‘சூப்பர் மேன்’ ஆக இருக்க தினமும் டயட்டில் ‘இதை’ சேர்த்துகோங்க..!!
- Get link
- X
- Other Apps
குடும்பத்தின் பாரத்தை சுமக்க ஓய்வில்லாமல் ஓடும் ஆண்கள், பல சமயங்களில் தங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளாமல் புறக்கணிக்கின்றனர்.
- ஆண்கள் ஆரோக்கியத்துற்கு தேவையான உணவு
- தினசரி உணவில் முழு கவனம் செலுத்த வேண்டும்
- பல நோய்களின் ஆபத்து தவிர்க்கப்படும்.
ஓட்டப்பந்தயமாக மாற போயுள்ள வாழ்க்கையில், ஆண்களின் தோள்களில் பொறுப்புகள் மிக அதிகமாக உள்ளன. அந்த ஓட்டத்தில் பல நேரங்களில் அவர்களால் தங்களை சரியாக கவனித்துக் கொள்ள முடியவில்லை. இது அவர்களின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது.
தற்போதைய காலகட்டத்தில், ஆண்கள் தங்கள் அன்றாட உணவில் முழு கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் அவர்களின் உடல் உள்ளே இருந்து வலுவாக இருக்கும் என்பதோடு, குடும்ப பொறுப்புகள், அலுவலக் பொறுப்புகள் இரண்டையும் சரி வர கையாள இயலும்.
ஆண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், பச்சை இலைக் காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். ஆண்கள் ஆரோக்கியத்திற்கு கீரையை அதிகம் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இந்த காய்கறியில் இருந்து உடலுக்கு பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்பதோடு, ஆண்கள் சூப்பர் மேனாக திகழ இது பெரிதும் உதவும்.
ஆண்கள் கீரை சாப்பிடுவதால் முக்கிய நன்மைகள்
1. கீரையில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், இதனைச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி, ஆற்றல் அபரிமிதமாக இருக்கும் என்பதோடு, ரத்த சோகையும் ஏற்படாது.
2. கீரையில் வைட்டமின்-கே உள்ளது. இது உடலுக்கான கால்சியத்தை உடல் கிரகித்து கொள்ள உதவுகிறது. இதன் காரணமாக எலும்புகள் வலுவடைகின்றன.
3. கீரையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது பல நோய்களைத் தடுக்கிறது என்பதோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
4. கீரையை சாப்பிடுவதால், உடலுக்கு வைட்டமின்-ஏ கிடைக்கிறது, இதன் காரணமாக கண்பார்வை அதிகரிக்கிறது.
5. கீரை சாப்பிடுவதால் மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் கிடைக்கிறது, இதன் காரணமாக உடல் தளர்வாக இருக்கும்.
6. மன ஆரோக்கியத்திற்கும் கீரை சிறந்தது என்று கருதப்படுவதால், அதை வழக்கமான உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
7. கீரை சாப்பிட்டால், விரைவில் பசி எடுப்பதில்லை, இதன் காரணமாக உடல் கட்டுக்கோப்பாக இருப்பதோடு, எடையும் அதிகரிக்காது.
also read : பால் குடிப்பதால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்குமா
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment