்கறையை காட்ட வேண்டும். காலை நேரத்தில் கடனே என உணவு திணிக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த உடலையும் கண்டிப்பாக பாதிக்கும். சரி, காலை உணவுதான் பொருத்தமாக இல்லை. மதிய உணவாவது முழு ஆற்றலை வழங்கக்கூடியதாக இருக்கிறதா என்றால், பெரும்பாலான குழந்தைகளுக்கு அதுவும் இல்லை. இப்போது சில பள்ளிகள், குழந்தைகளின் நலனில் அக்கறையாக, ஒவ்வொரு நாளும் என்ன மெனு என்பதை பட்டியலிட்டு கொடுத்து மதிய நேரத்தில் கண்காணிக்கிறார்கள். ஆனாலும், குழந்தைகள் அனைவரும் ஒரே வகை உணவை கொண்டுவந்தால் எப்படி தங்களுக்குள் பரிமாற்றம் செய்துகொண்டு, நிறைவாக உண்ண முடியும் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. சதை பிடித்து வளர்கிற பருவத்தில் வயிற்றை எளிதில் அடைக்கும் நார்ச்சத்து மிகுந்த உணவை குழந்தைகள் வெறுப்பது இயல்புதான். பெர...

கண்களை அழகுப்படுத்த மஸ்காராவை பயன்படுத்துவது எப்படி?

Image
தூங்கச் செல்வதற்கு முன்பு மஸ்காரா பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மற்ற ஒப்பனைகளோடு சேர்த்து மஸ்காராவையும் முழுவதுமாக நீக்கிய பின்பே தூங்க வேண்டும். முகத்திற்கு உண்மையான அழகைத்தருவது கண்கள். இதன் காரணமாகவே முகத்துக்கு ஒப்பனை செய்யும் போது கண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் அந்த காலத்து பெண்கள். கண்களுக்கு இயற்கையாக வீட்டில் தயாரித்த மையை தீட்டி அழகு பார்த்தார்கள். இப்போது கண்களை அழகுபடுத்த விதவிதமான அழகு சாதனப்பொருட்கள் வந்துவிட்டன. ஐ லைனர், காஜல், மஸ்காரா போன்ற பல பொருட்களை பெண்கள் உபயோகப்படுத்துகின்றனர். கண்களை அழகுப்படுத்துவதில் மஸ்காரா முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த ஒப்பனையும் இல்லாமல் வெளியே செல்பவர்கள் கண்களுக்கு மஸ்காரா மட்டும் பயன்படுத்தலாம். இது கண்களின் அழகை மேம்படுத்துவதன் மூலம் முகத்துக்கு கூடுதல் அழகை தரும். மஸ்காரா தீட்டுவதால் கண்கள் அகலமாகவும் பெரிதாகவும் காட்சி அளிக்கும். மஸ்காரா பல நிறங்களில் கிடைக்கும். நமது சரும நிறத்திற்கு ஏற்றவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. நாம் அணியும் உடைகளின் நிறத்திற்கு தகுந்தவாறும் மஸ்காராவை தேர்ந்தெடுக்கலாம். கருப்பு மற்றும் ...

Popular posts from this blog

முகத்தில் காணப்படும் அதிகபட்ச எண்ணெய்யை போக்க வேண்டுமா? இந்தவொரு பொருளை இப்படி பயன்படுத்தினாலே போதும்!

120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?