கல்லீரலை பலப்படுத்தும் அதிமதுரம் டீ! எப்படி செய்யலாம்?
- Get link
- X
- Other Apps
அதிமதுரம் ஒரு சிறந்த மருத்துவ குணங்கள் வாய்ந்த பொருளாகும். இந்த அதிமதுரம் வேர் இனிப்பு சுவையுடையது, நல்ல வாசனையாக இருக்கும், இந்த அதிமதுர வேர் நல்ல குளிர்ச்சி தன்மையுடையது.
இந்த அதிமதுரம் ஆயுர்வேதம் மற்றும் உலகில் உள்ள அனைத்து மருத்துவ முறைகளுக்கும் பயன்படுத்த கூடிய ஒரு சிறந்த மூலிகை செடியாகும்.
இதில் டீ போட்டு குடிப்பது நன்மையை தரும். தற்போது இந்த டீயை எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- அதிமதுரம் தூள் - 1 டீஸ்பூன்
- தண்ணீர் - 1 டம்ளர்
- நாட்டு சர்க்கரை - தேவைக்கு
செய்முறை
அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.
அதனுள் அதிமதுரம் தூளை தூவி இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். கொதிக்க தொடங்கியதும் நாட்டு சர்க்கரையை கொட்ட வேண்டும்.
அது கரைந்ததும் இறக்கி வடிகட்டி பருகலாம். இது தொண்டை வலி மற்றும் புண்ணை ஆற்ற உதவும். சளியையும் போக்கும்.
ALSO READ : 70 வகை சத்து, ஏகப்பட்ட பிரச்னைக்கு தீர்வு… தேன் இப்படி சாப்பிடுங்க!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment